எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 ஜனவரி, 2017

கசியும் மௌனம்- மலீக்கா ஃபாருக்கின் கவிதை நூலுக்கு முன்னுரை.



ூடியிரைவில் வெளிவ இருக்கும் அன்பத்ங்கை மீக்கா ஃபாருக்கின் கிை நூலுக்கானுன்னுரையை எழி ஓரிரு வுடங்கள் ஆகிறு. அை இங்கே பிர்வில் மிழ்ிறேன். பத்ம் ச்கிரம் விவந்து வெற்றியையாழ்த்ுகள். அன்பும் மிழ்ச்சியும் மீக்கா :)

 தமிழ்ப் பெண்களின் வாழ்வியலை அதன் உயிர்த்துடிப்பை இவ்வளவு அருமையாக ரத்தமும் சதையுமாகப் பகிர முடியுமா என வியக்க வைக்கிறார் மலீக்கா ஃபாரூக். என் வலைப்பதிவ சகோதரியான இவர் நீரோடை என்ற வலைப்பதிவு மூலம் அறிமுகம். கன்னடக் கவிஞர் பி லங்கேஷின் கவிதைகளைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வு எனக்கு இவரின் கவிதைகளைப் படிக்கும்போதும் ஏற்பட்டது. 

நிறைய விருதுகள் பெற்றிருக்கும் இவர் இந்நூலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் திருமணமான பெண்ணின் மனையியலையும் மனவியலையும் பேசுகின்றன கசியும் மௌனம் மூலம். ஓரிரு கவிதைகள் ஆண்களையும் தாங்கிப் பிடிக்கின்றன. 

ஆணின் அத்தனை
லாமுக்கு அடியிலும்
ஆரா சுமையின்
லாடங்கள் அடித்திருப்பதை “

“ஆண் மகன் அழுவது
அழகல்ல என்ற காரணத்தால் “

“அன்பிருந்தும்
அதை அழுத்தி அழுத்தியே
அழுத்தக்காரனாய் ஆக்கப்பட்டதென”

சில திருநங்கைகள், இன்றைய மாடர்ன் மங்கைகள் பற்றியும் படிக்கும் பருவத்தில் வேண்டா காதல் பற்றியும் பேசுகின்றன. அதிர வைத்த கவிதைகளும் உண்டு. அதில் இது நூறு சதம் மனசாட்சியைத் தட்டிய கவிதை.

”அதென்ன
நீ
அவனுடைய விளைநிலத்தை
செழிப்பாக்கிவிட்டு
உன் விளைநிலத்தை
தரிசாக்குகிறாய்?
உன் நிலத்தில்
வேறொருவர் விதைவிதைக்க
அனுமதிப்பாயா ?”


மிகச் சில வரிகளில் அறையும் யதார்த்தோடு படைக்கப்பட்ட இக்கவிதைகளைப் படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் இதை உணர முடியும். ஒவ்வொரு ஆணும் தன்னைத் திருத்தியமைத்துக் கொள்ள இயலும். 
”அழிவதோ உன் குடலும் உடலும்,”
என்னை என்னிடமிருந்து
விடுதலை செய்யுங்கள் “

சந்தேகமும் வெறுப்பும் கோபமும் சதிராடும் வாழ்க்கையில் பற்றுக்கோடாக இருக்க வேண்டிய கணவனே தூக்கி எறிந்தாலும் வரட்டு கௌரவம் பேணி சமரசத்தோடு வாழ வேண்டிய பெண்ணின் மன உணர்வுகள் வெளிப்படுத்தும் கவிதைகள் ரத்தக் கண்ணீராய் வடிகின்றன.

“வெள்ளைத் தோலுக்கும்
வேசமிடும் பணத்துக்கும்
விலை போகும் காளைக்கு
கருநிற மேனிக்குள்ளிருக்கும்
வெள்ளந்தி குணமும்
வேசமிடத்தெரியா குணமுமிருப்பது
தெரியாமல் போனதெப்படி ?”

”உனக்குத்தான் ஒரு போதும்
உணர்வுகளின் ஓசை கேட்பதேயில்லை. ”

”அன்பின் மோகம்
அன்பின் தாகம்
அறியாக் கணவனோடு
எத்தனை காலம் இணைந்து வாழ்வது ”

என்று இவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆண்மகன்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அன்பு கொண்ட மனதின் ஆசைகளை ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை வரைந்து செல்லும் இக்கவிதைகள் உண்மையை உரத்துச் சொல்லும் துணிவுடன் இருப்பதால் உரம் பெறுகின்றன.

மலீக்காவின் கவிதைகள் மனதோடு பேசுகின்றன. அவை மனிதர்களின் செயல்களை அதனதன் நேர்மையோடு பகிர்வதாலேயே சிறப்புற்றவையாகின்றன. கல்வி மறுக்கப்படும் பெண்கள்  கொண்ட சமூகம் நமது. ஆனால் தனக்குக் கிடைத்த கல்வியிலிருந்தும் அற்புதமான கவிதைகள் படைத்திருக்கும் மலீக்கா எதுவும் தனக்குத் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். மனக்கூட்டிலிருந்து கசியும் மௌனத்தின் குரல் மனித மனங்களை அசைத்து நேர்படுத்தவேண்டும். நேர்ப்படுத்தும். கவிதைகள் தந்த மலீக்கா இன்னும் பல கவிதைத் தொகுதிகள் கொண்டு வர வேண்டும். வாழ்த்துகள்.

அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன்.
ஹைதராபாத்.
(honeylaksh@gmail.com)

7 கருத்துகள்:

  1. மலீக்காவிற்கு வாழ்த்துகள். படிக்கத் தூண்டும் அணிந்துரை தேனக்கா. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான விமர்சனமே கவிதைகளைப் பற்றிச் சொல்லிவிட்டன! கவிதை வரிகள் அருமை!!!!

    பதிலளிநீக்கு
  3. அருமையான வாசிப்புப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. முன்பெல்லாம் என்பதிவுக்கு மலிகா வருவார்கள் பின் எப்படியோ தொடர்பு குறைந்து விட்டது நானும் நீரோடை தளத்துக்குச் சென்றிருக்கிறேன் பதிவர்களி அறிமுகமான பெண்பதிவர்களில் இவரும் ஒருவர் எல்லாமே கவிதையாகத்தான் எழுதுவார்

    பதிலளிநீக்கு
  5. கவிதை வரிகள் நன்று. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  6. நன்றி தேன்மதுரத் தமிழ்கிரேஸ்

    நன்றி துளசி சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...