எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பார்க் கல்லூரியின் எஸ் வீரராகவன். - பெருமித ஆசிரியர்.



பார்க் கல்லூரியின் எஸ் வீரராகவன். :-

திருப்பூர் பார்க் கல்லூரிக்கு மகளிர் மன்ற விழாவுக்குப் போனபோது அங்கே திருமாறன் ஜெயராமன் சார் , ரெங்கராஜன் சார் ஆகியோரோடு எஸ் வீரராகவன் அவர்களையும் சந்தித்தேன்.

மிக ஆச்சர்யத்துக்கு உரிய மனிதர். சாஃப்ட் ஸ்கில்ஸ் ட்ரெயினராக இருக்கிறார். மாணவிகளைத் தன் பெண் குழந்தைகளை போல அன்பு செலுத்துகிறவர்.. ஆங்கிலத்தில் பேசப் பயிற்சிகள் அளிக்கிறார். 

நான் பேசி முடித்ததும் நடனங்கள் ஆரம்பித்தது. அங்கே இருந்த திருமாறன் ஜெயமாறன் சார் “நான் இருந்தால் அவர்கள் கூச்சப்படுவார்கள். இது மகளிர் மன்றம். எனவே அவர்களுக்கான தினம். மகிழ்வாய்க் கொண்டாடட்டும் ” எனச் சொல்லிப் புன்முறுவலோடு விடை பெற்றார்.

அப்போது ஒரு பெண் குழந்தை அற்புதமாக நடனமாடினாள். அருகே அமர்ந்திருந்த வீரராகவன் சார் வியப்போடு பார்த்து ”இந்தப் பெண் எப்படி அற்புதமாக நடனமாடுகிறாள். ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் பேசக் கூப்பிட்டால் பேசவே மாட்டேன்” என்கிறாள்.
”திறமைகள் இருக்கு. ஆனால் பயத்தைப் போக்கினால் சரியாகிவிடும்” என்று கூறி மகிழந்தார். தன் மாணவிகளைப் பார்த்து எவ்வளவு பெருமிதம். அன்புப் புன்னகை. பார்க் கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் கொடுத்து வைத்தவர்கள்.

அங்கே அவர் ஒரு கவிதை வாசித்தார் . அற்புதமாக இருந்தது. பெண்ணின் பெருமை கூறும் அக்கவிதையைக் (அந்தப் பேப்பரைக்) கேட்டு வாங்கி வந்து பதிவு செய்திருக்கிறேன்.

//// மனிதன் பிறப்பது நான்குமுறை
கருவாகும்போது முதல் பிறப்பு
கருவறை விட்டு வெளியேறும்போது இரண்டாம் பிறப்பு.
தன்னை உணர ஆரம்பிக்கும் போது மூன்றாம் பிறப்பு
உணர்தலில் அடைவது நான்காம் பிறப்பு.

மனிதர் உயர்வடைவது
பெண்மையால் மட்டுமே – ஆம்
இவ்வுலகில் உதயமாகும் ஒவ்வொரு
குழந்தையும் தகவலாக வந்து
தவமாக இருக்கிறது.

கன்னலாக ஆவதும் இன்னலாக இருப்பதும்
தாய்மையின் கவனிப்பில்.
வரமாக மலர்வதும், சாபமாக உதிர்வதும்
அன்னையின் வளர்ப்பில்.
அனலாக ஆவது, புனலாகப் பொங்குவதும்
தாயின் அரவணைப்பில்

விழிப்புணர்வை கற்றுத் தரும் தாய்
வியப்படையச் செய்கிறாள் உன்னை இவ்வுலகில்.

எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை
என்றெண்ணாமல் இப்படித்தான்
நாம் வாழவேண்டுமென்று சமுதாயத்தை
நெறிப்படுத்துவது பெண்மையே.

ஆணும் பெண்ணும் நிகரென்பதால்
அறிவிலோங்கிய வையகம் தழைக்கிறது.

சங்க இலக்கியப் பெண்மை கல்வியிலும்
இடைக்காலப் பெண்மை நிலைதாழ்ந்தும்
இக்காலப் பெண்மை எத்துறையிலும் ஒப்பற்று விளங்கி
உலகை மாண்புறச் செய்து வருகிறது.

வாழ்க பெண்மை!

வளர்க பெண்மையின் புகழ்.!


மெல்லினமே.!
புல்லுருவிகளால் தாக்கப்படும்போது
வல்லினமாக மாறு
சற்றே ரௌத்திரம் பழகு. 

ஆதிபராசக்தியாக அருளும் நீ
சமயங்களில் பத்ரகாளியாக,
சாமுண்டியாக, காட்டேரியாக மாறு.!
இன்னொரு முகத்தைக் காட்டு.

தீயதை வதம் செய்.
பேருந்தில் தனியிடம்
வரிசையில் முன்னுரிமை
30% இட ஒதுக்கீடு
பெண் சுதந்திரம் என்று மட்டும் பேசி
ஒதுங்கி விடாதே.

உறுதியாய் நில் -
வரதட்சணை எதிர்ப்பில்
ஏன் முடங்கிப் போகிறாய்.

பெண்கள் திருமண பந்தத்தில்
விழுக்காடு குறைவு என்று தெரிந்தும்
ஏன் விலையாக போட்டியிடுகிறாய்.!

பெண்ணுரிமை பற்றிய சிந்தனையோடு
விடை பெறுகிறேன்.

பெண்ணே என் பின்னால் வராதே
அடிமைப்படுத்தி விட்டேன் என்று சொல்லும் சமுதாயம்.
தயவுசெய்து என் முன்னால் போகாதே
நான் அடிமைப்பட்டுவிட்டேன் என்று தோன்றும்.
வா இணைந்தே  செல்வோம்!.

தீர்மானம் எடுங்கள். நடுக்கம் வேண்டாம்.
திட்டங்கள் இடுங்கள். குழப்பம் வேண்டாம்.
இலக்குகள் குறியுங்கள் – பதட்டம் வேண்டாம்.
இயல்பாக இருங்கள். – அசட்டை வேண்டாம்.

இந்திரா காந்தி சொன்னதைப் போல
Don’t call me as a Man or Woman.
Call me as a Human.

எப்போதும் மனிதத்துடன் நீ வாழ்..!

வாழ்க பெண்மை..!

வளர்க பெண்மையின் புகழ்.!.



டிஸ்கி:- இந்த ஆசிரியர் தினத்தில் என்னைச் செதுக்கிய நல்லாசிரியைகள் அனைவருக்கும் வந்தனங்கள். 

சுசீலாம்மா, ஃபாத்திமா அம்மா, பாலாம்பா அம்மா,  ராஜலெக்ஷ்மி மேம், சகுந்தலா மேம், மைதிலி மிஸ், ராஜேஸ்வரி மிஸ், திருமாறன் ஜெயராமன் சார், வீரராகவன் சார் அனைவருக்கும் சிறப்பு வந்தனங்கள். 

வாழ்க நம்மைச் செதுக்கும் ஆசிரியர்கள். வளர்க அவர்தம் நற்பணி. !

HAPPY TEACHERS' DAY :) 


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...