எனது நூல்கள்.

வியாழன், 5 மே, 2016

காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

பழனி பாத யாத்திரைக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்ட காவடிகள் ஊர்வலம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை.தைப்பூசத்துக்குக் காரைக்குடியில் இருந்து நகரத்தார் காவடி, நாட்டார் காவடி இரண்டும் புறப்படும். பொங்கலை ஒட்டி இந்நிகழ்வு இருக்கும்.

அரண்மனைப் பொங்கல் ஐயா வீடு  என்று சொல்லப்படும் ஒருவர் வீட்டில்தான் காவடிகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கே இருந்து புறப்பட சில நாள் முன்பே காவடியைப் பெற்று வீட்டுக்குக் கொண்டு வந்து காவடி பூசை செய்து விநாயகர், சாமி வீடு , குலதெய்வ வழிபாடு எல்லாம் செய்து அதன் பின் காவடியை எடுத்துத் தோள் மேலேந்தி வீட்டில் சொல்லிக் கொண்டு அனைவரும் ஓரிடத்தில் கூடி பூசை செய்து அதன் பின் ஊர்வலம் வந்து அனைத்துக் கோயில்களிலும் வணங்கி பூசை செய்து காவடி புறப்படும். நேர்த்திக்கடனைப் பூர்த்தி செய்ய வருடந்தோறும் காவடி எடுப்பவர்கள் பெருகிவருகின்றார்கள்.

வீட்டில் நடக்கும் காவடி பூசை விமர்சையானது. கார்த்திகை வேல் பூசை போல காவடிக்கும் பூசை. மதியம் 7 காய்கறியுடன் பாயாசம் வடை அப்பளம் வைத்து  ஊரோடு விருந்து நடைபெறும்.  இதில் பாடப்படும் பாடல்கள் மன எழுச்சியையும் புத்துணர்வையும் தூண்டுவன. எனர்ஜி பூஸ்டர்ஸ் எனலாம். விருந்து முடிந்ததும் மாலை பானக பூசை செய்து நிறைவேறும்.

காவடிகள் வில்லிலிருந்து அம்பு போல் புறப்பட்டுச் செல்லும் காட்சி காணக் கண்கோடி வேண்டும். இடும்பன் சிவகிரி, சக்திகிரி மலைகளைச் சுமந்து சென்றபோது சுமையைப் பழனியில் முருகனின் திருவிளையாடலால் இறக்கி வைத்தபின் எடுக்க இயலவில்லையாம்.   வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகச் சுமந்து பழக இறைவனின் அருள் வேண்டியே காவடி எடுக்கப்படுகின்றது. பக்தர்கள் தம் பக்தியைச் சுமந்து இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர்.
அரண்மனைப் பொங்கல் குடும்பத்தார் அனைவருக்கும் விபூதி வழங்கியபடி செல்லும் காட்சி. அக்குடும்பத்தின் இளம் சிறார்களும் பங்கேற்பார்கள்.  காவடிக்காரர்கள் நடைப்பயணம் முழுவதும் இடையில் உடுத்திய வேட்டி மட்டும்தான் உடை. சட்டை அணிய மாட்டார்கள்.
 

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இக்காவடி எடுத்தலில் பங்கு பெறுகின்றார்கள். அங்கேயே வாங்கிங் - நடைபாதையில் அதிகாலை எழுந்து நடைபழகி முருகனை அல்லும் பகலும் துதித்து இக்காவடி எடுக்கத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கின்றார்கள். என் தம்பி துபாயில் இருக்கிறான். அந்த ஊரில் அலுவலகத்துக்கு ஷூ அணிந்து சென்றாலும் வீட்டில் காவி வேட்டி அணிந்து பூஜை செய்வான். அதே போல் வாக்கிங்க் நடைபாதைகளில் நடந்து பயிற்சி செய்வதுண்டு. ஆனால் இது மன உறுதியும் தெய்வ பக்தியும்  சம்பந்தப்பட்டது.
காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே நம்மை மறந்து கவனித்துக் கொண்டிருந்த நேரமிது.
ஒவ்வொரு காவடியுடனும் துணைக்காவடி என்று ஒரு உதவியாளர் உடன் செல்வார். சிலர் தனித்தே எடுப்பார்கள். காவடிகள் திரும்பி வரும்போது ( மறு காவடி என்பார்கள் இதை ) காவடி எடுப்போரால் கொண்டு வர இயலாத பட்சத்தில் இந்தத் துணைக்காவடிகள் காவடியைச் சுமந்து வருவார்கள். ஒரு சில சமயங்களில் காவடிக்காரர்களால் சுமக்க முடியாத போது பழனிக்கே இவர்கள் சுமந்து செல்வதும் உண்டு. அல்லது குடும்ப உறவினர் சிலரிடம் கைமாற்றி விடுவதும் உண்டு. அடுத்த வருடம் திரும்ப எடுப்பார்கள்.


சில சமயம் காவடி எடுப்பவரின் குடும்பத்தில் எதிர்பாராத சோக நிகழ்வுகள் ஏற்பட்டால் அவர்கள் காவடியை இறக்கி விடுவார்கள். இது அரிதாக நிகழும்.


ஒவ்வொரு இடத்திலும் காவடிகள் வந்து சேர்ந்ததும் முருகப்பெருமான் எதிரில் பூசை செய்யப்பட்டு காவடிக்காரர்கள் உறங்கி விழித்து காலைக்கடன் கழித்ததும் திரும்ப பூசை செய்யப்பட்டுப் புறப்படும்.
என் அன்புத் தம்பி மெய்யப்பன் காவடி சுமந்திருக்கும்போது.
குறிப்பிட்ட இடங்களிலேயே காவடிகளை இறக்குவார்கள். 80 இலிருந்து 100 காவடிகள் வரை பொதுவாக இருப்பதால் அதற்குத் தக்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் காவடிக்குப் பலகாரம், துண்டுகள், உடைகள், வேண்டிக்கொண்ட பொருட்களை வைப்பார்கள்.
முருகனுக்குக் காவடி சுமக்கும் பக்தர்கள் தாங்கள் அளிக்கும் பொருட்களைப் பெற்றுக் கொண்டு முருகனிடம் தமக்காகவும் பிரார்த்திக்கக் கோரும்வண்ணம் இப்பொருட்களை அளிக்கிறார்கள். வீதி தோறும் காவடிக்காரர்கள் வருகைக்காய் கோலமிடப்பட்டிருக்கும். காவடிக்காரர்களின் பாதங்களில் நீரூற்றி வணங்குவார்கள்.
காவடிகள் பிரம்பு கொண்டு செய்யப்பட்டு துணியால் மூடப்பட்டு நூல் குஞ்சல வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மேலும் இரு புறமும் மயில் தோகைகள் செறிவாய்க் கட்டப்பட்டிருக்கும். அம்மனுக்கும் காவடிகள் எடுக்கப்படும். இதில் உடம்பில் செடில் குத்திக் கொண்டோ அலகு குத்திக் கொண்டோ காவடி எடுப்பார்கள் என்பதைப் பார்த்திருக்கின்றேன்.  பறவைக்காவடி போன்றவைகளும் அம்மன் கோயிலுக்கு எடுப்பார்கள். ஆனால் நகரத்தார் காவடியில் இவற்றை நான் கண்டதில்லை.
முகநூல் நண்பர் வெங்கட் கணேசன் காவடி எடுத்தபோது.
பால் காவடி, பழக்காவடி, பன்னீர்க் காவடி, சேவற்காவடி, செற்பக் காவடி, தீர்த்தக் காவடிகள் எனப் பல இருந்தாலும் கடைசியில் வருவது பச்சைக் காவடி எனப்படும். எல்லா இடங்களிலும் இந்தப் பச்சைக் காவடி சுமப்பவர்தான் கடைசியாக வருவார். இதன் பின் காவடிகள் ஏதும் வராது.
பச்சைக் காவடி.
காவடிகள் வேல் வேல் என்ற முழக்கத்தோடு செக்காலைச் சிவன் கோயிலை அடைந்த காட்சி.
கோயிலிலிருந்து திரும்ப ஊர்வலம் வரும்போது அரண்மனைப்பொங்கல் இல்லத்தார் வீட்டு சிறாரும் கூட  விபூதி வழங்கும் காட்சி.
பழனிக்குச் செல்லச் செல்ல காவடிகள் ஆடும் ஆட்டம் காணக் கண் கோடி வேண்டும். பெரும்பாலும் காரைக்குடியில் இருந்து சர்க்கரைக் காவடிகளே எடுக்கப்படுகின்றன. இச்சர்க்கரை சிறு மூட்டையாகக் காவடியில் கட்டப்பட்டிருக்கும். காவடிகள் தைப்பூசத்தை ஒட்டிப் பழனியை அடைந்ததும் பிரித்து இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு பஞ்சாமிர்தத்தில் கலக்கப்படும். அதன் பின் அனைவருக்கும் விநியோகம் செய்யப்படும்.

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே

காவடியாம் காவடி கந்தவேலன் காவடி .. என்ற பாடல்கள் ஒலிக்காத இடமே இருக்காது.

காவடிகள் திரும்பி வந்தபின் வீட்டில் பொங்கல் வைத்துப் படைத்து பானக பூசை செய்து திரும்ப அரண்மனைப் பொங்கல் வீட்டில் சமர்ப்பிப்பார்கள். 

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து ஒன்று இங்கே

பாடல் 02 (சீர்வளர்பசுந்)

(முருகப்பெருமான் வாழ்த்து)

சீர்வளர் பசுந்தோகை மயிலான், - வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கையுறும் அயிலான்- விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.

குஞ்சர வணங்காவல் வீடா- தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா - வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.

வல்லவுணர் வழியாதும் வி்ட்டு, - வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு,
வருதந்த மாதங்க முகத்தான் - எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல்செய் வாமே.
*************************************

காவடியாம் காவடி கந்தவேலன் காவடி.

https://www.youtube.com/watch?v=u6inz-FBs5c&list=PLA3ECDD3300126DFA

https://www.youtube.com/watch?v=0z93YoRosc4

வேலிருக்க வினையுமில்லை, மயிலிருக்க பயமுமில்லை. !

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.!

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படங்களும் தகவல்களும் அருமை. நன்றி.

மோகன்ஜி சொன்னது…

நல்ல தகவல்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி மோகன் ஜி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...