எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆனந்த விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆனந்த விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 டிசம்பர், 2016

ஆனந்த விகடனில் கவிதை.

காலம் கடந்தும் ஜெயித்த கவிதை என்று சொல்லலாம்.

எனது முகநூல் தோழி திருமதி கீதா இளங்கோவன் அவர்கள்  21.12.2016 ஆனந்தவிகடனில் ஆண்பால் பெண்பால் அன்பால் என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் என்னுடைய “ தீட்டு “ கவிதையையும் குறிப்பிட்டு கௌரவம் அளித்திருக்கிறார்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

சங்கடம் . ( ஆனந்தவிகடன் சொல்வனத்தில்..)

வெள்ளையடித்தபின்னும்
மின்னும் க்ரேயான் பொம்மைகள்.
மிச்ச தேதிகளோடு
தொங்கும் நாட்காட்டி
பால்கனிக் கொடியில்
காற்றிலாடும் கிளிப்புகள்.
சுவற்றலமாரியில் கிடக்கும்
பாச்சை உருண்டைகள்
தாளிதத்தின் தெறிப்புகளை
சுமந்திருக்கும் சமையலறை மேடை.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

களவும் கற்று பற. {கவிதை.} ஆனந்தவிகடன் சொல்வனத்தில்..

கவுச்சி வீச்சமடிக்கும்
சமையறை ஜன்னல் கதவைத்
தட்டியபடி காத்திருக்கின்றன
நான்கு காக்கைகள்.
துணியுலர்த்த வந்த பெண்
கைகொண்ட க்ளிப்புக்களை
வர்ண மிட்டாய்களாய்
எண்ணிச் சுற்றுகின்றன.

சனி, 10 மார்ச், 2012

தானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்..

லலித் கலா அகாடமியில் விகடன் குழுமம் வழங்கிய ஓவியக் கண்காட்சி. பிரபல ஓவியர்களின் ஓவியங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து அந்த தொகையை தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அது. முக நூலில் விகடன் ஆசிரியர் கண்ணன் அழைத்திருந்தார் அனைவரையும்.

நம்ம யாருமே மறக்க முடியாத முதல் பத்ரிக்கை ஹீரோ.. அன்னைக்கும் இன்னிக்கும் என்னிக்கும் இந்த விகடன் தாத்தா அப்படியே இருக்கார்.. பருவ மாற்றம் , உருவ மாற்றம் எல்லாம் நமக்குத்தான். இன்னும் பல நூற்றாண்டுகள் இவர் நம்ம தலைமுறைகளுக்கும் சேவை செய்யணும்.

வீர சந்தானம் சாரை முதல்ல அங்கே பார்த்தேன். இந்த விநாயகர் ஓவியம் அவரோடது.

திங்கள், 12 டிசம்பர், 2011

கடவுளை நேசித்தல்..ஆனந்த விகடன் சொல்வனத்தில்.

கடவுளை நேசித்தல்:-
********************************
கடவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.

பயம், துக்கம், நோய், விபத்து,
ப்ரயாணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவரின் பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

Related Posts Plugin for WordPress, Blogger...