புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதிய யுகம் சானலுக்காக செல்வராணி தொடர்பு கொண்டார்.
அப்போது நான் கும்பகோணத்தில் இருந்தேன். இந்த வருடம் ( 2013) ஜனவரி மாதம் 29 ஆம் தேதி.
வீடு தாண்டி வருவாயா என்ற ஒரு நிகழ்ச்சிக்காக ( புதிய முகம் என்று அப்போது அதற்குப் பெயர் சொன்னார். ). ப்லாகிங் செய்யவேண்டும் என்றார். ஒரு 3 விஷயங்கள் பற்றிச் சொன்னேன்.
1. என் பெரிய மகன் எனக்கு ப்லாக் ஆரம்பித்துக் கொடுத்தது பற்றி.
2. என் கணவரை எப்போதுமே பேச விடாமல் நானே பேசிக் கொண்டிருப்பது பற்றி.
3. பிள்ளைகளின் உலகத்திலிருந்து மெல்ல மெல்ல நாம் அந்நியப்படுவது பற்றி.
மூன்று தொகுதிகளாக இதை எடுத்தார்கள். அவருடன் ஒரு காமிரா மேனும், உதவியாளர் ஒருவரும் வந்திருந்தார்கள்.
எனக்காகக் கும்பகோணம் வந்தவர்கள் இன்னும் சில நிகழ்ச்சிகளையும் எடுத்தார்கள். ( சுவாமி மலையில் இருக்கும் பெண் சிற்பியைப் பேட்டி காண முயற்சித்தார்கள். முடிந்ததா எனத் தெரியவில்லை. )
எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என நான் பல நாட்களாகக் காத்திருக்க அது நான் தீபாவளியை ஒட்டி துபாய்க்குச் சென்ற போது ஒளிபரப்பாகி இருக்கிறது. நவம்பர் 4 என்னைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார் செல்வராணி.
என்னை வானவில் தொலைக்காட்சிக்காகப் பேட்டி எடுத்திருந்த மடோனா ஜனனியும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சேர்ந்துவிட்டதால் அவர் இது பற்றிய தகவல்களைத் தந்தார். வானவில் தொலைக்காட்சி தற்போது ஃப்ளாஷ் தொலைக்காட்சி எனப் பேர் மாறி விட்டதாம். அது எப்போது ஒளிபரப்பாகும் எனத் தெரியவில்லை. அதற்கு ஒரு நாள் முழுவதும் எடுத்தார்கள். என் இரு புத்தகங்களையும் சுத்தி சுத்தி எடுத்தார்கள். வரும்.. ஆனா எப்ப வரும்னு தெரியாது.. ஹ்ம்ம்..
வீடு தாண்டி வருவாயாவில் இந்த நிகழ்ச்சி அடுத்த முறை மறு ஒளிபரப்பாகும்போது தெரிவிப்பதாகக் கூறினார். ப்ரோக்ராம் ஃபைல் இருந்தால் ப்லாகில் போடலாம் எனக் கேட்டதற்கு அதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
தினம் மதியம் 11 - 12 ஒளிபரப்பப்படுவதாகக் கூறினார். இந்த ப்ரோக்ராம் பற்றி
/////பெண்களின் உலகம் என்று இந்த சமூகம் கட்டமைத்த விஷயங்களில் சமையல், அழகுக்குறிப்புகள், கோலம், பக்தி இவற்றிற்கு அப்பாற்ப்பட்டு பெண்களின் மன உலகம் இதுவரை ஊடகங்களில் பெரிதும் பதிவு செய்யப்படாத பகுதி. • வீடு தாண்டிய வானத்தை பெண்ணுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி இந்த நிகழ்ச்சி. • இதுவரை பதிவுசெய்யப்படாத குரல்களின் கூடம் இது////
என முக நூலில் பகிர்ந்திருக்கிறார்.
இது முகநூலில் உள்ள வீடு தாண்டி வருவாயா பக்கம்.
https://www.facebook.com/pages/Veeduthaandi-varuvaya/416009768528046https://www.facebook.com/pages/Veeduthaandi-varuvaya/416009768528046
தொலைக்காட்சியில் வந்தும் பார்க்க முடியாத நிலை.. :) அடுத்த முறை ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்டால் முடிந்தால் படமோ , வீடியோவோ எடுத்து இங்கே பகிர்கிறேன் மக்காஸ்.

எப்போது ஒளிபரப்பு என்பதை கண்டிப்பாக முன் கூட்டியே தெரிவியுங்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!