எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 மார்ச், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர். ப்ரகாஷ் ராமஸ்வாமி- மகனுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்.

முகநூல் தோழர் ப்ரகாஷ் ராமஸ்வாமி. என்னுடைய படைப்புகளை இவரோட அம்மா சாஜி ராமு  ( சரஸ்வதி ) & தந்தை வெங்கட்ரமணா ராமசாமி.இருவரும் விரும்பிப் படிப்பாங்கன்னு ஒரு முறை சொன்னார். என் நலம் விரும்பும் நல்ல மனிதர். என் அன்பிற்குரிய சகோதரர். முகநூல் நண்பர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களில் ஒருவர். சௌதியில் வசிக்கிறார்.

’என்னடா இந்த ஊரு ஒரே பாலைவனம் , ஏசியிலேயே இருக்க வேண்டி இருக்கு. வெளியே போனா வெய்யில் கொளுத்துது . ’ இப்பிடின்னு சிலர் வேறு வெளிநாட்டுக்கும் அதோட ’இந்தூரு ட்ரெஸ்ஸான பர்தாவை அணியாம பெண்கள் போக முடியாது கட்டுப்பாடுகள் ஜாஸ்தி ’ இப்படியேதான் சில உறவினர்களும் நண்பர்களும் அதை விட்டுட்டு துபாய், ஷார்ஜா என்று மாறி இருக்காங்க. ஆனா ப்ரகாஷோட முகநூல் பகிர்வுகளைப் பார்த்தீங்கன்னா இது எதுவுமே வராது. செம ஜாலியும் கேலியும் சுவாரசியமும் மிளிரும். அதிலும் அங்கே இருக்கும் ஷாப்புகள், உணவுகள் நடைமுறைகள் அதோடு அதாக சர்வதேச கிரிக்கெட், உலக சினிமா,  உள்ளூர் சினிமா நம்மூரு சினிமா, பிடித்த நண்பர்களோட கவிதை, ஸ்டேடஸ் பகிர்வுகள் நச்சென்ற கமெண்டுகள் என்று கலக்கி இருப்பார்.

எந்த நேரத்தில் போய்ப் படித்தாலும் சந்தோஷம் துள்ளும் இடம் என்று அவரது முகநூல் பக்கத்தைச் சொல்லலாம். சிலருக்கு மட்டுமே அந்தத் திறமை வாய்த்திருக்கிறது. அவர் நிறைய எழுதுவார் நிறையப் பகிர்வார். சுயகேலி கிண்டல் கூட உண்டு. ஒர் முறை தன் மகன் நைச்சியமாகச் சிரிப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய ப்ரொஃபைல் பிக்சரா வைத்திருந்தார். கேட்டா தன்னைப் பார்த்துத் தன் மகன் சிரிப்பதாகவும் அதை எடுத்து தன் ப்ரொஃபைல் பிக்சராகப் போட்டுக்கொண்டதாகவும் கூறினார். இதவிட வேறென்ன சாட்சியம் வேணும் அவரது ஹாஸ்யத்தை நிரூபிக்க.

அவர்கிட்ட என்ன கேள்வி கேக்குறதுன்னு ஒரே குழப்பம். இதுவரை முகநூலில் வந்தாகவும் இருக்கக்கூடாது. வித்யாசமாகவும் இருக்கணும் எனவே இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

என் வலைத்தளத்தில் சாட்டர்டே ஜாலிகார்னர்னு ஒரு போஸ்ட் போடுறேன். ஒரு கேள்வி கேப்பேன் அதுக்கு நீங்க 4 பாராலேருந்து  10 பாராவரைக்கும் ( எழுத முடிஞ்சவரைக்கும் ) கொடுக்கலாம். சோ இந்தக் கேள்விக்கு  டைம் கிடைக்கும்போது பதில் அனுப்புங்கன்னு கேட்டேன். அவர் உடனே அனுப்பிட்டார். இத ஃபிப் 14 ஆம் தேதி போஸ்ட் பண்ணி இருக்கணும். ஆனா லேட் ஆயிந்தி. சோ மார்ச் 14 க்கு போஸ்ட் பண்றேன். ஏன்னா மார்ச் 14 வரை காதலர் தின மறு பரிசளிப்புகள்  தொடருதுன்னு விக்கிபீடியா மீடியான்னு ஏதோ ஒன்னுல பார்த்தேன். :)  லேட்டா வந்தாலும் அவரோட லேட்டஸ்டான தாட்ஸோட வந்திருக்கேன் மக்காஸ் படிச்சுப் பாருங்க. :)

/// உங்க மகனுக்கு நீங்க ஒரு கடிதம் எழுதினா எதைப் பத்தி  எழுதுவீங்க. ////

////ப்ரகாஷின் கடிதம். :-
  • என் அன்பு அனிருத்துக்கு,

    என் மகன் என்பதால் எனக்கு தெரியும்...எப்போதாவது ஒரு கால கட்டத்தில் கண்டிப்பாய் நீ காதல் வயப்படுவாயென்று. அதை தாண்டிப் போவது அத்தனை எளிதல்ல.அப்படி போகும் போது.. என் அனுமதிக்கு நீ காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.


    காதல் என்ற ஒன்று பெற்றோரின் ஆசிகளின் வழியோ, பெரியவர்களின் எதிர்பார்ப்பை முன்னிட்டோ வருவதில்லை. காதல் பற்றி என் பார்வையும், ஆசிகளும் எப்போதும் நேர்மறையாய் எப்போதுமே உனக்காக உண்டு. 

    இந்த மடலை மேலே படி.. 

    காதல் வயப்பட்டதற்கு முதலில் என் வாழ்த்துக்கள். !

    காதல் எனும் அந்தத்தருணம் கூட, சிரிப்பு, அழுகை, வெட்கம், கோபம் போல... ஒரு தருணம் தான்... சில நொடிகளில் மலர்ந்து விடும் அது... எல்லோரிடத்திலுமே வாய்ப்பதில்லை. எங்கேயோ... உள்ளத்தில் ஒரு கதவானது திறந்து அதை உள்வாங்க... தன் உள்ளத்தை... உள்ளங்கையில் தாங்கிக்கொள்ளும் யாரோ ஒருவருடன் மட்டுமே இயல்பாய் பூத்தும் ... வளர்ந்தும் விடுகிறது. இருளான தருணங்களில் கைகோர்த்து.. நானிருக்கிறேன் என்று கூட வரும் அவளிடத்து ஏற்படும், காதலை ..பெரும்பாலும் சமூகம் தெளிவாய்..எதிர்மறையாய் எடுத்துரைத்தே பழக்கப்பட்டு இருக்கிறது.


    இப்படியான ஒவ்வொரு காதலையுமே எளிதில் வரவேற்கப்பட வேண்டிய நிர்பந்தத்தில் சமூகம் இல்லாத போது, வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களிலேயே, இதற்கான விலையை ஒவ்வொரு காதலர்களும் கொடுத்து விடவேண்டி இருக்கிறது. எக்காலத்திலுமே எதிர்ப்பு என்ற ஒன்று மட்டும் உண்மையாய் ஏதோ ஒரு வகையில் முளைத்து விடுவது கூட காதலுக்கு துரதிர்ஷ்டம்தான். இது நிறமாகவோ, ஜாதியாகவோ, மொழியாகவோ இல்லை மதமாவோ, அல்லது ஏதோ ஒரு காரணியாகவோ அமைந்துவிடுகிறது. 


    உனக்கான எந்த ஒரு தோழனை விட நான், இப்போது போல் எப்போதுமே உன்னருகில் இருப்பேன் என்பது மட்டும் உறுதி. எதிர்காலம் பற்றிய தெளிவும், எதிர்பார்ப்புகள் இல்லாத காதலும், .. உண்மையில் ஒரு வரம்தான் . எதிர்பார்ப்புகள் மட்டுமே காதலை நீர்த்தும், உலர்த்தியும் போகச்செய்கிறது... 

    வாழ்க்கையை மட்டுமின்றி, தினம் வாழ்தலின் ஒவ்வொரு நொடியையுமே... காதல் சுவாசிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொடுத்து விடுகிறது.  இது மேலும் நம்மை அழகாக்கி ஆச்சர்யப்படுத்தி விடுகிறது. நம்மை ஒருவர் காதலிப்பதில், சாதாரணமான காட்சிகள் கூட, பேரழகாய் தெரிய ஆரம்பித்து விடுகிறது. புத்துணர்வான நாட்கள்... போற்றிய தருணங்கள்..நேசித்த நேரங்கள்.. சுற்றிய இடங்கள்...மரத்தடி, பூங்காவின் ஒரு நாற்காலி, கடற்கரையின் ஏதோ ஒரு இடம், இப்படி தினப்படி பார்த்து சலிப்புறும் இடங்களைக்கூட, அதன் அழகிய நினைவுகளால் நிறைய மெருகேற்றி விடுகிறது இந்தக்காதல். 

    தனியாய் பிரித்து.. ஆண் பெண் அருகாமையைக்கூட குற்ற உணர்ச்சியோடு அணுகச்செய்யும் நம் சமூகத்தை... வெல்லுவது கூட இந்தக்காதலில்.. வயப்படுவதிலும், அதை போற்றுவதிலும்தான் இழைந்து போயிருக்கிறது .. இப்படி எதுவுமே.. வாய்க்கப்படாத பலரும் உள்ள சமூகத்தில், காதல் சாத்தியப்பட்ட நீங்கள் இருவருமேகூட மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான். எத்தனை இடர்பாடுகள், கைவிலங்குகள், சிக்கல்கள் அது அத்தனையும் உடைத்தெறிந்து அணைத்து வாழ வாழ்த்துக்கள். 

    காதலால் ஆசீர்வதிக்கப்பட்ட பொழுதுகள் எப்போதும் ரம்மியமானது .. அதை எப்போதும் போற்றி .. காலம் முழுதும் அன்பொழுகி வாழவும்.. என் ஆசிகள் எப்போதும் உனக்குண்டு.... காதலுக்கான தேதியை நீகூட முடிவு செய்ய இயலாது என்பதால்.. தேதியற்று இந்த கடிதத்தை தருகிறேன் உன் உற்ற தோழனாய். 

    அன்புடன், பிரகாஷ்.


டிஸ்கி :- ஆஹா என்ன ஒரு நெகிழவைக்கும் கடிதம். இப்படி ஒரு கடிதம் ஒரு அப்பா பிள்ளைக்கு எழுத முடியுமா. ! ஆச்சர்யப்பட வைச்சிட்டீங்க ப்ரகாஷ். இப்பிடி ஒரு பெற்றோர் கிடைச்சா அந்தக் குழந்தை பெரும்பாக்கியம் செய்த குழந்தைதான். 

எங்க காலத்துல எல்லாம் இப்பிடிப் பெற்றோர்  யாரும் சிந்திக்கலையேன்னு ஒரு கணம் நினைச்சேன். ஆனா யார் கைகாட்டிமரம் மாதிரி வழி விட்டாதான் என்ன.  எங்ககாலத்து ( பெண்கள் )  மூளைல ஆராய்ச்சி புத்தியே ஓடிட்டு இருக்கே இதை மீறி காதல் எண்டர் பண்ண முடியல தோல்வி அடைஞ்சிருச்சுன்னுதான் சொல்லணும்.   

வித்யாசமான தகப்பன் கிடைத்த அனிருத் கொடுத்து வைத்தவன். வாழ்க வளமுடன் மனம் நிறைந்த அன்பு கொண்ட பெண்ணுடன்.  :) 


டிஸ்கி 2:- இது என்னோட 1500 ஆவது இடுகை :)



11 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான பதில்கள்... சும்மா "நச்"சென்று...

    பதிலளிநீக்கு
  2. 1500ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். தேன்.
    ஸ்ரீ ப்ரகாஷ் ராமஸ்வாமியின் காதல் சுவாசிப்பு மிக அதீதமான உணர்வைக் கொடுக்கிறது. அனுபவித்த உண்மைகளைச் சொல்லி இருக்கிறார். எங்கள் மெரினாக் காலத்துக்கு அழைத்துப் போய் விட்டது. அவர் மகனுக்கும் அருமையான காதலி அமைய வாழ்த்துகள். அருமை.

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான கருத்துக்கள்! பெற்றோர்களுக்கு முன்னுதாரணமான பதில்!

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான கேள்வி... விவேகமான பதில்... உங்களுக்கும் திரு பிரகாஷ் அவர்களுக்கும் என் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. அடேயப்பா 1500 வது பதிவு proud of you வித்தியாசமான அப்பா விவேகமான கடிதம் இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் -சர்ஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  6. ...ஆஹா அருமை ....அற்புதமான அப்பா ...மிக மிக லக்கி மகன் ...
    1500 பதிவுக்கு வாழ்த்துக்களும் அக்கா

    பதிலளிநீக்கு
  7. சில நாட்களாக முகநூலில் தொடர்ந்து வருகிறேன்.... உண்மையிலேயே இவரது பதிவுகள் துள்ளலானவை....

    பதிலளிநீக்கு
  8. நன்றி தனபாலன் சகோ

    நன்றி வல்லிம்மா

    நன்றி கணேஷ் அப்பன்

    நன்றி மோகன் ஜி

    நன்றி சரஸ் மேம்

    நன்றி ஏஞ்சலின்

    நன்றி கார்த்திக் சரவணன்.

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான கருத்துகள். அருமையான பதிவு. பகிர்ந்த உங்களுக்கும், எழுதிய திரு ப்ரகாஷ் ராமசுவாமிக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. முதலில் 1500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    ரொம்பவும் விவேகமான அப்பா. இப்போதுதான் திரு சுதாகர் கஸ்துரி எழுதிய அப்பாவிற்கும் பெண்ணிற்கும் இடையே நடக்கும் ஒரு (பள்ளிப்பருவத்துக் காதல் பற்றிய) உரையாடலைப் படித்து பகிர்ந்து கொண்டேன். இங்கே அப்பா பிள்ளைக்குச் சொல்லுகிறார். ஒவ்வொரு வார்த்தையும் மனதை வருடுகிறது.
    கொடுத்து வைத்த மகன். கொடுத்து வைத்த அப்பா. நிஜமான காதல் அந்தப் பிள்ளையின் வாழ்வில் மலரட்டும். அப்பா, பிள்ளை இருவருக்கும் நல்வாழ்த்துகள். ஒரு அப்பாவை மனம் விட்டுப் பேசவைத்த உங்களுக்கும் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...