எனது நூல்கள்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மதுரையில் மூன்றாவது வலைப்பதிவர் திருவிழா. 2014.
வலைப்பதிவ நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் வணக்கம். 

மிக நீண்ட நாட்களுக்கு முன்பே என் வலைத்தளத்தில் சாட்டர்டே போஸ்ட் என்ற இடுகையில் ( சீனா சாரும் வலைச்சரமும். )சீனா சார் மதுரையில் அடுத்த வலைப்பதிவர் மாநாடு இருக்கும் என்று கூறினார்கள். அதன் படி இந்த மூன்றாம் வருட வலைப்பதிவர் திருவிழாவை சிறப்புற நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சங்கம் வளர்த்துச் செழித்த மதுரையில் இணையத்திலும் தமிழ் வளர்க்கும் தமிழர்களுக்கான திருவிழா வரும் அக்டோபர் 26, 2014, ஞாயிறு அன்று நிகழ இருக்கின்றது. அதற்கு வருகை தரும் வலைப்பதிவர்கள் அனைவரும் திண்டுக்கல் தனபாலன் சகோ அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்வாசி ப்ரகாஷ் அவர்களையும், மற்றும் பாலகணேஷ் , சரவணன், முத்து நிலவன், தமிழ் இளங்கோ, சுரேஷ் குமார், ஜீவானந்தம் , சதீஷ் சங்கவி ஆகிய  வலைப்பதிவ நண்பர்களைத் தொடர்பு கொண்டால் முழு விவரங்களையும் அறியலாம்.  ( 2012, 2013 இல் கலந்துகொண்ட நட்சத்திரப் பதிவர்களையும் அறியலாம். இது ரொம்ப அருமையா இருக்கு . :) )தீபாவளியில் இருந்து மூன்றே நாட்களில் இருப்பதால்-- விடுமுறை நாட்களும் சேர்ந்து வருவதால் இல்லத்தில் அனைவரும் விடுமுறையைக் கொண்டாட வருவார்கள் எனவே -  வெகு தொலைவில் இருக்கும் என்னைப் போன்றோர் கலந்து கொள்வது சிறிது சிரமமாய் இருக்கும். இருந்தாலும் இயன்றவரை கலந்து கொள்ள நினைக்கிறேன்.

வல்லிம்மா, ரஞ்சனிம்மா, நானானிம்மா இன்னும் சக வலைப்பதிவர்கள் எல்லாரையும் சந்திக்க ஆசை. நேரம் ஒத்துழைத்தால் கட்டாயம் வருவேன். என்றும் என் எண்ணங்கள் வலைப்பதிவர் திருவிழாவில்தான் இருக்கும். விழா சிறப்புற வாழ்த்துகள்.கலந்து கொள்ளும் அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். படித்துச் சந்தோஷமடைவோம்.

வலையால் இணைந்தோம். 
கலையால் உயர்வோம்.
மலைபோல் நிமிர்வோம். 
மண்ணில் வெல்வோம்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
!

10 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பதிவர் சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும்...

ராமலக்ஷ்மி சொன்னது…

விழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!

Thenammai Lakshmanan சொன்னது…

Nandri Venkat

Nandri Ramalakshmi

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Unknown சொன்னது…

விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
http://vivadhakalai.blogspot.com/

'பரிவை' சே.குமார் சொன்னது…

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

Yarlpavanan சொன்னது…

வலைப்பதிவர் திருவிழா. 2014 இனிதே இடம்பெற வாழ்த்துகள்

துளசி கோபால் சொன்னது…

விழா சிறக்க என் இனிய வாழ்த்து(க்)கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விவாதக் கலை

நன்றி குமார்

நன்றி யாழ்பாவண்ணன்

நன்றி துளசி. !

வல்லிசிம்ஹன் சொன்னது…

விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள். மிக மகிழ்ச்சிகரமான தருணங்கள் இருக்கும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...