அன்னபட்சி வெளியீட்டு நிகழ்வின் பின் அகநாழிகைபுத்தக நிலையத்தில் அதற்கான ஒரு நூல் விமர்சனக் கூட்டம் நடந்தது. அதன் சிறப்புப் பேச்சாளர்கள் முனைவர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், நண்பர்கள் திரு இளங்கோவும், திரு. செல்வகுமாரும். அனைவரும் சிறப்பாக உரையாற்றினர்.
நண்பர் இளங்கோவும் பத்மாமேமும் எப்பொழுதும் என்னை ஊக்குவிப்பவர்கள். நண்பர் செல்வகுமாரும் அப்படியே.
தமிழச்சியின் உரை ஒரு ஆய்வு போல் அமைந்திருந்தது. தனக்கு மிகவும் பிடித்தது என அல்பட்ரோஸ் பறவையைப் பற்றிக் கூறினார். என் அன்னபட்சியைப் பற்றியும் சிறப்பாகவும் அதே சமயம் கறாராகவும் விமர்சித்தார்.

மூவருக்கும் நாங்கள் புத்தகப்பரிசு அளித்தோம். நன்றி தமிழச்சி, செல்வா, இளங்கோ சார்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)