நம் அன்பின் சகோதரர் வலைப்பதிவர் ஜோதிஜி தன்னுடைய வலைத்தளத்தில் மிகச் சிறப்பாக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு -- இப்படி ஒரே வரியில் சொல்லிவிட முடியாது அது மக்களின் வாழ்வியல், பொருளாதார மேம்பாடு, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, வியாபாரம், சில அரசியல்கள் இவை எல்லாம் தாங்கி உள்ள கட்டுரைகள்.
மிகச் சிறப்பான இந்த நூல் வரும் ஜனவரி 27 வெளியிடப்படுகிறது. உங்கள் மேலான ஆதரவை வேண்டுகிறோம். சகோதரர் தன்னுடைய வலைப்பதிவில் பகிர்ந்த முதல் அறிக்கையை இங்கே பகிர்கிறேன். நன்றி.
////
மிகச் சிறப்பான இந்த நூல் வரும் ஜனவரி 27 வெளியிடப்படுகிறது. உங்கள் மேலான ஆதரவை வேண்டுகிறோம். சகோதரர் தன்னுடைய வலைப்பதிவில் பகிர்ந்த முதல் அறிக்கையை இங்கே பகிர்கிறேன். நன்றி.
////
வணக்கம்.
27 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று
காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள டிஆர்ஜி
நவீன கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர், பிரபல எழுத்தாளர்கள்,
வலைபதிவர்கள், தொழில் அதிபர்கள், சுற்றுப்புறச்
சூழல் சார்ந்து செயல்படும் சமூக அக்கறை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் டாலர்
நகரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் தங்களை அன்போடு
அழைக்கின்றோம்.
இந்த நூல் ஸ்விஸ் ல் இருந்து
செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4 தமிழ்மீடியா குழுமத்தின் ஒரு அங்கமான 4 தமிழ்மீடியா
(படைப்பாய்வகம்) மூலம் வெளிவருகின்றது.
திருப்பூரில் உள்ள தமிழ்வழிக்கல்வியை
சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமளிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகளும்
நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ் இணையம், திரட்டிகள் பற்றிய முழுமையான விபரங்கள்,
வலைபதிவுகளின் வளர்ச்சி, மாற்று ஊடகம் குறித்த
எண்ணங்கள், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வலைபதிவில் எழுதிக்
கொண்டிருக்கும் அத்தனை வலைபதிவுகளைப் பற்றிய அறிமுகத்தோடு, அவர்களின்
தளம் குறித்த விபரங்களை விழா சிறப்பு மலராக வெளிவர உள்ளது.
அருகில் உள்ள கோவை மற்றும் இதனைச்
சார்ந்த மற்ற பகுதிகளின் நண்பர்களின் வேண்டுகோள்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.
திருப்பூரில் உள்ள பிரபல தொழிலதிபர்
சமூக சேவகர், அமெரிக்கா பெட்னா சங்கத்தில் இருக்கும் கேபிகே செல்வா
அவர்களின்
அறக்கட்டளை மூலம் இந்த விழா நடத்தப்படுகின்றது.இவர் இங்குள்ள பல்வேறு
சங்கத்தின் பொறுப்பாளர். கல்விக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டு
வருபவர்.
விழாவுக்காக தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் தமிழ்ச்செடி, சே ர்தளம், தொழிற்களம், கனவு
இதழ் பத்திரிக்கை போன்றவர்கள் மூலம் இந்த விழா நடக்க இருக்கின்றது. இந்த
விழாவில் வேறு சில நிறுவனங்களும் தங்களின் மேலான ஒத்துழைப்பை
வழங்கியுள்ளார்கள்.
முழுமையான விபரங்கள், அழைப்பிதழ் அடுத்த
கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கடிதம் தங்களின் நினைவுக்காக,
தங்களின் திட்டமிடுதலுக்காக உங்களிடம் இருந்து
எதிர்பார்க்கும் ஆதரவுக்காக
இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது. விழா குறித்த விபரங்கள்
நண்பர்களின் தளத்தில், தமிழ்செடி, சேர்தளம், தொழிற்களம், தேவியர் இல்லம்
தளத்தில் வெளியிடப்படும்.
நட்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம் திருப்பூர்.
உங்கள் புரிதலுக்கு நன்றி.
உங்கள் வருகையை எதிர்பார்த்து வழி
மேல் விழி வைத்து............////
விழா சிறப்பாக நடைபெறவும், தங்கள் புத்தகம் பல்வேறு மக்களையும் சென்றடையவும் வலைப்பதிவர் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள் ஜோதிஜி.
சகோதரர் ஜோதிஜியின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஜோதிஜியின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஜோதிஜியின் புத்தக வெளியீடு.... தகவலுக்கு நன்றி...
பதிலளிநீக்குபதிவர் ஜோதிஜிக்கு வாழ்த்துகள்.
நன்றி தேன் + மொழி
பதிலளிநீக்குநன்றி சாந்தி
பதிலளிநீக்குநன்றி கோமதி மேடம்
நன்றி வெங்கட்
நன்றி ஜோதிஜி. :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!