எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 மார்ச், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர், சிறுகதை ராணி சரஸ்வதி ராசேந்திரன்.

 முகநூலில் அறிமுகமானவர் சரஸ்வதி ராசேந்திரன் அம்மா. இவர் என் தோழியான பிறகு சில நாள் கழித்துப் பார்த்தால் மூக்குத்தி போட்ட சின்னவயதுப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதுவும் இவர்தானோ என நினைத்து நீங்களா எனக் கேட்டிருந்தேன். அப்போதுதான் சொன்னார். நாங்க உங்களைக் கண்டு பிடிச்சிட்டோம் தேனு நீங்க மன்னையில் படிச்சீங்களா என்று கேட்டார். ஆமாம் என்றதும் தன் மகள் தேன்மொழி என் வகுப்புத் தோழி என்று சொன்னார். அப்போதுதான் அந்தப் புகைப்படத்தை ஊன்றிக் கவனித்தேன். என் கூட தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தேன்மொழியின் அம்மா அவங்க என்பதைக் கண்டுபிடிச்சேன். 

ப்ளஸ்டூவில் அவங்க ( தேன்மொழி ) மாத்ஸ் க்ரூப் நான். நான் ப்யூர் சயின்ஸ் குரூப். ( டாக்டராகணும்னு ஆசை அதுனால நீங்க ஒரு கணக்கு மேதையை இழந்துட்டீங்க. அவசரப்படாதீங்க. நான் கெமிஸ்ட்ரிதான் படிச்சேன். அதுனால ஒரு நல்ல மருத்துவரையும் (!) இழந்துட்டீங்க. ஹிஹி - அப்போ அப்போ நம்மளப் பத்தியும் சொல்லிக்கணும். :) 


தேன்மொழி புன்சிரிப்புக்குச் சொந்தக்காரர். அதிகம் பேசியதில்லை. ஆனால் அவரும் நானும் ப்ளஸ் ஒன்னிலேயே மூக்குத்தி போட்டிருந்தோம். ( என் வகுப்பில் ஷெண்பகாவும் போட்டிருப்பாள். என் வகுப்பு டீச்சர் ஒரு முறை - அவர் கிறிஸ்துவர் - எங்களிடம் கேட்டார். ஏன் மூக்கு குத்தியிருக்கீங்க கல்யாணம் ஆயிடுச்சா என்று. அவ்வ்வ்வ்வ்வ் என்று முழித்துவிட்டு இல்லைங்க மேடம் வீட்டுல குத்திக்க சொன்னாங்க என்று சமாளித்தோம். )

சரி சரஸ் மேடம் பத்தி சொல்றேன். அவர் மிக அருமையான தோழி. தோழியின் அம்மாவாக இருந்தாலும் சம வயதுக்காரர் போல கலாய்ப்பார் படைப்புகளையும் பகிர்வுகளையும் உடனுக்குடன் படித்துப் பாராட்டுவார். மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர். பல கதைகள் படித்திருக்கிறேன். 2013 இல் அட்டாக் என்றொரு சிறுகதை வந்திருந்தது குமுதத்தில். இதை எல்லாம் இணையத்திலும் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். சிறுகதைகளுக்காகப் பல அவார்டுகளும் வாங்கி இருக்கிறார்.  அவரைப் பற்றி  சாட்டர்டே ஜாலி கார்னரில் பகிர்வதில் பெருமையுறுகிறேன். 

அவங்க சிறுகதைகள் எழுத ஆரம்பிச்சதுபத்தி ஒரு கேள்வி கேட்டேன். அதை இங்கே பகிர்ந்துள்ளேன். 

/// சரஸ் மேம் நீங்க சிறுகதைகள் எழுதத் துவங்கியது எப்ப.? அத வீட்ல இருக்கவங்க எப்பிடி எடுத்துக்கிட்டாங்க. இதுவரை எத்தனை புத்தகங்களில் எழுதி இருக்கீங்க. ///

பள்ளிப்பருவத்திலேயே  எனக்கு எழுத்தின்மீது ஈடுபாடு உண்டு ,சின்னச் சின்னகவிதைகள்(தத்து பித்து கவிதைகள்)    எழுதி தோழிகளிடம் காட்டும்போது ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததுமே
அது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது ,ஆனால் இந்த வேலையெல்லாம் தெரிந்தால் வீட்டில்...எல்லாம் கட்டாகிவிடும்
அதனால் புகைச்சலோடு சரி , வீட்டுக்குள் பூனை மாதிரி இருந்தாலும்
பள்ளிக்கூடத்தில்  செம ஜாலி பேர்வழி.



பள்ளியிறுதி வகுப்போடு இறுதி பத்தொன்பது வயதில், திருமணம்,கணவர்  தலைமை  ஆசிரியர் டெரர் பெர்சன்  அதனால் என் எழுத்துஆசையை  வெளியிட வழியில்லை ,மகள் பிறந்தாள் தைரியமும் வந்தது   ,என் ஆசையை சொன்னதும்  எதிர்ப்பு இல்லை.



அவரே கார்டு ,கவர் வாங்கி தந்தார்   என் தத்து பித்து கவிதைகளை
அவரே சின்ன புத்தகமாக அச்சடித்து கொடுத்தார்  நண்பரின் பிரஸில்
அதுதான் என்   எழுத்துழுத்துப்பிரவேசம்  பின் கொஞ்சம் முன்னேறிவிமசர்னம் ,துணுக்கு,என எழுதினேன் பத்திரிக்கைகளில்.



அடுத்தகட்டமாக கதை எழுத ஆரம்பித்தேன்,அதுபோன வேகத்திலேயே திரும்பியது கண்டு வருந்தினாலும்  ஒரு ஆறுதல் அப்பொழுதெல்லாம்  திரும்பி வரும் கதையுடன் ஒரு துண்டு பிரசுரமும் இருக்கும்  உங்கள்கதையை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்,ஆனாலும் உங்கள்தகுதியை குறைத்து மதிப்பிடவில்லை தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்



ஒரேயடியா நிராகரிக்கலே,,அவ்வளவுதான் விடாது கருப்பு போல கஜினிமுகமது படையெடுப்புதான் குமுதத்தில ;;  நம்பினோர் கைவிடப்படுவதில்லை நான்கு மறை தீர்ப்பு இல்லையா?அந்த நாள்
வந்தது மாருதியின் அட்டகாசமான படத்துடன்,  கதையின் முதல்
மூன்று வரிகள் என் கையெழுத்திலேயே (புதுமையாம் ) என் பெயரைத்தாங்கி குமுதம் அமுதமாக வந்தது, அன்றுதான் நான் சிறு கதை எழுத்தாளராக  அங்கீகரிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டது .

முதல் கதை குமுதத்தில்27-10- 85ல் ” பிஸினஸ்னா பிஸ்னஸ்தான் ”
முதல் பிரசவம்  ,அன்று பாரதிராஜா பட தேவதைகள் என்னைச்சுற்றிஆட நான் சிறகில்லாமல்  வானத்தில் பறந்தேன் .



அது எல்லோருக்கும் பொதுவானதுதானே ,இப்படியாக என் எழுத்துப்பயணம் தொடங்கிற்று 



 இது வரை சுமார் 200 நூறு கதைகள்  வந்துள்ளன பத்திரிக்கை விபரம்,,குமுதம்,அவள்விகடன்,
ஆனந்தவிகடன்,  நாணய விகடன்’ சாவி ,இதயம்,குங்குமம்,சுமங்கலி, கல்கி, கலைமகள்,அமுதசுரபி ,இனிய உதயம் ,தேவதை ,தேவதையின் கொலுசு,தினத்தந்தி ,குடும்பமலர் .வாரமலர்,பெண்கள்மலர் .தினமணிக்கதிர்,மங்கையர்பூமி,கதைபூமி ,இலக்கியப்பீடம்,.பாக்யா,ஜெமினிசினிமா.மின்மினி.,தங்கமங்கை,தேவி  இளந்தளிர் ஆகியவற்றில் கதைகள் வந்துள்ளன  இரண்டுமுறை
டி,வி,ஆர் சிறுகதை போட்டியில்  ஆறுதல் பரிசு பெற்றுள்ளேன்,   அலிபாபா,இலக்கியபீடம் ,வாரமலர்,அமுதசுரபி பெண்கள்மலர் ஆகியவற்றில் கவிதைகளும் வந்துள்ளன ,,என் புனை பெயரான மன்னை சதிரா என்ற பெயரில் எழுதியதால்   தோழிகள் நீண்டகாலம் கழித்துதான்  என்னை முழுமையாய் அறிந்து  பாராட்டினார்கள் தொடர்ந்து   எழுத ஊக்குவித்தார்கள் ..தொடர்கிறது.


 1993ம்வருடம் கி.வா ஜ ,திருப்பூர் கிருஷ்னண் ஆகியோர் என்சிறுகதைகளுக்கு பாராட்டு தெரிவித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது ,தோழிகள் எல்லாம் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள் உன்கிட்ட ஜாக்கிரதையா பேசணும் இல்லேன்னா நீஅதை கதையா எழுதிடுவே என்று சொல்லச்சொல்ல எனக்குள்சின்ன கர்வம் எட்டிப்பார்த்ததும் உண்மை ,உறவினர்களில் சிலபேர் யாராவது தெரிஞ்சவங்க பத்திரிக்கையில் இருக்காங்க அதான் உன்கதைகள் வருது என்று சொன்ன போது நான் சொன்னேன் அதில்லை என்கதையை போடறதுக்கு நானே கொஞ்சம் பணம் வைத்து அனுப்புகிறேன் என்று கடுப்பா சொன்னதை நிஜம் என நினைத்து சிலர் பணம் அனுப்பி ஏமாந்த கதையை என்னிடமே சொல்லி திட்டினார்கள் ,முதல் கதை அதுவும் எனக்குப்பிடித்த குமுதத்தில் வந்தபோது....எனக்கு சிறகு முளைக்காத கதைதான் போங்கள் அதை அனுபவித்தவர்களுக்கேத்தெரியும் இதுதான் நான் எழுத்தாளரான கதை ,அந்த நோய் இன்னும் என்னை விடவில்லை ..

வல்லமை மின்னிதழில் கடித போட்டியில் பரிசு கிடைத்ததும் முதல் கதை அனுபவமே ஏற்பட்டது சிறுகதை காம் மில் என்கதைகளை வெளியிட்டுள்ளார்கள் வல்லமையில் கவிதை இரண்டு வந்துள்ளது 

எனக்கு பிடித்தகதை கலை மகளில் வந்த ‘’மெழுகுவர்த்திகள்’’ கல்கியில் வந்த ‘’இலட்சிய அம்புகள்””வீட்டுக்குள்ளேயே இருப்பதால் குடும்ப கதைகள்தான் அதிகம் நான் எழுதியகதைகளில் எனக்குப்பிடித்தது ‘’கல்கியில் வந்த லட்சிய அம்புகள்’’ கலைமகளில் வந்த //மெழுகு வர்த்திகள்,,--குறுக்கீடுகள்’’

முதல் தொகுப்பு  --
பொன்முடி பதிப்பகம் ,,அரு ,சோமசுந்தரன் அவர்களால்  1989ல்  வெளிடப்பட்டது  புத்தகத்தின் பெயர்; மனக் கணக்கு

இரண்டாவது புத்தகம்;; அலமு புத்தக   நிலையம்   -தயாரிப்பு கரு செல்லப்பன் ,புத்தகம்--மாணவர்களுக்கான நீதிக் கதைகள் 1994

மூன்றாவது புத்தகம்;அலமு புத்தக நிலையம்-தயாரிப்பு கரு செல்லப்பன்
புத்தகம்’’சிறப்புத்  தரும்  சிறுவர் கதைகள்..

இதைத்தவிர பெரிதாக ஒன்றும் இல்லை, எல்லா புகழும் இறைவனுக்கே    என் புனை பெயர்கள்’மன்னை சதிரா,ஆர் சரஸ்வதி,, சரஸ்வதி ராசேந்திரன்.

டிஸ்கி :- அடேயப்பா எவ்வளவு சாதனைகள். குடும்பத்தலைவியா இருந்துகிட்டு எழுத்துலகிலும் சாதிப்பது என்பது இமாலய சாதனைதான்.புனை பெயரான மன்னை சதிரா ரொம்ப அழகா இருக்கு.நீங்களே பெரிய எழுத்தாளரா இருந்தும் என்னைப் போன்றவர்களையும் ஊக்குவிப்பதுக்கு மிக்க நன்றி.

 உங்க மூன்று புத்தகங்களுக்கும் முதலில் வாழ்த்துகள். இடையறாது நீங்கள் புரியும் எழுத்துல சேவைக்கும் வந்தனங்கள்.நாளைக்குப் பெண்கள் தினம். இந்த 104 ஆவது சர்வதேச மகளிர் தினத்தில் சிறுகதை ராணியான உங்களைப் பத்தி என் ப்லாகில் பகிர முடிந்தமைக்கு என் வாழ்த்தைத் தெரிவிச்சுக்கிட்டு சந்தோஷமும் பெருமையும் கொள்கிறேன் சரஸ்மா. :) மகளிர்தின வாழ்த்துகள் தோழிகளே. மங்கைகளே . :) 

வலையால் இணைந்தோம்.!
(எழுத்துக் ) கலையால் உயர்வோம்.!

11 கருத்துகள்:

  1. மிகவும் யதார்த்தமான அழகான பேட்டி அருமை.

    இருவருக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சிறுகதை எழுத்தாளர் சரஸ்வதி ராஜேந்திரன் அவர்கள் பேட்டி அற்புதம்.
    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சந்தேகமேயில்லை... இமாலய சாதனை தான்...

    சரஸ்வதி ராஜேந்திரன் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  4. சாதனை எழுத்தாளர் திருமதி. சரஸ்வதி ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் சிகரம்,பண்பின் பாசறை,பன்முக கலைஞி, பாசமிகு தோழி தேனம்மை, மற்றவர்களுக்கும் மகுடம் சூட்டிப் பார்க்கும் பெருந்தன்மை கண்டு மனம் நெகிழ்கிறேன்,அன்பின் மிகுதியால் மிகுதியாகவே சொல்லியிருக்கிறார் ,அவர் மேன்மேலும் பலதுறைகளிலும் மேன்மையடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்
    நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகளுக்கு நன்றி கோபால் சார். :)

    மிக்க நன்றி கோமதி மேம்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி தனபாலன் சகோ ஆம் இமாலய சாதனைதான்

    நன்றி முகம்மது சகோ

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. அருமையான பேட்டி.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அன்பு சரஸ்வதி 200 கவிதைகளா பெரிய சாதனை அரசி நீங்கள்..
    உங்களுக்கும் தேனக்காவுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜலீலா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...