சனி, 17 டிசம்பர், 2016

ஆனந்த விகடனில் கவிதை.

காலம் கடந்தும் ஜெயித்த கவிதை என்று சொல்லலாம்.

எனது முகநூல் தோழி திருமதி கீதா இளங்கோவன் அவர்கள்  21.12.2016 ஆனந்தவிகடனில் ஆண்பால் பெண்பால் அன்பால் என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் என்னுடைய “ தீட்டு “ கவிதையையும் குறிப்பிட்டு கௌரவம் அளித்திருக்கிறார்.


இக்கி பாப் , கிருஷ்ணப் ப்ரியா,  தெலுங்குக் கவிஞர் ஸ்வரூபராணி ( தமிழாக்கம்: வ. கீதா ),  ஆதவன் தீட்சண்யா ஆகியவர்களின் கவிதைகளோடு எனது கவிதையும் இடம் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியும் அன்பும் கீத்ஸ்.

அவர் இந்தக் கவிதையைத் தனது மாதவிடாய் ஆவணப் படத்திலேயே பயன்படுத்த எண்ணியும் எனக்கு அதிர்ஷ்டம் வாய்க்காமல் போய்விட்டது.  ஆனால் அதை நினைவில் வைத்திருந்து காலம் வாய்த்தபோது இந்தக் கட்டுரைக்காகப் பயன்படுத்தியதாகத் தொலைபேசியில் சொன்னார். !! இன்பமான சர்ப்ரைஸ். !!

2010 இல் என் வலைத்தளத்தில் வெளியான அந்தக் கவிதை இதோ.

தீட்டு:-
***********
பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை..

தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..

தனி நாடு கேக்காத
எனக்குத் தனியிடம்..
துண்டு நிலம்...
தோல் தலையணை..

கிணறு வற்றிவிடும்..
செடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்..

கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது..

சாமி படைத்த என்னை
மறைக்க சாமிக்கு
ஏன் திரைச்சீலை..

பின் குழந்தைகளோடு
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படி தீட்டுகளற்று...

டிஸ்கி 1. :- தீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி என்ற நான்கு கவிதைகளும் டிசம்பர் 5., 2010 திண்ணையில் தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. நன்றி திண்ணை..:))

டிஸ்கி 2.:- தீட்டு என்ற கவிதை 6. 12. 2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிர்மை..:))

டிஸ்கி:- நசிகேதன் அக்னி., தீட்டு என்ற இரு கவிதைகளும் 10.12. 2010 வார்ப்பில் வெளிவந்துள்ளன.

மிக்க நன்றியும் அன்பும் கீத்ஸ் & ஆனந்த விகடன். !!!


10 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சிந்திக்க வைக்கும் சிறப்பான கவிதை .... அருமையான ஆக்கம்.

ஆனந்த விகடனில் சமீபத்தில் வேறொரு கட்டுரையின் இடையே வெளியிடப்பட்டுள்ளது கேட்க ஆனந்தமாக உள்ளது.

மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் சகோதரி...

G.M Balasubramaniam சொன்னது…

இந்தப் பழக்கம் பழைய யூதர்களிடமும் இருந்ததாகப் படித்த நினைவு

Dr B Jambulingam சொன்னது…

பொருத்தமாகத் தேர்ந்தெடுத்த தோழிக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கும்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரியாரே

பரிவை சே.குமார் சொன்னது…

கவிதை அருமை அக்கா...
வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

விகடனில் படித்தேன். எனக்கொரு சந்தேகம். உங்கள் கவிதையை எடுத்தாள்பவர்கள் உங்களுக்கு ஒரு தகவல் தெரிவிப்பார்களா?

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

அருமையான பதிவு
பாராட்டுகள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விஜிகே சார்

நன்றி டிடி சகோ

நன்றி பாலா சார். அப்படியா

நன்றி ஜம்பு சார்

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி குமார் சகோ

நன்றி ஸ்ரீராம். அப்படித்தான் தெரிவித்தார்கள் ஸ்ரீராம். :) !

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...