எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

சாயம் போன வானவில்கள்..


சாயம் போன வானவில்கள்

1985 மார்ச் புதிய பார்வைகள் இதழில் வெளி
வந்தது .....

நாங்கள் புறப்பட்டது
பெரும்பயணம்தான்..
எங்களுடைய ஒட்டகங்கள்
எலும்புக்கூடுகளாய்
நின்று போயின..

சித்தன்ன வாசல்கள்
எலிப்பொந்துகளால்
வவ்வால்களால்
சீழ் பிடித்துப் போயின

நாங்கள் கடற்கரைக்
கோயில்களானோம்..
அலைக்கரையான்களுக்கு
எங்களை அரிக்கக்
கொடுத்துவிட்டு..
எங்கள் நம்பிக்கைகளின் கற்புகளைக்
காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம்

காற்றுக்கு சங்கீதத்தைக்
கற்றுக்கொடுத்து மலடுகளாய்ப் போனோம்.
எங்களின் வீணைகள்
ஸ்பரிசிக்கப்படுவதற்கு முன்னமேயே
தந்திகள் அறுக்கப்பட்டன..

நாங்கள் உருவாக்க
நினைத்ததென்னவோ
அஜந்தாக்கள்தான்..
கிடைத்தவை கரி அடைத்த
பூதப் பிரசவங்கள்..

நாங்கள் அர்ஜுனர்களாகிப்
பாதை திரும்பிக் கொண்டிருக்கிறோம்..
எங்கே எங்களின் அந்த
இதிகாசக்கண்ணன்...?

கோவர்த்தன கிரியைத்தூக்குதல்..,
ஆதிஷேஷன் மேல் நடனமாடல்..,
அரக்கியை அழித்தல் என்ற
இந்திரஜால வித்தைகளை
எம்மைப்போன்றோர்க்குக்
கற்றுத்தரட்டும்..

நாங்கள் கப்பல்களாய்த்
தயாராய்க் காத்திருந்தோம்
நிமிஷ நேரத்தில்
ஜல்லிகளாய்த்தூர எறியப்பட்டோம்.

பக்கத்து மேகங்களைப்
பார்த்து பரவசித்தபோது
எங்களை அபிஷேகித்தது
எரிமலைகுழம்புதான்
நாங்கள் புறப்பட்டது
பெரும்பயணம்தான்
எங்களுடைய ஒட்டகங்கள்தான்
எலும்புக்கூடுகளாய்
சீழ்பிடித்துப் போயின..

7 கருத்துகள்:

  1. பெரும்பயணம் பல பாதைகளை தொட்டுச் செல்கிறது...
    அருமையான கவிதை அக்கா...

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட்

    நன்றி சாந்தி

    நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி குமார்

    நன்றி மணவாளன் சார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...