இந்த வாரமும் திரு விவி எஸ் சார் உங்களுக்காக சேமிப்பு பற்றிக் கூறுகிறார்கள்.
போவோமா ஊர்கோலம் !
”வாங்க, அந்த வீட்டுக்குள்ள போய்ப் பார்க்கலாம். அதுவும் நம்ம வீடு மாதிரிதாங்க. அங்க பாருங்க, ஹால்ல லைட் போட்டே இருக்கு. காலைல 7 மணிக்கே அணைச்சிருக்கலாம். இப்ப மணி 9. ரெண்டு மணி நேரமா வேஸ்ட்டா எரிஞ்சிருக்கு.”
அதோ அங்க டைனிங் டேபிள்ல ஒரு bowl நெறைய ஃபுரூட்ஸ் இருக்கு. ஆனா வாடிப் போய் இருக்கு. ஒண்ணு நேத்தைக்கே யூஸ் பண்ணி இருக்கணும். இல்லேன்னா மக்கும் குப்பைய என்ன செய்யணும்மோ அதச் செய்யணும்.
இது மார்ச் மாசம். அடுத்த மாசம் ஸ்கூல் லீவ் உட்டுடுவாங்க. பசங்களோட இந்த வருஷ புக்ஸ்-ஸ என்ன செய்யப் போறாங்க-ன்னு கேட்டுப் பாருங்க. பழைய புக்ஸ் கடைல போடணும்ன்னு வெச்சிருக்கோம்ன்னு சொல்வாங்க. ஆனா கடைக்குப் போகத்தான் நேரம் இருக்காது.
இது எல்லா வீட்லேயும் நடக்கறதுதான். குறிப்பா வாய்ப்பகுதி பிய்ந்து போன பிளாஸ்டிக் குடங்கள். ஒரு வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்றாவது இருக்கும். அதற்குக் காரணம் மொத்த குடமும் ஒரே அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. வாய்ப்பகுதியைப் பிடித்தோ அல்லது அழுத்தியோ குடத்தைத் தூக்கும் போது அது பிய்ந்து கொள்கிறது.

















