எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 30 ஜூன், 2017

ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!


ஏதோ கிரிக்கெட் வீரர் பேரைத்தான் கொழப்பிட்டேன்னு நினைக்காதீங்க. இது சேலம் ஃபேர்லாண்ட்ஸில் உள்ள ஒரு ஹோடேல் பேரு.

ஹோடெல் நல்ல வசதியான ஹோட்டல்தான். உள்ளடங்கி இருக்கு.


தினம் க்ளீனிங், லேடி சர்வெண்ட்ஸ். சோ பக்கா க்ளீனிங்.

மைசூரின் சிங்கம் ஹைதர் அலியும், மைசூரின் புலி திப்பு சுல்தானும்.

மைசூரின் சிங்கம் ஹைதர் அலியும், மைசூரின் புலி திப்பு சுல்தானும்.
வியாழன், 29 ஜூன், 2017

ஓடமும் ஒரு நாள்...

ஹொகேனக்கலில் பரிசலில் சென்றபோது  பாதி தூரத்துக்குப் பின் இறங்கி நடக்க வேண்டியதாகப் போய்விட்டது.

காரணம் பின்னால் சொல்றேன்.

பரிசலுக்குப் பணம் ( 750 /-ன்னு நினைக்கிறேன் ) கட்டியவுடன் (இருவர் என்றால் கூட. மூவர் நால்வர் என்றால் குறைத்து.). நம்மை வேயிங் மெஷினில் நிற்கவைத்து வெயிட் பார்த்து லைஃப் ஜாக்கெட்டை மாட்டி விடுறாங்க.

நமக்கு ஜலத்துல கண்டமான்னு தெரியாது. ஏன்னா நீச்சல் தெரியாது. ஒவ்வொரு தரமும் பயத்தோட ஆத்தைப் பார்த்துட்டுத்தான் இறங்கி போட்ல உக்கார்றது :)

இது பரிசில் என்பதால் கால் வைக்கும்போதே சுழலுது. திகில் திகில்தான்.

ரங்க்ஸ் முதலடி வைச்சு உக்கார்ந்து கூப்பிட்டதால கொஞ்சம் தைரியமா இறங்கினேன். வண்டியில் தொப் என உக்காருவது போலவே பரிசலிலும் தொப் என விழுந்து அமர்ந்து ஆட்டம் காணவைத்து திகிலானேன் ஹாஹா


வட்ட வட்டமாய் சுழலுடன் சிறிது தூரம் சென்ற வட்டு ஓரிடத்தில் நின்றது.

புதன், 28 ஜூன், 2017

திருமயம் கோட்டையில் ஒரு உலா.சிலநாள் முன்பு திருமயம் கோட்டைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்து. அங்கே இரு கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் பெருமாள் கோயிலை முன்பு பார்த்திருக்கிறேன்.


இந்த முறை கோயில் உலா இல்லை. இது கோட்டை உலா மட்டுமே.


 ஹைவேஸில் காரில் இருந்து எடுத்தேன்.

கம்பனில் இயற்கை – ஒரு பார்வை.கம்பனில் இயற்கை – ஒரு பார்வை.

காரைக்குடி கம்பன் கழகமும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய கம்பராமாயண மூன்றாவது உலகத்தமிழ் ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரைகள் பேராளர்களால் ஆக்கப்பட்டு காரைக்குடி கம்பன் கழகத்தாரால் புத்தகமாக்கம் பெறுகின்றன. ஐந்தாவது நூல் இது. இச்சீரிய முயற்சிக்காக எனது பாராட்டுகளும் உரித்தாகட்டும். 

இந்நூலில் மொத்தம் 78 பேராளர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. காவியம் பாடிய கம்பன் பற்றி 76 பேரும், ஏரெழுபது பாடிய கம்பன் பற்றி இருவரும் கட்டுரை யாத்திருக்கிறார்கள்.

இயற்கையே இறைநிலை என்கிறார் தமது கட்டுரையில் திரு கம்பனடிசூடி அவர்கள். அதை நிறுவிய விதம் அருமை. கண்ணுக்குத் தெரியாத இயற்கை ( உலகங்கள் பற்றி ) மீ கண்ணன் அவர்களும், கம்பனில் இயற்கை என்ற சொல்லாட்சி இருக்கும் இடங்கள் பற்றி முனைவர் வீ செல்வபெருமாளும் இயம்பி இருப்பதும் சிறப்பு.

அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் தி.நா. கிருட்டிணமூர்த்தி அவர்கள்  சுனாமி எதிர்ப்புச் சக்தி பற்றிக் கூறும்போது யுத்த காண்டத்தில் ஊழிக்காலத்திலும் நிலைபெற்று விளங்கும் தேர் பற்றிக் குறிப்பிடுகிறார்.

செவ்வாய், 27 ஜூன், 2017

மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.


716*மொய்ப்பண ஏடு திருமணம் முடிந்ததும் உபயோகப்படுத்துவது. 717* இசை குடிமானம் என்பது திருமணப் பதிவு. இன்றைக்கு ரெஜிஸ்டர் செய்துகொள்வது போன்றது.

இது இரண்டும் கட்டாயம் திருமணக் கணக்கு வழக்குகள் நிர்வகிக்கப்படும் கைப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். திருமணத்தின் போது பயன்படும்.

இக் 718* கைப்பெட்டியில் மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, விபூதிப் பிரசாதம், 719* மாமப் பட்டு, 720* பட்டில் முடியும் வெள்ளிக் காசு, 40 பக்க நோட்டு, பேனாக்கள், பென்சில், ஸ்டாப்ளர், பின்கள், பணம் வைக்கும் கவர், மொய்ப்பண ஏடு, இசை குடிமானம், திருமணச் செலவுக்கான பணம் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருக்கும். !

இவை இரண்டையும் வலையப்பட்டியைச் சேர்ந்த பழ ஜெயங்கொண்டான் செட்டியார் என்பவர் தம் இல்லத் திருமணத்தின் போது அன்பளிப்பாக அளித்திருக்கிறார்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரையரும் திருமெய்யரும்.


கி. பி ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் புதுக்கோட்டை திருச்சிப் பக்கங்களை ஆண்டவர்கள் முத்தரையர்கள். இவர்கள் மூன்று நிலப்பகுதிகளையும் ( சேர சோழ பாண்டியர் ) ஆண்டதால் முத்தரையர் என அழைக்கப்பட்டார்களாம்.

ஊனையூர் செல்லும் வழியில் காயாம்பட்டி என்றொரு இடத்தில் ஒரு ஊரணிக்கரையில் மாவீரன் சிலைஒன்றும் அதைச் சுற்றி நந்தவனம் ஒன்றும் பார்த்து 2012 இல் புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.

இந்த முறை அதே ரோட்டில் சென்றபோது அதே மாவீரன் சிலை. ஆனால் பூக்கள் ஒன்றுமில்லாமல் வெட்டவெளியில்  இருந்தது .
எல்லா வீரர்களுக்கும் எல்லாப் பெருந்தலைகளுக்கும்  எல்லாச் சிலைகளுக்கும் இந்தக் கதிதானா என நினைத்தபடி புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அட முத்தரையர் சிலையாம்

திங்கள், 26 ஜூன், 2017

பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

சிங்கப்பூர் ஜூராங்க் பேர்ட் பார்க்கிலும் மலேஷியாவிலும் காரைக்குடியிலும் எடுத்த பறவைப் புகைப்படங்கள்.

ஃப்ளெமிங்கோக்கள்.
கழுத்தை வளைப்பதைப் பார்த்தாலே நமக்கு ரொம்ப வலிக்குது. கழுத்தைச் சுருட்டி அப்பிடி என்னதான் செய்யுதுக

பழம் நல்லது - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

பழங்கள் என்னிக்குமே நல்லது. கலோரீஸ் ஏறாது. எனவே வெயிட் போடாது. வாரத்தில் ஒருநாள் பழ உணவு எடுத்துக்கலாம்.

எந்த சீசனிலும் சாப்பிடக்கூடியவை பழங்கள். உணவு சாப்பிட அரைமணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிடச் சொல்றாங்க. ஏன்னா உணவு சாப்பிட்டபின் பழம் சாப்பிட்டா அவை புளித்துப்போய் வயித்தைக் கெடுப்பதா சொல்றாங்க

விரதங்கள் இருப்பவர்கள் பெரும்பாலும் பாலுடன் பழங்கள் எடுத்துக்கொள்வார்கள். எல்லாப் பழங்களும் எடுத்துக்கலாம்

எனவே எல்லாப் பழங்களையும் விலக்காம சாப்பிடுங்க.
தர்ப்பூசணித் துண்டுகளை விதையோடயும் சாப்பிடலாமாம்.
பலாச்சுளைகளின் விதையை சமைத்துச் சாப்பிடலாம்.
பனானா மில்க்‌ஷேக்

புஸ்தகாவில் என் பத்தாவது மின்னூல் . ”சாதனை அரசிகள்”

புஸ்தகாவில் என் பத்தாவது  மின்னூல் . ”சாதனை அரசிகள்”

புஸ்தகாவில் என் பத்தாவது   மின்னூல் . ”சாதனை அரசிகள்”


புஸ்தகாவில்   என் பத்தாவது  மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதினைந்தாவது நூல் ) “சாதனை அரசிகள்” வெளியாகி உள்ளது.

இது எனது கட்டுரைகளின்  தொகுப்பு.  போராடி ஜெயித்த பெண்களின் கதைகள். மொத்தம் 19 கட்டுரைகள் உள்ளன.

பக்கங்கள் - 111.

விலை ரூ. 63. 00 / $ 1.99.

இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal

You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  சாதனை அரசிகள் வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

சனி, 24 ஜூன், 2017

காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.காரைக்குடிக்கு அருகில் இருக்கும் இரணிக்கோயில் சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்கும் புகழ்பெற்றது. இங்கே நவதுர்க்கைகள் உள்ளே ஆட்சி புரிய, அஷ்டலெக்ஷ்மிகளும் வெளி மண்டபத்தில் கொலுவீற்று அருள் பாலிக்கிறார்கள். குபேரன் வணங்கிய ஸ்தலம். அஷ்ட பைரவர்களும் உக்ரபைரவர்களும் காட்சி அளிக்கும் ஸ்தலம். நீலமேகப் பெருமாளுக்கும் இரணிக்காளிக்குத் தனிக்கோயில் இருக்கும் ஸ்தலம்.காமதேனுஅரவுப்படுக்கையில் அரங்கன் எம்பெருமாட்டியுடன்

சாட்டர்டே ஜாலி கார்னர் - விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.மனோ மேம் மிகப்பெரும் பதிவர். இவரது மனநலம் உடல் நலம் குறித்த இடுகைகள் எனக்குப் பிடிக்கும். இவரது உணவு வலைத்தளம் வெகு ஆண்டுகளுக்கு முன்பே பதிமூன்று லட்சம் பார்வைகளைக் கொண்டு என்னை மிரட்டியது ! 

தஞ்சையிலும் துபாயிலுமாக வசித்து வரும் இவர்களிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது துபாய் பற்றியும் அங்கே செல்வதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன் ஃப்ளைட் நடைமுறைகள் பற்றியும் சுவாரசியமாகச் சொல்லி இருந்தார். இப்ப பச்சைத் தண்ணீர்னா கூட எகனாமிக் ஃப்ளைட்டுகளில் காசு கொடுத்து வாங்கித்தான் குடிக்கணும்.

காற்றுப் பேருந்து என்ற பதம் இப்ப ரொம்பப் பொருத்தம். ஏன்னா மும்பை – ஹைதைக்கு நான் பயணம் செய்த இண்டிகோவில் பஸ் மாதிரி ஏறி உக்கார்ந்து வறுத்த கடலை எல்லாம் சாப்பிட்டுட்டு முன்சீட்டு கவர்ல காலிபேப்பரைச் சொருகி வைச்சாங்க ஒரு மராத்தி குடும்பம் ! 

வெள்ளி, 23 ஜூன், 2017

தினமணி காரைக்குடி சில புகைப்படங்கள்.தினமணியும் காரைக்குடி புத்தகத் திருவிழாவும் இணைந்து நடத்திய போட்டியில் 2013 இல் எனது சிவப்புப் பட்டுக் கயிறு ஊக்கப்பரிசு பெற்றது. அதில் எடுத்து போட விட்டுப்போன சில புகைப்படங்கள் இங்கே. 

சிறுகதை மன்னர் திரு. அய்க்கண் அவர்கள் மகளும் குழந்தைக் கவிஞர் திரு அழ வள்ளியப்பா அவர்கள் மகளும். ( தேவி நாச்சியப்பன் )
தேவி நாச்சியப்பன் அவர்கள் கணவருடன்இவர் ஆதலையூர் சூரியகுமார்.நாஞ்சிலாரிடம் பரிசு.

ஆடி அம்மன் கோலங்கள்.

ஆடி அம்மன் கோலங்கள்.ஆடிக்கிருத்திகை, ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி மற்றும் அம்மன் கோலங்கள்.இந்தக்கோலங்கள் 29.6. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

புஸ்தகாவில் என் ஒன்பதாவது மின்னூல் . ”அன்ன பட்சி”

புஸ்தகாவில் என் ஒன்பதாவது  மின்னூல் . ”அன்ன பட்சி”புஸ்தகாவில்   என் எட்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதிநான்காவது நூல் ) “அன்ன பட்சி” வெளியாகி உள்ளது.

இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 78 கவிதைகள் உள்ளன.

பக்கங்கள் - 136.

விலை ரூ. 75. 00 / $ 1.99.

இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi

You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.

http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

அன்னபட்சியை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

வியாழன், 22 ஜூன், 2017

நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.


கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் நிலவு. நான் எடுத்த புகைப்படங்கள்.

சில புகைப்பட நிபுணர்கள் நிலாவுல ஆம்ஸ்ட்ராங்க் வைச்ச காலடித் தடத்தைக் கூட எடுப்பாங்க. ஆனா நமக்கு என்னதான் இழுத்து ஜூம் பண்ணினாலும் லூமிக்ஸ் ல தென்னங்கீத்துக்குள்ள இம்புட்டு நிலாதான் கிடைச்சிது.

சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா. சத்தியமா நானில்லைங்க. :)

பாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” ஒரு பார்வை.பாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” ஒரு பார்வை.

பாலா சார் என நான் விளிக்கும் திரு பாலசுப்ரமணியன் சார் பெங்களூரில் வசித்து வருகிறார். இவரின் கட்டுரைகள் போலவே கவிதைகளும் அற்புதமாய் இருக்கின்றன. மிக இயல்பான பாடுபொருளைக் கொண்டிருக்கின்றன. 

நாம் அன்றாட வாழ்வியலில் காணும் பேசும் அனைத்தும் கருப்பொருளாயிருக்கின்றன. கேள்வி கேட்டலும் பதில் கூறலுமான கவிதைகள் சில. சில ஞானத்தேட்டம் உடையன. சில விஞ்ஞானமும் சில மெய்ஞானமும் கூறுகின்றன.

புஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் . ”அவர் பெயர் பழநி”


புஸ்தகாவில் என் எட்டாவது  மின்னூல் . ”அவர் பெயர் பழநி”புஸ்தகாவில்   என் எட்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதிமூன்றாவது நூல் ) “அவர் பெயர் பழநி” வெளியாகி உள்ளது.

இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 155 கவிதைகள் உள்ளன.

பக்கங்கள் - 263.

விலை ரூ. 125. 00 / $ 3.99.

இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani

You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

அவர் பெயர் பழநியை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

புதன், 21 ஜூன், 2017

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்.:- 4.ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்.:- 4.

பாரி, அதியன் போன்ற ராஜா கதைகள் கேட்ட அன்று இரவு ஆதித்யாவுக்கும் ஆராதனாவுக்கும் தூக்கம் வரவில்லை. தாத்தாவின் இருபக்கமும் யார் படுப்பது என்று வழக்கம்போல் போட்டி போட்டுவிட்டு ஆளுக்கொரு பக்கம் படுத்துக்கொண்டார்கள். ”விட்டுக்கொடுத்துப் போகணும் என்று தாத்தா சொல்லி இருக்கிறாரே. அப்புறம் கதை சொல்ல மாட்டாரே ” என்று கவலை வேறு.

”தாத்தா அம்மா இன்னிக்கு என் பழைய புக்கு,நோட்புக்கை எல்லாம் மஞ்சும்மா பையனுக்குக் கொடுத்துட்டாங்க.”

”அதுனால என்ன உனக்குத்தான் புது நோட்டு, புக்கு எல்லாம் வந்திருச்சில்ல” என்றார் ஆராவமுதன்.

”இல்ல தாத்தா நான் எல்லா நோட்லயும் புக்லயும் பாப்பாய், ஃப்ளிண்ட்ஸ்டோன், ஸ்கூபிடூபிடூ, ஹீமேன், போகேமான், ஆஸ்ட்ரிக்ஸ், டெக்ஸ்டர், டின் டின்னு எனக்குப் பிடிச்ச எல்லா கார்ட்டூன் கேரக்டர் ஸ்டிக்கரும் ஒட்டி இருந்தேன் தாத்தா”. என்று குறைப்பட்டான் ஆதித்யா. 
”என்னடா கண்ணு இதுக்குப் போய் வருத்தப்படுறே. இந்த வருஷம் புதுசா ஸ்டிக்கர் வாங்கித் தரேன் அத நோட்டுல ஒட்டிக்க” என்றார். 

”சரி தாத்தா. இருந்தாலும் பழைசு எல்லாமே கிடைக்குமா” என்று ஆதங்கப்பட்டான் ஆதித்யா.

”எல்லாம் கிடைக்கும் கவலைப்படாதே.” என்று அவன் கால்களைப் பிடித்துவிட்டார் தாத்தா.  

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்.:- 3.ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்.:- 3.

புதுவருட வகுப்பு நோட்டுப் புத்தகங்களுக்கு ஆதித்யாவும் ஆராதனாவும் தாத்தாவிடம்  அட்டை போடக் கற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு செய்தித்தாளை விரித்து அதன் மேல் வைத்து அட்டை போடுவது எப்படி எனக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆராவமுதன். இடையிடையே வழக்கம்போல இது என் கத்திரி , இது என் கம் என கத்திரிக்கோலுக்கும் ஒட்டுப்பசைக்கும் ஆதித்யாவுக்கும் ஆராதனாவுக்கும் சண்டை வந்தது.

”அண்ணன் தங்கச்சிதானே எதுக்கும் விட்டுக் கொடுத்துப் போறதில்லை.” ”என்ன சத்தம்” எனக் கேட்டவாறு பால்பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார் அவர்களின் தாய்.

உஷ் எனச் சைகை காட்டிய ஆராவமுதன் ”கொஞ்சநேரம் கதை நேரம். நோட்டை எல்லாம் அப்பிடியே வைங்க நான் ஒரு சின்ன கதை சொல்வேன். அப்புறம் நாம காஃபி, போன்விட்டா சாப்பிட்டுட்டுத் திரும்ப அட்டை போடலாம் ”என்றார்.

”மாமா நீங்க மட்டும் இல்லைன்னா இந்தக் குட்டீஸை என்னால சமாளிக்கவே முடியாது. தாங்க்ஸ் மாமா ”என்றபடி மூவருக்கும் சின்ன சின்ன கப்புகளில் பாதாம் அல்வாவும், முந்திரி பக்கோடாவும் கொண்டு வந்து வைத்தாள் ரம்யா. 

ப்ளாஸ்டிக் முட்டையும் ப்ளாஸ்டிக் இட்லியும்.

ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் சரி. காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் அல்லது காம்ப்ளிமெண்ட்ரி பஃபேயில் உணவு கிடைத்தாலும் சரி. சில பொழுதுகளில் அருமையாகவும் பல பொழுதுகளில் துன்பமாகவும் அமைந்துவிடும்.

தோழமைகளோடு செல்லும் பஃபேயில் சாஸ், ஊறுகாய், சட்னி போன்றவற்றை ஒரு துளி நாவில் வைத்துச் சுவைத்தபின்பே சாப்பிடுவது வழக்கம். ஏனெனில் ஆதிகாலத்தில் செய்ததாய் இருக்கும். இல்லாவிட்டால் கண்டெயினர் மாற்றாமல் அதிலேயே கொட்டிக்கொண்டிருப்பார்களாய் இருக்கும்

அநேக ஹோட்டல்களில் பொங்கலும் கிச்சடியும் சரியாக வேகாமல் சகிக்காது. மல்லாட்டைச் சட்னின்னு ஒரு கொடுமை வேற.

கரூர் ஆர்த்தியில் மட்டுமே நான் தினம் தினம் ( ஒரு வாரம்) அற்புதமான வெண்பொங்கல் நெய் வழிய வழிய சாப்பிட்டிருக்கிறேன்.


தர்மபுரி அதியமான் பேலஸில் எல்லா உணவு வகைகளையும் ப்ளாஸ்டிக் ஷீட்டால் மூடி ( சுகாதாரமாம் ) கொண்டு வருவார்கள்.தோசை ரொம்ப நல்லா இருக்கும்.

புஸ்தகாவில் என் ஏழாவது மின்னூல் . ”அக்கா வனம்”

புஸ்தகாவில் என் ஏழாவது  மின்னூல் . ”அக்கா வனம்”

புஸ்தகாவில்   என் ஏழாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பனிரெண்டாவது நூல் ) “அக்கா வனம்” வெளியாகி உள்ளது.

இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 118 கவிதைகள் உள்ளன.

பக்கங்கள் - 198.

விலை ரூ. 100. 00 / $ 2.99.

இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam

You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.

http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

அக்கா வனம் வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

செவ்வாய், 20 ஜூன், 2017

மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.

அதாண்டா இதாண்டா ஜில் ஜில் ஜிகர்தண்டா :)

லாங்க்க்க்க் குல்ஃபீஈஈஈ


கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

1461. விளக்கின் வெம்மையுடன் இருந்தது அவ்வுடல்
விட்டத்தின் இருள் விட்டிலாய் இறங்கிக் கவிழ்ந்து மூடியது அவ்வுடலை
சுவர்ப்பூச்சிகளின் இசையில் மிதக்கத்துவங்கியது அவ்வறை.

1462. தீயைச் சுற்றும் ஈ
ஈயைச் சுழற்றும் தீ

-- என்னமாவது எழுதி வைப்போம். பழக்க தோஷ.ம். ஹிஹி.

1463. தனிமையின் சூட்டில்
இரவு விளக்கைச் சுற்றும்
விட்டிலாய் மாறுகின்றன கண்கள்.

1464. My heart and eyes melt simultaneously when i read this. Plz help them
https://milaap.org/fundraisers/murugappan

1465. மனதுடன் பேசத் துவங்கும்போது கவிதைகள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன.

1466. புண்ணியனைப் பெற்ற பூமகள். மதுரையில் வேலம்மாள் புகைப்படம்.

புஸ்தகாவில் என் ஆறாவது மின்னூல் . ”பெண்பூக்கள்”

புஸ்தகாவில் என் ஆறாவது  மின்னூல் . ”பெண்பூக்கள்”

புஸ்தகாவில்   என் ஆறாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதினொன்றாவது நூல் ) “பெண்பூக்கள்” வெளியாகி உள்ளது.

இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 57 கவிதைகள் உள்ளன.

பக்கங்கள் - 109.

விலை ரூ. 63. 00 / $ 1.99.

இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal

You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.

http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

பெண்பூக்களை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

ஆதி கேசவனும் மாதொரு பாகனும் செங்கோட்டு வேலவனும்.

வெகு வருடங்களாக ரங்ஸ் என்னைத் திருச்செங்கோடு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஏனோ அது அமையவேயில்லை. அக்கம் பக்கம் ஊருக்குப் போவோம்.ஆனால் திருச்செங்கோடு போக வாய்க்காது.

பொதுவாக ரங்கஸுக்கு மலையேறுவதில் விருப்பம் அதிகம். இந்த மலை ஏறுவது கடினமான ஒன்று என்றும் அதனாலேயே போகவேண்டும் என்றும் சொல்வார். பேருந்து வசதியும் உண்டு.

ஒரு சுபயோக சுபநாளில் ஒரு வழியாக பெருந்துறையில் இருந்து செங்கோட்டு வேலவனைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.

இந்தக் கோயில் புராணம் சுருக்கமாக. - இங்கே சிவனை மட்டும் பிருங்கி முனிவர் வலம் வந்து வணங்க வருந்திய உமை தவம் செய்து சிவனின் உடலில் பாதி இடம்பெற உமையொரு பாகன் ஆனார் சிவன்.

திங்கள், 19 ஜூன், 2017

நாகவல்லி நாககன்னியுடன் மங்கள ராகு.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சிறந்த ராகு ஸ்தலம் ஆகும். இது நவக்ரஹக் கோயில்களில் ஒன்று. ராகுபகவான் மட்டுமில்லை, இவரோடு ஆதிசேஷன், கார்கோடகன், தக்‌ஷன், அநந்தன் ஆகிய பாம்புகள் சிவனை வழிபட்ட ஸ்பெஷல் தலம் இது.

இங்கே வரும் 27 ஆம் தேதி ராகு பெயர்ச்சிக்காக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

காவிரிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஸ்ரீ நாகநாதஸ்வாமி கோயில் கொண்டுள்ளார்.. திருச்சுற்றில் ராகுபகவான் நாகவல்லி, நாககன்னியுடன் எழுந்தருளி உள்ளார்.

ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கே பாலாபிஷேகம் செய்து வணங்கி வருகிறார்கள். ராகு தோஷம் என்றால் பேரையூர் கூடப்போகக்கூடாதாம். இவர்தான் சுப்ரீம் பவர் உள்ளவராம். இவரைத்தான் வணங்கணுமாம்.

தினப்படியுமே ராகுகாலத்தில் பூஜையும் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இவர் மேல் பொழியும் பால் நீல நிறமாக மாறிவிடுவதாகச் சொல்கிறார்கள்.

500 ரூ, 250 ரூ டிக்கெட்டுகள் உண்டு.

ராகு சன்னதியின் எதிர்த்தாற்போல் உள்ள மாபெரும் ஹாலில் முதலில் 500 ரூ டிக்கெட்காரர்களும் அதன் பின் 250ரூ டிக்கெட்காரர்களும் அமர்ந்துகொள்ளலாம்.

தோஷம் ஏதுமில்லாமல் சைடாக பிரகாரத்தில் வலம் வரும் பக்தர்களும் எட்டி தரிசனம் செய்து கொள்ளலாம்.

அபிஷேகம் ஆராதனை முடிந்ததும் காளாஞ்சியும் மாலையும் தருகிறார்கள். வெளியே காலையில் வாங்கிய ஒரு மாலை & அர்ச்சனைப் பை 250 ரூ. இதையும் நிர்வாகமே கொடுத்து நியாயமான காசை வாங்கிக்கொள்ளலாம்.

500 ரூ டிக்கெட்டுக்கே இம்புட்டுக்கூட்டமா என்று இருந்தது.

இந்த ராகு கேதுவுக்கெல்லாம் உக்கார இடமேயில்லையா.  . இப்பல்லாம் எல்லார் ஜாதகத்திலும் உக்கார்ந்திருக்காப்புல இருக்கு , எல்லாப் புள்ளக ஜாதகத்திலும் உக்கார்ந்து கல்யாணத்தைக் கெடுக்குது  என்று ஒருவர் சொன்னதும் பக்கத்திலிருந்தவர் சொன்னார்., எல்லார் ஜாதகத்திலும் ஏதோ ஒரு கட்டத்தில் ராகு கேது இருக்கத்தான் இருக்கும். அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஸ்தானம் பொறுத்து வாழ்வில் ஏற்படும் தீமைகளுக்குப் பரிகாரம் செய்யவே இவற்றை ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றார்.
கௌதம மகரிஷி, பராசரர், பகீரதன் ஆகியோரும் வழிபட்டிருக்காங்க. கம்பீர ராஜகோபுரம். ஏழு இராஜகோபுரங்களை உடைய ஸ்தலம். பூலோகத்தில் சிறந்தது என்று சிவபெருமானே சொன்ன கோயிலாம் இது.

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.தினமலர் நிறுவனர், அமரர் திரு இராமசுப்பையர் அவர்களின் நினைவாக 30 ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்திவரும் தினமலர் குழுமத்துக்கு முதலில் பாராட்டுகள்.

ஷேக் ஸாயத் ரோட், ஷார்ஜா & துபாய் - சில புகைப்படங்கள்


நெடிதுயர்ந்த கட்டிடங்கள், ஹோட்டல்கள் கொண்டது ஷேக் சாயத் ரோடு. பதினாறு லேன் கொண்ட இது கொஞ்சம் ஸ்பெஷலான ஒன்று.

அதன் சில கட்டிடங்களையும் சாலையையும் எடுத்திருக்கிறேன். துபாய் & ஷார்ஜாவின் கட்டிடங்கள் பெரும்பாலும் அமெரிக்கபாணி நீள் உயர ஊசிகோபுரக் கட்டிடங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...