திங்கள், 9 ஜூலை, 2018

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் சிங்கப்பூர், பினாங் நகரத்தார் விடுதிகள் உள்ளன.

இது நாகநாதபுரம் பெருமாள் கோயிலுக்கு எதிரில் அமைக்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள புஷ்கரணியின் ஈசான்யப் பக்கம் நாவன்னா புதூர் செல்லும் வழியில் ( அன்னை சத்யா நகர் என்னும் பொட்டலுக்கு அருகில் ) அமைக்கப்பட்டுள்ளது.

 இது மெயின் ஹால்.

துபாய் நகரத்தார் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த உறுப்பினருமான திரு சொக்கலிங்கம் அவர்களின் பெருமுயற்சியாலும் துபாய் வாழ் நகரத்தாரின் நன்கொடைகளாலும் கட்டப்பட்டுள்ளது இந்த விடுதி. சொல்லப்போனால் இது அவர்களுடைய நெடுநாள் விஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.


தேவகோட்டை திரு ராமனாதன் வரவேற்புரை நல்கினார்.

சோழபுரம் திரு சுப்பையா அவர்கள் மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு ஒன்றரைக் கோடி ரூபாயில் க்ரீடம் செய்து வழங்கியவர்கள். அவர்கள் இதுவரை கோயில் திருப்பணியே செய்து வந்ததாகவும் இனி இதுபோல் சத்திரம் அமைக்கும் முயற்சியிலும் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனவும் கூறினார்கள்.

இவர் அறப்பணிச் செம்மல். இவர் டிவி ஹாலைத் திறந்துவைத்து வாழ்த்துரை நல்கினார்.

தலைவர் திரு. சொக்கலிங்கம் உரையாற்றினார்கள் .

மீட்டிங்க் ஹாலைத் திறந்து வைத்தவர் திருப்பணி ரத்னா, திரு.எஸ் எல் என் நாராயணன் செட்டியார் அவர்கள்.  இவரும் வாழ்த்துரை நல்கினார்.

அமைச்சர் திரு ரகுபதி அவர்கள் விடுதி ஹாலைத் திறந்துவைத்து  வாழ்த்துரை நல்கினார்கள்.

நீதியரசர்  திரு. சொக்கலிங்கம் அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு  நகரக் கட்டிடத்தைத் திறந்துவைத்து தலைமை  உரையாறினார்கள்.
நன்கொடை கொடுத்த புரவலர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

அவர்கள் வர இயலாத பட்சத்தில் அவர்களின் உறவினர்களை மேடையேற்றிக் கௌரவித்தார்கள்.

எனது சகோதரரும் இந்தவருடம் துபாய் நகரத்தார் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருமான திரு. சபா. மெய்யப்பன் அவர்கள் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் அவர் சார்பாக எனது பெற்றோர் கலந்து கொள்வதாக இருந்தார்கள். அவர்களும் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் எனது சித்தப்பா திரு. ராம.செல்லப்பன் அவர்கள்  (ரோஸ் சட்டை அணிந்திருப்பவர் ) கௌரவிக்கப்பட்டார்.

இனி அறைகளைப் பார்ப்போம் வாருங்கள். இங்கே 23 ஏசி, நான் ஏசி அறைகள், 300 பேர் அமரக்கூடிய விசாலமான ஹால், மீட்டிங் ஹால், டிவி லவுஞ்ச், மகமை ஹால்,  பொதுவாக தங்குவர்கள் உபயோகிக்க கழிவறைகள், வாஷ்பேசின்கள்,  பாத்ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீண்ட வராண்டா. இருபக்கமும் அறைகள்.இந்த நடைபாதை மட்டும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாமோ என்பது எனது எண்ணம்.

இந்த விடுதி திருமணம் போன்ற விசேஷங்களுக்கு வருபவர்கள் தங்கப் பயன்படுத்தலாம்.  ஒன்பது நகரத்தார் கோயில்கள் மற்ற கோயில்களையும் இங்கே தங்கி சுற்றிப் பார்க்கலாம். ஏசி ரூம்கள் டாரிஃப் 500 ரூ ஒரு நாளைக்கு.

நான்கு ஏசி சூட் ரூம்கள், 5 ஏசி ஃபாமிலி ரூம்கள், 6 நான் ஏசி ரூம்கள் ( கழிவறை இணைப்புடன் )  மகமை ஹால்,  கார் பார்க்கிங் வசதி, எல்லா அறையிலும் சோலார் ஹீட்டர் மூலம் குளியலறைக்கு வெந்நீர் வரும் வசதி உள்ளது.

என் சகோதரன் என் அப்பா அம்மா பெயரில் அமைப்பதற்காக நன்கொடை வழங்கிய அறை.
அறையின் உட்புறம்.
இது மகமை ஹாலில் தங்குபவர்கள் உபயோகிக்க உள்ள பாத்ரூம்களும் டாய்லெட்டுகளும்.

மகமை ஹாலில் தங்குபவர்களும் ஒரு நாளைக்கு நபருக்கு/குடும்பத்துக்கு ரூ 10 வீதம் மகமை தரவேண்டும் என நினைக்கிறேன்.
மகமை ஹாலில் தங்குபவர்கள் உபயோகத்திற்கு உள்ள வாஷ்பேஸின்கள்.

நன்கொடையாளர்கள் ( குறிப்பிட்ட தொகைக்குமேல் வழங்கியவர்கள் பெயர் மட்டும் )

டிவி லவுஞ்ச்.

நகரத்தார் திருக்கோயில்கள் பற்றிய விபரம்.
இது காரைக்குடி நகரச் சிவன் கோவிலுக்கு அருகிலும் , ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலும் அமைந்திருப்பது வெகு சிறப்பு.

தேவைப்படுவோர் காரைக்குடி வரும்போது இங்கே தங்கலாம். ஈமெயில் மூலமும் தொலைபேசி மூலமும் அறைகள் முன்பதிவு செய்யலாம். இதை அமைத்த துபாய் நகரத்தார் சங்கத்துக்குப் பாராட்டுக்கள். 

1 கருத்து :

KILLERGEE Devakottai சொன்னது…

எமது வாழ்த்துகளும்...

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...