எனது பதிமூன்று நூல்கள்

வியாழன், 31 ஜனவரி, 2013

தீபலெக்ஷ்மி.

தீபலெக்ஷ்மி..

மாலை  லேசான இருளை தீட்டத் துவங்கிய போது  இல்லங்களும் , ரோடுகளும் வெள்ளை., மஞ்சள் விளக்குகளால் வர்ணமேற்றத் துவங்கின.  லேசான செவ்வரளிப் பூமணத்தோடு. இருந்தது சாமி செல்ஃப்.  விளக்கு வைக்க வேண்டும்.

மின் விளக்கு  ஏற்றினாலும் சாமி விளக்கை., விளக்குப் பாடலோடு  ஏற்றும் போது  தேவி ப்ரத்யட்சமாவது போல இருக்கும். நெருப்பில் உதித்த அழகு தேவதை. ஓங்கி உயர்ந்து கோபி சந்தனம் தீற்றல் போல ஒளிவிட்டு. சுவற்றிலும் பின்னிருக்கும் சாமி படங்களிலும் ஒரு முகத்தை அல்லது இரட்டை முகங்களை உண்டுபண்ணும் ஒளித்தோற்றம்..

புதன், 30 ஜனவரி, 2013

”ங்கா” பற்றிய விமர்சனம்

 ”ங்கா” பற்றிய விமர்சனம்.

முகநூல் நண்பர் ஒருவர்  அஹமதாபாத்தில் வசித்து வருகிறார். அவர் வருடந்தோறும் அங்கே தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கரை ஊக்குவிக்கும் வண்ணம் திருக்குறள் போன்ற புத்தகங்களைப் பரிசளிப்பது வழக்கம்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

மதுரைச் சிறப்பிதழ் சிப்பி அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.

மதுரைச் சிறப்பிதழ் சிப்பி
அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.
****************************************

ரோட்டோரம் ,
வீட்டோரம்
கையைப் பிடித்துக்
காலைத் தடவி
யாசிக்கும் கரங்கள்.

சாலையோரம்
பாலுக்கு அழும் குழவியாட்டம்
காய்ந்து கிடக்கும்
தரிசு நிலங்கள்.

திங்கள், 28 ஜனவரி, 2013

குன்றக்குடியில் ஒரு குடைவரைக் கோயில் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)

”குன்றக்குடியின் குடைவரைக்கோயிலும் சமணர் படுகைகளும்” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :) 

 மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ். 

சனி, 26 ஜனவரி, 2013

நாட்டின் சுதந்திரமும் நமது சுதந்திரமும்.

சுதந்திரத் திருநாளில் (15.8.2012) மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்று சுதந்திரதின சிறப்பு உரையாற்ற அழைப்பு வந்தது. சுதந்திரப் போராட்டத்துக்கான வேர் பாய்ந்த சம்பவம், சுதந்திரத்தை இன்னும் பாதுகாக்கும் எல்லைக் காவல் படையினர், ஜவான்கள் பற்றி மற்றும் மாணவ மாணவியருக்கான சுதந்திரத்தின் அளவுகோல் பற்றி உரையாற்றினேன்.

முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் 1906 இல் ஏசியாடிக் பதிவு சட்டத்தை அப்போது அங்கிருந்த ட்ரான்சுவால் காலனி அரசாங்கம் கொண்டு வந்தது. அதன்படி வாக்குரிமை மற்றும் இந்தியத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது , இதுபோல இன்னும் இதுபோல பல ஷரத்துக்கள் அடங்கிய இச்சட்டம் செல்லாது என சத்யாக்கிரக முறையில் காந்தி போராட அழைப்பு விடுத்தபோது மயிலாடுதுறையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்காகச் சென்றிருந்த சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி மற்றும் வள்ளியம்மை முனுசாமி முதலியார் போன்றோர் காந்திஜியின் அழைப்பை ஏற்று இந்தச் சட்டத்தில் பதிவு செய்து கொள்ள மறுத்து சிறை சென்றனர்.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புதிய பார்வையில் வேண்டாம் தட்சணைகள்.

வேண்டாம் தட்சணைகள்..:-
*****************************

“நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின” - எங்கே கனவிலா? 
“ நல்ல விலை கொண்டு நாயை விற்பார்” - இதில் 
உடன்பாடில்லை. “ நல்ல விலை கொடுத்து நாயையும் 
கொடுப்பார்” - இதுதான் சரி. இங்கே நடப்பது கொடுக்கல், 
வாங்கல் வியாபாரமில்லை. கொடுக்கல், கொடுக்கல் மேலும் 
கொடுக்கல் விவகாரம்.

கி.மு. 12,000 க்கு முன் பெண்களெல்லாம் துர்க்கையாக 
இருந்தார்கள். ஆண்கள் அவர்கள் காலின் கீழ் அரக்கர்களாய் 
மிதிபட்டு அடங்கிக் கிடந்தார்கள்.

வியாழன், 24 ஜனவரி, 2013

புதுவயல் பொன்னழகியம்மன் திருவிழா கவியரங்கத்தில் வேரைத் தாங்கும் விழுதுகள்.

                      
மே மாதம் 1985 இல் சிறுவயல் பொன்னழகியம்மன் திருவிழாவில்
நடந்த கவியரங்கில் ”இலக்கியத்தில் வேரைத் தாங்கும் விழுதுகள்” 
என்ற தலைப்பில் வாசித்த கவிதை.

*கப்பும் கிளையுமாய்ப்
பூத்தலும் காய்த்தலும்
கனித்தலும் பெற்றுக் 
கிளைகளும் இலைகளுமாய்த் தழைத்துத்
திசைதொறும் விழுதுகள் பரப்பிச்
செழித்துச் சிரிக்கும் ஆலமரம்.

புதன், 23 ஜனவரி, 2013

நான் ஈயும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமும்.

நான் ஈ:-

நானி பென்சில் காரீயத்தை துருவி சிலை செய்யும் ஒரு பெண் சிலையைக் காதலிக்கிறார். அந்தப் பெண்ணோ நானியை ஒரு பொருட்டாகக் கருதாமல் எல்லா இடங்களிலும் கடந்து செல்கிறார். அதையே தனக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் கவனிப்பாக நானி எடுத்துக் கொள்கிறார்.

ஹீரோயின் பென்சில் லெட்டை துருவி ஒரு டாலர் செய்யும்போது கரண்ட் போய்விட எதிர் மாடியில் இருந்து ரிஃப்ளஷன் மூலம் ஒளி உண்டாக்குகிறார் நானி.

சந்திரலேகா அல்லது நடனம்

தன் கோப்பையின்
தேநீரை அவள்
துளித்துளியாய்ப்
பருகிக் கொண்டிருந்தாள்.

யாருடன் அருந்துவது.,
யாருக்குப் பகிர்வது.,
யாருடையதை எடுத்துக் கொள்வது
எனத் தீர்மானித்தபடியே.

சூடாகத் தேநீரும்
பாலும் கலக்கும் போது
ஆவிகள் நடனமிடுவது
பிடிக்கும் அவளுக்கு.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

டைம்பாஸ்.. என்ன கொடுமை அகடவிகடா இது..

டைம்பாஸ்னா ஒரு சால்ட் பிஸ்கட் இல்லாட்டி  பஸ்ஸ்டாண்ட்ல விக்குற ஏதோ ஒரு குழந்தைகள் விளையாட்டு செட்டுன்னு நினைச்சிருப்பீங்க.. இது அக்மார்க் முத்திரையோட இருக்க ஒரு அழகான பத்ரிக்கையின் அஞ்சு ரூபா புத்தகம்.

ரயில்வே ஸ்டேஷன்ல படிக்க ஏதாவது புக் வாங்கலாம்னு போனா டைம்பாஸுன்னு போட்டு எனக்கு பிடிச்ச ஒரு பத்ரிக்கை பேரு போட்டுருந்துச்சு. ஆனா பாருங்க அட்டைப் படத்தைப் பார்த்தவுடனே கடுப்பாயிடுச்சு. காணும் பொங்கல்னா இதுதான்னு ஒரு படத்துக்கு கமெண்ட் போட்டு.

இந்த ஜாலி 1 ம் கேலி 15 ம் வந்திருக்கு. இந்த அக்குறும்பு நம்ம கண்ணுக்குப் படாமே போயிருக்கு. இதுல பாதிக்கு பாதி ஜூவியோட ராத்திரி ரவுண்டப் மாதிரி இருக்கு.

ஜோதிஜியின் புத்தக வெளியீடு.

நம் அன்பின் சகோதரர் வலைப்பதிவர் ஜோதிஜி தன்னுடைய வலைத்தளத்தில் மிகச் சிறப்பாக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு -- இப்படி ஒரே வரியில் சொல்லிவிட முடியாது அது மக்களின் வாழ்வியல், பொருளாதார மேம்பாடு, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, வியாபாரம், சில அரசியல்கள் இவை எல்லாம் தாங்கி உள்ள கட்டுரைகள்.

மிகச் சிறப்பான இந்த நூல் வரும் ஜனவரி 27 வெளியிடப்படுகிறது. உங்கள் மேலான ஆதரவை வேண்டுகிறோம். சகோதரர் தன்னுடைய வலைப்பதிவில் பகிர்ந்த முதல் அறிக்கையை இங்கே பகிர்கிறேன். நன்றி.

////
வணக்கம். 

திங்கள், 21 ஜனவரி, 2013

மகளிர் தினத்தில் முத்துச்சரம் சமுதாய வானொலியில் எங்கள் கலந்துரையாடல்.

முத்துச்சரம் சமுதாய வானொலியில் சர்வதேச மகளிர் தினத்திற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குக் கொண்டு தங்களின் கருத்தினை பகிர்ந்துக் கொள்ள திரு ராமன் நாகப்பன்  ( எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் வானொலிப் பண்பலை ) அழைத்திருந்தார்.  அதற்கு நான்  முகநூலில் அழைப்பு விடுத்திருந்தேன்.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

சிங்கப்பூரில் தமிழ் தமிழர் எனது பார்வையில்.

சீனர் தமிழர் மலேய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர். என்று ஒரு படத்தில் ரஜனிகாந்த் பாடுவார். அது உண்மை எனச் சொல்கிறார் திருமதி சௌந்தரநாயகி வைரவன் தன்னுடைய சிங்கப்பூரில் தமிழ், தமிழர் என்ற தன்னுடைய புத்தகத்தில்.

2010 ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை குமுதம் தீராநதியில் வெளிவந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முனைவர் சுப திண்ணப்பன், இராம. கண்ணபிரான் , இலியாஸ், சாந்து ஆகியோரின் துணையுடன், அவர்களின் நூலின்/இணையங்களின் துணையுடன், இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை சேகரித்ததாகக் கூறுகிறார்.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

சாயம் போன வானவில்கள்..


சாயம் போன வானவில்கள்

1985 மார்ச் புதிய பார்வைகள் இதழில் வெளி
வந்தது .....

நாங்கள் புறப்பட்டது
பெரும்பயணம்தான்..
எங்களுடைய ஒட்டகங்கள்
எலும்புக்கூடுகளாய்
நின்று போயின..

திங்கள், 14 ஜனவரி, 2013

குல்மோஹர் ரூஃபினா ராஜ்குமாரின் மொழிபெயர்ப்பில் GULMOHAR.

குல்மோஹர்:-

குல்மோஹரின்
ரத்தச் சிகப்புப்
பூக்களைப் போல
ஒளிர்ந்தது
உன் கண்களில்
என் மீதான காதல்....

கண்வழி
பொறி பட்டது போல்
குல்மோஹரைப்
பார்க்கும் போதெல்லாம்
பற்றி எரிகிறது மனசு....

இது என்னுடைய ப்லாகில் செப்டம்பர் 2009 இல் வெளிவந்தது. 

 இந்தக் கவிதையை ரூஃபினா ராஜ்குமார் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். நன்றி ரூஃபினா. :) இது அவருடைய வலைத்தளமான ப்லாசமில் நவம்பர் 2011 இல் வெளிவந்துள்ளது.

GULMOHAR!!

YOUR LOVE OVER ME
GLOWS

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பத்துவிதப் பொங்கல்..

பொங்கல்:-
*******************
1. சர்க்கரைப் பொங்கல்

2. அக்கார வடிசல்

3. கல்கண்டுப் பொங்கல்

4. பாற்சோறு.

 5. மாம்பழப் பொங்கல்

6. அன்னாசிப் பொங்கல்

7. வெண்பொங்கல்

8. தக்காளிப் பொங்கல்

9. காய்கறி வெள்ளைரவைப் பொங்கல்

10. கோதுமைரவைப் பொங்கல். ***************************************************

1. சர்க்கரைப் பொங்கல்:-
**********************************

தேவையானவை:-

சனி, 12 ஜனவரி, 2013

புத்தகத் திருவிழாவில் மெல்லினம். (ஸ்டால் எண் 43,44 இல்).

ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவரும் மெல்லினத்தில் நம் அபிமானத்துக்குரிய நடிகர். ( என்னுடைய முகநூல் நண்பரும், என்னைத் தன் மகளாகக் குறிப்பிடும் மதிப்பிற்குரிய தந்தையுமாகிய ) திரு. டெல்லி கணேஷ் அவர்கள் எழுதி வரும் தொடர்  “ இது ஒரு நிலாக்காலம் “ படிக்க ஒரு அரிய வாய்ப்பு.

அவுடைய  எழத்ுக்கத் ொடர்ந்து பித்ு வுகிறேன். நிப்பைப் போலே ஹாஸ்யத்ோடு சாகத் ன்னுடையாழ்வில் நிகழ்ந்தற்றைப் பிரும் விம் அருமை. சிலெகிழத்ு.சில ியத்ு. சிலுன்முறுவல் பூக்கத்ு. சிலிந்திக்கத்ு.

ாம்பிளுக்குச் சில

வெள்ளி, 11 ஜனவரி, 2013

ரோஜா ரூஃபினாவின் மொழிபெயர்ப்பில் A ROSE IS A ROSE IS A ROSE.!!

ரோஜா:-

நேற்றுப் பெய்த மழையில்
மாடியின் தளத்திலும்
கைப்பிடிசுவற்றிலும்
ஈரப்பூக்கள் பூத்துக்
கொண்டேயிருந்தன...

துணி எடுக்கச் சென்ற நான்
தன்னையுமறியாமல்
கன்னங்களை அழுந்தத்
துடைத்துக் கொண்டேன்...

நேற்று நீ இட்ட முத்தம்
ரோஜாவும் முட்களுமாய்
கன்னம் வழி கசிந்து
பூத்துக்கொண்டிருக்கிறதோவென்று..

இது என்னுடைய பூ கவிதை. 2009 செப்டம்பரில் என் ப்லாகில் வெளிவந்தது

இதை என் அன்புத் தோழி ரூஃபினா ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருக்கிறார், மிக அருமையாக.. நன்றி ரூஃபினா. :) இது அவருடைய வலைத்தளமான ப்லாசமில்  2011 நவம்பரில் வெளியாகி உள்ளது.

A ROSE IS A ROSE IS A ROSE.!!

வியாழன், 10 ஜனவரி, 2013

முகநூலில் கொஞ்சம் “ஙே..”

1.:-அவர் எதுக்கு திடீர்னு அர்ஜண்டா சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் கேக்குறாரு.

 2.:-அவர் ஒய்ஃப் சென்னைக்கு போகாட்டா விவாகரத்து பண்ணிடுவேன்னு சொல்லிடுச்சாம்.

1.:- அப்பிடி என்ன பிரச்சனை அவங்களுக்குள்ள..?

2.:- கெரகம் கரண்டுப் பிரச்சனைதான்..சென்னையில 22 மணி நேரம் கரண்ட் இருக்காம், மத்த ஊர்லஎல்லாம் 2 மணி நேரம்தான் கரண்ட் இருக்காம்.

1.;- “ஙே..!”

******************************************

50 வயதுக்குமேல் ஆண்கள் மனைவியை நேசிக்கிறாங்க -- ஒரு சர்வே.

டவுட்# அப்போ அது வரை வெறுக்குறாங்களா..:)

"ஙே..!”

புதன், 9 ஜனவரி, 2013

பெண்களும் பக்தி என்னும் போதையும்.

 ”திருமணம் ஆன புதுசுல என் மனைவி எப்ப நான் வீட்டுக்கு வருவேன்னு காத்துக்கிட்டு இருப்பா.. ”

 “அப்பிடியா.. இப்ப..?”

 ”எப்ப வெளியே போவேன்னு காத்துக்கிட்டு இருக்கா..ஏன்னா நாந்தான் ரிட்டயர் ஆகி வீட்டிலேயே எந்நேரமும் இருக்கேனே..”

இதுதான் ரிட்டயர்ட் ஆன கணவன்களின் நிலை. இளமைக்காலத்தில் கணவனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த பெண்களுக்கு கணவர்கள் ரிட்டயர்மெண்ட் ஆனதும் பிடிக்காமல் போய் விடுகின்றார்களா என்ன..அப்படி அல்ல.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி.

 முகநூலில் இந்தப் போட்டி பற்றிய பகிர்வைக் கண்டேன். முன்பு பண்புடன் போட்டிகளைப் பகிர்ந்திருந்தேன். அதில் என் அன்புத் தோழி ஜெயந்தி ரமணி கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றிருந்தார். ஈமெயில் மூலமாக நன்றியறிதலையும் அனுப்பி இருந்தார். மிக அருமையான சமூக சிந்தனையுள்ள இன்றைய சூழலுக்குத் தேவையான விழிப்புணர்வுக் கதையை எழுதிய அவருக்கும் சிறப்பானதைத் தேர்ந்து பரிசளித்த பண்புடன் குழுமத்துக்கும் நன்றி.  ( என்னுடைய அன்பின் ஹுசைனம்மாவும் பரிசு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி ).

இந்தப் போட்டிகளிலும் பங்குபெற்று என் சக வலைப்பதிவர்களும் தோழியரும் வெல்ல வாழ்த்துக்கள். பின் வரும் குறிப்புக்களை சரிவரப் படியுங்கள். ஜனவரி 31 ஆம் தேதி கடைசித் தேதி. அதற்குமுன் அனுப்புங்கள். வாழ்த்துக்கள் ..

திங்கள், 7 ஜனவரி, 2013

காரைக்குடி புத்தகத் திருவிழாவும் ( 2013) தினமணி சிறுகதைப் போட்டியும். :-

காரைக்குடியில் பதினொன்றாவது புத்தகத் திருவிழா கம்பன் மணி மண்டபத்தில் ஃபிப்ரவரி 15 வெள்ளிக் கிழமையில் இருந்து ஃபிப்ரவரி 24 ஞாயிற்றுக் கிழமை வரை நடக்கிறது.

 இதில் வருடந்தோறும் 40,000 - 50,000 பேர் கலந்து கொண்டு புத்தகம் வாங்குகிறார்கள். கிட்டத்தட்ட 60,000 /- ரூபாய்க்கான புத்தகங்கள் இலக்கியப் போட்டிகள்  நடத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம். எனது பார்வையில்..

கவிதாவஸ்தை வந்து எழுதும் கவிஞர்கள் மத்தியில் கவிதைகளை சுகமாகப் படிக்க முடிவது பத்மஜாவின் எழுத்துக்களில்தான். வலைப்பதிவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க கவிஞர் பத்மஜா.

தனிமையும் அன்பும் பரிவும் நிரப்ப இயலாத வெற்றிடங்களும் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளில் மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் இப்போதெல்லாம் பாதைகள் இருண்டு கிடப்பது குறித்து பெரும் சோகத்தைக் கிளர்விக்கிறது.

வியாழன், 3 ஜனவரி, 2013

நிதி நித்தி நித்தம்..

போலி நிதி நிறுவனங்களின் ஏமாறுபவர்களை தினம் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் பார்க்கிறோம். அவர்களுக்கு சில கேள்விகள்.

சாதாரணமா ஒரு வங்கிக்கு பணம் போடப் போறீங்க . அங்கே எல்லாருக்கும் 9% வட்டி. சீனியர் சிட்டிசன்களுக்கு 10% வட்டின்னு கொடுக்குறாங்க. பொதுவா வங்கிகளே வட்டி விகிதத்தைக் குறைச்சிகிட்டு வர்றாங்க. 12% வட்டி இப்போ எந்த வங்கியிலும் கிடையாது. ஒரு லட்ச ரூபாய் டெப்பாசிட் பண்ணா உங்களுக்கு 650/- ரூபாய் மாத வட்டி கிடைக்கும். அப்போ கிட்டத்தட்ட 8 – 8.5 % வட்டிதான் தரமுடியும் வங்கிகளால். ஏன்னா நேர்மையான முறை இது.

புதன், 2 ஜனவரி, 2013

சார் .. தந்தி..

சார் .. தந்தி..

ஐயோ தந்தியா.. என்று மக்கள் அதிர்ந்த காலம் உண்டு. தந்தி என்றாலே ஏதோ கெட்ட செய்தி என்று பயம். பொதுவாக யாராவது சீரியஸ் என்றால் மட்டும் தந்தி கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

எஸ்வி சேகரின் நாடகத்தில் ( அல்வான்னு நினைக்கிறேன்). சார் தந்தி என்று 4 முறை தந்தி வரும். ஐந்தாவதா ஒரு ஆள் சார் தந்தி என்று சொல்வார். அட..அது தினத்தந்தின்னு சொல்லி பேப்பர்ல ந்யூஸ் படிக்க ஆரம்பிச்சிடுவார் எஸ்வி சேகர். இப்ப எல்லாம் தந்தி இருக்கா..

செவ்வாய், 1 ஜனவரி, 2013

சுயம் எனும் சக்தி.

பூக்கின்ற  புதுவருடத்திலும்
புண்ணியத்தலம் , சுற்றுலாத்தலம்,
பாக்கள் ஊறும் பாற்குளம்
எங்கள் வலைத்தல(ள)மே..

புன்னகையோ மென்னகையோ
பூப்பந்தோ அணுகுண்டோ
வலைவீசிப் பூப்பிடிக்கும்
வலைப் பூவரசிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...