இந்த வாரமும் திரு விவி எஸ் சார் உங்களுக்காக சேமிப்பு பற்றிக் கூறுகிறார்கள்.
போவோமா ஊர்கோலம் !
”வாங்க, அந்த வீட்டுக்குள்ள போய்ப் பார்க்கலாம். அதுவும் நம்ம வீடு மாதிரிதாங்க. அங்க பாருங்க, ஹால்ல லைட் போட்டே இருக்கு. காலைல 7 மணிக்கே அணைச்சிருக்கலாம். இப்ப மணி 9. ரெண்டு மணி நேரமா வேஸ்ட்டா எரிஞ்சிருக்கு.”
அதோ அங்க டைனிங் டேபிள்ல ஒரு bowl நெறைய ஃபுரூட்ஸ் இருக்கு. ஆனா வாடிப் போய் இருக்கு. ஒண்ணு நேத்தைக்கே யூஸ் பண்ணி இருக்கணும். இல்லேன்னா மக்கும் குப்பைய என்ன செய்யணும்மோ அதச் செய்யணும்.
இது மார்ச் மாசம். அடுத்த மாசம் ஸ்கூல் லீவ் உட்டுடுவாங்க. பசங்களோட இந்த வருஷ புக்ஸ்-ஸ என்ன செய்யப் போறாங்க-ன்னு கேட்டுப் பாருங்க. பழைய புக்ஸ் கடைல போடணும்ன்னு வெச்சிருக்கோம்ன்னு சொல்வாங்க. ஆனா கடைக்குப் போகத்தான் நேரம் இருக்காது.
இது எல்லா வீட்லேயும் நடக்கறதுதான். குறிப்பா வாய்ப்பகுதி பிய்ந்து போன பிளாஸ்டிக் குடங்கள். ஒரு வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்றாவது இருக்கும். அதற்குக் காரணம் மொத்த குடமும் ஒரே அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. வாய்ப்பகுதியைப் பிடித்தோ அல்லது அழுத்தியோ குடத்தைத் தூக்கும் போது அது பிய்ந்து கொள்கிறது.
நம் வீட்டினுள் ஒரு ரவுண்டு போய் விட்டு வந்தால் தெரியும். அது ஒரு “காயலான் கடை” என்று. அந்தப் பொருள்களை ஏதேனும் ஒரு வகையில் நம்மால் பயன்படுத்த முடியும். நம் கருத்தை அந்தக் கோணத்தில் செலுத்தியே இருக்க மாட்டோம்.
என் உறவினர் ஒருவர் இந்த விஷயத்தை வேறு மாதிரி கையாள்வார். பழையதாகிப் போன பிரஷர் குக்கர் ரப்பர் வளையத்தை (கேஸ்கெட்) நறுக்கி, குடத்தின் வாய்ப்பகுதியின் உட்பக்க இடைவெளியில் பதித்து விடுவார். குடத்தை வாங்கிய உடனேயே. வளையத்தின் கொஞ்சம் பகுதி மட்டுமே வீணாகும்.
ஆனால் வாயில் திடம் சேர்ந்து விட்டதால் எளிதில் கிழியாது. வேஸ்ட்-டிலிருந்து ஒரு சேமிப்பு.
சேமிப்பு என்பது எஃப் டீ மட்டுமல்ல. எத்தனையோ வழிகளில் நம் செலவைச் சுருக்க முடியும். தள்ளிப் போடலாம். தவிர்க்கவும் வாய்ப்புண்டு. அவையும் கூட சேமிப்புதான்.
சிக்கனத்தைக் கடைபிடிக்கும் ஒரு குடும்பம் இந்தப் பாடங்களை நேர்த்தியாக நமக்குச் சொல்லித் தருவார்கள். இதற்கு இன்னொரு கூறும் உள்ளது. அதுதான் இந்தக் கட்டுரையின் மெய்ன் பாயிண்ட்.
ரேஷன் அட்டையில் உள்ள ஃபோட்டோதான் குடும்பத் தலைவன். அரசாங்கமே அதை அங்கீகரித்து விடுகிறது. அதைப் பார்த்ததுமே ஏதோ ஒரு பெரிய தொகுதியில் எம் பி தேர்தலில் ஜெயித்து விட்டது போலவும் மொத்த பொறுப்பும் நம் தலையில் விழுந்து விட்டது போலவும் நாம் நினைத்துக் கொள்கிறோம்.
நான்தான் குடும்பத் தலைவன். எல்லாவற்றையும் நானே செய்கிறேன். சேமிப்பு விஷயங்களையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று நினைக்கிறோம். வங்கியில் எஃப் டீ போடுவது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது போன்ற முடிவுகளை நாமே எடுக்கிறோம். ஓகே. சரியான விஷயம்தான்.
ஆனால் செலவைக் குறைப்பது என்பது நாம் மட்டுமே செய்வதில் பலன் இருக்காது. குடும்பத்தில் உள்ள அனைவரும் உள்வாங்கி நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது நல்ல பலனைத் தரும்.
அதோ அந்த TANDEM CYCLE ஐ மொத்த குடும்பமும் பெடல் செய்வது போல் செலவுகளைக் கட்டுப்படுத்தினால் போதும். பலமான விளைவு கிடைக்கும்.
இனி நம் குடும்ப கோஷம் – “போவோமா ஊர்கோலம்” என்றே இருக்கட்டும் !
டிஸ்கி :- சேமிப்பில்தான் எத்தனை விதம். படித்துப் பிரமித்தேன். கட்டுரை அருமை. நன்றி விவிஎஸ் சார். தொடர்ந்து சனிக்கிழமை போஸ்டில் உபயோகமான விபரங்கள் தருவதற்கு. படமும் வெகு பொருத்தம்.
சிறப்பாக சொல்லி வருகிறார் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அவர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் பயனுள்ள பகிர்வுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!