எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 மார்ச், 2015

மது.. பாலா..



மது.. பாலா..
==============
”நான் ரொம்ப ஸ்ட்ராங்க்ன்னு  நெனைச்சிண்டு  இருந்தேன் மது. ஆனா நான் ஒரு கூடு. வெறும் கூடு மட்டுமில்ல மதூ.. உளுத்துப்போன கூடு. தட்டினா உதுந்து போயிடுவேன்னு புரிஞ்சிடுத்து மதூ. யெஸ். “ என்று கூறிக் கண்கலங்கிய பாலாவை மதுவால் என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை.

எது பேசினாலும் ஆறுதல் கூறப்போனால் கூட அந்த நேரத்தில் சரியாய்க் கூற முடியாதோ என்றிருந்தது.

“நான் அப்பாடான்னு நிம்மதியா சாஞ்சுக்கவும் ஒரு தோள் வேணும். என் தோள்லே சாயவும் ஒரு ஆள் வேணும். நான் இப்பிடிப் பேசுறது உனக்குத் தப்பாக்கூடப் படலாம் மதூ. “

காதல்னா இவ்வளவு சிரமம் இருக்காது பாலாம்மா.. ‘ எடுக்குறதும் கொடுக்குறதும்தான் ப்யூர் லவ். உரிமையோட இருக்குறதும்தான்.. கெஞ்சிக் கேட்டு வாங்குறதில்லை. “ சொல்ல நினைத்தும் மௌனித்தான் மது.

திங்கள், 30 மார்ச், 2015

பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:- ( மலைகள் இதழ் )

பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:-
****************************

பக்கத்தில் நெருக்கி அமர்ந்து
பேய்க்கதைகள்
பேசத்துவங்கினார்கள்
இருள் அடர்ந்த இரவில்.


கம்மாய்ப் பேய்,
ஊரணிப் பேய்,
ஆலமரத்துப் பேய்,
அரசமரத்தடிப் பேய்,
மயானப் பேய்,
முச்சந்திப் பேய்,
எக்ஸார்சிஸ்ட் பேய்

சனி, 28 மார்ச், 2015

சாட்டர்டே போஸ்ட். யாழகிலன் சனா அபிமன்யு இன்று வாழும் ஈழம்.

யாழகிலன் அகிலன் முகநூலில் நட்பாக அறிமுகமாகி என் பிள்ளையானவன். என்னைத் தாயாக வரித்தவன், என் தோழிகளை சித்திகளாகவும் விளித்தவன் . சென்னையில் கயல்விழி இல்லத்துக்குத் திருமணமானவுடன் மருமகள் சனாவுடன் சென்று சந்தித்து வந்திருக்கிறான். சென்னையில் விழி வானலை எஃப் எம் நடத்தி வந்தான். முன்பு ஒரு முறை முகநூலில் சுயவிவரம் பார்த்தபோது  பெயர் மாற்றமும் பால் மாற்றமும் செய்திருந்ததால் நீக்கினேன். அதைப் பார்த்து அம்மா என்னை ஏன் நீக்கினீர்கள் நான் இருக்கும் இடம் அப்படி, அதனால் சுயவிவரங்களை மாற்றினேன் என்றான். கேட்டவுடன் பரிதவித்தது மனது. அப்போது எழுதியது இக்கவிதை.

”என்பிள்ளை யாழகிலன்.”

சில வருடங்களுக்கு முன் இருப்பை மறைத்தும் மறைந்தும் வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார் அவர். புலம் பெயர்தல் பற்றிய அவலங்கள் தெரிந்தபின் குருதி கசிந்தது மனதில்.
 

சென்ற வருடம் அழகுப்பெண் சனாவுடன் திருமணம் நடந்து அபிமன்யு என்ற அழகான வீரனுக்குத் தந்தையாகி உள்ளார் அகிலன்.

வெள்ளி, 27 மார்ச், 2015

தேன் பாடல்கள் . கண்ணழகும் கண்ணனும்.

121. நினைக்கத் தெரிந்த மனமே.

ஆனந்த ஜோதியில் தேவிகா பாடும் பாடல். சோகத்தைப் பிழிந்து உருக வைக்கும் பாடல். எம்ஜியார் தேவிகா புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதில் ஜப்லா என்ற கழுத்து டிசைன் வைத்த ரவிக்கையை அணிந்திருப்பார் தேவிகா.  ” பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா. இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா.. “ என்ற பதில் கிடைக்காத கேள்விகளோடு முடியும் பாடல்.

122. வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணனவன்.

மெல்லிய இசையோடு இருக்கும் பாடல். மனதை வருடும் காட்சிகள்.  கண்ணழகு பார்த்திருந்து .. காலமெல்லாம் காத்திருந்து .. என்று மயங்கிப் பாடுவார் எஸ் எஸ் ஆர் .. விஜயகுமாரியைப் பார்த்து.

புதன், 25 மார்ச், 2015

என் வீடு என் சொர்க்கம்.

161. மேகத் தோணி மிதக்கிறது
துடுப்பில்லாமல்.
கன்னத்தில் கைவைத்து
எட்டிப் பார்க்கிறது நிலவு
எப்போது தரையிறங்குவோமென.

162. சில வருடங்களுக்கு முற்பட்ட
நாம் இல்லை இப்போது
நம் கிறுக்கல்களில்
தூசு படிந்திருக்கிறது.
முதுமைச் செதில் உதிர
அதன் மேலேயே ஒப்பனை செய்து கொள்கிறோம்
பேசத் தெரியாத உனக்கு
இன்று வார்த்தைகள் மிச்சமில்லை
மரத்தைப் போல உலுக்கிக்கொண்டே இருக்கிறாய்
எல்லாவற்றிலும் விட்டு விடுதலையாகி
நீ வேராய் எஞ்சும் தருணத்துக்காய்க் காத்திருக்கிறேன்
கிளையா அதில் கிளியா எனப் பகுக்கமுடியாமல்.
நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தபடி
வலம் வந்துகொண்டிருக்கின்றன
சூரியனும் சந்திரனும்.

செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழ்க்குஷியில் மகளிர் தினச்செய்தி (உரை ) ( 2015 ).



என்னுடைய பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். மகளிர் தினம் பற்றிய  என் கருத்தைக் கேட்ட தமிழ்க்குஷி.காமுக்கும் ஆர்ஜே திரு குமரன் அவர்களுக்கும் என் முகநூல் வலைத்தளத் தோழியர் அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள். 

வண்ணங்களால் நிறைந்தது வாழ்வு. ஆனால் இலக்கியத்திலாகட்டும் இதிகாசத்திலாகட்டும் பெண்ணைப் பணயமாக வைத்துத்தான் நடக்கிறது. நல்லவளாகவோ கெட்டவளாகவோ சித்தரிப்பதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சீதையும் த்ரௌபதியும் இல்லாமல் ராமாயணம் மகாபாரதம் இல்லை. கணவன் சொல் கேட்டு ஐயம் தீர்க்கத் தீப்புகுந்தாள் சீதை. நெருப்பினுள்தான் நீர்க்கப்படுகிறது வாழ்வு. 

சாரட்டுகள்.( பாகீரதியில் )

பகலில் காண்பதை விட
இருளில் குளம்புச்சத்தத்தோடு
திரைப்படங்களில் வரும்
சாரட்டுகள் கிளர்ச்சியூட்டுபவை.
இரவையும் ரகசியத்தையும்
ஒருங்கே சுமந்து வரும் அவை
அரண்மனையிலிருந்து ஆசைநாயகி வீட்டுக்கோ
சதியாலோசனைக் கூட்டத்துக்கோ
உயிர் தப்பி ஓடவோ
ஒரு மறைவான காதலைச் சந்திக்கவோ
பயணப்படுகின்றன.

திங்கள், 16 மார்ச், 2015

’விழுதல் என்பது எழுகையே.’ ( உலகத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் தொடரில் என் பங்களிப்பு ) - பண்ணாகம்.


விழுதல் என்பது எழுகையே. :-


க்ளிக் கிளிக் என்று ஒரு சத்தம். பக்கத்திலிருந்த பெண் செல்ஃபோனால் பஞ்சுப் பொதியாய்க் குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழி சுட்டுக்கொண்டிருந்தாள். லேசாகக் கண்ணயர்ந்த மங்கையர்க்கரசிக்கு இந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார். அவள் திரும்பிப் புன்னகைத்து  ஃபேஸ்புக்கில் போஸ்ட் பண்ணுவதற்காகப் புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணும் இளையதலைமுறையினர். 

ங்கையர்க்கரசி மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியை.  ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அங்கே உரையாற்றச் செல்வதற்காக இந்தப் பயணம் மேற்கொண்டிருந்தார். முதல்நாள் கனடாவில் சந்தித்து விட்டு வந்த பத்மகலாவின் சாயல் இவளிடம் லேசாக இருந்தது. பத்மகலாவை முதன் முதலாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அழைப்பாளராகப் பேசச் சென்றபோது சந்தித்தது நினைவுக்கு வந்தது. ”தமிழரும் மூலிகை மருத்துவமும்” என்ற தலைப்பில் உரையாற்றச் சென்ற அவரை விமான நிலையத்திலிருந்து வரவேற்று பின் வழியனுப்பும் பொறுப்பை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் பத்மகலாவும் தரும சீலனும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஈழத்தின் பெரும்பாலான உணவுகளில் கருவாடு சேர்க்கப்பட்டிருந்ததால் அங்கே தங்கியிருந்த ஒரு வாரத்துக்கு உணவு ஒத்துக்கொள்ளாமையால் பத்மகலாதான் தன் வீட்டிலிருந்து தங்குமிடத்துக்கு தினம் அவள் அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்யப்பட்ட ஆப்பம் , போல் சம்பல், போல் ரொட்டி, பிட்டு சம்பல், இடியாப்பம், கிரிபத், மரக்கறிக்காய் குழம்பு மசியல் எல்லாம் கொண்டுவந்து கொடுத்து பேராசிரியையின் உடல் நலம் கெடாமல் பார்த்துக்கொண்டாள்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

ஹைதராபாத்தில் ”அரிமா சக்தி” விருதும் ”அன்ன பட்சி”யும்.

அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருதை திருப்பூரிலிருந்து  கனவு சுப்ரபாரதிமண்யன் அவர்கள் ஹைதராபாத் வந்திருந்து நிறை தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இதை ஒருங்கிணைத்த சாந்தா தத் மேடம் கலந்து கொள்ளச் சொல்லி கைபேசியில் அழைத்து இருந்தார்கள். இடம் பற்றி விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொண்ட நான் அன்று செல்ல இயலாமல் கால் ஸ்லிப்பாகி விட்டது. எனவே என் அன்பிற்குரிய பெரிய மகன் திருவேங்கடநாதன் சென்று என் சார்பாக வாங்கி வந்து கொடுத்தான். அந்த விருது இதோ.

நன்றி சாந்தாதத் மேடம் & கனவு சுப்ரபாரதிமணியன் சார். & நன்றி வெங்கட் :)





பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.


பிறந்தநாள் வாழ்த்துகள்  என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். 

“ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள். ” 

இதுக்கு அடுத்த காலகட்டம் வாரமலர், தொலைக்காட்சி போன்றவற்றில் பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பார்த்தது.

நமக்கெல்லாம் வீட்ல இருக்கவங்க நினைப்பு வந்தா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பாங்க. ஆனால் முகநூல் வந்ததில் இருந்து கிட்டத்தட்ட 5 வருடமா பிறந்தநாள் வாழ்த்துகள் அதிகரிச்சுக்கிட்டே வருது. 

அதில் சிலவற்றை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன்.



சனி, 14 மார்ச், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர். ப்ரகாஷ் ராமஸ்வாமி- மகனுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்.

முகநூல் தோழர் ப்ரகாஷ் ராமஸ்வாமி. என்னுடைய படைப்புகளை இவரோட அம்மா சாஜி ராமு  ( சரஸ்வதி ) & தந்தை வெங்கட்ரமணா ராமசாமி.இருவரும் விரும்பிப் படிப்பாங்கன்னு ஒரு முறை சொன்னார். என் நலம் விரும்பும் நல்ல மனிதர். என் அன்பிற்குரிய சகோதரர். முகநூல் நண்பர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களில் ஒருவர். சௌதியில் வசிக்கிறார்.

’என்னடா இந்த ஊரு ஒரே பாலைவனம் , ஏசியிலேயே இருக்க வேண்டி இருக்கு. வெளியே போனா வெய்யில் கொளுத்துது . ’ இப்பிடின்னு சிலர் வேறு வெளிநாட்டுக்கும் அதோட ’இந்தூரு ட்ரெஸ்ஸான பர்தாவை அணியாம பெண்கள் போக முடியாது கட்டுப்பாடுகள் ஜாஸ்தி ’ இப்படியேதான் சில உறவினர்களும் நண்பர்களும் அதை விட்டுட்டு துபாய், ஷார்ஜா என்று மாறி இருக்காங்க. ஆனா ப்ரகாஷோட முகநூல் பகிர்வுகளைப் பார்த்தீங்கன்னா இது எதுவுமே வராது. செம ஜாலியும் கேலியும் சுவாரசியமும் மிளிரும். அதிலும் அங்கே இருக்கும் ஷாப்புகள், உணவுகள் நடைமுறைகள் அதோடு அதாக சர்வதேச கிரிக்கெட், உலக சினிமா,  உள்ளூர் சினிமா நம்மூரு சினிமா, பிடித்த நண்பர்களோட கவிதை, ஸ்டேடஸ் பகிர்வுகள் நச்சென்ற கமெண்டுகள் என்று கலக்கி இருப்பார்.

எந்த நேரத்தில் போய்ப் படித்தாலும் சந்தோஷம் துள்ளும் இடம் என்று அவரது முகநூல் பக்கத்தைச் சொல்லலாம். சிலருக்கு மட்டுமே அந்தத் திறமை வாய்த்திருக்கிறது. அவர் நிறைய எழுதுவார் நிறையப் பகிர்வார். சுயகேலி கிண்டல் கூட உண்டு. ஒர் முறை தன் மகன் நைச்சியமாகச் சிரிப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய ப்ரொஃபைல் பிக்சரா வைத்திருந்தார். கேட்டா தன்னைப் பார்த்துத் தன் மகன் சிரிப்பதாகவும் அதை எடுத்து தன் ப்ரொஃபைல் பிக்சராகப் போட்டுக்கொண்டதாகவும் கூறினார். இதவிட வேறென்ன சாட்சியம் வேணும் அவரது ஹாஸ்யத்தை நிரூபிக்க.

அவர்கிட்ட என்ன கேள்வி கேக்குறதுன்னு ஒரே குழப்பம். இதுவரை முகநூலில் வந்தாகவும் இருக்கக்கூடாது. வித்யாசமாகவும் இருக்கணும் எனவே இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

என் வலைத்தளத்தில் சாட்டர்டே ஜாலிகார்னர்னு ஒரு போஸ்ட் போடுறேன். ஒரு கேள்வி கேப்பேன் அதுக்கு நீங்க 4 பாராலேருந்து  10 பாராவரைக்கும் ( எழுத முடிஞ்சவரைக்கும் ) கொடுக்கலாம். சோ இந்தக் கேள்விக்கு  டைம் கிடைக்கும்போது பதில் அனுப்புங்கன்னு கேட்டேன். அவர் உடனே அனுப்பிட்டார். இத ஃபிப் 14 ஆம் தேதி போஸ்ட் பண்ணி இருக்கணும். ஆனா லேட் ஆயிந்தி. சோ மார்ச் 14 க்கு போஸ்ட் பண்றேன். ஏன்னா மார்ச் 14 வரை காதலர் தின மறு பரிசளிப்புகள்  தொடருதுன்னு விக்கிபீடியா மீடியான்னு ஏதோ ஒன்னுல பார்த்தேன். :)  லேட்டா வந்தாலும் அவரோட லேட்டஸ்டான தாட்ஸோட வந்திருக்கேன் மக்காஸ் படிச்சுப் பாருங்க. :)

/// உங்க மகனுக்கு நீங்க ஒரு கடிதம் எழுதினா எதைப் பத்தி  எழுதுவீங்க. ////

வெள்ளி, 13 மார்ச், 2015

உதாசீனம் - பாகீரதியில்.

உதாசீனப்படுத்தப்படும் ஒருவன்
அலங்காரங்களை வெறுக்கிறான்.
தன் சுயமுகம் சுயரூபம்
இன்னதென்று தேடத் தேட
இன்னும் அழகாகிறான்.
தனக்கென்று வாழ்த்துவங்க
அந்த ஆன்மா மேன்மையடைகிறது.

வியாழன், 12 மார்ச், 2015

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.

5. கவனம் பெறப் பயிற்சி.:- 

”கொட்டப் ப்ராந்து பறந்து பறந்து கொட்டுது பார் கொட்டுது பார்.”

இருவர் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள ஒருவரின் முழங்காலின் மேல் இன்னொருவர் இரு கைகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கை கீழ்புறமாக புறங்கை மேல்புறமாக வைக்கவும்.

மற்றொருவர் தன் கண்களில் இரு கைகளையும் பைனாகுலர் லென்ஸ் போலக் குவித்து வைத்துக்கொண்டு 

புதன், 11 மார்ச், 2015

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 4.

இன் அண்ட் அவுட் சென்னையில் கெஸ்ட் ரைட்டராக..

 (இன் அண்ட் அவுட் சென்னையில் கிட்டத்தட்ட 20 படைப்புகள் வெளியாகி உள்ளன.)

மிகப் பரவலாகக் கவனம் பெற்ற எனது கட்டுரை. மின்சார சிக்கனம் பற்றி . ( எக்ஸிட் இண்டர்வியூ, இனிய இல்லறம் அது நல்லறம், மனமாச்சர்யங்களை உடைப்போம் அணைகளை அல்ல, புத்தகங்களை வாசிப்போம் வாழ்வை நேசிப்போம், நேர்மறை சிந்தனையின் சக்தி ஆகியனவும் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஆகும். )


 அளவோடு நட்பு, மின்சார சிக்கனம் தேவை இக்கணம், ஆண்களும், பெண்களும்,  வார்த்தைகளும், ( கவிதை ), தனியே இருக்கும் ஒருவன் ( கவிதை), குழந்தைமையும் தாய்மையின் தூய்மையும்,  மனித வளமும் மனித நேயமும், TEACHERS OR CENTUM MAKING MACHINES ?, ஆட்டோ கொள்ளையா கொடையா ? ஆகிய கட்டுரைகள் வந்துள்ளன.)

செவ்வாய், 10 மார்ச், 2015

திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை.:-



திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை.:-

திரு மேலை பழனிப்பன் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர். கரூரில் பல்லாண்டு காலமாய் வசித்து வருகிறார். அவருக்கு இந்தத் திருக்குறள் விழாவில் ( காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிகழ்ந்த 61 ஆம் ஆண்டு குறள் விழாவில் ) திருக்குறள் செல்வர் என்ற பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.

திங்கள், 9 மார்ச், 2015

உடை அரசியலும் உடல் அரசியலும்.

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே.. என்ற திரைப்படப் பாடல் கேட்டு இருக்கலாம். தமிழ்நாட்டுப் பெண்கள் என்றால் புடவைதான் அணிய வேண்டும் என்ற மனோபாவத்தில் கிண்டலாக எழுதப்பட்ட பாடல் அது.

தோள்சீலைப்போராட்டம் எனக் கேள்வியுற்றிருக்கலாம்.போன நூற்றாண்டுகளில் தென்னிந்திய கேரள ஊர்களில் சாதியால் தாழ்ந்ததாக முத்திரை குத்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி இல்லை. உயர்சாதிப் பெண்டிர் மட்டுமே. மூன்று முண்டுகள் அணியலாம். மற்ற பெண்கள் இரண்டு முண்டு மட்டுமே. அதுவும் மேல் முண்டு எனப்படும் தோள்சீலையையும் பெரும்போராட்டத்துக்குப் பின்னே சட்டத்தின் உதவி பெற்று அணியத் துவங்கினார்கள். பெருங்கொடுமையாக இருக்கிறதல்லவா.

ஞாயிறு, 8 மார்ச், 2015

சர்வதேச மகளிர் தினத்தில் தமிழ்க் குஷியில் பெண்கள் தினச் செய்தி.

இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி,
நான் நமது அன்பான நண்பர்களுடன்
பங்குபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்க்குஷி இணைய வானொலியில்..
கேட்டு மகிழுங்கள்..., நன்றி !!!!!!
Sumathi Srri Naan Raajamagal Madhuram Prabhakar Uma Bharathi Vidhya Gurumoorthy Latha Arunachalam Sahana Dhas Thenammai Lakshmanan தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் விழுதுகள் Anitha N Jayaram Mohana Opesh TamilKushi FM Sumitha Ramesh

சனி, 7 மார்ச், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர், சிறுகதை ராணி சரஸ்வதி ராசேந்திரன்.

 முகநூலில் அறிமுகமானவர் சரஸ்வதி ராசேந்திரன் அம்மா. இவர் என் தோழியான பிறகு சில நாள் கழித்துப் பார்த்தால் மூக்குத்தி போட்ட சின்னவயதுப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதுவும் இவர்தானோ என நினைத்து நீங்களா எனக் கேட்டிருந்தேன். அப்போதுதான் சொன்னார். நாங்க உங்களைக் கண்டு பிடிச்சிட்டோம் தேனு நீங்க மன்னையில் படிச்சீங்களா என்று கேட்டார். ஆமாம் என்றதும் தன் மகள் தேன்மொழி என் வகுப்புத் தோழி என்று சொன்னார். அப்போதுதான் அந்தப் புகைப்படத்தை ஊன்றிக் கவனித்தேன். என் கூட தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தேன்மொழியின் அம்மா அவங்க என்பதைக் கண்டுபிடிச்சேன். 

ப்ளஸ்டூவில் அவங்க ( தேன்மொழி ) மாத்ஸ் க்ரூப் நான். நான் ப்யூர் சயின்ஸ் குரூப். ( டாக்டராகணும்னு ஆசை அதுனால நீங்க ஒரு கணக்கு மேதையை இழந்துட்டீங்க. அவசரப்படாதீங்க. நான் கெமிஸ்ட்ரிதான் படிச்சேன். அதுனால ஒரு நல்ல மருத்துவரையும் (!) இழந்துட்டீங்க. ஹிஹி - அப்போ அப்போ நம்மளப் பத்தியும் சொல்லிக்கணும். :) 

வியாழன், 5 மார்ச், 2015

அவள் விகடனில் ஆராதனாவும் ”ங்கா”வும்.

அவள் விகடனில் ஆராதனாவும் ”ங்கா”வும்.

” ஒரு ஊர்ல  ஒரு தாத்தா..  ஒரு பேத்தி “ என்ற தலைப்பில் அவள் விகடனில்  என் ”ங்கா” கவிதைத் தொகுதியின் நாயகி  ஆராதனா பற்றியும் அவளது தாத்தா தாமோதர் சந்துரு அண்ணன் பற்றியும் வெளியாகி உள்ளது. அதில் அண்ணன் ”ங்கா” பற்றியும் ஆராதனா பற்றியும் அழகாகப் பகிர்ந்துள்ளார்கள் படித்துப் பாருங்கள்.

புதன், 4 மார்ச், 2015

பணிமனை.

விதியை மீறி
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்
ஓடிய வண்டிகள்
ஓவராயிலிங்குக்காகக்
காத்திருந்தன..

புதிதாயும்.,
தூசிபடிந்தும்.,
இளமையாயும்.,
முதுமையாயும்..

எதையோ காயப்படுத்தும்வரை
தான் உடைந்து வீழும்வரை.
பாகங்கள் உராய்ந்து தேயும்வரை.
பற்சக்கரங்கள் தவழும்வரை..

செவ்வாய், 3 மார்ச், 2015

இனமான போராளி திரு சுபவீயின் பேருரை – செய்க பொருளை.

இனமான போராளி திரு சுபவீயின் பேருரை – செய்க பொருளை.



காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டுவிழாவில் சந்தன சுப்பையா எனப்படும் இராம சுப்பையா அவர்களின் மைந்தர் சுப வீரபாண்டியன் அவர்களின் உரை மிகுந்த பொருட்செறிவோடு இருந்தது.

கம்பர் விழா என்றால் கூட்டம் அதிகமிருக்கும் கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அங்கே அடுத்தவன் பெண்டாட்டியைத் தூக்கிப் போன கதை சுவாரசியம். ஆனால் இங்கே குறளில் பொய் சொல்லாதே, திருடாதே என்றுதான் கூறி இருக்கும். கூட்டம் சேருமோ என்று நினைத்தேன். மிக நல்ல கூட்டம்தான் அதிலும் நிறைய இடம் கொடுத்தாலும் 33 சதவிகிதம் இல்லை இங்கே பத்து சதவிகிதம்தான் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

திங்கள், 2 மார்ச், 2015

க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.

141. கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக் மாதிரி இந்த ஹோம்பேஜ் லைக்கர்ஸ் வாக்.. ஹிட் அண்ட் ரன்..:)

142. ஒரு முறை ருசித்துவிட்டால் பணத்தின் ருசியைப் போல எந்த உணவும் ருசிப்பதில்லை.

143. நெருங்கி வருபவர்களுக்கெல்லாம் ஒன்றென்றால் துடிக்கும் மனது. அவ்வப்போது அனைத்திலிருந்தும் விலக்கி வைக்கிறது.


144. வேலை செய்பவர் விம்பாரைக் கரைப்பதும் பிள்ளைகளைக் காய் வாங்க அனுப்பினால் விலையும் பெரிதாகத் தெரிவதில்லை. -- கடமையைத் தட்டிக்கழிச்சிட்டோம்னு சந்தோஷமோ.. :)

#நாமே இவற்றைச் செய்யும்போது எல்லாத்திலும் கஞ்சூஸாகி விடுகிறோமே..:)

ஞாயிறு, 1 மார்ச், 2015

புகார் அளிப்பது எளிது.



பொதுமக்களிடம் தவறாக நடக்கும்/ காயப்படுத்தும் அளவு அடிக்கும்/ துன்புறுத்தும் போலீஸ் அதிகாரிகள் மேலும் கம்ப்ளெயிண்ட் செய்ய முடியும்.
எப்படி கம்ப்ளெயிண்ட் செய்வது.?
புகார் எழுத்து வடிவில் இருக்க வேண்டும்
அந்தப் புகார் எதைப் பற்றியது என அதற்குப் பேர் கொடுக்க வேண்டும்.
புகாரை எழுதியபின்பு வீட்டு முகவரி மற்றும் ஃபோன் நம்பரைக் கொடுக்க வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...