எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

தல ஃபேன்ஸும் கலகலப்பும்.

1181. MEGADOODH PUNJABI DHABA..

குளிருக்கு இதமா கொஞ்சம் .. JOWAR ROTI, NAAN, ALOO MUTTER WITH PANEER.. YUMMY.. NEAR UJJAIN

1182.  காற்றைப் புசித்து உயிர்த்திருப்பது தியானம்..

 1183. நாற்கரச் சாலைகள் ஒளிரப் போகின்றனவா..

 1184. பொருட்களை நாம் சார்ந்திருக்கிறோமா.

1185. identified as the self accusing nafs..

#me

1186. Sabar Khan
22 December 2013  Riyadh, Saudi Arabia ·

மனம் கவர்ந்த பெண் கவிதாயினிகள்...

Thenammai Lakshmanan......
Kurunchimalar Malar
Meera Blossom.....
Sundari Kathir......
நல்ல எழுத்துக்கு சொந்தக்காரங்க சிலரும்.....

-- நன்றி சபர்கான் சார் !


1187. சாகித்ய அகாடமி விருது பெறும் திரு வண்ணதாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்


1188. Pushparani Sithampari

மாதவிடாய் நாட்களில் தன்னிச்சையாக வீட்டின் பெரிய அறைக்குள் [இங்குதான் சாமி படங்கள் வைத்திருந்தார்கள்]] நுழைந்ததற்கு வீட்டுக்கு வந்த நண்பர்கள் முன்னாலே அம்மாவிடம் கன்னத்தில் அறை வாங்கியிருக்கின்றேன்...அப்போது அவமானத்தில் சிறுத்துப்போயிருந்தேன்.. இன்னும் எவ்வளவோ... எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லாதபடியால் என் பாட்டில் எப்போதும் போல் சாமியறைக்குள் நுழைவேன் ,ஏதாவது எடுக்க.......

இந்தக் கவிதை வரிகளைப் படித்ததும் அந்த நாட்கள் மனதுக்குள் வந்து குதித்தன ..இன்னும் அப்படியேதான் அநேகம் பேர் மாற்றமின்றி நிலைத்துவிட்டனர்.

... தீட்டு
-------------
,பாத்ரூம் போனால்
.காவலாய்ச் சத்தகம்
,படுக்கைப்பக்கம்
தடுப்பாய் உலக்கை
,தலைக்குக் குளித்தாலும்,
மூன்று நாட்கள்
தீண்டத்தகாதவளாகி,
தனித்தட்டு தனிடம்ளர்,
தனி நாடு கேக்காத
எனக்குத் தனியிடம்.
.துண்டு நிலம்
,தோல் தலையணை

,கிணறு வற்றிவிடும்
,செடி பட்டுவிடும்
,ஊறுகாய் கெட்டுவிடும்
,கருப்பை சூல் சுமக்க
,மகரந்தம் பக்குவமாக்கும்,
பருவத்தின் சுழற்சியிது,

சாமி படைத்த என்னை மறைக்க ,
,சாமிக்கு ஏன் திரைச்சீலை. ?
பின் குழந்தைகளோடு
,இருக்கும் கடவுளர்கள் மட்டும்
,எப்படித் தீட்டுக்களற்று.......''

---தேனம்மை லக்ஷ்மணன் ----

அதுசரி,, வெளிநாட்டுக்குப் புகலிடம் தேடிவரும்போதும் பல மூடக்கொள்கைகளைக் காவி வந்தவர்கள் சத்தகம், உலக்கை போன்றவற்றையும் சிறிவடிவுகளிலாவது கொண்டு வந்திருக்கலாம்...

-- பகிர்வுக்கு நன்றி தோழி. :) 

1189. தனித்திரு விழித்திரு பயன்பெறு

வெ இறையன்பு அவர்கள் வழங்கிய மிக உபயோகமான நிகழ்ச்சி தற்போது பொதிகையில் கண்டு களித்தேன்.

காடுகளின் தேவை, உபயோகம், மரபு சார்ந்த மரங்கள் புயலுக்கும் சாய்வதில்லை என்ற தகவல், நெய்தல் நிலத்தில் புன்னைமரக்காடுகள் ( மாங்ரோவ் ஃபாரஸ்ட் இருந்த இடங்களில் சுனாமி தாக்கவில்லை என்ற தகவல் ), பழங்குடியினர் பற்றிய நெகிழ்ச்சி, விலங்குகள், பூக்கள், மரங்கள் மீதான காதல். invasive aliens species இவை எப்படி எக்கோ சிஸ்டத்தை பாதிக்கின்றன மற்றவை எப்படி ஊக்குவிக்கின்றன என அவர் சொல்லச் சொல்ல வியப்பாக இருந்தது. !

ரொம்ப நாளைக்கப்புறம் தொலைக்காட்சி பார்த்தேன். அதிலும் ரொம்ப ரொம்ப உருப்படியான நிகழ்ச்சி பார்த்தேன். சந்தோஷமா இருக்கு. தாங்க்ஸ் இறையன்பு சார். தினம் பார்ப்பேன். :)

இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பிரச்சாரம்னு நினைச்சாலும் பரவாயில்லை.

#பொதிகை #இறையன்பு.

1190.எதுக்கெடுத்தாலும் ஸ்மைலி போட்டுப் போட்டு எங்க பார்த்தாலும் அசந்தர்ப்பமா முடிவுல கை ஸ்மைலி போடுது. கடவுளே எண்டர் தட்டுமுன்னே காப்பாத்து.

1191. தூர்தர்ஷன் ராஜிவ் தர்ஷன் எனப்பட்ட மாதிரி பெட்ரோல் பங்க் எல்லாம் மோடி பங்க் ஆயிடுச்சு :)

-- DEMONETISATION_EXPLANATION

1192. கருவேலம், கத்தாழை, முள்ளு முருங்கை, எருக்கஞ் செடி, சப்பாத்திக்கள்ளி நிறைஞ்சதுதான் என் ஊர்னாலும் அந்தக் கரம்பைக் கல்லு கூட கரகரன்னு இனிக்கிதே முந்திரிப் பழமாட்டம் :)

1193. அடேங்கப்பா எங்கேயோ போயிட்டீங்க தல ஃபேன்ஸ்

1194. இந்தப் புத்தகச் சந்தையிலும் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது.

1195. மனைவி/காதலி ;- அதே ஜீனி, அதே பால், அதே டிக்காக்‌ஷன், உங்க மிச்ச காஃபி மட்டும் எப்பிடி டேஸ்டா இருக்கு

கணவன்/காதலன்:- அடிப்பாவி ஒரு நிமிஷம் செல்ஃபோன் பேசுறதுக்குள்ள நான் மிச்சம் வைச்ச காஃபியையும் காலி பண்ணிட்டியா :(

-- மாலை வணக்கம் காஃபி பிரியர்களே. :)

1196. தன்மையான மனிதர்களின் அருமை புரியாமல் நாம் சிலசமயம் காயப்படுத்தி விடுகிறோம்.

1197. SOMETIMES WE ARE WAITING FOR A REASON TO HATE SOMETHING.

1198. வெட்டிப் பொழுதைப் போக்குவது எப்படி என்று இங்கே சொல்லித்தரப்படும். ஹலோ உருப்படியா ஒன்னியுமே பண்ணாம இன்னிக்குப் பூரா நான் இங்கேதான் இருந்திருக்கிறேன். செம வெட்டிப் பொழுது. ஆமா யாரோடயும் ஒறண்ட ஏதும் இழுத்துக்கலையே. :)

1199. பெண்ணாரத்தில் ( தர்மபுரியிலிருந்து ஹொகனேக்கல் செல்லும் வழியில் இருக்கும் ஊர் ) கூண்டுகளுக்குள் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கு.

-- காக்கா எச்சம் போட முடியாது . கறுப்பு சாக்கு தேவையில்லை ஒடைச்சிட்டாங்கன்னு மூட :)

1200. வாழ்த்துக்கள் கேபிள் சங்கர், உலகநாதன், யுவகிருஷ்ணா..:)
என் சாதனை அரசிகள் புத்தகத்தை பகிர்ந்தமைக்கு நன்றி கேபிள் சங்கர்..

& நன்றி பனித்துளிசங்கர்.. என்னுடைய புத்தகம் சாதனை அரசிகள் பற்றி வலைப்பூவில் பகிர்ந்தமைக்கு..;;)

-- சாதனை அரசிகள் புக்கை வெற்றிகரமா வெளியிட்டு 5 வருஷம் முடிஞ்சிருச்சுப்பா. நன்றி மக்காஸ். ஐந்தாவது புக் வரை வந்திருக்கேன். இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு ஒரு புக் வந்திருக்கணும். ஆனா ஏப்ரலில் வருது.  உங்க அன்பும் ஆசியும் தேவை.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 



6 கருத்துகள்:

  1. இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. தீட்டு!!! அருமை அருமையான கவிதை சகோ/தோழி!!

    சாமி படைத்த என்னை மறைக்க ,
    ,சாமிக்கு ஏன் திரைச்சீலை. ?
    பின் குழந்தைகளோடு
    ,இருக்கும் கடவுளர்கள் மட்டும்
    ,எப்படித் தீட்டுக்களற்று.......''//

    அனைத்துமே ரசித்தோம் ..

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி துளசி சகோ

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...