எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

கே ஜி எனர்ஜி



கே ஜி எனர்ஜி

டாக்டர்களை வந்தனை செய்யுங்கள் நிந்தனை செய்யாதீர்கள் என்று கோவை கேஜி  ஹாஸ்பிட்டலின் இயக்குநர் இன்று லோட்டஸ் ந்யூஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

1340 ஊழியர்களின் பேரை மட்டுமல்ல தனது ஊழியர் ஒவ்வொருவரின் பேரையும் பிரிமிஸஸின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு எக்ுப்மெண்டிஸின் பேரையும் அதன் பயன்களையும் கூட ஞாபகத்தோடு சொல்லி வியக்க வைத்தார். 


நாப்பது வயதுக்குமேல் வருடம் ஒருமுறை செய்யும் ஹெல்த் செக்கப்தான் தெரியும் நமக்கு. திருமணத்துக்கு முன்னான ஹெல்த் செக்கப், க்ளோபல் செக்கப், வெளிநாடு செல்லுமுன் செய்துகொள்ளும் பிரிமிலினரி செக்கப் பற்றி எல்லாம் சொன்னார்.

மூன்று ப்ளாக்குகள் இருக்கின்றன கேஜி ஹாஸ்பிட்டலில். இல்னெஸ் ப்ளாக்கான ஒன்பது மாடி பில்டிங்கை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் , வெல்னெஸ் ப்ளாக்கை கவர்னர் ரோஸையாவும் திறந்துவைத்ததாகவும், ஹெல்த் செக்கப் ப்ளாகில் இருந்து சொன்னார். 

பெண்கள் மேமோகிராம் செய்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் டயபடிக் செக்கப்புக்கான அவசியத்தையும் வலியுறுத்தினார். 

கண் பல் டயபடிக் மருத்துவர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் சேவையைப் பாராட்டினார். எத்தனை ஆபரேஷன் செய்திருக்கிறார்கள் அதில் இலவச சேவையாக எத்தனை செய்தார்கள் என்பதையும் கூறி அவர்களை கௌரவப்படுத்தினார். 

அக்கவுண்ட்ஸில் பணிபுரியும், லாபில் பணிபுரியும் ஊழியர்களின் பேரையும் அவர்கள் எத்தனை வருடங்கள் சேவை செய்தார்கள் என்பதையும் கூறி ஆச்சர்யப்படவைத்தார்.  

இதை எல்லாம் ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் பல வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினர் அவரது ஆஸ்பிட்டலின் சேவை மூலமாகத்தான் காப்பாற்றப்பட்டார். அப்போது பணியில் டாக்டர் பை என்பவர்தான் ஆக்ஸிடெண்டில் மாட்டிய அந்த உறுப்பினருக்கு உள்ள உள்ரத்தக் கசிவைக் கண்டுபிடித்தார்.

அந்த ஆங்கிலப் புத்தாண்டு அன்று பழனி சென்றுவிட்டுவந்த டாக்டர் பக்தவத்சலமும் ஆபரேஷன் தியேட்டரில் நுழைந்து என்ன பிரச்சனை என்று டயக்னோஸிஸ் செய்து உடனடியாக ஆபரேஷன் செய்து காப்பாற்றியது மறக்கமுடியாத அற்புதம்.
 
அதன்பின் பலவருடங்கள் கழித்து கோவையில் இருந்தபோது உறவினரின் ஹெல்த் செக்கப்புக்காகச் சென்றபோது டாக்டர் பக்தவத்சலம் அவர்கள் பார்த்துவிட்டு உரையாடினார்கள். ஹாஸ்பிட்டல்தானே உயிர்மூச்சாய் அவருள் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் தினமும் அங்கே இருப்பதில் ஆச்சர்யமென்ன. ? எனவே என்னைப் பார்த்ததும் அந்த உறுப்பினருக்கு என்ன நேர்ந்தது ஏன் ஆபரேஷன் செய்தோம் எப்படிச் செய்தோம் என விவரித்தார்.

உடல் உள்ளுறுப்புகளில் கட் ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படாத உறுப்பு கல்லீரல் மட்டுமே. எனவே எனது கையைப் பிடித்து கல்லீரலாக உவமித்து அதில் ஒரு பாகம் வெட்டுப் பட்டுவிட்டதாகவும் அதனால் அதன் மிச்ச பாகம் ரத்தக் கசிவில் கையில் பட்டதாகவும் காட்டினார். டெக்னாலஜி அவ்வளவு முன்னேறாத அந்தக் காலத்திலேயே அதைக் கண்டுபிடித்து உடனே அதன் டேமேஜ்டு பாகத்தை நீக்கி அறுவை சிகிச்சை செய்ததாகக் குறிப்பிட்டார். 

பல்ஸ் ரேட் – நில் ( NIL )  என்று வந்துவிட்டதாக டாக்டர் பை யோசித்த நிமிடத்தில் உள்நுழைந்து உயிர்கொடுத்த டாக்டர் திரு பக்தவத்சலத்தின் சேவை அளப்பரியது. இதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.
இன்றைய நிகழ்வில் அவர் கூறியபடி டாக்டர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். 

டாக்டர்களின் டச்சுக்கு ஹீலிங் சக்தி இருப்பதாக நான் சிறுவயதில் மன்னார்குடி டாக்டர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து நம்பியதுண்டு. அவரின் புன்னகை முகத்தைப் பார்த்தாலே நோவு ஓடிப்போய்விடும். 

அன்று கண்டது போல் இன்றும் இன்னும் எனர்ஜிடிக்காக செயல்படும் டாக்டரைப் பார்த்து எனது ஆச்சர்யம் இன்னும் தீரவில்லை. இவருக்கு வயசாகவே இல்லையா என்று தோன்றியது. கேஜியின் எனர்ஜி இவர்தான் என்று சொன்னால் மிகையாகாது. 

தேவை ஏற்படின் வாழும்வரை யாரையும் சார்ந்திராமல் நலமாக இருக்க ஹெல்த் செக்கப் செய்து நலத்தைப் பரிபாலனம் செய்யுங்கள் என்பதை வழிமொழிகிறேன். 


இன்று டாக்டர் திரு பக்தவத்சலம் கூறியபடி டாக்டர்கள் ஆராய்ச்சிக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதை நானும் வலிமையாக வழிமொழிகிறேன். இன்னும் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன்  டாக்டர் பக்தவத்சலமும் அவரது மருத்துவ சேவையும். 


5 கருத்துகள்:

  1. உடல் நலம் தொடர்பாக அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான செய்திகளை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்களுடன் உள்ளது இந்தப் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றி விஜிகே சார்

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...