எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 ஜனவரி, 2013

சிங்கப்பூரில் தமிழ் தமிழர் எனது பார்வையில்.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

டிஸ்கி..1. :- இந்தக் கட்டுரை 14.10. 2012 திண்ணையில் வெளிவந்தது.

டிஸ்கி..2:- இந்தக் கட்டுரை 15.10.2012 உயிரோசையில் வெளிவந்தது.

டிஸ்கி.3.:- திருமதி சௌந்தரநாயகி வைரவன் சமீபத்தில் தனது மூன்றாவது நூலை வெளியிட்டிருக்கிறார். செட்டிநாட்டைச் சேர்ந்த அவர் தன் கணவர்,
மகன் மகளுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

எதிராஜ் கல்லூரியில் இளங்கலை சரித்திரமும், சர்வதேச தொலைதூரப் பள்ளியில் சுதந்திர எழுத்தாளர் துறையில் டிப்ளமாவும், ஆஸ்த்ரேலியா யுனிவர்சிட்டியில்  தகவல் தொடர்பு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும்
பெற்றவர். சிங்கப்பூர் நேஷனல் யூனிவர்சிட்டியில் பகுதி நேர
விரிவுரையாளராகப் பணிபுரிந்திருக்கிறார். கிட்டத்தட்ட 12 வருடங்களாக எழுத்துத் துறையில் அரும்பணி ஆற்றி வருகிறார்.

சிங்கப்பூர் தமிழச்சி மட்டுமல்ல. எழுச்சி மிக்க செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியும் கூட. சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் முரசில் பகுதி நேரப் பணியிலிருந்திருக்கிறார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதும் இவருடைய நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புக்கள் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் அமெரிக்கா
ஆகிய நாடுகளில் வெளியாகும் நாணல், நகரத்தார் மலர், ஆச்சி வந்தாச்சு, திசைகள், தினமணி கதிர், சிங்கைச் சுடர், தமிழ் முரசு, தெ செராங்கூன் டைம்ஸ்,, குமுதம் பப்ளிகேஷன்ஸ்,  One India One People, IgoUgo ஆகியவற்றில் வெளியாகி உள்ளன.

2003 ஆம் வருட சிங்கை நகரத்தார் மலரைக் கொண்டு வந்தவர் இவர். அந்த மலரின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

ஆன்லைனில் இவர் ‘Online Voice’ at http://www.onlinevoice.info ,என்ற ஆன்லைன் இதழை 2001 இல் இருந்து நடத்தி வருகிறார்.


சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை என்ற நூலைத் தமிழிலும் எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் ‘Nagarathars in Singapore’ என்ற நூலைப் படைத்த இரு ஆசிரியர்களுள் இவரும் ஒருவர். குமுதம் தீராநதியில் சிங்கப்பூர் தமிழர்கள் பற்றி எழுதி இருக்கிறார். அது ஒரு தொகுப்பாக தற்போது ”சிங்கப்பூரில் தமிழ் தமிழர்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

"CHILD DEVELOPEMENT" என்ற தலைப்பில் கட்டுரைகள் “ THE SERANGOON TIMES" இல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் குழுமத்தில்
அங்கத்தினராக உள்ளார்.

GLOBAL ORGANIZATION OF THE PEOPLE OF INDIAN ORIGIN, PEOPLE'S ACTIONS PARTY, INDIAN PROGRAMME
ADVISORY COMMITEE, MDA, TOAST MASTERS & VOCAL SINGERS ஆகியவற்றிலும் அங்கத்தினராக இருக்கிறார்.

பேச்சுத் துறையிலும் எழுத்துத் துறையிலும் ஜொலிக்கும் சௌந்தரநாயகி வைரவனின் சிங்கப்பூர் தமிழ் தமிழர் நூல் குமுதம் பு(து)த்தகம் வெளியீடாக வெளிவந்துள்ளது. மிகச் சிறப்பான அந்நூலுக்கு என்னுடைய விமர்சனம் இது. இந்த நூலைப் படித்தால் சிங்கப்பூரில் சில பல தலைமுறைகளாக வசிக்கும் தமிழரே அறியாக அரிய தகவல்கள் கொண்டதாக இருக்கும்.

கோ.சாவின் தமிழ்ப் பணிகள் பற்றிப் பெருமையுறும் அதே நேரம் நம் நகரத்தார் பெருமக்களின் வாழ்வு, வளமை, தமிழ்ப் பணி, ஆலயப் பணி, வியாபாரம், வாழ்வியல்  அவர்கள் அங்கே அடைந்த பெருமை ஆகியனவும் சுட்டப்படுகின்றன. படித்துப் பயனடைவீர்.


4 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமாக உள்ளது.. புத்தகம் வாங்கி படிக்க முயற்சிக்கிறேன்..
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 2. நல்ல பகிர்வு.

  திருமதி. சௌந்தரநாயகி வைரவன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் என்பதை உங்கள் கட்டுரை படம்பிடித்துக் காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 3. நல்ல புத்தக விமர்சனம்..
  திருமதி சௌந்தரநாயகி வைரவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி சமீரா

  நன்றி குமார்

  நன்றி மாதேவி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...