புதன், 31 ஆகஸ்ட், 2016

எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

901. இருட்டில் ஐஸ்க்ரீம் சாப்பிடும் கிழவர்கள்.

#ஒரு மிட்நைட்டில் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ஆச்சர்யப்படுத்திய விஷயம்.

902. சுண்ணாம்பை எதுக்கு எடுத்து உடம்புல அடிச்சிக்கிறே

உடம்புல சுண்ணாம்புச் சத்து கொறைஞ்சிருக்காம்.

“ஙே”


903. S1 லதானே உங்க டிக்கெட் S9 க்கு ஏன் வந்தீங்க.

எனக்கு அலாட் ஆன சீட்டை ஒரு சீனியன் சிட்டிசன் கேட்டாங்க.ன்னு S 2 க்கு அவங்க சீட்டுக்கு வந்தேன். அங்கே ஒரு கர்ப்பிணி S 3 ல தன்னோட இடத்துக்குப் போ சொன்னாங்க. S 3 ல ஒரு கைப்புள்ளக்காரம்மா வீட்டுக்காரரோட இருக்கணும்னு S 4 க்கு தன் சீட்டுக்குப் போ முடியுமான்னு கேட்டாங்க.  இப்பிடியே ஒரு மாற்றுத் திறனாளி, அப்பா அம்மா இல்லாம தனியா ஃப்ரெண்ட்ஸோட வந்த குட்டிப் பொண்ணு இதுபோல் ஒவ்வொருத்தரும் கேக்க நான் S 9 க்கு வந்திருக்கேன்.

சார் எனக்கொரு ஃபேவர்.

என் வைஃப் கூட இங்கே இருக்கேன். நீங்க S 10 க்கு என் சீட்டுக்குப் போக முடியுமா.

“ஙே”

904. குடிச்சபின்னாடிகாஃபின்னா கசக்கணும்
டீன்னா இனிக்கணும். :)

905. இந்த காக்கா எப்பிடி ஸ்லிம்மா இருக்கு

அது சோறு இட்லி சாப்பிடாது

அதான் கேக்குறேன் அப்பளம், சிப்ஸ், முறுக்கு, பிஸ்கட்டுன்னு நொறுக்குத்தீனியா மொறுக்கியும்
எப்பிடி ஸ்லிம்மா இருக்கு :)

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஆண்டவனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

1. புழுங்கலரிசிப் புட்டு2. முளைக்கீரை வடை3. நெல்லிக்காய் சட்னி4. புதினா மல்லி பகோடா5. வேர்க்கடலை வெஜ் சாலட்6. பாகற்காய் சாதம்7. தேன் பழப் பச்சடி8. மதுவரக்கம்9. சோயாபீன்ஸ் சுண்டல்10. ஹெல்த் ட்ரிங்க். 
1.புழுங்கலரிசிப் புட்டு

தேவையானவை :-
புழுங்கல் அரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய்த்துருவல் – முக்கால் கப் தூள் வெல்லம் – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:-
புழுங்கல் அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைத்து மிஷினில் அரைத்து சலிக்கவும். பாசிப்பருப்பையும் அரை மணி நேரம் ஊறவைத்து மாவுடன் பிசறி இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். தூள் வெல்லத்தையும் ஏலப்பொடியையும் தேங்காய்த் துருவலையும் கலந்து உபயோகிக்கவும். ஆவியில் வேகவைப்பதால் செரிமானத்துக்கு நல்லது. வெல்லம் இரத்த விருத்தி  கொடுக்கும்.

2முளைக்கீரை வடை

தேவையானவை :-
பச்சரிசி , புழுங்கல் அரிசி, தினையரிசி – தலா கால் கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு துவரம்பருப்பு - தலா  அரை கப், முளைக்கீரை – 1 கட்டு, சிறிய வெங்காயம் – 15 , வரமிளகாய் – 6, சோம்பு – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 100 மிலி.

ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். கோகுலம். GOKULAM KIDS RECIPES.

ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்:-

தேவையானவை :-
பச்சை ஆப்பிள் – 2, மைதா – 2 கப், கார்ன் ஃப்ளோர் – 1 டேபிள் ஸ்பூன், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், பட்டை – ஒரு இன்ச் துண்டு  ( பொடிக்கவும் ), உப்பு - ஒரு டீஸ்பூன் , பால் – முக்கால் கப், உருகவைத்த வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், பொடித்த சர்க்கரை, பொடித்த பட்டையை ஒரு பௌலில் போட்டுக் கலக்கவும். இன்னொரு பௌலில் கார்ன் ஃப்ளோர், பால் உருகிய வெண்ணெய், வனிலா எசன்ஸ் போட்டு நன்கு அடித்துக் கலக்கவும். இந்தக் கலவையில் மைதாக் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து மென்மையாகக் கலக்கவும். இதில் தோல் சீவி ஸ்லைஸாகத் துண்டுகள் செய்த ஆப்பிளைத் தோய்த்து நன்கு காயும் எண்ணெயில் பொன்னிறமாக 4 நிமிடங்கள் பொரித்து பொடித்த சர்க்கரையைத் தூவிப் பரிமாறவும்.

ஆப்பிளில் விட்டமின் ஏ அதிக அளவில் இருக்கின்றது. விட்டமின் சி, ஈ, கே, ஃபோலேட், கோலைன் ஆகியனவும் இருக்கின்றன. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃப்ளூரைட் ஆகியன அதிக அளவில் இருக்கின்றன. ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் 11.2 மிகி அளவிலும், ஒமேகா 6 ஃபேட்டி அமிலம் 53.8 மிகி அளவிலும் இருக்கின்றன.. ஃபைட்டோஸ்டிரால்ஸ் 15 மிகி இருக்கின்றது.

பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் குடல் சுத்தம் செய்வதற்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுது. சருமத்தைப் பாதுகாக்குது. தைராய்டு சுரப்பியை சரிவர வைப்பதால் வாதநோய் தவிர்க்கப்படுது. அல்ஸைமர் என்னும் நினைவாற்றல் தடுப்பு நோய்க்கு பச்சை ஆப்பிள் உண்பது சிறந்த மருந்து. ஆஸ்துமா, நீரிழிவு, முதுமை நோயைத் தடுக்கும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுது. முடி வளர்ச்சியை அதிகரிக்குது

தைராய்டு சுரப்பியைச் சீராக வைப்பதாலும் இதயத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதாலும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதாலும் தினம் ஒரு பச்சை ஆப்பிளை உணவுல சேர்க்கலாம். AN APPLE IN A DAY KEEPS THE DOCTORS AWAY என்ற பழமொழியை உண்மையாக்கலாம். 


ஆப்பிளே வா ! ஆரோக்கியத்த் ா !

ிஸ்கி:- இந்தெசிபி 2016 ஆகஸ்ட் மோகுலத்ில் வெளியானு. இில் சேம்பு வை ரெசிபியைப் பாராட்டியஆர் கே ஹிாஜா & ஆர்.ஜி. காயத்ரி , ிையன்விளஆகியோருக்கு மம் நிறந்தன்றி. ! 

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

வடபழனி சர்பத் ஸ்டாலில் கணபதி.
லேடீஸ் ஸ்பெஷல் ஆஃபீசில் என் வணக்கத்துக்குரிய சரஸ்வதியும் கணபதியும். :)
அதே ஆஃபீஸில் கிரிஜா மேமின் அலுவலக அறைக்குள் கோலோச்சும் கணபதிகள்.
பூர்விகா மொபைல் ஸ்டோர், ட்ரிப்ளிகேன். :)

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.

881. Think thoughts of Forgiveness towards everyone.. Fly a kite across the river.. :) -- will try and thx to speaking tree.

882. Increasing the amt of let-7 ( a regulator molecule ) against the LIN28 ( a protein ) will switch off cancers in testis and ovary.. -- a research news in TOI.. ( coz chemotheraphy can have long term side effects including hearing loss and damage to the kidneys.. )..

883. ட்ராவல் பண்ணும்போது எடுத்துட்டுப் போறது ஹேண்ட்பாகா, கோடவுனான்னே தெரில.

884. எக்ஸ் எல் போதும்

இல்ல எக்ஸ் எக்ஸ் எல் எடுத்துக்க.

என்னங்க புது நைட்டி நல்லாயிருக்கா

எங்க நடந்து காமி

முன்னே போ.. பின்னவா..

என்ன கிண்டலா..

ரொம்ப அழகான..

சொல்லுங்க சொலுங்க..

குண்டு கோஸ்ட் மெதந்து வர மாரி இருக்கு..

யேய்....

-- குனிஞ்சு பார்த்தா ஐயயோ காலையேக்காணோம்

885. இன்பாக்ஸில் இன்ஸ்டண்டா பதில் சொல்ல ”தம்ஸ் அப் ” கொடுத்த முகநூல் தெய்வம் வாழ்க.

886.ஒரு (ஏசி கோச்) ட்ரெயின் பயணம் காதைப் பதம்பார்க்க ( ஏர் ட்ரம்ல ஹோல் ) காய்ச்சல், தொண்டை வலி. காட்டன் கொண்டுவராததால் வந்த தலைவலி. எப்படியோ சரியாகிவிடும் என விட அது அதி உச்சமாகி நேற்று முழுக்க உறக்கமில்லை. இன்று காலை எல்லா மாத்திரையையும் உத்தேசமாகப் போட்டுத் தூங்கியதில் எட்டரைக்கு விழித்து கல்கி பவள விழாவுக்கு ஒரு அர்ஜெண்ட் விசிட்.

சாப்பிடாமல் சென்றதால் அங்கே டிஃபன் சாப்பிட்டுத் திரும்ப மாத்திரைகளைக் கோயில் பிரசாதம் போல வாயில் போட்டு விழுங்கிவிட்டு அரங்கத்துக்கு உள்ளே வரும் வழியில் கல்கியின் ஐம்பெரும் தலைகளைப் படம் பிடிக்கிறேன் என்று குட்டிப் படி தடுக்கி பொதகட்டீர் என விழுந்து திரும்ப உள்ளே போனால் ஸ்க்ரீன் எல்லாம் கறுப்பு பட்டாம் பூச்சி பறக்க கண் தெரியாமல் போனது போலானது.

தடுமாறி மறுபடியும் உள்ளே சீட்டுப்பக்கமிருக்கும் படிகளில் குதித்துப் பிரண்டு வெளியே வந்து படியில் உக்கார்ந்து ஆசுவாசம் செய்து பாத்ரூமில் போய் முகம் கழுவினால் வேர்த்து வேர்த்துக் கொட்டுது.

அப்புறம் நட்புகள் பயந்துவிடக்கூடாதே என சமாளித்து ஒருவழியாக ஃப்ரெண்ட்ஸ் படத்தில் மண்டையில் அடிபட்ட சார்லி மாதிரி வந்து அமர்ந்தேன்.

புதன், 24 ஆகஸ்ட், 2016

சூலம். .( திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. )


குலதெய்வம் கோயிலில் புரவி எடுப்பில் செல்லும் குதிரைகளைப் பார்த்தபடி நின்றிருந்த மேகலா அதிர்ந்த கைபேசியை எடுத்துப் பேசி அதிர்ச்சியானாள். அவளது அப்பா மாரியப்பன் யாரும் இல்லாத வீட்டில் முதல் நாள் இரவு இறந்த செய்தியை, இறந்த விதத்தை அதிர்ச்சியோடு பகிர்ந்திருந்தாள் அவளது அத்தை மோகனா.

பக்கத்தில் நின்றிருந்த தனது அம்மா தேவியைப் பதட்டத்தோடு பார்த்த மேகலா , ”அம்மா ஒரே கூட்டமா இருக்கு. சீக்கிரம் போகலாம் வா, போகலாம் ” என்றாள். ”இருடி சாமி உள்ளே போன பின்னாடி அருச்சனை பண்ணிட்டுப் போகலாம் “ என்றாள். 

”இல்லம்மா பின்னாடி கூட்டம் சாஸ்தியாயிடும் இன்னொருநாள் வரலாம். வா” என்றாள். “அடி இவளே. வெளக்கு வைக்கும்போது உருண்டிருச்சு , அதுனால தீவம் பார்த்துட்டுத்தான் போகணும் “ என அம்மா பிடிவாதம் பிடிக்க, ”இல்லம்மா அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாம் அதான் அத்த போன் பண்ணிச்சு , உடனே போவோம்மா என அவளைக் கிளப்புவதிலேயே குறியாயிருந்தாள் மேகலா. ஐஸ் வண்டிகளும், மாங்காய் பத்தைகளும் எலந்தை வடைகளும் மணம் கிளப்பிக் கொண்டிருக்க பலூனைப் பிடித்தபடி குழந்தைகளும் முறைப்பெண்களைச் சுற்றியபடி இளவட்டங்களுமாக கலகலப்பாக இருந்தது முத்துப்பிடாரி அம்மன் கோயில் புரவி எடுப்பு. சாமியாட்டத்தோடு கொடிகளும் குடைகளும் சூழ ஆரம்பித்திருந்தது திருவிழா.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய். - ஒரு பார்வை.

அழகான நாவல் ஒன்று படித்தேன் சமீபத்தில். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாட்ஸப் , ஃபேஸ்புக் உலகத்தில் பெரும்பாலும் ஷேர்ஸ் செய்தே வாழும் இளையதலைமுறையினர் நடுவில் லெக்ஷ்மி கருப்பையா என்ற இளவயது எழுத்தாளர் மிக அருமையான நாவல் ஒன்றைப் படைத்துள்ளார். ஆன்லைனிலும் இந்நாவல் படிக்கக் கிடைக்கிறது.

மிக மிக அருமையாக ஒரு காதல் கதையை மென்மையாக தன்மையாகக் கொண்டு சென்றிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையின் எண்ணப் போக்கு, காதல், லட்சிய வேட்கை, திருமணம் சம்பந்தமாக இருமனத்திலும் ஏற்படும் நெருக்கடிகள் ஆகியவற்றைச் சொல்வதால் இந்நாவல் பிடித்தமானதாகிறது. இது சீக்கிரம் புத்தக வடிவிலும் வெளிவரப் போவதால் எனக்குப் பிடித்த சில வரிகளை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன்.

முதலில் கதைச் சுருக்கம். கதாநாயகி அனு ஹெச் ஆராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவள். மிகப் புத்திசாலியான அவளுக்கும் அவளது கல்லூரித் தோழன் பிடிவாதக்காரன் அர்ஜுனுக்கும் ஏற்படும் மெல்லிய காதல் , தடைகள், திருமண ஏற்பாடுகள், நடுவில் சில நெருக்கடிகள் என்று மனம் செல்லும் பயணத்தைச் சொல்லிச் செல்கிறது கதை.

வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )


வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன்.

காரைக்குடியில் கம்ப்யூட்டர் கம்பெனியா. அதுவும் கால் லெச்சம் பணம் கட்டி யாராவது படிப்பார்களா. உங்க அப்பா காசை வீணடிக்காதீங்க. வேற தொழில யோசிங்க பாஸ் என்று நண்பர்கள் அட்வைஸியபோதும் முன்வைத்த காலைப் பின்வைக்காமல் முடிவெடுத்தபடி APTECH இன் ப்ரான்சைஸை 95 ஆம் ஆண்டு ஆரம்பித்தவர்கள், ஊரில் மட்டுமல்ல பேரிலும் திட சித்தம் கொண்ட இந்த கல்லுப்பட்டி ப்ரதர்ஸ்.

மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து மாலைக் கல்லூரியில் சராசரி மாணவராகப் படித்தும் உத்யோகத்தில் அமராமல் தொழில் செய்யும் எண்ணம் வந்தது எப்படி.?  அதுவும் தொண்ணூற்று ஐந்துகளில் அவ்வளவாகப் பொதுமக்களின் கவனத்தைக் கவராத மென்பொறியியல் துறையில் நுழைந்து சாஃப்ட்வேர் லாப் ஆரம்பித்து இருபத்திநாலு மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களும் சேவை, எண்பது ஊழியர்கள், சொந்தக்கட்டிடம், மூன்று கோடி டர்ன் ஓவர் இதெல்லாம் எப்படி சாத்யப்பட்டது.

விடாமுயற்சி, கூட்டு முயற்சி, குழுவாகப் பணிபுரிதல், சமூகத்தினரின் அரவணைப்பைப் பெறுதல் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் வின் வின் என்று வெற்றிக் கொடியை நாட்டியவர்கள் ”இணைய”ர்கள்  வெங்கடாசலம் & பழனியப்பன்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பவளவிழா மலரில்.

பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பிழா மில்.


75 ஆண்டுகள்;,  முக்கால் நூற்றாண்டு..!! வெற்றிகரமாகப் பத்ரிக்கைப் பணியில் கோலோச்சி வரும் கல்கி குழுமப் பத்ரிகைகள், வேரூன்றிப் பாய்ந்திருக்கும் தமிழ் விருட்சத்தின் அற்புதக் கிளைகள். கல்கி குழும ஊழியர்களின் குழந்தைகளிடமும் தமிழ் விதையைத் தூவவும், ஆலம் விழுதாய்த் தமிழை ஊன்றவும்  பவளவிழா ஆண்டு நிறைவை ஒட்டி கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்காக ஜூன் 11 ஆம் தேதியன்று பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி வளாகத்தில் தமிழ் செழிக்கப் பல்வேறு போட்டிகளும் குதூகலமாய் நடைபெற்றன.

வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் ஒப்புவிக்கும்  போட்டிகள் முதலிலும் அதன் பின்  வார்த்தை விளையாட்டு என்ற நிகழ்ச்சியும், பாடல்  போட்டியும் நடந்தது. மினிஷா நாயர் தொகுத்து வழங்க மலேஷியா சங்கர் மாஜிக் ஷோவும் மிமிக்ரியும் நடத்தி அனைவரையும் குழந்தைகளாக்கினார்.

கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது. அம்முன்னேடுப்பில் முதன்மையாக இருக்கும் கல்கி குழுமத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் பெருமைக்குரியவர்களே

என் செல்லக் குட்டீஸ். - 7.

 என் செல்லக் குட்டீஸ் வரிசையில் இன்னும் சிலர். :)
கேரள தோழர் ஒருவரின் மகள் ஸாதிகாவுடன் என் கணவர் பொன்முடியில் எடுத்தது.
அதே ஸாதிகே ஓவியத்தில் மும்முரமாய்.
 ஸாதிகாவின் பக்கத்துவீட்டுக் குட்டீஸ்

சனி, 20 ஆகஸ்ட், 2016

மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.

861. மெல்லத் தூறிக் கொண்டிருக்கிறது மழை. இதழ்கள் உதிர்வதுபோல் என்னைத் தொட்டுத்தொட்டுப் புல்லரிக்கவைக்கிறது. எந்தத் தாழ்வாரமும் வாகாய் இல்லை ஓடி ஒளிய.

ஒரு வைக்கோல்போரின் மேல் அமர்ந்தும் விடுதிக் கட்டிடங்களைச் சுற்றியும் கைகள் விரித்து அலைந்து கெபியில் ஒண்டிக் கொண்டதும் அதில் சிற்றருவிகளாய்த் தெறித்த சாரலும் மரங்களின் மேலிருந்து மணிகளாய் உதிர்ந்த மழையும் தாவணியில் நீரலையைச் சரியவிட நானே காடாய் மரமாய் மலையாய் உன்மத்தம் பிடித்து ஊறிக் கிடந்ததும் ஏனோ நினைவில் வர கூச்சம் விட்டு நடக்கத் துவங்குகிறேன்.

செல்லுமிடமெல்லாம் சிரசில் முத்தமிட்டுத் தோள்பற்றிக் கைவழி வழிந்து பிடித்து என்னைத் தொடர்ந்து வருகிறான் அவன். வீடுகளுக்குள் உறைந்து கிடக்கிறது ஊர்.

எங்கள் ராஜபாட்டையில் மழைப்புரவியும் நானும். அங்கங்கே அகலக் கால் விரித்து அவன் அடர்கோபம் கொள்ள கடிவாளமிழந்த கோமகளாய்க் கைவசம் சேணம் மிச்சம். பூந்தூறலாகக் கோதையாய் நான் அவனை மார்பில் சூட மெல்லத் தன்வசம் இழந்து முணுமுணுக்கிறான் காதோரம். மெல்ல நட மெல்ல நட என்று.

கிசுகிசுக்கும் அவன் குரலைக் கன்னத்தில் திப்பி திப்பியாய் வாங்கி உரத்துக் கூவுகிறேன் எதிரொலிக்கிறது எங்களுக்கான பாதையில் நான் விரித்த வார்த்தைகள். மீண்டும் மீண்டும் வா... ஐ லவ் யூ மழை ராட்சசா... :)


862. dekh bhai dekh( Sushma Seth) , zaban sambalke ( Pankaj Mohan/Kapoor), nukkad ( Shah Rukh Khan), Junoon ( Kitu Kidwani), Shanthi ( Manthra Bedi).. ithu 5 m 1995 la iruntha top 5 hindi serials.. whom do u like the most.. ( yaraith theriyuthoo ilaiyoo.. ellarukkum Manthravai therinchurukalam..lol )

863. ATTRACTION ..> DISTR(U)ACTION.

864. 5000 பேரையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறதா..

865. பஜ்ரங்பலியின் வாலை விட அதிகமா நீளுதே ப்ளாக் லிஸ்ட்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலங்கள்.

வரலெக்ஷ்மி விரத ரெஸிப்பீஸ் :-

1.பழக் கொழுக்கட்டை
2.கலவை பருப்புசாதம்.
3.ஓட்ஸ் பருப்பு வடை.
4.தினை உப்புமாக் கொழுக்கட்டை
5..விளாம்பழப் பச்சடி
6.மாம்பழத் தொக்கு
7.மணி லட்டு
8.தேங்காய்ப்பால் அப்பம்
9.கற்கண்டு ஏலக்காய் பால்.
10.கோதுமை சேமியா பாயாசம்.

1.பழக் கொழுக்கட்டை:-

தேவையானவை :-
பச்சரிசி மாவு – 2 கப், பழக்கலவை – பொடியாக நறுக்கிய ஆப்பிள், சிறுமலைப்பழம், பலாச்சுளை – ஒரு கப், கிஸ்மிஸ் – 30, பேரீச்சை – 6, தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்.உப்பு – 1 சிட்டிகை. சர்க்கரை – ஒரு சிட்டிகை. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:-
ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து நெய்யையும் உப்பையும் சேர்க்கவும். கரண்டிக் காம்பால் குத்திக் கிளறி ஈரத்துணியால் மூடிவைக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொழுக்கட்டை செய்ய உபயோகிக்கவும். பழக்கலவையோடு பொடியாக அரிந்த பேரீச்சை, கிஸ்மிஸ், தேன் கலந்து நன்கு கையால் மசித்து உருட்டி வைக்கவும். கொழுக்கட்டை மாவில் சொப்பு செய்து இந்த பழக்கலவையை ஃபில்லிங்காக நிரப்பி கொழுக்கட்டையை மூடி ஆவியில் பத்துநிமிடம் வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.

2.கலவை பருப்புசாதம்.:-

தேவையானவை:-

பச்சரிசி -1 கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கைப்பிடி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன். தாளிக்க –நெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து , கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன். வரமிளகாய் – 2, கருவேப்பிலை – 1 இணுக்கு. பெருங்காயம் – 1 சிட்டிகை.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

இரணிக்கோயில் விநாயகர்.

உறவினர் ஒருவர் வீட்டின் கதவில்.
இரணிக்கோயில் ஆவுடையாரின் கர்ப்பக்கிரகத்தில்

புதன், 17 ஆகஸ்ட், 2016

சூலம் - திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு.

எனது ”சூலம்” சிறுகதைக்கு 2016 திருக்குறள் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு வழங்கிய பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்துக்கு நன்றிகள். இது தற்போது வெளியான எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இடம்பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி !

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

காட்டானும் காத்திருத்தலும், காதலும் கனவு ராணியும்.

1. MADE IN INDIA .

அலிஷா டேயின் இந்தப் பாட்டுக்கு நான் அடிமை. இது வெளிவந்து 92 - 93 இருக்கும் என நினைக்கிறேன். ராஜா ராணி கதை. கொஞ்சம் மைக்கேல் ஜாக்சன் பாடல் பாணி. அப்புறம் கொஞ்சம் ஃபேரி டேல்ஸ் கதை. :)
2. PAYALIYAA HO HO HO

ரிஷி ஒரு கொலுசை வச்சு என்னா ஆட்டம் என்னா ஆட்டம். :)  வெகு சீக்கிரத்தில் மறைந்த திவ்ய பாரதி கொள்ளை அழகு.
3. AISI DEEWANAGI.

இதிலும் ஷாரூக்குடன் திவ்யபாரதி. பாடல் வரிகள் இதம்.
 
4. KYA KOI HAMEY JUNGLIE KAHEN

சசி கபூர் நடித்த மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல். காட்சியமைப்பும் அருமை. 
திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் - இரண்டு கொடிமரங்கள்.

சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் சிற்பங்களை முன்பே பகிர்ந்துள்ளேன். இங்கே சாமிக்குத் தனியாகவும் அம்பாளுக்குத் தனியாகவும் இரண்டு கொடிமரங்கள் உள்ளன.

முழுமையாக வீரவனப் புராணம் பற்றி இங்கே படிக்கலாம். 

சில படங்களைப் பகிர்ந்துள்ளேன். திருவிழா சமயம் என்பதால் அலங்காரத்தில் ஜொலித்தது கோயில்.
அழகு மணிகள் - வேண்டுதல் மணிகள்.
குட்டிப் பல்லாக்கு.

நாம பெரிய ஃபோட்டோகிராஃபர்ல..:)

சனி, 13 ஆகஸ்ட், 2016

காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)


386. ஏழு வாயிற்கதவுகள் கொண்டவை காரைக்குடி வீடுகள். 387.முகப்புக் கதவு, 388.பட்டாலைக் கதவு, 389.வளவுக் கதவு, 390.ஆல்வீட்டுக் கதவு, 391.இரண்டாங்கட்டுக் கதவு, 392.மூன்றாங்கட்டுக் கதவு, 393.பின் வாசற்கதவு என ஏழு இரட்டைக் கதவுகள் உண்டு.
394. இது மணிப்பூட்டு. பூட்டு ஒரு சுற்றுச் சுற்றி லாக் ஆனவுடன் ட்டிடிங் என்று சத்தம் கேட்கும். இது போல் மூன்று முறை சுற்றிப் பூட்டணும்.
சாவிகளும் கோயில் சாவிகள் மாதிரிப் பெரிதானவைதான். அந்த ஸ்விட்ச் போர்டைப் பாருங்க இப்பல்லாம் தட்ட எளிதான வெள்ளை பட்டன்கள். இந்த 395.கறுப்பு சுவிட்சைத் தட்டினால் டிக் என்று சத்தம் கேட்கும்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

ஆடி மாத அம்மன் ரெசிப்பீஸ்.


ஆடி ம அம்மன் –கலவை சாத- ரெசிப்பீஸ்.


1.சிவப்பு குடைமிளகாய் தக்காளி சாதம்
2.பரங்கிப்பிஞ்சு தேங்காய் சாதம்
3.தினை மாங்காய்இஞ்சி சாதம்
4.எலுமிச்சை வேர்க்கடலை சாதம்
5.குதிரைவாலி பருப்பு சாதம்
6.தேங்காய்ப்பால் நெய் சாதம்
7.கிடாரங்காய் கேரட் சாதம்
8.காய்கறி இனிப்பு சாதம்
9.சம்பா சாதம்
10.சாமை அக்கார அடிசில்.

1.சிவப்பு குடைமிளகாய் தக்காளி சாதம்.


புதன், 10 ஆகஸ்ட், 2016

சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் உள்ள நந்தினி சிறுகதை .

தென்றலுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் அனுப்பி அதன் பின் மறந்துவிட்டு என் சிறுகதைத் தொகுப்பில் வெளியிட்ட கதை ஒன்றை தென்றலுக்காக ஒலிவடிவமாக்கி இருக்கின்றார்கள்.


வேறு நூலில் வந்ததை வெளியிடமுடியாது என்றாலும் ஒலி வடிவில் முன்பே ஏற்றியதை பெருமதிப்பிற்குரிய என் முகநூல் தோழி திருமதி சரஸ்வதி தியாகராஜன் அனுப்பி இருக்கின்றார்கள்.

அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவர்கள் குரலில் என் கதையைக் கேட்கும்போது அற்புதமாய் இருக்கிறது. படிக்கும்போதே நெகிழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். மிக்க நன்றி மேம். வாழ்க வளமுடன்.

என் சிறிய மகன் சபாரெத்தினத்தினம் இதை சவுண்ட்க்ளவுடில் போட்டுக்கொடுத்துள்ளான்.

https://soundcloud.com/sabalaksh/nanthini-story 

எனது சிறுகதைத் தொகுப்பு - ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.  கேட்டுட்டு சொல்லுங்க :)


திங்கள், 8 ஆகஸ்ட், 2016

அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

ஆத்தாள் என்பவள் நம் அகத்தில் இருப்பவள், ( இல்லத்தில் )  அகத்துள் ( உள்ளத்தில் ) உறைபவள். அதனால்தான் ஆத்தா *381 என்றழைக்கின்றோம் என்றார் ஆடிப்பூரத் திருவிழாவில் முத்தமிழ் மன்றத்துக்காக காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் உரையாற்றிய திரு கம்பனடிசூடி பழனியப்பன் ஐயா அவர்கள்.

நம்ம ஊர்களில் அம்மனையே ஆத்தா என்றுதான் அழைப்போம். மாரியாத்தா, காளியாத்தா என்று அதே போல் காரைக்குடியைக் காக்கும் தெய்வங்களை கொப்பாத்தா, முத்தாத்தா என்று அழைக்கிறோம்.  வீட்டுப் படைப்பு தெய்வங்களை அக்கினியாத்தா, மாறாத்தா, அடக்கியாத்தா, மெய்யாத்தா என்று அழைக்கிறோம். என்றார்கள்.

இன்னும் இன்னும் இலக்கியத்திலும் ஏனைய இடங்களிலும் ஆத்தா என்று சொல்லப்பட்ட இடங்களைக் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசிய அவர்கள் ஆத்தா என்று தமது பாடல்களிலே சொன்ன இருவரை முக்கியமாகக் குறிப்பிட்டார்கள். . அந்த இருவர் நமக்கெல்லாம் தெரிந்த இருவர்தான் இருவருமே யோகியைப் போன்றவர்கள், இல்லறவாசிகள்தாம்.

 ஒருவர் பட்டர், இன்னொருவர் பட்டினத்தார்  ஒருவர் இல்லறத்தில் இருந்தும்  யோகியைப் போன்றே இருந்தவர் அவர் அபிராம பட்டர். இன்னொருவர் இல்லறத்திலிருந்து துறவறம் பூண்டவர். அபிராமி அந்தாதியில் குறிப்பிட்ட நூற்பயனில் அவர் பாடுகிறார் இப்படி.

மறுபடி இணைபுகு நீ.ராதையாய் நான் க்ரீடை செய்ய
ஊன்மொத்தம் நீ என் உயிர்ச்சந்தமும் நீ
தீஞ்சுவைக் கண்ணன் நீ தேன் வசந்தமும் நீ

வள்ளியாய் நான் ஆட அந்தத்
தேனூத்தும் நீ  தினைப்புனமும் நீ
வேல் முருகன் நீ வினைப்பயனும் நீ.


சீதையாய் நான் சேர அந்த
மான் கனவும் நீ மையல் நினைவும் நீ.
திரு ராமன் நீ தீ கர்ப்பமும் நீ


ஹெராவாய் நான் மிதக்க அந்த
ஒன்பதாம் மேகம் நீ ஒளி மைந்தனும் நீ
இளவரசும் நீ இடி முழக்கமும் நீ.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மைக்கேல் ( இன்ஸ்பிரேஷன் ) ஜாக்சன். - MICHAEL ( INSPIRATION) JACKSON !

 மைக்கேல் ஜாக்சனின் பாப் பாடல்களை ரங்கமணி கேட்பார். அடுத்துப் பிள்ளைகள். எனவே அடிக்கடி கேட்டுக் கேட்டு எனக்குப் பிடித்துப் போன பாடல்களை இங்கே பகிர்கிறேன். ப்ரேக் டான்ஸில் இருந்து பாப் பாடல் நடனங்கள் ரொம்ப வித்யாசமானவை அல்ல. !

மைக்கேல் ஹிஸ்டரி ஜாக்சன் என்ற வீடியோவில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்ததும் அவரைப் பார்த்து நிறையப் பேர் மயங்கி விழுவார்கள். அவ்ளோ க்ரேஸ்.

எனக்கு அவருடைய எல்லாப் பாடல்களும் பிடிக்கும். கமலஹாசனிலிருந்து பிரபுதேவா மற்றும் இன்றைய டான்ஸ் மாஸ்டர்கள் வரை அனைவருக்கும் ஒரு கருவூலம் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகள்.

1. முதலில் கோஸ்ட் இதுதான் தசாவதாசத்தில் கமலின் மேக்கப்புக்கான இன்ஸ்பிரேஷனான இருந்திருக்கக் கூடும்.தனியே அமர்ந்து பார்த்தால் சிறிது திகிலூட்டக்கூடிய பாடல் காட்சி இது.2. ஒரு முகநூல் நண்பர் பகிர்ந்திருந்த ராபர்ட் ப்ரவுனிங் பாடலை ஞாபகப்படுத்தும் ஆல்பம் இது. கமலஹாசனின் மாயா மச்சீந்திரா பாடலும் இதைப் போன்றதுதான்.3. ரொம்ப ரசிச்ச பாட்டு இது. கொஞ்சம் முக்காபலாவை ஞாபகப் படுத்திய பாட்டு.

என் செல்லக் குட்டீஸ். - 6.

 என் செல்லக் குட்டீஸ் சிலர் முன்னேயே வந்திருக்காங்க. இவங்க இப்ப :)

பட்டாசு சத்தத்துக்காகக் காதை மூடும் பக்கத்து வீட்டுக் குட்டிப் பாப்பு.
பாட்டி கையிலிருந்து ஒரு லுக் :)
அன்பின்  ஆராதனா.
சூரஜ் வழங்கும் சீஸ் கேக். :)

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சாக்கோட்டைகோயில். வீரனும் மன்னனும் அந்தணனும் அகத்தியரும்.

///ஒரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த ஒரு வேடன் ஒரு மரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியைக் கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று புதைந்து இருந்தது. அந்த அதிசயத்தை வேடுவன் ஒரு மன்னரிடம் கூற அந்த சோழ மன்னனும் அங்கேயே அதற்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அந்த ஆலயப் பெருமையைக் கூறுவதே வீரவனப் புராணம் என்பது.  இந்த கோவிலின் முக்கிய அம்சமாக இக்கோவிலின் கோபுரம் உள்ளது. ஏனெனில் இக்கோபுரம் முழுமையான கூம்பு அமைப்பை பெற்றுள்ளது. இப்படி ஒரு அமைப்பை தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் காண முடியாது.  
இந்த புராணம் காலம் சென்று விட்ட மகா வித்வான் திரு மீனாஷி சுந்தரம் பிள்ளை என்பவரால் 1900 ஆண்டிற்கு முன்னால் ( 1862 ஆம் ஆண்டு வாக்கில் இருக்கலாம் ) எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.///

இந்த ப்லாகில் இதைப் பற்றிப் படித்தேன். அத்துடன் நான் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.  

முழுக்கதையையும் இங்கே படியுங்கள். 

 கூம்பு வடிவ கோபுரம்.
வீரன் ??
பாண்டிய /சோழ மன்னன்..

அந்தணர்

அகத்தியர்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.

361. வர்ணக்கோமாளி - அதி கோமாளித்தனமாகக் காரியம் செய்பவர்களைக் குறிப்பிடும் வார்த்தை. இருக்கும் வர்ணத்தை எல்லாம் கோமாளி முகத்தில் அடித்துக் கொள்வதைப் போலக் கிறுக்குத்தனமாக எல்லாப் பக்கமும் பேசித் திட்டு வாங்குபவர் இவர். சமய சந்தர்ப்பம் தெரியாமல் காமெடி செய்பவரையும் குறிக்கும்.

362. பாடாவதி. - பயனற்றவர்., சுமார். உருப்படாதவரைக் குறிப்பது.

363. சர்வ பாடாவதி - எக்ஸ்ட்ரீம் பாடாவதி. சுத்த வேஸ்ட் என்பதைப் போல. எதுக்கும் லாயக்கில்லாதவர் எனச் சொல்வது.

364. திருகுதாளம் பிடிச்சது - எந்த விஷயத்தையும் ட்விஸ்ட் செய்து விடுபவரைக் குறிப்பது

365. தீசப் பிடிச்சது. - நல்லெண்ணம் அற்றவரைக் குறிப்பது. தீசல் என்றால் தீய்ந்து போதல் ஒரு பொருள் அதி உஷ்ணத்தால் தீய்வது போல அடுத்தவரைப் பார்த்து அதீதமாகப் பொறாமைப்படுபவரைக் குறிப்பது.

366. பூதிப்படையில. - ஒரு விஷயத்தைப் பற்றிய சரியான தெளிவில்லாமல் அடித்து விடுவது. குத்து மதிப்பாகச் சொல்வது.

367. வெகண்டை - தேவையில்லாமல் கிண்டல்/நக்கல் செய்பவரைக் குறிப்பது.

ஆற்றைக் கடப்போம் ...சில புகைப்படங்கள்.

ஆற்றைக் கடப்போம்.! ஆற்றலோடு கடப்போம்.!! ***************************************************

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது.

காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு கழிவுகளை அதில் கொட்டி விஷமாய் ஆக்கி இருப்பீர்கள். பெண்களையும் அப்படித்தானே கடக்கிறீர்கள். தேவைக்கு உபயோகப்படுத்தி பின் பகடைக் காய்களாக. உடமைப் பொருட்களாக, பல நூற்றாண்டுகளாக.
உங்கள் இறுகிய பார்வையில் அவளை முடக்குகிறீர்கள். அல்லது அன்பால் முடங்க செய்கிறீர்கள். அவளைப் பற்றி வரையறை வைத்திருக்கிறீர்கள். இன்னது செய்யலாம் இன்னது கூடாது.. இப்படி இருக்கலாம் இப்படிக் கூடாது என்று. அதில் உங்கள் தோழிகளுக்கு சில சலுகைகள் இருக்கலாம். மகளுக்கும்கூட ஆனால் மனைவிக்கு அல்ல.

புதன், 3 ஆகஸ்ட், 2016

தமிழ்க்குடில் கட்டுரைப் போட்டியும் கவிதைப் போட்டியும்.

தமிழ்க்குடில் கட்டுரைப் போட்டி & கவிதைப் போட்டியைப் பகிர்ந்துள்ளேன். முகநூல் வலைத்தள நண்பர்கள் பங்குபெற்றுப் பரிசு பெற வாழ்த்துகள்.
/////அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு வருடமும் தமிக்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் தங்களுக்காக.

போட்டி எண் 1 – கட்டுரைப்போட்டி

திரு. காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: கட்டுரைப்போட்டி

தலைப்பு :

”இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்”

விதிமுறைகள்:

போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.(பள்ளி மாணவர்கள் தவிர)

குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.

உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் என கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.16
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படவேண்டும் குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

பரிசு விவரம்:
Related Posts Plugin for WordPress, Blogger...