எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 செப்டம்பர், 2014

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும்:-

குழந்தை பிறந்து ஓரிரு மாதங்களில் முகம் பார்த்துச் சிரிக்கத்துவங்கியதும் அதனுடன் பேசவும் விளையாடவும் ஆரம்பித்து விடுவோம். குழந்தை கை கால்களை நன்கு அசைக்கவும் மொழியைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பாட்டுகள் சொல்லி சிரிக்கவைத்து விளையாடுவதுண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். 

குழந்தைப்பாட்டு :-

1. தாப்பூ தாமரைப்பூ

தாப்பூ தாமரைப் பூ தாத்தா தந்த செண்பகப்பூ
பூப்பூ புளியம்பூ பொன்னால் செய்த தாழம்பூ
தீப்பூ தித்திப்பூ .

2. உந்தி உந்திக் காசு.

உந்தி உந்திக் காசு
பப்பு உந்திக் காசு
மாமா தந்த காசு
மாயமா போச்சு. ( மச்செரம்பி போச்சு )

3. கை வீசம்மா கைவீசு
 
கைவீசம்மா கைவீசு
கடைக்குப்போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் திங்கலாம் கைவீசு
பொம்மை வாங்கலாம் கைவீசு
ஜப்பான் போகலாம் கைவீசு.
சொக்காய் வாங்கலாம் கைவீசு
ஜோராய்ப் போடலாம் கைவீசு
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு.

விளையாட்டு:-

4.நண்டூறுது நரியூறுது.

பத்து விரல்களையும் பிடித்து ஒவ்வொன்றுக்காய் -- சோறு பருப்பு குழம்பு நெய் கீரை பொரியல், கூட்டு அப்பளம் பச்சடி, தயிர். பிசைஞ்சு பிசைஞ்சு பாப்பாவுக்கு ஊட்டு அம்மாவுக்கு ஊட்டு  அப்பாவுக்கு ஊட்டு அண்ணாவுக்கு ஊட்டு .என்று சொல்லி ஊட்டி

பாப்பாவின் உள்ளங்கையில் முழங்கையை வைத்து சுழற்றியபடி - பப்புக் கடை பப்புக் கடை. பப்புக்கடை. கடைஞ்சு கடைஞ்சு காக்காவுக்கு ஊத்து. கையைக் கழுவு. என்று சொல்லிகையைக் கழுவுவது போல பாவனை செய்து

கோயிலுக்கு/ பீச்சுக்குப் போவோமா.. நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது. கிச்சுக்கிச்சுக்கிச்சு..:) என்று சொல்லி விரலில் இருந்து கம்புக்கூடு வரை ஆட்காட்டி விரலாலும் நடுவிரலாலும் மாற்றி மாற்றி நடப்பது போல் செய்து கிச்சுகிச்சு செய்து குழந்தையைச் சிரிக்க வைக்கும் விளையாட்டு. 

தாலாட்டு - 1 :- 

1. லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி ( சிப்பிக்குள் முத்து )

 தாலாட்டு :- 2

ஆராரோ ஆரிரரோ கண்ணே நீ ஆராரோ
மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ
நேசப்பிறையோ நீ தெவிட்டாத செங்கரும்போ
எங்கள் குலம் மங்காமல் எதிர் குலத்தோர் ஏசாமல்
தங்கமலி பொக்கிஷத்தைத் தானாள வந்த கண்ணோ
தித்திக்கும் பாலோ என் தெவிட்டாத தெள்ளமுதோ
தித்திப்பின் உள்ளிருக்கும் செங்கரும்பே கண்வளராய். (கண் வளர்வாய், கண் மலராய் கண் மலர்வாய் ).

 இந்த இரண்டாவது பாடல் பள்ளியில் படிக்கும்போது படித்த மனப்பாடப் பகுதி. எனவே ஞாபகம் உள்ளது. 

டிஸ்கி :- இப்ப எல்லாம் குழந்தைப் பாட்டும் விளையாட்டும் பெருநகரக் குழந்தைகளுக்குத் தெரியாது. அதே போல் தாலாட்டு அநேகத் தாய்களுக்குத் தெரியாது. தற்போது உள்ள விரைவு உலகில் மறைந்து வரும் விஷயங்களில் ஒன்று தாலாட்டும்.

ஏதேனும் சினிமாவில் பிரபல பாடகர்கள் பாடி இதற்கு இனி உயிரூட்டினால் வாழ்வு உண்டு. :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.



6 கருத்துகள்:

  1. சித்திக்க வைக்கும்
    சிறந்த சிறுவர் பாக்கள்

    பதிலளிநீக்கு
  2. கண்ணே கமலப்பூ ஏதோ ஒரு படத்தில் பாடலாக வந்திருக்கிறது தேனம்ம. மிக அற்புதம் படங்களும் பாட்டுகளும்.

    பதிலளிநீக்கு





  3. மழலை பாடல்களில் நானும் மழலையாகிப் போனேன் சகோதரி.அருமை.வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. "மாசி பிறையோ நீ" நான் ஆறாவது வகுப்பில் படிக்கும் பொழுது எங்கள் தமிழ் வாத்தியார் ராகத்தோடு பாடிய பாடல். இன்று எனக்கு வயது 59. இன்றும் எங்கள் வீட்டு குழந்தைகளை தொட்டில் இடும் நாளன்று இந்த தாலாட்டு பாட்டு என் மனதில் வந்து போகும். இனிமையான வரிககள். "எங்கள் குலம் மங்காமல் எதிர் குலத்தார் ஏசாமல்" மனதில் நிற்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...