எனது பதிமூன்று நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2016

நாலு புள்ளியில் ஐம்பத்தைந்து கோலங்கள்.

நாலு புள்ளி நாலுவரிசையில் கோலங்கள் போட்டு அனுப்புங்க அக்கா என்று ஸ்ரீதேவி செல்வராஜன் எனக்குக் கட்டளை இட்டிருந்தார். ( போன வருடம் ) . புள்ளைக்குக் கல்யாணமானபுதுசு. என் முகநூல் தங்கையான அவர் என் முகநூல் நண்பரான உதயாவை மணந்திருந்தார். புள்ள வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியுதோ இல்லயோ கண்ணுக்கு அழகா கோலமாட்டும் வாசல்ல போட்டு அஸ்பெண்டை தாஜா பண்ணுவோம்னு கேட்டிருந்துச்சு போல :)

கொசுறா ஒரு புள்ளிக் கோலமும் போட்டு அனுப்பினேன். காலை பிஸியில் ஏதோ ஒரு புள்ளிய வைச்சுக் கோலம் போட்டுடலாம்ல. ஃப்ளாட் வாசல்கள்ல அவ்ளோதானே இடம் இருக்கும் :) :) :)

இப்போ அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணு பிறந்திருக்கா. இந்த இனிப்பான தருணத்துல அவங்கள வாழ்த்துறதோட இந்தக் கோலங்களையும் பகிர்கிறேன்.

அப்புறம் முக்கியமான விஷயம். உதயசங்கர் கோலங்களுக்காக ஒரு வெப்சைட்டே வைச்சிருக்கார் :)

சாட்டர்டே போஸ்டுக்காக ப்ராமி கல்வெட்டுக்கள் பத்தியும் ப்ராமி எழுத்துருக்கள் பத்தியும் கேட்டிருந்தேன். முன்னேயே பிஸி. இப்போ பாப்பா வேற வந்தாச்சா. என்ன சொல்ல. அதுனால மெயில்ல கிடைச்சத இங்கே போட்டிருக்கேன். நீங்களும் அவர் வெப்சைட்ஸ் பக்கம் போயிப் பாருங்க. !

அருமையா கோலம் போட சொல்லித்தராங்க. !

அஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ அல்வா )

அஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ அல்வா )

தேவையானவை:- காய்ந்த அத்திப்பழம் – பதினைந்து , நெய் – கால் கப்,, பாதாம் + முந்திரி  – ஊறவைத்து தோலுரித்து பொடித்தது – அரை கப், சர்க்கரை – முக்கால் கப் , பால்பவுடர் – முக்கால் கப் , ஏலப்பொடி – கால் டீஸ்பூன், அலங்கரிக்க குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்.

வியாழன், 29 டிசம்பர், 2016

சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.

மணி இரண்டாகப் போகுது . பசி வயித்தைக் கிள்ளுது. சிங்காநல்லூர் ரோட்டில் ஆட்டோ பறந்துகிட்டு இருக்கு.  இன்னும் வேகமா போனாத் தேவலை.

சாப்பாடு சாப்பாடுன்னு வயிறு கூப்பாடு போடுது. சிங்காநல்லூர் சிக்னல்ல நிக்கிது வண்டி. இன்னும் கொஞ்சம் தூரம்தான்னு சமாதானப்படுத்திட்டு ட்ராஃபிக்கைப் பார்த்துட்டு இருக்கோம்.

டக்குன்னு கிளம்புது வண்டி . அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் ஷாந்தி கியர்ஸ் வாசல். யே யப்பா என்னா பிரம்மாண்டமா இருக்கு.

இங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. இங்கேதான் ரங்கமணி பெட்ரோல் போடுவார். ஏன்னா என்ன விலை ஏறினாலும் ஸ்டாக் தீரும்வரை பழைய விலைதான்.

அதே போல மருந்துகளும் ரீடெய்ல் விலையை விட 20 பர்சண்ட் குறைத்துக் கிடைக்கும் என வாங்குவார்.

அங்கே ஒரு முறை சாந்தி காண்டீனில் சாப்பிட்டதாகவும் விலை மிகக்குறைவாக இருந்ததாகவும் சொன்னார். பலமுறை கோவை சென்றும் போக இயலவில்லை . ஆனால் போனமாதம் ஒருநாள் செல்ல வாய்ப்புக் கிட்டியது. ஆனால் மணியோ இரண்டை நெருங்கிட்டிருந்தது. சாப்பாடு மிச்சம் இருக்குமா.

3000 பேருக்குத்தான் டோக்கன் கொடுக்கப்படுமாம். முதலில் வருபவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். கடைசியில் வந்தால் வெரைட்டி ரைஸ்தான் கிடைக்கும். என்றார். ஒரே பதக் பதக்.

ஆட்டோவுக்கு 200 ரூ செலவழித்து ( ஆர் எஸ் புரத்திலிருந்து   இன்னிக்குத்தான் போணுமா இன்னொரு நாள் போலாமே என்ற விவாதங்களில் இருந்து தப்பி என் பிடிவாதத்துக்காக ) 20 ரூபாய் சாப்பாடு சாப்பிடச் சென்றோம். :)

கிடைச்சுச்சோ தப்பிச்சேன். இல்லாட்டி என்ன செய்ய . ரங்க்ஸுக்கும் எனக்கும் நல்ல பசி. உள்ளே நுழைந்தால் அப்பாடா இன்னும் போர்டு ஒளிர்ந்தது. 350 டோக்கன் இருப்பதாக.

அட இதென்ன அனுமார் வாலாட்டம் க்யூ. 400 பேர் இருக்கும் போலிருக்கே. வண்டி நிறுத்தும் இடங்களில் எல்லாம் வரிசை. க்யூ நகர்ந்தது. திருப்பதி க்யூ மாதிரி. பெருமாளே இன்னிக்கு அன்னம் கிடைக்குமா. என நகர நகர கிட்டத்தட்ட 35 ஆவது டோக்கன் பாக்கி இருக்கும்போது உள்ளே நுழைந்தோம்.  வெரைட்டி ரைஸ்தான் கிடைக்குமோ..

அந்த சீட்டைக் கொடுத்து பஞ்ச் பண்ணி திரும்ப வரிசையில் நுழைந்தால் டப் டப் என ஒரு கிண்ணத்தில் தட்டிய தயிர்சாதமும் , ஒரு கப் புலவும் கிடைத்தது.

மிகப் பெரும் உணவு அரங்கம். ருசி மிகுந்த உணவுகள். வைக்கப்பட்டிருப்பதோ சுத்தமும் சுகாதாரமும் மிகுந்த சில்வர் ப்ளேட்டுகள், கப்புகளில். தண்ணீர் ஜக்கும் டம்ளர்களும் கூட மின்னின.

ஆனால் உட்காரத்தான் இடமில்லை. ஜாதி மத இன பேதமற்று சமரசம் உலாவும் இடமாக இருந்தது. ஒரு வழியாக சீட்டைப் பிடிச்சோம். அப்பாடா அரசாங்கத்துல ஒரு சீட் கிடைச்சிருந்தா கூட இப்பிடி சந்தோஷம் இருக்காது.

சாப்பிட்டதும் சென்று சிறிது ப்ளெயின் ரைஸ், சாம்பார், மோர், கீரை வாங்கி சாப்பிட்டோம். அவ்ளோதான் இருந்தது. ஆனால் வயிற்றுக்குப் போதுமான அளவு கிடைத்தது.

திருப்தியுடன் வெளியே வந்து ஒரு ஐஸ்க்ரீமை வெட்டினோம். பார்க் போல மக்கள் கும்பல் கும்பலாக உக்கார்ந்திருந்தார்கள். ஐஸ்க்ரீமுக்கும் க்யூ.  ஒன்றை வாங்கி ரங்க்ஸும் நானும் சாப்பிட்டோம். இல்லாட்டி வெயிட் போட்டுடும்ல. :) 
அடிதடி இல்லாக் கூட்டம்.  மெல்லிய இசை, ஏசி.!!!

முந்திரி , கிஸ்மிஸ் போட்ட புளிப்பில்லாத தயிரன்னம் அருமை. புலவும் தயிர்ப்பச்சடியும் கூட. 

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் போட்டிகளில் கலந்து பரிசு பெறணுமா. பின் வருவதைப் படிச்சுக் கலந்து வெற்றி வாகை சூடுங்க. வாழ்த்துகள். :) போட்டியைப் பகிர்ந்தமைக்கு நன்றி முதுவை ஹிதயத்துல்லா சார் .

 

////மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்


காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் -

கம்பராமயண ஒப்பித்தல் போட்டி -1

சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் இருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை உள்ள புகைப்படங்களை ஒரு நண்பரின் பாரம்பரிய இல்லத்தில் காண நேர்ந்தது. அதில் இருந்த உயிர்த்துடிப்பும் வாழ்வும் அதைப் புகைப்படம் எடுக்கத் தூண்டியது.

விதம் விதமான ஓவியங்களின் பாணி அவை வரையப்பட்ட வண்ணக் கலவைகள் மற்றும்  லேசாய்ப் பழுக்காய் ஏறிய டிசைன் சட்டங்களால் வடிவமைக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன.

புகைப்படங்கள் ஒரு காலகட்டத்தின் வாழ்வியலை உணர்த்துபவை.

அவை ஒரு நாட்டின் இனத்தின் மக்களின் வாழ்க்கையைப் பதியம் செய்திருப்பவை.

அன்றைய கலாச்சாரம்,நாகரீகம், பண்பாடு, வீடுகள், அன்றைக்குப் புழக்கத்தில் இருந்த உடைகள், நகைகள், விழாக்கள், இறைவழிபாடு ஆகியவற்றை அறிய உதவுகின்றன.

நம் வேர்கள் எவ்வளவு ஆழமானவை என்பதையும் உணர்த்துகின்றன. 

என்னைக் கவர்ந்த சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

இங்கே சில வெளிநாட்டு வாழ்வியல் ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன. மலேயா, மியான்மர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழ்ந்திருந்தபோது வாங்கியவையாகவோ வரையப்பட்டனவாகவோ இருந்திருக்க வேண்டும்.

உடையணிந்திருக்கும் பாணியும் பூக்களும் பழங்களும் இவர்கள் கற்பனை மாந்தர்களோ, ரிஷி பத்தினிகளோ, கந்தர்வர்களோ, யட்சிகளோ  என எண்ணத் தோன்றுகிறது.
நிலையில் கண்ணாடியில் எனாமலில் வரையப்பட்ட லெக்ஷ்மியும் யானைகளும்.

நதிக்கரையோரம் காத்திருக்கும் ஆங்கில மாதுவும் ஜப்பானியப் பெண்ணும். காத்திருத்தல் எங்கும் ஒன்றுதான் போல. :)
இன்னொரு புகைப்படத்தில் தூரத்தே தெரியும் கோட்டையும் அதைக் கடந்து கழுதையின் மேல் சுமை ஏற்றி வரும் பெண்ணும்.

புதன், 28 டிசம்பர், 2016

பூ ,பூவை, பூஜை.

தூர்தர்ஷனில் சில வருடங்களுக்கு முன்பு குல், குல்ஷன், குல்ஃபாம் என்றொரு தொடர் இடம் பெற்றது. இதற்கு பூ பூவை பூங்கா என்று பெயர்.

இங்கே நான் எடுத்த பூ  பூவை ( ஒரே ஒரு படம். ) பூஜை பற்றிப் படங்கள்.

லாப்டாப்ல மிச்சமிருக்க புகைப்படத்துக்கெல்லாம் பொருத்தமா ( சேர்த்துக் கோர்த்து )  ஏதும் பேர் வைச்சிடணும்ல. அப்பத்தானே ப்லாகில போடலாம்.

ஒரு  திருமண மண்டபத்தில்  வரவேற்பு நிகழ்ச்சியில். ரோஸ்தானே இது. வித்யாசமா இருக்கில்ல. நடுவுல வட்டமா இருக்கது சாமந்தி.
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயிலில்  உறவினர் ஒருவரின் எழுபதாம் நிகழ்வில் பூஜைக்காகக் காத்திருந்த  இரட்டைத் தாமரைகள்.
அங்கேயே எடுத்த ஆறு தாமரை மொட்டுகள். பக்கத்தில் ஆயிரம் தாமரை இதழ்கள். :)
திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் உறவினர் இல்லத்தின் முகப்பில் அலங்காரப் பூக்கிண்ணம்.
சோழபுரம் இல்லத்தில் அலங்காரப் பூக்கிண்ணம். இட்லிப் பூவும் ரோஸ் அரளிப் பூக்களும். வித்யாசம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

இது மாலை நேரத்து மயக்கம். :)

இது மாலை நேரத்து மயக்கம். இதைக் காதல் என்பது வழக்கம். ஆமா இப்பிடி இனிப்புத் தின்னா மயக்கம் வராம என்ன செய்யும்.  இனிப்புக்காதல். :)

ஸ்வீட் நத்திங்க்ஸ்ம்பாங்க. வெட்டி அரட்டை அப்பிடீங்கிறதத்தான் அப்பிடி சொல்றாங்களோ .

சிலர் சிலரைப் புகழ்றதுக்காக சும்னாச்சுக்கும்  “ யூ ஆர் சோ ஸ்வீட்” அப்பிடிம்பாங்க அப்ப உண்மையிலேயே நீங்களும் இனிப்புத்தானா. அத நீங்க நம்புறீங்களா.. அப்பிடின்னா ஈ எல்லாம் சுத்த ஆரம்பிச்சிருக்கணுமே.  :) கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க :)

இனியவளே என்று பாடி வந்தேன். இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன் என்று டயபடீஸ் இருக்கவுங்க எல்லாம் வொய்ஃப்க்கு ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு அவங்க சாப்பிடுற அழகை வேடிக்கை பார்க்கலாம். :)

சரி வுடு ஜூட் என் பதிவுக்குப் போலாம் ரைட். எனக்கு ரொம்ப ஸ்வீட்டூத். இனிப்புப் பல்லு. அதான் இனிப்பா பேசுறேன் :)

ஒவ்வொன்னுக்கு பேர் சொல்லணுமா என்ன.. :) அடையார் ஆனந்த பவன் குலாப்ஜாமூன். உலகம் உருண்டைன்னு சொல்லித்தந்த ஸுவீட்டூ :)
குவாலியரில் கிடைத்த ஜலேபி. ஜிலேபின்னு சொல்லமாட்டாங்க அவுங்க. லேசா புளிப்பா இருக்க இதை காலங்கார்த்தால பால்ல வேற போட்டுச் சாப்பிடுவாங்க. :)
சரவணபவன்ல ஒரு பாசந்தி. மேலே பிஸ்தா பாதாம் தூவி மினு மினுன்னு இருக்குதுல்ல :)
ஹல்திராம்ஸ் ஃப்ளேவர்ட் ஹலூவா. ஆரஞ்ச் & பிஸ்தா

காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.

601. கைப்பெட்டி/கைப்பொட்டி  - கணக்கு வழக்குகள் வைத்திருக்கும் பெட்டி ., மேசையாகவும் உபயோகப்படும். கணக்குச் சிட்டைகள், நோட்டுகள்,  பேரேடுகள், பேனா, பென்சில், குண்டூசி குத்தும் ஸ்பான்ச், ரூபாய் நோட்டுகள், சில்லரைக்காசுகள், வங்கி பாஸ்புத்தகங்கள், செக் புத்தகங்கள்.  ( திருமணம் மற்றும் குடிபுகும் சமயங்களில் - மாமப் பட்டில் முடியும் காசு, மாமப் பட்டு , நூல் கண்டு, மஞ்சள், குங்குமம், வெள்ளிக்காசு, சின்ன நோட்டு,மொய் கொடுக்க கவர்கள், பேனா, முறைதலை கொடுக்கும் நோட்டு, முறைக்குக் கொடுக்கும் பணக் கவர்கள், கணக்குச் சிட்டைகள்,பணம் ) ஆகியன இருக்கும். 

602. ஐந்தொகை., பேரேடு..-- கணக்கு வழக்குகளை குறிக்கும் முறை. ஐந்தொகை என்பது எழுதி இருக்கும் வரவு செலவு இருப்புக் கணக்கு விபரங்களை வகைதொகையாகப் பிரித்து அதன் வகை வாரியாகத் தனித்தனிப் பக்கங்களில் எழுதுவது. பேரேடு என்பது மொத்தமாகக் குறித்து வைத்துக் கொள்வது.

603. பற்று வரவு  - ஒருவர் ன்னுடைய கணக்கில் கடன் வாங்கி இருந்தால் அு பற்று. அத் திரும்பச் செலுத்திக் கணக்கை நேர் செய்ால் அு பற்றுவு.  

604. கொண்டு விக்கப் போதல்/கொண்டு விற்றல். - முதல் எடுத்துக் கொண்டு வியாபாரம் செய்யக் கல்கந்த வெளிநாடு செல்லுதல்.

 605. கண்டாங்கி. -  புடவை. சீலை, சரிகைக் கண்டாங்கி என்றால் பட்டுச் சேலை.

606. பாட்டையா - ஐயாவின் தந்தை., அப்பாவின்/அம்மாவின் தாத்தா. 

607. கொள்ளுப் பேரன் பேத்தி. - பேரன் பேத்தியின் குழந்தைகள். , மகன்/மகளின் பேரன்பேத்திகள்.

திங்கள், 26 டிசம்பர், 2016

சரஸ் மேம் பார்வையில் சிவப்புப் பட்டுக் கயிறு.

 மன்னை சதிரா என்று அறியப்படும் பிரபல எழுத்தாளரான சரஸ்வதி ராஜேந்திரன் மேம் அவர்கள் எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு விமர்சனம் அளித்துள்ளார்கள். முகநூலில் எனது புத்தகப் பக்கத்தில் அவர் கொடுத்ததை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். :)
///Saraswathi Rajendran சிவப்புப்பட்டுக்கயிறுஒரு பார்வை 

படைப்பாளியின் வாழ்க்கை அன்பவங்கள் நேர்பதிப்பாகவோ
மறைமுகப்பதிவாகவோ இருக்கலாம். அதை கலை நயத்துடன் அவர் வெளியிடும் பாங்கில்தான் படைப்புத்திறன் பளிச்சிடுகிறது. அவருடைய பாதிப்பின் ஆழம்,அழுத்தம்,உணர்வுகளின் வெளிப்பாடாய் அருமையான சொற்களில் வந்து விழும் பிரதிபலிப்பாய் பரிணமிக்கிறது
சிவப்புப்பட்டுக் கயிறு.


சனி, 24 டிசம்பர், 2016

கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.

என் குழந்தைகள் அணிந்திருந்த கவுடு இது. இதைக் கண்டிகை என்றும் தெய்வீக மணி என்றும் உருத்திராக்கம் என்றும், ருத்ராக்ஷம் என்றும் சொல்கிறார்கள். இப்படி வெள்ளியாலோ தங்கத்தாலோ பிடித்து இருந்தால் ருத்ராக்ஷத்திற்குக் கவுடு என்று பெயர். !

என் குழந்தைகள் சிறியவர்களாய் இருந்தபோது  சிவப்பு/கருப்புக் கயிறு கட்டி கண்டத்தில் படும்படி இதை அணிவித்திருந்தேன். அவர்கள் பாட்டையா ருத்ராக்ஷத்தில் வெள்ளிபிடித்துப் போடும்படிக் கொடுத்திருந்தார்கள். குழந்தைகள் சில வருடங்கள் அணிந்திருந்தார்கள். அந்த சிவப்புக் கயிறு ஒரு முறை அறுந்தபின் (டெல்லியில் பள்ளிப்பருவம் )  அதன்பின் அணிவிக்கவில்லை. :(  இது ஐந்துமுக ருத்ராக்ஷம். ஓம் நமசிவாய என்று ஒரு முறை காலையில் சொல்வதுண்டு.

கண்டத்தில் எப்போதும் படுவதால் ஞாபக சக்தி பளிச்சிடும், சளி போன்ற உடல்நலக் கோளாறுகள் அண்டாது. ருத்ராக்ஷத்தில் பட்டு மேனியில் படும் நீர் மருத்துவ சக்தி கொண்டது என்று சொன்னார்கள்.
ருத்ரனின் கண்களில் இருந்து தோன்றியது என்றும் கண்ணீர்தான் ருத்ராக்ஷமாக மாறியது என்றும் சொல்கிறார்கள். ருத்ராக்ஷ மரங்களில் இருந்து விளைந்த பழங்களே ருத்ராக்ஷ மணிகள் என்கிறார்கள். ஹரித்துவார் ரிஷிகேஷ் சென்றபோது அங்கே நிறைய ருத்ராக்ஷ மாலைகள் விற்பனையில் இருந்தன. ஆனால் சுத்தபத்தமாகப் போடவேண்டும் என்று சொன்னதால் வாங்கவில்லை. வீட்டில் இருக்கும் ருத்ராக்ஷமாலை ஐயப்பன் கோயிலுக்குப் போகும்போது போட்டுக் கொள்வார்கள். சிலர் இதில் சிறு ருத்ராக்ஷங்களாகப் பொறுக்கி தங்கம் பிடித்துப் போடுவதுண்டு. நெல்லி அளவுள்ள பெரிய ருத்ராக்ஷங்களே சிறப்பு என்று சொல்லப்படுகிறது.
ஒன்றுமுதல் 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராக்ஷங்கள் உண்டு. அவற்றை அணிந்தால் பாவம் போகும், கோள்களின் கொடுமை அடங்கும், மும்மலம் நீங்கும், நோய் நொடி தீரும், லெக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கண் திருஷ்டி போக்கும், வியாபாரத்தை அதிகரிக்கும், பார்ப்பது புண்ணியம் அணிவது அதைவிடப் பலமடங்கு புண்ணியம் தரும், என சிவமஹா புராணம், பத்மபுராணம் , தேவி பாகவதம், சிவரகஸ்யம், திருக்கோட்டூர் புராணம் ஆகியன சொல்கின்றன.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

அங்காடித் தெருவில் ஆயர் பிறந்தார். !

”தந்தானைத் துதிப்போமே” என்ற பாடல்தான் நான் முதன் முதலில் கேட்ட கிறிஸ்துவ பாடல். அம்மாவின் தோழி காந்தி டீச்சர் ( நடனம் சார் மனைவி ) கூட்டிச் சென்ற ஒரு பெந்தகொஸ்தே சர்ச்சில் இப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு ஞாயிறு. காலை திருப்பலியாக இருக்கலாம். அதன் பின் செயிண்ட் ஜோசப் பள்ளியிலும், ஃபாத்திமா காலேஜிலும்  சர்ச்சில் முழந்தாளிட்டு அமர்ந்து ப்ரேயர் செய்ததுண்டு. பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். :) IN THE NAME OF THE FATHER, AND OF THE SON , AND OF THE HOLY SPIRIT, AMEN. !

தினம் நடக்கும் திருப்பலியில் நமக்கும் நன்மை (அப்பம்)  தரமாட்டார்களா என ஏங்கியதுண்டு. ஞானஸ்நானம் செய்யாதவர்கள் நன்மை வாங்கினால் வாயில் ரத்தம் வரும் என்று கிறிஸ்துவத் தோழி சொன்னதைக் கேட்டுப் பயந்ததுண்டு. :)

நற்கருணை வீரன் படித்துப் புளகாங்கிதம் அடைந்ததுண்டு. இந்த உலகம் தப்பிப் பிழைக்குமா என யோசித்ததுண்டு. எல்லா மதங்களும் இஸத்தில் முடிய கிறிஸ்துவம் மட்டும் இன்ஃபினிட்டி என்பது போல கிறிஸ்டியானிட்டி என முடியும் என என் ஆசிரியை ஒருவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டதுண்டு. CHOIR GIRLS  கூடப் பாட முயற்சித்ததுண்டு. :)

அல்லேலூயா அல்லேலூயா..

ஆற்றலாலும் அல்ல அல்ல
சக்தியாலும் அல்ல அல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே

1. மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே
தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா? ஆகுமே
திராட்சைரசம் திருரத்தம் ஆகுமா? ஆகுமே

2. செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே
செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா? ஆகுமே
சிங்கமாடு நட்புறவு ஆகுமா? ஆகுமே
சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே

கிறிஸ்துமஸுக்கு சில நாட்கள் முன்னான இரவில் கியாஸ் லைட் வெளிச்சத்தில் வீடு வீடாகக் கூட்டமாகப் பாடி வரும் கேரல்ஸை ரசித்ததுண்டு. கிறிஸ்துமஸ்தாத்தா எனக்கு ஏதும் பரிசு வைத்திருப்பாரோ என்றும் யோசித்ததுண்டு.

சென்னை ராயப்பேட்டையில் இருந்தபோது ஷெரில் அம்மா கிறிஸ்துமஸ் அன்று கொடுத்துவிடும் ஹனி கேக்குகள் சுவையானவை. வாழைப்பழ டாஃபி, ஃப்ரூட் கேக், சிக்கன்/மட்டன் பிரியாணியின் சுவை அட்டகாசம்.

ஒரு முறை விஜிபி கோல்டன் பீச் சென்ற போது உலக உருண்டைக்குள் ஏறிப்பார்த்தால் எல்லா நாடுகளிலும் கிறிஸ்துவம் பரவி இருப்பதைப் போட்டிருந்தார்கள். அதற்கு அங்கே வந்த கிறிஸ்துவப் பெண்கள் உலகம் பூரா நம்ம மதம்தான் இருக்குன்னு சொல்றாங்க என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்துமஸ் குளிர்காலத்தில் என்றாலும்  கார்ட்ஸ், கிஃப்ட்ஸ், கிறிஸ்துமஸ் மர ( பைன் , ஃபர்) மர அலங்காரங்கள், தொப்பிக்குள்/சாக்ஸுக்குள் பரிசுகள்,கேக்குகள், சாக்லெட்டுகள் , உறவினர் வருகை என ஒவ்வொருவர் இல்லத்திலும் களை கட்டும். 

மன்னார்குடிக்கு எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர் எல்லாம் சுவாமிமலை, சிக்கல், எட்டுக்குடி, எண்கண், நாகூர், வேளாங்கண்ணி சென்று தரிசித்து வராமல் அவர்கள் ட்ரிப் முடியாது. ஜாதி மதம் கடந்து கடவுளர்களை வணங்கி வளர்ந்திருக்கிறோம். :)

நாங்களும் குடும்பமாக வேளாங்கண்ணி, மைசூர் செயிண்ட் ஃபிலோமினா சர்ச், கோவா செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச், கோவை புனித அந்தோணியார் சர்ச் சென்றதுண்டு.

வேளாங்கண்ணி சிலுவைப் பாதையில் சிலர் செபம் சொல்லிக்கொண்டு வருவார்கள். 

மங்கள் வார்த்தை செபம்.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
மேய்ப்பரின் வருகையைச் சுட்டி அக்கம் பக்கம் ஒளிரும் நட்சத்திரங்கள்

வானவில் தொலைக்காட்சியில் பேட்டி.

சென்னையிலிருந்தபோது 2012 இல் வானவில் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட பேட்டியை எனது முகநூல் நண்பர் அரவிந்த் ரத்னவேல் எடுத்து அனுப்பி இருந்தார். எப்போது ஒளிபரப்பப்பட்டது எனத் தெரியவில்லை.

அதன் வீடியோவையும் புகைப்படத்தையும் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பேட்டியில் என்ன சொன்னேன் என்பதே மறந்துவிட்டது. ஆனால்

அப்பாவுக்கு மகள்
கணவருக்கு மனைவி
குழந்தைகளுக்குத் தாய்
அதன்பின் நான் யார் நான் யார்

ப்ரேக்ஃபாஸ்ட்.. BREAK FAST.

இரவு உணவு ஒன்பது மணிக்கு சாப்பிட்டா காலை ஒன்பது மணிக்கு டிஃபன் சாப்பிடுறோம். கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரம் வயிறு காலியா இருக்கு. அதனால காலை உணவு இன்றியமையாததுன்னு சொல்றாங்க. அதுனால வெயிட் லாஸ் பண்றேன்னு ஜூஸ் மட்டும் குடிச்சிட்டுக் காலை உணவைத் தவிர்க்காதீங்க.

காலை உணவை மஹாராஜா மாதிரி சாப்பிடுங்கன்னு சொல்வாங்க. நம்மூரு ஸ்பெஷல் இட்லிதான். ஆனா பொங்கல், வடை, அல்வா, பணியாரம்னு விதம் விதமாக் கட்டுவோம் விசேஷம்னா. இங்கே வீட்ல ,ஹோட்டல்ல, விருந்துல, சாப்பிட்டதெல்லாம் அணிவகுத்து வருது :) 

வீட்டில்செய்த ரவா தோசை வித் மிளகாய் சட்னி  :)
ரவா கோதுமை மைதா தோசை வித் பச்சடி மல்லித் துவையல் மிளகாய்த்துவையல்.
சுடச் சுட இட்லியும் புதினா சட்னியும். ( பசியைத் தூண்டும். )
ஆப்பம் நல்லது. வயிற்றுப் புண் வாய்ப்புண் ஆற்றும்.
முருகல் தோசை முறுக்கு தோசை ஆயிடுச்சு . வெங்காயக் கோஸும் பச்சைமிளகாய் கொத்துமல்லிச் சட்னியும்.
பூயீ. பூரி மசால் :)

புதன், 21 டிசம்பர், 2016

நலந்தாவில் எனது நூல்கள். தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை.

////அன்புடையீர் 

வணக்கம் 

வ. சுப. மாணிகனார் நூற்றாண்டை முன்னிட்டு நலந்தாவின் "தனித் தமிழும் இனித் தமிழும்" கருத்துப் பேழையில் ஆக்கம் நல்கி பங்கு பெற வேண்டுகிறோம். 

தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகாமல் கை எழுத்து பிரதியாகவோ தட்டச்சுப் பிரதியாகவோ 05.01.2017 க்குள் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன்
நலந்தா செம்புலிங்கம் .////
*                *                   *               *                  *                   *                *
காரைக்குடி நலந்தா புத்தகக் கடை நிகழ்த்தும் ”இனித்தமிழும் தனித்தமிழும் ” என்ற தலைப்பில் கருத்துப் பேழைக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பிப் பங்கு பெற வாழ்த்துகிறேன்.
நலந்தா = நல்ல புத்தகக் கடை. இதை நடத்தி வருபவர் தேவகோட்டையைச் சேர்ந்த திரு ஜம்புலிங்கம் அவர்கள். 

தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.

1161. திரும்ப குழந்தையா ஆயிட மாட்டோமா
.
.
. குளிர்ல சாக்ஸ், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் எல்லாம் போட்டு பெட்ல உக்கார்ந்துகிட்டு அம்மா கையால சுட சுட நரசுஸ் காஃபி வாங்கிக் குடிக்கமாட்டமா.. நாமளே போட்டுக் குடுத்துட்டு குடிக்க வேண்டியதா இருக்கு.. ---- நான் போறேன்பா காரைக்குடிக்கு. ( ஹைதையில் எழுதியது :)

1162. குளிர் ரொம்பப் படுத்தி எடுக்குதே.. உங்கூர்லயும் அப்பிடித்தானா.

1163. ஃபேஸ்புக்கில் டைப் பண்ணுவது மூலமாக நிறையப் பேர் படித்து நண்பர்களாகிறார்கள். இவர்களே பென் ஃப்ரெண்ட்ஸாக இருந்தால் நம் கையெழுத்தைப் படித்தால் விடு ஜூட்தான்.

1164. ராகு அனைவரையும் நண்பராக்குவார். சனி அவர்களைப் பகைவர்களாக்குவார்.. பாஸ் உங்க ரெண்டு பேருக்கும் பகடைக்காயா நாந்தான் கிடைச்சேனா..

1165. துக்கம் போய் மர்மம் வந்திருக்கு. #தமிழ்நாடு_சீரியல்_சீசன்_2

1166. Man.. Vain Insect..

1167. ////சுபா வள்ளி

எத்தனை அவ்வையார்கள் என்ற ஆராய்ச்சி ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டாலும் நம் கண்முன் வருவது கே.பி.சுந்தராம்பாள் மட்டும் தான் ... எத்தனை கவிதாயினிகள் வந்தாலும் தாமரை போன்ற சிலரே நிலைத்து நிற்கும் பேர்வாங்கும் பெண் கவிதாயினிகள் ..... எத்தனை பெண் எழுத்தர்கள்
தங்களின் திறமையை வெளிப்படுத்தும் இவ்விடம் அவ்வகையில் என் மனதில் வருபவர்கள்... இவர்கள் Thenammai Lakshmanan Kirthika Tharan Rajeswari Jayakumar சினிமா விமர்சனத்த பிச்சு உதறுவாங்க Achi Poorani Prema Vaduganathan Prema Mohan Nivetha Nivi Raji Krish ஆக்சுவலா இவரிடம் உள்ள பொறுமையை விட இவரின் கணவரின் பொறுமை பிடிக்கும் ஸ்மைலிங் பேஸ்ம்பாங்களே Krish Rajsekar Sindhya Ragunathan Visha Mahesh இன்னும் பல தோழிகள் .... தொடரட்டும் இவர்களின் எழுத்துக்கள்... ////

ஜெய்னிகா & கார்மெட்.

காரைக்குடியில் ஆரியபவன், அன்னலெட்சுமி, சிங்கார் ஹோட்டல் , பிரசிடெண்ட் ( புரோட்டா), அம்சவல்லி ( பிரியாணி), அன்னபூர்ணா, மல்லி , ஐங்கரன், செக்காலை பேக்கரி, பேக்கரி டிசோட்டா  எனப் பல பிரபலமான உணவிடங்கள் இருந்தாலும் ருசியால் என்னைக் கவர்ந்தது ஹோட்டல் ஜெய்னிகாவும் கார்மெட் பேக்கரியும்.

தாப்பா கார்டன்,  பங்களா , ஆகியவை பஃபே உணவுகளுக்கான இடங்கள். அநேகமா ஃபாரின் டூரிஸ்ட் வந்து போகும் இடம். முன்பே புக் செய்ய வேண்டும். 1750 என்று சொல்கிறார்கள் பர் ஹெட்.

ஓரிரு வருடங்களுக்கு முன்புதான் புதிய பேருந்து நிலையம் அருகில் துவங்கப்பட்டிருக்கிறது ஜெய்னிகா. ஒருமுறை சனிக்கிழமை அன்று அரியக்குடி போகும் முன் இங்கே காஃபி அருந்திவிட்டுச் சென்றோம். என்ன சுவை என்ன சுவை. சும்மா 3 மணி நேரம் பசியெடுக்கவில்லை. !

எல்லா ஐட்டமும் விலை சீப்தான். 100 ரூபாய்க்குள்  சராசரி மனிதர் காலை உணவை முடித்துவிடலாம். அந்த நெய் ரோஸ்ட் இருக்கே. அது ரொம்ப ரொம்ப சூப்பர். அதிலும் நீங்க எச்சரிக்கையா 80 ரூபாய்க்கு உள்ள ரோஸ்டை ஆர்டர் பண்ணனும். சும்மா தோசை ரோஸ்ட் என்றால் வதக் வதக்னு ஒரு ரோஸ்டைக் கொண்டு வந்து கொடுத்திருவாங்க. 80 ரூபாய் ரோஸ்டில்தான் நெய் வழியும் மொறு மொறுவென்று பொன்னிறமாக மின்னும் :)
ட்ரைவரும் என் சின்னப் பையனும். அவங்களுக்கு இட்லி, மினி இட்லி, வடை ஆர்டர் பண்ணிக்கிட்டாங்க.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

மழையில் நனைஞ்சிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிடும் சினிமா ஹீரோயின்ஸ் பார்த்து போறாமை அதிகமா வந்ததுண்டு.  கொஞ்சம் ஃபோட்டோஸ் அப்போ அப்போ எடுத்தது. விதம் விதமா இயற்கை பானங்களும் செயற்கை பானங்களும் ஐஸ்க்ரீம்களும் அணிவகுத்து வருது.

இது மைசூர் பிருந்தாவனுக்கு எதிரே இருந்த கரும்புச்சாறு கடை.
மருதமலை மலைப்பாதை ஆரம்பத்தில் செவ்விளநீர்க்கடை.
காரைக்குடி காளிமார்க் பவண்டோ- பனீர்  லெமன் சோடா.

கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.

கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.

திருமணம் என்பது ஒரு கோட்டை வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேறத் தவிக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. எந்த விஷயத்திலும் நீயா நானா என்று வலுவாக முழு எதிர்ப்போடு ஆண் பெண் இருவரும் சண்டையிடும் பந்தம் இந்தக் கணவன் மனைவி உறவுதான். 

இரண்டு வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஒன்றிணையும்போது பல்வேறு கருத்து மாறுபாடுகளைச் சந்திக்க நேர்கிறது. அன்றைய திருமணங்களில் பெரும்பகுதியும் பெண் ஆணைச் சார்ந்து இருந்ததால் கருத்துவேறுபாடுகள் முடங்கிப் போய்விட்டன. விட்டுக் கொடுத்து போதல் பெண்ணின் கடமையாகவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் இன்றோ ஆண் பெண் இருவரும் இணையர்கள். இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள் கை நிறைய சம்பாதிக்கின்றார்கள். எனவே யார் விட்டுக் கொடுப்பது எனப் பட்டிமன்றங்கள். 

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணமோ இருமணம் ஒன்றிணையாவிட்டால் அதிருப்தி, அக்கறை இன்மை, சுயநலம், ஈகோ, சலிப்பு, வெறுப்பு,  கோபம், வெறுமை, விரக்தி, சண்டை ஆகியன தலை எடுக்கத் துவங்கி விடுகின்றன. 

மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் ஜாதி மதம் இனம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெற்றோர் செய்யும் திருமணங்களில் பெற்றோர் கட்டாயத்துக்காகத் திருமணம் செய்யும் ஜோடிகள் அதன் பின் ஒருவருக்கொருவர் பிடித்தமில்லாமல் தங்கள் தங்கள் கூட்டுக்குள் முடங்கிக் கொள்கிறார்கள்.  ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பும் விழைவும் வேறாக இருப்பதால் வெறுப்புக் கூடிவிடுகிறது. 

திங்கள், 19 டிசம்பர், 2016

கூடை கூடையாய்த் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

கூடை கூடையாய்த் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி

 

மெல்லிய உருவம், உறுதியான குரல், தீர்க்கமான பார்வை, கொண்ட கொள்கையில் உறுதி இதுதான் விஜி என்ற விஜயலெக்ஷ்மி.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.

சனி, 17 டிசம்பர், 2016

ஆனந்த விகடனில் கவிதை.

காலம் கடந்தும் ஜெயித்த கவிதை என்று சொல்லலாம்.

எனது முகநூல் தோழி திருமதி கீதா இளங்கோவன் அவர்கள்  21.12.2016 ஆனந்தவிகடனில் ஆண்பால் பெண்பால் அன்பால் என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் என்னுடைய “ தீட்டு “ கவிதையையும் குறிப்பிட்டு கௌரவம் அளித்திருக்கிறார்.

வெள்ளி, 16 டிசம்பர், 2016

இங்கிவரை யாம் பெறவே.. – 2இங்கிவரை யாம் பெறவே.. – 2

நமக்காகத் தங்கள் வாழ்நாள் பூரா பணிபுரியும் சிலரை நாம் மறக்கவே முடியாது. மன்னார்குடியில் எங்கள் வீட்டில் பணிபுரிந்த நீலாக்கா என்பவரை மறக்க முடியாது. மிக அன்பானவர். ஈழத்தமிழர். தினமும் வந்து வீடு துடைப்பதும் ஆட்டுக்கல்லில் மாவரைப்பதும் பாத்திரம் தோய்ப்பதும் துணி துவைப்பதுமாக இருப்பார். அவருக்கு ஒரு மகன் , ஒரு மகள். முதல் திருமணத்தில் ஒரு மகளும் , அடுத்த திருமணத்தில் ஒரு மகனும் இருந்தார்கள். மகன் நை நை என்று அழுதுகொண்டே இருப்பான். இன்று அந்தப் பையன் மிகப் பெரும் ஃபோட்டோகிராஃபராக இருக்கிறான். 

அம்மா வீட்டில் காளிமுத்து அக்கா( சரோஜா அக்கா ) சிலகாலம் பணிபுரிந்தார். எங்கள் ஆயாவைப் போல எங்கள் அம்மா அப்பாவும் வேலை செய்பவர்களைப் பிள்ளைகளாகவே பாவிப்பார்கள். அவர்கள் குடும்ப நல்லது கெட்டதுக்கெல்லாம் உடனிருப்பார்கள். இவர்களின் பிள்ளைகளின் படிப்பு கல்லூரி, திருமணச் செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள்.தோடு கொலுசு, ோடு, வையல், செயின், சைக்கிள் வாங்கவும், பிரசவம், கண் வைத்தியத்துக்கும், வேலையில் சேரப் பணம் கட்டவும் உதவுவார்கள்.  

துணி துவைக்கப் பழனி அண்ணனும் சரசக்காவும் வருவார்கள். குடியின் காரணத்தால் பழனி அண்ணன் இயற்கை எய்திவிட தற்போது சரசக்கா வந்து செல்கிறார்கள். வெள்ளை என்றால் அப்படி ஒரு வெள்ளை இருவரையும் போலத் துவைக்க நம்மாலும் முடியாது , எந்த அட்வான்ஸ்டு வாஷிங் மெஷினாலும் முடியாது. 

மாசமாக இருக்கும் போது எண்ணெய்த் தண்ணீர் ஊற்றவும் குழந்தைப் பேறின் பின் கைக்குழந்தைகளைக் குளிப்பாட்டவும் முத்தி அக்கா வருவார்கள். வெந்நீர், வாசனைத்தூள், சீயக்காய்த்தூள், கஷாயம், அக்காவுக்குக் காஃபி, பிள்ளைக்கு உரசிக் கொடுக்க மருந்து, என்று என் தாயார் தயாராக வைத்திருப்பார்கள். “ தாய் செய்வதை யாராலும் செய்யமுடியாது “ என்று எனது அம்மாவை சிலாகிப்பார்கள் முத்தி அக்கா. மூப்பின் காரணத்தால் கண் பார்வை மட்டுப்பட்டு கடைசிக்காலத்தில் வீட்டிலேயே இருந்தார்கள். 

வியாழன், 15 டிசம்பர், 2016

நம்கின்ஸ். - NAMKEENS.

டெல்லியில் இருந்தபோது மாலை நேரம் சப்ஜி மண்டி ( காய்கறிச் சந்தை ) செல்லும்போதெல்லாம் நம்கீன் பண்டார் எனப்படும் நொறுக்குத்தீனி உணவகங்களைக் கடப்பதுண்டு.  எல்லாம் மிக்ஸரின் வெவ்வேறு வடிவில் இருக்கும் உப்பு உறைப்புப் பலகாரங்கள் அடங்கிய கடைக்கு நம்கின் பண்டார் எனப் பெயர்,

குளிருக்குக் கொஞ்சம் கதகதப்பாகவும் கரகரப்பாகவும் நாம் விதம் விதமாய் நொறுக்கிய நம்கின்ஸின் சில படங்கள்.

இது சவுத் மும்பையில் ஒரு உறவினர் வீட்டில் கொடுத்த மாலை ஸ்நாக்ஸ். கொஞ்சம் காராசேவு மாதிரி ஒன்று, அப்புறம் சுட்டு மீந்த சப்பாத்தியை மொறு மொறுப்பா ஸ்நாக்ஸ் ஆக்கி இருக்காங்க.பேர் தெரில. அப்புறம் சோன் பப்டி.
 இது நானே செய்த புதினா பகோடா :)
குட்டியா வெட்டிப் பொரிச்ச ப்ரெட் பஜ்ஜின்னு சொல்லித்தான் தெரியணுமாக்கும் :)

காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.

581. கோயில் மாலை வருதல். - முறையான அங்கீகாரம். ஒன்பது கோவில்கள் உண்டு. அவை நகரச் சிவன் கோயில்களாகவும் இருக்கும். மாப்பிள்ளை பெண் இருவர்  சார்ந்த கோயிலிலும் இருந்து மாப்பிள்ளை பெண் இருவருக்கும் கோயில் மாலை வந்தால்தான் அவர்கள் கோயில் புள்ளியாக அங்கீகரிப்படுவார்கள். முதலில் அந்த மாலையைத்தான் மாப்பிள்ளையும் பெண்ணும் அணிவார்கள்.

582. வாழைப்பழம் தடவுதல் :- திருமணச் சடங்குகளில் ஒன்று. திருப்பூட்டி முடிந்ததும் மாப்பிள்ளைக்கு மச்சினன் கொழுந்தியாளும் மணப்பெண்ணுக்கு நாத்தனார் கொழுந்தனார்களும் வாழைப்பழத்தை வாயில் ஊட்டுவதாகத் தடவி விடுவார்கள் . ( இன்றைய பர்த்தே பார்ட்டிகளில் கேக்கை அப்புவது போல :) 

583. சாப்பாடு போடுவது :- திருப்பூட்டி முடிந்ததும் மணவறையில் மாப்பிள்ளை அமர்ந்திருக்க பெண் சாப்பாடு போடுவார். ஒரே பாத்திரத்தில் புதிதாகச் சமைத்த சாதம் குழம்பு கறி எல்லாவற்றையும் ( ஐயர் சொல்லச் சொல்லப் ) பெண் போட  மாப்பிள்ளை அதை ஆட்காட்டி விரலால் தொடுவார். அதன்பின் கைகழுவ மாப்பிள்ளைக்கு அதிலேயே தண்ணீரை ஊற்றுவார் மணப் பெண். இது ஒரு சடங்கு மட்டுமே. சில ஊர்களில் மாப்பிள்ளைக்கு இலை போட்டு முட்டை எல்லாம் அவித்து வைத்துப் பரிமாறுவார்கள்.

584. தலைச்சீலையில் முடிவது :- பெண்ணிடம் ஒரு வெற்றிலை பாக்கைக் கொடுத்து இடுப்பில் முடிந்து வைத்துக் கொள்ளச் சொல்வார்கள்.

585. சதுர ஆலாத்தி & நீராலாத்தி:-  இட்லியில் மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் விட்டுப் பிசைந்து நான்கு சிவப்புக் கூம்புகளாகச் செய்து அதில் திரியைச் செருகி வைப்பார்கள். பெண்ணழைக்கும்போது சதுர ஆலாத்தி எடுப்பது வழக்கம். நீராலாத்தி என்பதில் மஞ்சள், சுண்ணாம்பை நீரில் கலந்து அதில் வெற்றிலையைக் கிள்ளிப் போட்டு மாப்பிள்ளை பெண்ணைச் சுற்றி ஆலாத்தி எடுத்து திருஷ்டி கழியட்டும் என்று கொட்டுவது வழக்கம்.

586. காப்பு அவிழ்த்தல் :- திருமணத்தன்று காலை பகவணம் செய்து ஐயர் கொடுக்கும் காப்பைக் கட்டுவார்கள். (காப்பு என்பது சிவப்புப் பட்டுத் துண்டில் ஒரு சிறிய வெள்ளிக் காசை முடிந்து மணிக்கட்டில் கட்டுவது.) முதலில் மணமகனுக்கும் பின் மணமகளுக்கும் மணையில் அமர்ந்து சடங்குகள் செய்யும்போது அவரவர்  மாமக்காரர்கள் கட்டுவார்கள்.

புதன், 14 டிசம்பர், 2016

பொருட்காட்சி :-


பொருட்காட்சி :-

குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா எங்கேபோறீங்க
பொருட்காட்சித் திடலுக்குத்தான் போகுறேனுங்க.

பொருட்காட்சித் திடலுக்குப்போய் என்னசெய்வீங்க
ராட்டினத்தில்ஏறி உலகைச்சுத்திப் பார்க்கப்போறேங்க

ராட்டினத்தில் சுத்தியபின் என்னசெய்வீங்க
பலூன்பொம்மை பஞ்சுமிட்டாய் வாங்கப்போறேங்க.

பஞ்சுமிட்டாய் தின்னபின்னே என்னசெய்வீங்க
பஃபூன்மாமா பல்டிஅடிப்பதை பார்த்துச்சிரிப்பேங்க.

பல்டிஅடிப்பதை பார்த்தபின்னே எங்கேபோவீங்க
குட்டியானை, சிங்கவித்தை பார்த்துரசிப்பேங்க.

அம்மாகையைப் பிடித்துக்கொண்டு சென்றுவாருங்க
அழகாய்ப்பொருட் காட்சித்திடலை ரசித்துவாருங்க


பேக்கரி ஐட்டம்ஸ். - BAKERY ITEMS.

பேக்கரி ஐட்டம் உடம்புக்குக்குக் கெடுதல். குண்டாகிடுவோம் என்று பயம் உண்டு. நிறைய உறவினருக்கு பேக்கிங் சோடா போட்ட உணவு ஒத்துக்கொள்வதில்லை. சிலருக்கு முட்டை போட்டது பிடிக்காது. இருந்தும் மெக்ரென்னெட், ஃப்ரெஞ்ச் லோஃப், கே ஆர் பேக்ஸ், கோவை ஆனந்தா பேக்கரி, பேக்கரி டிசோட்டா, பேக்கரி சார்லஸ், பேக்கரி மெரினா , அடையாறு பேக்கரி, கேக் வாக், கேக்ஸ் & பேக்ஸ், கேக் பாயிண்ட், பெங்களூர் பெஸ்ட் ஐயங்கார் பேக்கரி ஆகியவற்றில் சிலது பிடிக்கும்.

பேக்கிங் உணவுகள்  அதிகம் எடுத்துக் கொள்வதில்லை என்றாலும் சில பேக்கரி ஐட்டம்ஸ் அவ்வப்போது சாப்பிடுவதுண்டு. அவற்றில் சில இங்கே.

இது யாரோ உறவினர் கொண்டுவந்த டெடி பியர். அந்த சாக்லெட் இடங்களில் இன்னும் இனிப்பு. ஆனா சாப்பிடவே என்னவோ போலிருந்தது. 
பெங்களூரு கோபாலன் சினிமாவில்  சமோசா.
காரைக்குடி பேக்கரி டிசோட்டா பன்னுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தினம் மதியம் மூணு மணிக்கு சூடா போடுவாங்க. பஞ்சு இட்லி மாதிரி இருக்கும். இதுக்கு நடுவுல கிஸ்மிஸ் பழம் ஒண்ணு வைப்பாங்க. இப்ப டூட்டி ஃப்ரூட்டி வைக்கிறாங்க. பால்ல செஞ்சமாதிரி படு ருசியா இருக்கும்.
பேக்கரி டிசோட்டாவோட ஸ்பெஷல் ஐட்டம் மக்ரூன்ஸ். தூத்துக்குடி மக்ரூன்ஸ் எப்பிடி இருக்கும்னு தெரியாது. ஆனா பேக்கரி டிசோட்டா மக்ரூன்ஸ் ரொம்பவே ஸ்பெஷல். முன்னே வேஃபர்ஸ் மாதிரி திருமண வீடுகள்ல கூட கொடுப்பாங்க.

இங்கிவரை யாம் பெறவே…இங்கிவரை யாம் பெறவே…

நன்றி அறிவித்தல் நாள் என்று உலகெங்கும் நவம்பரில் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வில் வருடம் 365 நாளும் நமக்கு சேவைசெய்து வரும் சிலருக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதவே போதாது. 

தேவதைகள் உபதேவதைகள் என்று கேள்விப்பட்டிருப்போம். என் ஆயாவைச் சுற்றி இருந்த, இருக்கும் உபதேவதைகள் சிகப்பி அக்கா, ராமாயி அக்கா, பாக்கியத்தக்கா, சித்ரா, பாண்டி அக்கா, பாக்கியம். இதில் சிகப்பி அக்கா சற்றேறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேல் எங்கள் ஆயாவீட்டில் பணிபுரிந்திருப்பார். அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்து ருசிவரச் சமைப்பார். 

பெயருக்கேற்றார்போல சிகப்பாக இருப்பார் சிகப்பி அக்கா. குவர்த்த் ண்டட்டி மாட்டி இருப்பார். அவர் சிகப்புக்கும் அழுக்கும் அு ரொம்பப் பத்ாக இருக்கும். ாமாயி அக்கில் கிறு மாட்டி உருண்டக் ண்ணாடி போட்டிருப்பார். மூவக்கும் உள்ள ஒற்றுமை என்னென்றால் முன்கொசுவம் வத்ுச் சேலை கட்டாமல் பின்கொசுவம் வத்த் ட்டுச் சுற்றாகக் கட்டி இருப்பார்கள். மூவுமே அள்ளி முடிந்தண்டை போட்டிரப்பார்கள். எளிமை என்பன் உருவங்கள்.

தினப்படி சமையல் போகத் திருகையில் உப்புமாவுக்கு உடைப்பதும், சீடைக்காய் உருட்டுவதும், பத்தி வளவுகளில் உப்புக்கண்டம், ஊறுகாய் வத்தல் வரளி என்று எதையாவது காயவைத்து எடுப்பதுமாக இருப்பார்கள் ஆயாவும் சிகப்பி அக்காவும். 

அமயம் சமயம் என்றால் வீடு மெழுகித்தரவும் மெஷினுக்குப் போய்வரவும் பலகாரம் செய்தால் உதவி செய்யவும் என்று ராமாயி அக்கா வருவார். 

செவ்வாய், 13 டிசம்பர், 2016

நடந்துசென்ற நடாவும் விளாசித் தள்ளிய வர்தாவும்.

வீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் கடகடன்னு ஆடுது வீட்டுக்குள்ளேயே இரைச்சலாய் டெடரா இருக்கு என்று என் பக்கத்துவீட்டுக்காரரின் மகள் தொலைபேசியில் சொன்னார். அதற்குச் சிறிது நேரம் கழித்து வீட்டில் முன்பக்க பால்கனி ஜாலி வழியாக மழைத்தண்ணீர் விசிறி அடித்து வீட்டின் ஹால் மற்றும் கிச்சன்  & பெட்ரூம் பால்கனி வழியாக வீடெல்லாம் தண்ணீர் என்று என் மகன் ஃபோன் செய்தார்.

அலைபேசி கோபுரங்கள் பாதிக்கப்பட்டதால்  வாட்ஸப்பிலும் தகவல்கள் இல்லை. பவர் பாங்க் இருந்தாலும் இன்னும் எத்தனை நாள் கழித்து கரண்ட் வருமோ அதுவரை அத்யாவசியத் தகவல் பரிமாற்றத்துக்காக சேமித்து வைக்கும்படியும் அவ்வப்போது ஆன் செய்து தகவல் தெரிவிக்கும்படியும் சொல்லி இருக்கிறோம்.

இரவில் ஒரே கொசுக்கடியும் குளிரும் தாக்கியதாகவும் சரியாக உறங்கவில்லை என்றும் சொன்னார்கள். ஃப்ளாட் வீடுகளில் இருப்பவர்களை விட தனி வீடுகளில் வசிக்கும் இன்னும் சில உறவினர்களிடமிருந்து தகவல் இல்லை. ஃபோன் செய்தால் கட் ஆகிறது. வீட்டைச் சுற்றி ஒரே தண்ணீர் என்று சொன்னார்கள். சென்ற வருடம் வெள்ளம் மூழ்கடித்தது போல் இந்த வருடம் புயல் விளாசித் தள்ளி வருகிறது.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று அடிக்கும் என்று அறிவித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 172 கிமீ வேகம் வரை அடித்திருக்கிறது. இதில் மழையிலும் புயலிலும் நனைந்தபடி ஒவ்வொரு சானலிலும் தொகுப்பாளர்கள் செய்தி சேகரித்து அனுப்பி  அப்டேட் செய்துகொண்டே இருந்தார்கள். 

நடா தாக்கும் என்று பயந்திருந்தபோது அது குறைந்த காற்றழுத்தம் கொண்டதாக மாறிக் கடந்துசென்றுவிட்டது. ஆனால் வர்தா நேற்று சென்னையையும் இன்று கர்நாடகத்தையும் நாளை கோவாவையும் தாக்கும் என்று செய்திகள் வருகின்றன.

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

கே ஜி எனர்ஜிகே ஜி எனர்ஜி

டாக்டர்களை வந்தனை செய்யுங்கள் நிந்தனை செய்யாதீர்கள் என்று கோவை கேஜி  ஹாஸ்பிட்டலின் இயக்குநர் இன்று லோட்டஸ் ந்யூஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

1340 ஊழியர்களின் பேரை மட்டுமல்ல தனது ஊழியர் ஒவ்வொருவரின் பேரையும் பிரிமிஸஸின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு எக்ுப்மெண்டிஸின் பேரையும் அதன் பயன்களையும் கூட ஞாபகத்தோடு சொல்லி வியக்க வைத்தார். 

2016 வீடியோ.


2016 வீடியோவாம். தாங்க்ஸ் ஃபேஸ்புக் :) ஃபேஸ்புக்குல ரொம்ப சாதிச்சிட்டமோன்னு பார்த்தா எல்லார் டைம்லைன்லயும் அவங்க அவங்க வீடியோ இருக்குப்பா. செம பல்பு. ஹிஹி. எனி ஹவ் தாங்க்ஸ் மார்க் & ஃப்ரெண்ட்ஸ் :) 26,485 லைக்ஸ் போட்டுருக்கனாம். அதிலயும் எத்தனை லைக்ஸ், எத்தனை ஹார்ட்டு, எத்தனை வாவ், எத்தனை சோகம், எத்தனை கோவம்னு எண்ணி ,எண்ணி வைச்சி ஆச்சர்யப்படுத்துறாங்கப்பா :)


 இது இன்னொரு முகநூல் பக்கத்திலிருந்து.. இரண்டும் நானே. தமிழுக்கு ஒண்ணு இங்கிலீஷுக்கு ஒண்ணு :) முகநூல்படைப்புப் பக்கம் ஒண்ணு. ஆக மொத்தம் மூணு இருக்கு. பட் ரெண்டுக்குத்தான் வீடியோ ஆப்ஷன் இருக்கு :) இதுல 3147 லைக் போட்டிருக்கேன். அதிகம் ஆப்செண்ட் ஆயிட்டேன் போல :)
சனி, 10 டிசம்பர், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.

561. சேயத்தக்கன இருக்கா - திருமணம் செய்யத் தகுந்த வயதில்/பக்குவத்தில் இருக்கா எனப் பெண்ணைக் குறிப்பிடுவது.

562. ஒணரவைக்கணும் - உலரவைத்தல். துணி அல்லது வற்றல் வரளியை உலர/காயவைப்பதைக் குறிக்கிறது.

563. சீமைச் சமத்தி - கெட்டிச் சமத்தி.மிகத் திறமையான பெண்களை சீமைச் சமத்தி என்பார்கள். அவ சீமைச்சமத்தி . அம்புட்டையும் வித்துப்புட்டு வந்திருவா எனச் சொல்வதுண்டு.

564. அம்புட்டு, ஒம்புட்டு, எம்புட்டு = அம்புட்டு - அவ்வளவு, எம்புட்டு - என்னுடையது, ஒம்புட்டு - உன்னுடையது.

565. அவுகவுட்டு ,எவுகவுட்டு,இவுகவுட்டு = அவகவுட்டு - அவர்களுடையது, எவுகவுட்டு - எவர்களுடையது, இவுகவுட்டு - இவர்களுடையது. ( சார்ந்தது )

வெள்ளி, 9 டிசம்பர், 2016

பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

தினமும் ஒரு வேளை பழ உணவு எடுத்துக் கொள்வது செரிமானத்துக்கு நல்லது. ஜீரணத்தைத் தூண்டும் அதே கணம் வயிற்றைச் சுத்தம் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். உடலுக்குத் தேவையான விட்டமின் & மினரல்ஸ் கிடைக்கும். சரி சரி.. ஐ அக்ரி..  ஃபோட்டோ போடவும் போஸ்ட் போடவும் ஒரு சாக்கு இது. :) ஃபோட்டோ மேனியா & போஸ்டோ மேனியா.

ஃப்ரூட் சாலட் ரெடி. ஐஸ்க்ரீமுக்காகக் காத்திருக்குது குளிக்க :) பைனாப்பிள், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்ச், சாத்துக்குடி
தர்ப்பூஸ்ஸ்ஸ்
மாதுளை , ஆப்பிள், மாம்பழம். ஒரு உறவினர் வாங்கி வந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...