எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

நம்மாழ்வார் அவர் நம்மாழ்வார்.

இயற்கையாய்ச் சிரிக்கும் பூப்போல உன் சிரிப்பு
இழந்து தவிக்குதய்யா உரம்போட்ட கத்திரிப்பூ.

.உரமடிச்சு உரமடிச்சு உரமிழந்த தென்னை
காய்க்காமல் கருக வைக்குதய்யா என்னை.

மரபணு மாத்தி மரபையும்தான் கத்தரிச்சோம்
மடமை செயலையெல்லாம் மகான் நீ எச்சரிச்சும்.

வியாழன், 30 ஜனவரி, 2014

முத்து விழா சிறப்பு மலரில் சும்மா..

எங்கள் சின்னாயாவுக்கு நடைபெற்ற முத்துவிழாவின் போது ” இவைகள் வாழ்வியல் மந்திரங்கள் “ என்ற தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

எங்கள் மாமா கேசவன் என்ற வெங்கடாசலம் தான் படித்த நல்ல விஷயங்களை ஆன்மீகம், அறிவியல், கவிதைகள், நெஞ்சைத் தொட்டவர்கள், நேர்மறை, சில காரணங்கள், சும்மா சிரியுங்க., உடல் என்ற உன்னதம் என்ற தலைப்புக்களில் தொகுத்துள்ளார்.

புதன், 29 ஜனவரி, 2014

வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா


வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா:- 
===========================================
மோகனா லானில் நடந்து கொண்டிருந்தாள். நியான் விளக்குகளின் கண்சிமிட்டலில், கூடை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு “36 செரங்கி லேனை” எடுத்த அபர்ணா சென்னின் திறமையைப் பாராட்டிக் கொண்டு இருந்தனர் நான்கைந்து கல்லூரி மாணவர்கள். மோகனா 27B ல் ஏறி “மவுண்ட் ரோடு” என்று கூறிவிட்டுக் காசைக் கொடுத்தாள்.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

புத்தகத் திருவிழாவில் அன்ன பட்சி வெளியீடு


 

ஞாயிறு அன்று மாலை ( 19.1.2014) சென்னைப் புத்தகக்கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் அரங்கு எண் 666,667 இல் எனது புத்தகத்தை லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா ராகவன் மேடம் வெளியிட சாஸ்த்ரிபவன் தலித் பெண்கள் சங்கத் தலைவி ( எனது சாதனை அரசி புத்தகத்தில் இடம் பெற்று இருப்பவர் ) எனது தோழி மணிமேகலை பெற்றுக் கொண்டார். 

திங்கள், 27 ஜனவரி, 2014

வானவில் தொலைக்காட்சிக்காக.. ( ஃப்ளாஷ் டிவி ) சாதனைப் பெண்ணாக. .

சென்னையில் 2012 ஏப்ரலில்  வானவில் தொலைக்காட்சியின் சாதனைப் பெண் நிகழ்ச்சிக்காக என்னைப் பேட்டி எடுக்க மடோனா ஜனனியும் அவரது குழுவினரும் எங்கள்  வீட்டுக்கு வந்தார்கள்.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)

இந்த வருடம் பெங்களூரு-- KSDH - KARNATAKA STATE DEPARTMENT OF   HORTICULTURE ( கர்நாடகா தோட்டக்கலை  துறை ) தனது 50 ஆவது வருடத்தைக் கொண்டாடுகிறது. எனவே ரொம்ப ஸ்பெஷலாகத்தான் இருந்தது.

சனி, 25 ஜனவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி சதக்கத்துல்லாவுக்குப் பிடித்த உணவு.

முகநூல் நட்புக்களில் பல வருடங்களாகத் தொடர்ந்து நட்பில் இருப்பவர் சதக். கும்பகோணத்தைச் சேர்ந்த அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். 

அவரின் புன்னகையும் அவரின் பெண்ணின் மென்னகையும் மறக்கவியலாத போர்ட்ரெய்ட் சிற்பங்கள்.

முக்கியத் திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் அவர் வாழ்த்த மறந்ததே இல்லை. நாம் அவர்கள் பண்டிகை தினங்களில் வாழ்ந்த மறந்தாலும் உங்ககிட்ட இருந்து ஒரு வாழ்த்தை எதிர்பார்த்தேன். மறந்துட்டீங்க என்று கடிந்து கொள்வார். மிக அருமையான நட்பு. சிறந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்.

அவரிடம் நம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

 //////உங்க மனைவிக்குப் பிடிச்ச உணவு எது.. அது எப்ப தெரிஞ்சுது உங்களுக்கு/////

வெள்ளி, 24 ஜனவரி, 2014

புதிய தலைமுறையின் "வீடு தாண்டி வருவாயா. " வில் ப்லாகிங்..

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதிய யுகம் சானலுக்காக செல்வராணி தொடர்பு கொண்டார்.

அப்போது நான் கும்பகோணத்தில் இருந்தேன். இந்த வருடம்  ( 2013) ஜனவரி மாதம் 29 ஆம் தேதி.

வீடு தாண்டி வருவாயா என்ற ஒரு நிகழ்ச்சிக்காக ( புதிய முகம் என்று அப்போது அதற்குப் பெயர் சொன்னார். ). ப்லாகிங் செய்யவேண்டும் என்றார். ஒரு 3 விஷயங்கள் பற்றிச் சொன்னேன்.

1. என் பெரிய மகன் எனக்கு ப்லாக் ஆரம்பித்துக் கொடுத்தது பற்றி.

2. என் கணவரை எப்போதுமே பேச விடாமல் நானே பேசிக் கொண்டிருப்பது பற்றி.

3. பிள்ளைகளின் உலகத்திலிருந்து மெல்ல மெல்ல நாம் அந்நியப்படுவது பற்றி.

மூன்று தொகுதிகளாக இதை எடுத்தார்கள். அவருடன்  ஒரு காமிரா மேனும், உதவியாளர் ஒருவரும் வந்திருந்தார்கள்.

வியாழன், 23 ஜனவரி, 2014

விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி.

சமீபத்தில் துபாய் சென்றிருந்த போது விமானத்திலிருந்து சுட்ட புகைப்படங்கள் இவை.

டேக் ஆஃப்..

ஜன்னலில் ஒரு துண்டு வானம்.

புதன், 22 ஜனவரி, 2014

குங்குமம் தோழியின் முகநூல் முகத்துக்காக.

/////தோழி fb யின் புதிய பகுதியான
முகநூல் முகம் -மில்
இந்த வாரம் நம் தோழி

தேனம்மை லட்சுமணன்

நான் தேனம்மை லெக்ஷ்மணன்.
மனசுக்குள்ள ஏதோ தாமரைன்னு நினைப்பு.
கவித எழுதப் பிடிக்கும்.
நானும் நிச்சயம் ஒருநா சினிமாப் பாட்டொண்ணு எழுதுவேன்னு பகல்கனவு காணப் பிடிக்கும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு :- ( காற்றுவெளி இதழில் )பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு :-

டெல்லியில் தாமினி, நிர்பயாவுக்கும் தமிழகத்தில் புனிதாவுக்கும் மட்டுமல்ல. தினமும் பத்ரிக்கையைப் புரட்டினால் பாலியல் வன்முறைச் செய்திகள்தான்.

மும்பை சக்தி மில்ஸில் ஒரு பெண் ஃபோட்டோகிராஃபர் போட்டோ எடுக்கச்சென்ற போது அவரையும் அவரது நண்பரையும் பிடித்த காமுகக் கும்பல் அவரது நண்பரைக் கட்டிப் போட்டு விட்டு அவரைப் பாலியல் கொடுமை செய்திருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி என்னவென்றால் அதன் பின் பலர் அந்தக் கும்பலில் மாட்டிச் சிக்கிச் சீரழிந்ததாக வரிசையாகப் புகார் அளித்து வருகிறார்கள். மகாலெக்ஷ்மி கோயிலுக்கருகில் சென்று கொண்டிருந்தபோது தானும் தன் தோழனும் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக ஒரு பெண் துணிந்து புகார் அளித்துள்ளார்.

புற்றீசல் போலக் கிளம்பும் இவர்கள் எங்கிருந்துதான் இந்தக் கெட்ட நோக்கங்களோடு பெண்களின் வாழ்வைச் சீரழிக்கின்றார்களோ. ஹைதராபாத்தில் சட்டக் கல்லூரியில் ( NLSIU)படித்த மாணவி அவுட்டிங் சென்றுவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பும் சமயம் அவரைக் கடத்திய ஆறுபேர் கொண்ட கும்பல் ஒன்று மரங்கள் அடர்ந்த பகுதிக்கு இழுத்துச் சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருக்கின்றனர். கட்டைகளையும் கடப்பாறைகளையும் வைத்து முதலில் மிரட்டிய  ஆண்கள்  ( அதில் ஒருவருக்கு வயது 50 ) பின் அந்த ஆணைத் தாக்கி பெண்ணை இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து இது போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களுக்குப் படிக்க வந்த அந்தப் பெண் கல்வியைத் துண்டித்துவிட்டுத்  தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார். இது தவறான முன்னுதாரணமாக அமைந்து இங்கே படிக்க வரும் மற்ற நாட்டவர்களையும் தடை செய்து விடும்.
அசாராம் பாபு என்ற சாமியாரும் ஆசாமியாக மாறி மைனர் பெண்ணிடம் தகாத உறவு கொண்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆசிரமங்களும், அநாதை ஆசிரமங்களும் கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாயில்லை.

பெங்களூரு சிறையில் இருந்து தப்பித்து இன்று பிடிபட்டிருக்கும் ஜெய் சங்கர் கிட்டத்தட்ட 30 கற்பழிப்பும் கொலையும் செய்தவர். ஜெயில் செல்லில் இருந்து அவர் எப்படித் தப்பித்து இருக்க முடியும் எனப் பத்ரிக்கைகள் பத்தி பத்தியாகக் கிழித்தபோதுதான் தெரிந்தது ,ஒரு கண்காளிப்பாளரே தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் தொல்லை கொடுத்த ஒருவனைப் பழிவாங்க அவனைத் தப்பிக்க வைத்தது.

ஜெயிலில் ஆஸ்பத்ரிக்குக் காண்பிக்கப்போனபோது க்ளவுஸ் எடுத்தது, போலீஸ் உடையில் சிலர் பார்த்தது, ஜெயிலின் இரு காம்பவுண்ட் சுவர்களை இணைக்கும் சுவர் உடைக்கப்படாமல் இருந்தது, அதில் பதிக்கப்பட்ட கண்ணாடிகளின் மேல் ஷூக்கள் அணிந்த காலால் ஓடியது, போர்வையால் கயிறு போல் இழுத்துக் கட்டி சுவற்றில் இருந்து குதித்து அருகே நின்றிருந்த வண்டி மூலம் தப்பியது எனப் பட்டியலிட்ட பத்ரிக்கை. அந்த ஜெயிலின் செல்லில் கதவைப் பூட்டி பூட்டுப் போட்டு  இருக்கும் இடம் கிட்டத்தட்ட 4 அடி தூரம் என்றும் , கிட்டத்தட்ட 360 டிகிரியில் திருப்பினால்தான் அந்தப் பூட்டைத் திறக்க இயலும் என்றும், மேலும் தப்பிய சமயம் மேலே கண்காணிக்கும் கோபுரத்தின் விளக்குகள் எரியவில்லை என்றும், காம்பவுண்டுச் சுவற்றின் உச்சிவேலியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது என்றும் பட்டியலிடுகிறது.

RAPISTS ARE TERRISTS . STOP RAPE  என்ற வாசகங்கள் தாங்கிய பதாகளைப் பிடித்தபடி நீதி மன்றத்தின் வாசலில் மக்கள் நீதிக்காகக் காத்து நிற்கின்றனர். தன்னுடைய சகோதரியைக் கெடுத்துக் கொன்றவன் மைனராக இருப்பதால் 27 மாதங்கள் மட்டும் ஜெயில் வாசம் என வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாமினியின் சகோதரர் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

சட்டக் கல்லூரிப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான வழக்கில் கைதா ஆண்களை எல்லாம் திருமணமானவர்கள்,  திருமணம் ஆகாதவர்கள், மற்றும் அவர்களின் ஜாதி, மதம், இனம் , நிறம் பொருளாதார சமூக மதிப்பு எல்லாம் சிறப்புத் தகுதியாகக்  கணக்கில் கொள்ளப்படாமல் குற்றவாளிகளுக்கு என்னென்ன தண்டனை வழங்க வேண்டுமோ அதை இரும்புக் கரம் கொண்டு நிறைவேற்றுவோம் என்று நீதிபதி சொல்லி இருப்பதும். அதேபோல அந்தக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதும் ஆறுதல் அளிக்கக்கூடியது.

ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்து போடுவது எவ்வளவு கொடுமையானதோ அதேபோல வன்கொடுமை செய்துவிட்டு மிரட்டித் தூக்கிப் போட்டுவிட்டுப் போவதும் ஆத்மரீதியிலான உளைச்சலை உயிர்வாழும் காலம் வரை ஏற்படுத்தும் என்று கோர்ட் சொல்லி இருக்கிறது. மேலும் 133 பக்கம் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்ட போது இந்தியன் பீனல் கோடு செக்‌ஷன்  376(2) (g) இன் படி குறைந்தது பத்தாண்டுகளாவது  சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறுவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும் தீர்ப்பளித்திருக்கிறது. 

நம் ஜனாதிபதியின் மகள் ஷர்மிஷ்டா முகர்ஜி பாலியல் சீரழிவுகள் குறித்துக் கருத்துக் கேட்கபட்டபோது சமூக மாற்றம் ஏற்படவேண்டும். இதில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற கோபம் சாமான்ய மனிதர்களுக்கு வருவது இயல்பு. என்றும் மரண தண்டனையை ஆதரிக்காவிட்டாலும் அதற்கு ஈடான ஒரு கடுமையான தண்டனையை வழங்கினால்தான் மாற்றம் ஏற்படும் எனக் கூறி இருக்கிறார்.


மணிப்பால் கேங் ரேப், டெல்லி கேங் ரேப், பெங்களூரு கேங் ரேப், ஹைதராபாத் கேங் ரேப் என மாநிலம் வாரியாக பெண்களுக்குப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. இந்தப் பாலியல் வன்கொடுமைகளுக்கு சமூகத்தின் பொறுப்பும் இருக்கிறது. குற்றவாளிகள் தப்பக்கூடாது.  சட்டம் தன் இரும்புப் பிடியைக் கொண்டு  கடுமையான தண்டனை வழங்கி இனி இதுபோன்ற துர்ச்சம்பவங்கள் நிகழாமல் காக்க வேண்டும். 


டிஸ்கி :- இந்தக் கட்டுரை 13, அக்டோபர் 2013காற்றுவெளி இதழில் வெளியானது.   http://issuu.com/kaatruveli/docs/_______________________________oct_/33?e=1847692/5206191

திங்கள், 20 ஜனவரி, 2014

நவதானிய சமையல் குறிப்புக்கள். புதிய தரிசனத்தில்.

1. கவுனரிசி:-

தேவையானவை:-
கவுனரிசி - 1 ஆழாக்கு
சீனி - 1/2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1/ 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)

சனி, 18 ஜனவரி, 2014

அன்ன பட்சி வெளியீடு ( அழைப்பிதழ் )

நாளைசென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய நூல் அன்ன பட்சி அகநாழிகை பதிப்பகத்தின் அரங்கு எண் 666, 667 இல் வெளியிடப்படுகிறது.

இந்த ஈவண்டில் போட்டபடி நாளை நாஞ்சில் நாடன் அவர்கள் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் இன்றே வெளியிடும்படிக் கேட்டுக் கொண்டேன். எனவே நாஞ்சில் நாடன் அவர்கள், மோகனரங்கன் அவர்கள், வாசுதேவன் அவர்கள், பரமேசுவரி அவர்கள், சுபாஷிணி அவர்கள் வெளியிட்டு நெகிழ வைத்து விட்டார்கள். நன்றியும் அன்பும் இவர்களுக்கு.

சாட்டர்டே ஜாலி கார்னர். கிரித்திகா தரணுக்குப் பிடிச்ச ஊரு,

ஒரு நாள் என் நிலைத்தகவலில் முகநூலில் சிறப்பாகப் பகிரும் பெண்கள் பற்றிக் கேட்டிருந்தேன். நண்பரொருவர் கிருத்திகா தரண் பற்றியும் வடுவூர் ரமா பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். தேடிச் சென்று நட்பு அழைப்புக் கொடுத்தேன். 

அன்றிலிருந்து இன்று வரை கிருத்திகாதரணின் பகிர்வுகளைப் படித்து மகிழ்வதுண்டு. தனக்கென தனி பாணியைக் கொண்டு நிறைய நண்பர்களையும் வாசகர்களையும் பெற்றுள்ள கிருத்திகா தரணிடம் அவருடைய தரணுக்குப் பிடித்த ஊர்  குறித்து ஒரு கேள்வி. 

////உங்க கணவருக்குப் பிடித்த ஊர் எது.? ஏன்.. ?///

வியாழன், 16 ஜனவரி, 2014

சென்னை அவென்யூவில் பாதாம் அல்வா.

சென்னை அவென்யூவில் பாதாம் அல்வா.

எனது தேனூஸ் ரெசிப்பீஸ் அடிக்கடி சென்னை அவென்யூவில் வெளியாகி வருகிறது.

செப்டம்பர் 1-14, 2013 சென்னை அவென்யூ ஃபோர்ட் நைட்லி இதழில் என்னுடைய பாதாம் அல்வா செய்முறை வெளியாகி இருக்கிறது.

 செய்முறை இங்கே.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அன்னப்பட்சியை நீவியபடி... எம். ஏ, சுசீலாம்மா..

இன்று எனது கவிதைத் தொகுப்பு  “அன்ன பட்சி ” சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகை பதிப்பகத்தில் அரங்கு எண் . 666., 667 இல் கிடைக்கும்.

அனைவருக்கும்
இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். !
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.!

கல்லூரியை விட்டு வந்து பல வருடங்களான பின்பு போன மாதம்தான் சுசீலாம்மாவை அவரது கோவை வீட்டில் சந்தித்தேன்.துருப்பிடித்துக் கிடந்த நான் தொடர்ந்து இயங்குவதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.

திங்கள், 13 ஜனவரி, 2014

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை .. எனது பார்வையில்.

பூட்டிக் கிடக்கும் ஒரு வீட்டைத் திறந்து ஒவ்வொரு கதவாக, ஜன்னலாகத் திறந்து வைத்துப் போகும்போது ஏற்படும் வெளிச்சம் போன்றது அகநாழிகை பொன் வாசுதேவன் கவிதைகள். ப்ரியம் பற்றிய கவிதைகள் கதகதப்பை வழிய விடுவது போல இழப்பும் இயலாமையும் பற்றிய கவிதைகள் கொஞ்சம் நசநசக்கும் குளிர் போலக் குத்துகின்றன.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கொலைகளும் தற்கொலைகளும் இறப்புக்களும்..(மெல்லினம் )

கொலைகளும் தற்கொலைகளும் இறப்புக்களும்..:-

தமிழகத்தில் தற்கொலைக்கு முதலிடம் எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை படித்தேன். வரதட்சணைக் கொடுமை, கள்ளக் காதல், குடிகாரக் கணவன், தொழில் தோல்வி மட்டுமல்ல, குழந்தைகள் இறப்பு மற்றும் மனச்சிதைவும் கூட பல கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம்.

எந்தக் காரணமும் இல்லாமல் பஸ் பயணத்திலும், ரயில் பயணத்திலும், விமானப் பயணத்திலும் சுனாமி, வெள்ளத்தாலும் பலர் இறக்கிறார்கள். சுய தவறு ஏதுமின்றி நிகழும்  இந்த இறப்புக்கள் மிகக் கொடுமையானவை.

பல வருடங்களுக்கு முன்  மூணாறில் ஹனிமூன் சென்ற ஜோடியில் கணவரை மனைவி தன்னுடைய முன்னாள் காதலனான ஆட்டோ ட்ரைவருடன் சேர்ந்து கொன்றது மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று பத்ரிக்கையைத் திறந்தாலே இது போன்ற விபரீத உறவின் வெளிப்பாடாய் தற்கொலையோ , கொலையோ நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

சனி, 11 ஜனவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். சண்முக வடிவு -- யோகா ஒரு வைப்புநிதி.


முகநூல் தோழி சண்முக வடிவு அவர்கள் யோகக் கலை பயிற்சியாளர். அவங்க ஒரு முறை ஒரு போஸ்டுக்கு பதில் சொல்லி இருக்கும்போது மாமியாராயிட்டதைக் குறிப்பிட்டு இருந்தாங்க. இவ்ளோ சின்ன வயசிலேயே மாமியாராயிட்டீங்களான்னு நான் அவங்கள ஆச்சர்யமா கேட்டிருந்தேன். திருமணமான சின்னப் பெண் போலிருக்கும் சண்முக வடிவு அவர்களின் ஃபிட்னெஸ்ஸுக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணம் யோகாதான்.

யோகா என்பதால் , அது அனைவருக்கும் முக்கியமானது என்பதால் ஜாலி கார்னரா கேக்க முடியல..


எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டா பொதுவா ஜாலியா கேலியா கிண்டலா பதில் சொல்ல சொல்லுவேன். பட் யோகா ரொம்ப இம்பார்ட்டெண்ட் என்பதால் நோ கிண்டல்.. ஒன்லி மேட்டர்.

 /////யோகா ஏன் அவசியம். இதுனால என்னென்ன நன்மைகள்.. ////

வெள்ளி, 10 ஜனவரி, 2014

THE WOLF OF WALL STREET. REVIEW . த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட். சினிமா எனது பார்வையில்.


அமெரிக்கப் பங்குச் சந்தையைப் புரட்டிப் போட்ட ஒரு ஸ்டாக் புரோக்கரின் -- ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின்  -  கதை என்று ஒரே வரியில் சொல்லி விடலாம்.

ஒரு பங்குத் தரகர் எப்படி என்னென்ன தகிடுதத்தங்கள் செய்து வாழ்வில் உயர்ந்தார். பணக்காரரானர் . பின் வழக்கம் போல சட்டத்தின் பிடியில் அகப்பட்டு சிறைக்குச் செல்கிறார் என்பதே கதை.

புதன், 8 ஜனவரி, 2014

பாராவின் கருவேல நிழலும் மண்டூகம் துப்பும் மொழியும்.

சிவகங்கைச் சீமையில் கருவை மரங்கள் அதிகம். அதன் நிழல் என்று ஏதுமில்லை. அதன் நிழலில் யாரும் அமர முடியாது. வெக்கையும் புழுக்கமும் நிரம்பிய கரம்பைக் காட்டில் அடர்ந்து முளைத்திருக்கும் கருவைகள்.

வெட்டிய யாருக்கும் முள் குத்தாமல் இருந்திருக்க முடியாது.அந்தக் கருவேல நிழல் தலைப்பில் தொகுக்கப்பட்ட வலையுலக நண்பர் ராஜாராம் அவர்களின் கவிதைத் தொகுப்புப் படித்துப் பலகாலம் ஆயிற்று.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்.:-


பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்.:-


ஒன்றரை வயதுப் பெண் குழந்தையில் இருந்து கற்பழிக்கப்படும் துர்ப்பாக்கியத்தில் உள்ளது பெண்ணினம்.  என்ன கொடுமை இது. இவ்வாறு செய்பவர்கள் ( மிக சொற்ப கேஸ்களைத் தவிர ) வேறு அந்நியர்கள் அல்ல. அந்தக் குழந்தைக்குப் பலமுறை பரிச்சயமானவர்களே. 

திங்கள், 6 ஜனவரி, 2014

அன்ன பட்சி. -- எண்ணங்களின் தூது..

2009 ஜூலை 15 இல் வலைத்தளம் ஆரம்பித்து எழுதத் துவங்கினேன்.அதை ஆரம்பித்துக் கொடுத்தவரே என் தமிழன்னை சுசீலாம்மா அவர்கள்தான்.

அதன்பின் இரண்டரை வருடங்கள் கழித்து 2012 ஜனவரியில் என் முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்” வெளிவந்ததது.

அதே வருடம் ஃபிப்ரவரி 5 இல் என் இரண்டாம் புத்தகம் ’ங்கா’ வெளிவந்தது.

என் மூன்றாம் புத்தகம் கிட்டத்தட்ட 4 1/2 வருடங்கள் கழித்து வெளிவருகிறது.

கவிதைத் தொகுப்பு போடலாம் என எண்ணும்போதெல்லாம் ஏதோ ஒரு யோசனை தடை செய்துவிடும்.

அகநாழிகை பொன் வாசுதேவன் அகநாழிகை பதிப்பகத்தின் மூலம் பலர் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவர் பதிப்பகத்தின் மூலம் என் மூன்றாவது புத்தகம் “ அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பு வெளி வருகிறது.

சனி, 4 ஜனவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், ரமலான் தீன் - காதலர் இருவர் கருத்தொருமித்து..

என் முகநூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் ரமலான் தீன். பிறந்த நாள் என்றாலும் சரி, திருமண நாள் என்றாலும் சரி முதல் வாழ்த்து இவருடையதாகத்தான் இருக்கும். இருவருமே சிவகங்கைச் சீமையைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊர்ப்பாசமும் அதிகம். 

அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு குண்டக்க மண்டக்க கேள்வி.

////உங்க மனைவி உங்களைத் திட்டினது உண்டா. அப்பிடின்னா எதுக்கு. ஏன். ////

வியாழன், 2 ஜனவரி, 2014

கீரை வெரைட்டீஸ்.. புதிய தரிசனத்தில்.

கீரை வெரைட்டீஸ்..:-
*****************************

கீரை சாப்பிடணும்னா ஓடுறவரா நீங்க.. இந்த கீரை வெரைட்டீஸை ட்ரை பண்ணிப் பாருங்க ரொம்ப டிலைட்ஃபுல்னு சொல்லுவீங்க..

நமக்கு இயற்கையிலேயே கீரைகள்ல அதிக சத்து கிடைக்குது. விட்டமின்ஸ் மினரல்ஸ் மற்றும் குரோமியம் உப்பு , அப்புறம் இரும்புச் சத்தும் கிடைக்குது. குழந்தைகளுக்கு தினம் கீரை கொடுப்பது நல்லது. ஒரே மாதிரி பொரியல் கூட்டு வைக்காமல் வெரைட்டியாக செய்யலாம்.  அதுக்குன்னு கீரை போண்டா., கீரை கட்லெட். கீரை வடைன்னு எண்ணெயில குளிச்சு எந்திரிக்காம. சத்துள்ள அதே சமயம் சுவையான கீரை சமையல்கள் பத்திப் பார்ப்போம்.

புதன், 1 ஜனவரி, 2014

இத்தனை பேர் நினைப்பினிலே இருப்பதுவும் இன்பம்.. !!! அன்பினால் ஆனது உலகு.

எழுதி எழுதி என்ன சாதித்தோம் என்று அவ்வப்போது சலிப்பேற்படுவதுண்டு. இத்தனை பேர் நினைப்பிலே இருக்கிறோம் என உணரும்போது இதுதான் சாதனை என்று தோன்றுகிறது. YES .. WE ARE BLESSED.. நன்றி மக்காஸ்.. :)


2013 இன் சிறந்த பதிவர்கள் பற்றி முகநூலில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு என் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ப்லாக் போஸ்ட் எல்லாவற்றையும் முகநூலில் தினம் பகிர்வதுதான் என் முதல் வேலையே.. அது எல்லாரையும் சென்று அடையுமா என்ற கேள்வி மனதைக் குடைந்ததுண்டு.Related Posts Plugin for WordPress, Blogger...