ஒரு நாள் என் நிலைத்தகவலில் முகநூலில் சிறப்பாகப் பகிரும் பெண்கள் பற்றிக் கேட்டிருந்தேன். நண்பரொருவர் கிருத்திகா தரண் பற்றியும் வடுவூர் ரமா பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். தேடிச் சென்று நட்பு அழைப்புக் கொடுத்தேன்.
அன்றிலிருந்து இன்று வரை கிருத்திகாதரணின் பகிர்வுகளைப் படித்து மகிழ்வதுண்டு. தனக்கென தனி பாணியைக் கொண்டு நிறைய நண்பர்களையும் வாசகர்களையும் பெற்றுள்ள கிருத்திகா தரணிடம் அவருடைய தரணுக்குப் பிடித்த ஊர் குறித்து ஒரு கேள்வி.
////உங்க கணவருக்குப் பிடித்த ஊர் எது.? ஏன்.. ?///
முதன் முதலில் கல்லூரியில் கால் வைத்த இடம் என்றுமே முக்கியமான ஊராக மாறும் வாழ்கையில்..
கணவருக்கு அது பெங்களூராகி போனது. வளர்ந்தது ராமநாதபுரம் பகுதி..வெயில், தண்ணீர் கஷ்டம், கரண்ட் கட் என்று பழகி போயிருந்த அவருக்கு எண்பதுகளின் இறுதியில் பெங்களூரு ஒரு சொர்க்கமாகவே மாறி விட்டது.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் கண்டிப்புக்கு பழகி போயிருந்தமைக்கு எதிராக இங்கு உள்ள சுதந்திரமும், பன்முக தன்மையும், பல வகை மனிதர்களும் பிடித்து போனதில் ஆச்சர்யமே இல்லை.
அவர் வளர்ந்த ஊரில் இத்தனை விதமான உணவு வகைகள் ,பானி பூரி கடைகள், பேக்கரிகளின் கல கலப்பு போன்றவை கல்லூரி காலத்தில் பழகி போனது.
அவரிடம் கேட்டதற்கு பைசா செலவில்லாமல் ஊரையே ஏ.சி செய்து வைத்து இருப்பதும், மக்களின் கள்ளம கபடம் இல்லாத பழகும் தன்மையும், வாழ்க்கை முறையும், இருப்பதில் சுத்தமான நகரமாகவும், அப்போது இருந்த மரங்களின் அழகும், இயற்கையான சூழலும் இன்னும் எத்தனயோ இந்த ஊரில் இருக்கிறது என்கிறார்.
பதினெட்டு வயது என்பது வாழ்கையின் முக்கியமான வயது..அப்பொழுது கிடைக்கும் நல்ல அனுபவங்கள் வாழ்கையின் முக்கிய முடிவுகளை எடுக்க வைக்கும். பதினெட்டு வயதில் நுழைந்த கணவர் இன்று வரை இந்த ஊரில் இந்த ஊர்காரராகவே மாறி வாழ்வது இன்னும் சிறப்பு.
அன்பான மனிதர்களுக்கு எல்லை பொருட்டு இல்லை..உணவு, மொழி, கலாசாரம் எதுவுமே அன்பில் அடிபட்டு போகும். அதுபோன்ற ஒரு அன்பை மனிதர்கள் மேல் மட்டுமல்லாமல் அவருக்கு இந்த ஊரின் மேலும் ஏற்பட்டு விட்டது.
ரயில் white field வந்தால்தான் அவர்க்கு ஒரு நிம்மதி. தாயை அடையும் குஞ்சு போல..ஊரின் கதகதப்பை பழகி விட்டவர்கள் அதை விட்டு வெளியே வருவது கஷ்டம். அது அனைவருக்கும் பொருந்தும்.

-- தரணுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் இந்த ஊரின் மேல் காதல் இருப்பது உங்கள் எழுத்தில் புரிகிறது கிருத்திகா. குளு குளு பெங்களூரு பற்றி அழகாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.
கிருத்திகா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
நீக்குஅழகான விவரிப்பு... அருமை கிருத்திகா தரண்.
பதிலளிநீக்குஅன்புக்கு..எல்லையில்லை..!
பதிலளிநீக்கும்..!
வாழ்த்துக்கள்...அன்பு தம்பதிகளுக்கு!
க்ருத்தீகா மேடத்துக்கு சொந்த ஊர்
பதிலளிநீக்குராமனாதபுரமா
நன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி எழில்
நன்றி தினேஷ்
நன்றி மைக்கேல் அமல்ராஜ்
நன்றி பாலாஜி கார்த்திக்..
வாழ்க வளமுடன்...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்...
பதிலளிநீக்குஎன்று இனிதே வாழ்க!
பதிலளிநீக்குவா..வ் கீர்த்தி.. வாழ்த்துக்கள்.!!! இந்தியா வரும்போது பெங்களூர் செல்லாமல் நாங்க வருவதில்லை. ஏனெனில் என்னவருக்கும் பிடித்தமான ஊர் அதுதான்.
பதிலளிநீக்குநன்றி தேனக்கா.