எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 ஜூலை, 2018

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று 951* துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் 952* சிங்கப்பூர், 953* பினாங் நகரத்தார் விடுதிகள் உள்ளன.

இது நாகநாதபுரம் பெருமாள் கோயிலுக்கு எதிரில் அமைக்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள புஷ்கரணியின் 954* ஈசான்யப் பக்கம் நாவன்னா புதூர் செல்லும் வழியில் ( அன்னை சத்யா நகர் என்னும் பொட்டலுக்கு அருகில் ) அமைக்கப்பட்டுள்ளது.

 இது மெயின் ஹால்.

துபாய் நகரத்தார் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த உறுப்பினருமான திரு சொக்கலிங்கம் அவர்களின் பெருமுயற்சியாலும் துபாய் வாழ் நகரத்தாரின் நன்கொடைகளாலும் கட்டப்பட்டுள்ளது இந்த விடுதி. சொல்லப்போனால் இது அவர்களுடைய நெடுநாள் விஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.


தேவகோட்டை திரு ராமனாதன் வரவேற்புரை நல்கினார்.

சோழபுரம் திரு சுப்பையா அவர்கள் 955* மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு ஒன்றரைக் கோடி ரூபாயில் க்ரீடம் செய்து வழங்கியவர்கள். அவர்கள் இதுவரை கோயில் திருப்பணியே செய்து வந்ததாகவும் இனி இதுபோல் சத்திரம் அமைக்கும் முயற்சியிலும் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனவும் கூறினார்கள்.

இவர் அறப்பணிச் செம்மல். இவர் டிவி ஹாலைத் திறந்துவைத்து வாழ்த்துரை நல்கினார்.

தலைவர் திரு. சொக்கலிங்கம் உரையாற்றினார்கள் .

மீட்டிங்க் ஹாலைத் திறந்து வைத்தவர்  திருப்பணி ரத்னா, திரு.எஸ் எல் என் நாராயணன் செட்டியார் அவர்கள்.  இவரும் வாழ்த்துரை நல்கினார்.

அமைச்சர் திரு ரகுபதி அவர்கள் விடுதி ஹாலைத் திறந்துவைத்து  வாழ்த்துரை நல்கினார்கள்.

நீதியரசர்  திரு. சொக்கலிங்கம் அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு  நகரக் கட்டிடத்தைத் திறந்துவைத்து தலைமை  உரையாறினார்கள்.
நன்கொடை கொடுத்த புரவலர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

அவர்கள் வர இயலாத பட்சத்தில் அவர்களின் உறவினர்களை மேடையேற்றிக் கௌரவித்தார்கள்.

எனது சகோதரரும் இந்தவருடம் 956* துபாய் நகரத்தார் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருமான திரு. சபா. மெய்யப்பன் அவர்கள் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் அவர் சார்பாக எனது பெற்றோர் கலந்து கொள்வதாக இருந்தார்கள். அவர்களும் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் எனது சித்தப்பா திரு. ராம.செல்லப்பன் அவர்கள்  (ரோஸ் சட்டை அணிந்திருப்பவர் ) கௌரவிக்கப்பட்டார்.

இனி அறைகளைப் பார்ப்போம் வாருங்கள். இங்கே 23 ஏசி, நான் ஏசி அறைகள், 300 பேர் அமரக்கூடிய விசாலமான ஹால், மீட்டிங் ஹால், டிவி லவுஞ்ச், 957* மகமை ஹால்,  பொதுவாக தங்குவர்கள் உபயோகிக்க கழிவறைகள், வாஷ்பேசின்கள்,  பாத்ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீண்ட வராண்டா. இருபக்கமும் அறைகள்.இந்த நடைபாதை மட்டும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாமோ என்பது எனது எண்ணம்.

இந்த விடுதி திருமணம் போன்ற விசேஷங்களுக்கு வருபவர்கள் தங்கப் பயன்படுத்தலாம்.  958* ஒன்பது நகரத்தார் கோயில்கள் மற்ற கோயில்களையும் இங்கே தங்கி சுற்றிப் பார்க்கலாம். ஏசி ரூம்கள் டாரிஃப் 500 ரூ ஒரு நாளைக்கு.

நான்கு ஏசி சூட் ரூம்கள், 5 ஏசி ஃபாமிலி ரூம்கள், 6 நான் ஏசி ரூம்கள் ( கழிவறை இணைப்புடன் )  மகமை ஹால்,  கார் பார்க்கிங் வசதி, எல்லா அறையிலும் சோலார் ஹீட்டர் மூலம் குளியலறைக்கு வெந்நீர் வரும் வசதி உள்ளது.

என் சகோதரன் என் அப்பா அம்மா பெயரில் அமைப்பதற்காக நன்கொடை வழங்கிய அறை.
அறையின் உட்புறம்.
இது மகமை ஹாலில் தங்குபவர்கள் உபயோகிக்க உள்ள பாத்ரூம்களும் டாய்லெட்டுகளும்.

மகமை ஹாலில் தங்குபவர்களும் ஒரு நாளைக்கு நபருக்கு/குடும்பத்துக்கு ரூ 10 வீதம் மகமை தரவேண்டும் என நினைக்கிறேன்.
மகமை ஹாலில் தங்குபவர்கள் உபயோகத்திற்கு உள்ள வாஷ்பேஸின்கள்.

959* நன்கொடையாளர்கள் ( குறிப்பிட்ட தொகைக்குமேல் வழங்கியவர்கள் பெயர் மட்டும் )

டிவி லவுஞ்ச்.

நகரத்தார் திருக்கோயில்கள் பற்றிய விபரம்.
இது காரைக்குடி நகரச் சிவன் கோவிலுக்கு அருகிலும் , ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலும் அமைந்திருப்பது வெகு சிறப்பு.

இங்கே உள்ள ஒரு அறையில் மூன்று நாட்கள் தங்கினோம்.

இது நாங்கள் தங்கிய அறை. கீழ்த்தளத்தில் உள்ளது.

 துபாய் வாழ் செல்வந்தர் ஒருவரின் சஷ்டியப்த பூர்த்தியை முதல் நாள் அட்டெண்ட் செய்தோம்.  அன்று மதியம் திருப்புகழ் பாராயணம்.

முதல் நாள் மூன்று நகரத்தார் கோவில்களையும் மறுநாள் மிச்ச ஆறு நகரத்தார் கோவில்களையும் தரிசித்து இன்புற்றோம். மொத்தம் ஒன்பது கோவில்கள். மூன்றாம் நாள் 960*  உபதேசம் பெற்றோம். !

தேவைப்படுவோர் காரைக்குடி வரும்போது இங்கே தங்கலாம். ஈமெயில் மூலமும் தொலைபேசி மூலமும் அறைகள் முன்பதிவு செய்யலாம். இதை அமைத்த துபாய் நகரத்தார் சங்கத்துக்குப் பாராட்டுக்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.







டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

3 கருத்துகள்:

  1. நன்றி கில்லர்ஜி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...