துபாயில் பல்வேறு விதமான மால்கள் பிரசித்தமானவை. சில மால்களில் மட்டுமே நம்மைப் போன்றோர் பொருட்களை வாங்க முடியும். சில மால்கள் ரொம்ப காஸ்ட்லி. அது இண்டர்நேஷனல் பயணிகளுக்காக அதிக விலையுடன் (யூரோக்களுக்காகக் காத்திருக்கும்) இருக்கும் அலங்கார மாளிகைகள். எல்லாமே ஷோகேஸில் வைக்கும் அலங்காரப் பொருட்கள்தான்.
சூக் மதினாத் ஜுமைரா என்ற மாலில் இது போன்ற கலைப்பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதே போல் அங்கே சில உணவுக் கடைகளும் இருக்கின்றன. ஒரு சில பேக்கரிகளும் சாக்லேட் தயாரிக்கும் கடைகளும் இருக்கின்றன. ஆனால் எல்லாம் ஆனைவிலை, டைனோசர் விலை, திமிங்கிலம் விலைதான்.
ஒரு நாள் என் தம்பியுடன் நண்பர் & சகோதரர் எழுத்தாளர் கவிமதியும் உடன் வந்து இந்த மால்களை எங்களுக்குச் சுற்றிக் காட்டினார். நன்றி கவிமதி சகோ & மெய்யப்பன். :)
இங்கே எதையுமே வாங்கக்கூடாது என்று எச்சரித்தே கூட்டிச் சென்றார் ஏனெனில் ஏதும் வாங்க வேண்டுமென்றால் சொத்தையே எழுதி வைக்கவேண்டுமாம். :)
மஞ்சள் ஒட்டகம் பாருங்க. இது மெட்டலால் ஆனது.
மிக உயர மர விதானங்கள். செண்ட்ரலைஸ்ட் ஏசி.
லாண்டர்ன் எனப்படும் மின்சார தொங்கு ( ஹரிக்கேன்) லாந்தர்கள்.
ஃபிலிப்பினோ பெண் விற்பனையாளர்.
கடை தப்பாமல் ஒட்டகச் சிலை இருக்கிறது.
எல்லாவற்றிலும் விண்டோ ஷாப்பிங்தான் :)
இதோ சுற்றி சுற்றி மாலைச் சுற்றிக் கடைசியாக இந்த மணல் ஒட்டகம் ( சாண்ட் ஆர்ட்) செய்யும் கடைக்கு வந்துவிட்டோம்.
இது சாப்பாட்டுக் கூடம்.
இது ஜுமைரா சிட்டி. பாம் ஜுமைரா பில்டிங் தூரத்தே அழகாகக் காட்சி அளிக்கிறது.
ஜுமைரா சந்தையின் வெளிப்பகுதி. இங்கே நீர் நிலைகள் எல்லாம் இருக்கின்றன. படகுகளும் ஓட்டுகிறார்கள். இந்த எண்பட்டை தாமரையின் உள்ளே ஒரு வெண் தாமரையும் இதழ் விரித்திருக்கிறது. எல்லா இடங்களிலும் தண்ணீரை நிரப்பிக் குளிர்வித்திருந்தார்கள்.
பார்க்கும் இடமெல்லாம் பேரீச்சை மரங்கள் வேறு. பச்சை பேரீச்சை, அரக்கு பேரீச்சை , ஃப்ரெஷ் பேரீச்சை எல்லாம். அதெல்லாம் இன்னொரு போஸ்டில் போடுவேன். :)
அங்கே படங்கள் நடக்கும் தியேட்டர் ஹாலும் இருக்கிறது.
இந்தத் தாழ்வாரங்களில் ஒளி ஊருடுவும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கு. இது துருக்கிய பெர்சிய இஸ்லாமியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கு.
திரும்பிப் போவோம் வாங்க. சாண்ட் ஆர்ட் ஆர்ட்டிஸ்டிடம் அம்மாவும் அப்பாவும் மணல் ஒட்டக ஓவியம் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தாங்க. சுமாரா மூன்று ஒட்டகம் வரைந்து கொடுக்க 500 ரூபாய். நம்மூரு காசில். பத்து திர்ஹாம் என்றால் 170 . அது ஒரு ஒட்டகத்துக்கு.
அவர் எங்களுக்காக ஒட்டகம் செய்ய நாங்க வெயிட்டிங்.
ஒரு கண்ணாடிக்குடுவையில் கலர் மணல்களை பக்குவமாக ஒரு மினி ஃபனலில் ( FUNNEL ) கொட்டி அதன் சைடில் சிறு குழாய் ( மினி ப்யூரட் சைஸ் அல்லது மினி நீள இங்க் ஃபில்லர் சைஸ்.) வழியாக அந்த கறுப்பு மணலை சைடில் கொட்டி ஒரு குச்சி மூலம் சரசரவென ஒட்டகங்களை உருவாக்குகிறார்கள். கையில் இருக்குது வித்தை. மேலே பாருங்கள் ஒரு பாலைவனமே படைத்துவிட்டார் அந்த ஓவியர்.
இந்த மணல் பாட்டிலில் செட் ஆனதும் கலைவதும் இல்லை அழிவதும் இல்லை. பத்திரமாக பாலிதீன் பையில் போட்டு எடுத்து வந்தோம். அம்மா வீட்டுக்குச் செல்லும்போது அந்த ஓவியத்தை புகைப்படம் எடுத்துப் பகிர்கிறேன்.
ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற பாட்டு அசந்தர்ப்பமாக ஞாபகம் வந்துகொண்டே இருந்தது.
கார் பார்க்கிங்.
நல்ல வழுவழுவென்ற கார் பார்க்கிங் தளங்களை முதன் முறையாக நான் துபாயில்தான் பார்த்தேன்.
ஒன் திர்ஹாம் மால், லூ லூ மால் எல்லாம் புகைப்படம் எடுக்கலை..
வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கு ஒவ்வொரு மாலும். பெட்ரோல் தீர்ந்தாலும் அவர்களுக்கு மால்கள் வருமானத்துக்கு வழி வகுக்கும். அவ்ளோ அழகு மால்கள்.
அடுத்த போஸ்ட்களில் துபாய் மால், எமிரேட்ஸ் மால், இபுன் படாடா மால் எல்லாம் பார்க்கலாம்.