எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.

881. Think thoughts of Forgiveness towards everyone.. Fly a kite across the river.. :) -- will try and thx to speaking tree.

882. Increasing the amt of let-7 ( a regulator molecule ) against the LIN28 ( a protein ) will switch off cancers in testis and ovary.. -- a research news in TOI.. ( coz chemotheraphy can have long term side effects including hearing loss and damage to the kidneys.. )..

883. ட்ராவல் பண்ணும்போது எடுத்துட்டுப் போறது ஹேண்ட்பாகா, கோடவுனான்னே தெரில.

884. எக்ஸ் எல் போதும்

இல்ல எக்ஸ் எக்ஸ் எல் எடுத்துக்க.

என்னங்க புது நைட்டி நல்லாயிருக்கா

எங்க நடந்து காமி

முன்னே போ.. பின்னவா..

என்ன கிண்டலா..

ரொம்ப அழகான..

சொல்லுங்க சொலுங்க..

குண்டு கோஸ்ட் மெதந்து வர மாரி இருக்கு..

யேய்....

-- குனிஞ்சு பார்த்தா ஐயயோ காலையேக்காணோம்

885. இன்பாக்ஸில் இன்ஸ்டண்டா பதில் சொல்ல ”தம்ஸ் அப் ” கொடுத்த முகநூல் தெய்வம் வாழ்க.

886.ஒரு (ஏசி கோச்) ட்ரெயின் பயணம் காதைப் பதம்பார்க்க ( ஏர் ட்ரம்ல ஹோல் ) காய்ச்சல், தொண்டை வலி. காட்டன் கொண்டுவராததால் வந்த தலைவலி. எப்படியோ சரியாகிவிடும் என விட அது அதி உச்சமாகி நேற்று முழுக்க உறக்கமில்லை. இன்று காலை எல்லா மாத்திரையையும் உத்தேசமாகப் போட்டுத் தூங்கியதில் எட்டரைக்கு விழித்து கல்கி பவள விழாவுக்கு ஒரு அர்ஜெண்ட் விசிட்.

சாப்பிடாமல் சென்றதால் அங்கே டிஃபன் சாப்பிட்டுத் திரும்ப மாத்திரைகளைக் கோயில் பிரசாதம் போல வாயில் போட்டு விழுங்கிவிட்டு அரங்கத்துக்கு உள்ளே வரும் வழியில் கல்கியின் ஐம்பெரும் தலைகளைப் படம் பிடிக்கிறேன் என்று குட்டிப் படி தடுக்கி பொதகட்டீர் என விழுந்து திரும்ப உள்ளே போனால் ஸ்க்ரீன் எல்லாம் கறுப்பு பட்டாம் பூச்சி பறக்க கண் தெரியாமல் போனது போலானது.

தடுமாறி மறுபடியும் உள்ளே சீட்டுப்பக்கமிருக்கும் படிகளில் குதித்துப் பிரண்டு வெளியே வந்து படியில் உக்கார்ந்து ஆசுவாசம் செய்து பாத்ரூமில் போய் முகம் கழுவினால் வேர்த்து வேர்த்துக் கொட்டுது.

அப்புறம் நட்புகள் பயந்துவிடக்கூடாதே என சமாளித்து ஒருவழியாக ஃப்ரெண்ட்ஸ் படத்தில் மண்டையில் அடிபட்ட சார்லி மாதிரி வந்து அமர்ந்தேன்.

-- மாத்திரைகளை இப்படி சகட்டு மேனிக்கு அள்ளிப்போட்டுக் கொள்வோர் கவனத்துக்கு. இந்த எச்சரிக்கைப் பதிவு.

இது போதாது என்று மதியம் குட்டிக் குளவி வேறு இரண்டு இடங்களில் 'பட்ட காலிலே படும்' என்பதாய்க் கடித்துவிட நான் திடுக்கிட்டு நடுங்க என் அத்யந்தத் தோழி பாரு குமார் விபூதி கொடுத்து பூசச் சொல்லி தைரியமூட்டினார். என்னவோ போங்க. எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குது.


வீட்டில் "அம்மா ஏர் ட்ரம் ஹோலில் கர்சீஃபை வைச்சுக்குங்க" என்று மகன் கலாய்த்தார். ! திரும்ப மருந்து மாத்திரை வாங்கித் தின்று இப்போது வேர்வை கோடவுனாக அலைவது வேறு கதை.

-- காலை மதியம் மாலை என கல்கி குழுமத்தினர் நன்கு உபசரித்தனர். அருமையான விருந்தோம்பல். செவிக்குணவும் விழிக்குணவும் வயிற்றுக்குணவும் ஈந்தார்கள். எங்கள் முகநூல் நண்பர் கோகுலம் எடிட்டர், திரு Latha Ananth அவர்கள் கல்கி சார்பாக எங்கள் நட்பு வட்டத்தில் இருந்தவர்களுக்கு அனைத்தும் கிடைக்கச் செய்தார். கிளம்பும்போதும் இலவச கிஃப்ட் ஹாம்பர்களை வாங்கித்தந்தார். வாழ்க நட்பு !. தன்யளானோம் . கல்கி நிகழ்வுகளிலேயே கோகுலம் சார்பாக நடத்தப்பட்ட மேஜிக் ஷோவும், மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நடனமும் அற்புதம் சார். நெகிழவைத்தது. மிக்க நன்றி சார்.

887. நெருப்பு நரியும் நானும்... நெசமாலுமே நீ நல்ல நண்பேண்டா.. ஒம் முகத்துல ஒரு நாளாவது முழிக்காம இருந்ததில்ல..!

888..Wi fi yinal varuthamey migum. Ippidi ellam net ai pathu muttikkanuma. Think b4 enter into the virtual world.self advice.

889. Neeya naana kutties cute show. ☺ back to childhood.

890. The one and only lovable person in my life as friend, philosopher & guide. ❤happy friendshipday thala. to my frnd philosopher and guide. Ada en hubbykkaganga ☺https://youtu.be/qfx_X8gx62c

891. THE JOY OF GIVING. !!! குறும்படத்தைப் பார்த்துக் கூட அழ முடியுமா.. நெகிழ்ந்த மனதின் பாஷை அதுதானே..

892. தாய்லாந்து என்றாலே நமக்கெல்லாம் மோசமான ஒரு பிம்பம் இருக்கும். இதில் மனிதநேயம் இருக்கிறது. எக்ஸலண்ட் !
https://www.youtube.com/watch?v=cZGghmwUcbQ

893. புதுசா எடுக்குற ஃபோட்டோவ எல்லாம் பார்த்தா பயமாயிருக்கு ஐயோ எங்க வாங்கிங் பாத் ஒடனடியா வாக்கிங்கை ஆரம்மிச்சிறணும்.

894. எல்லாருக்கும் பட்டப்பேர் வைக்கும் நட்பு நமக்கென்ன பேர் வைத்திருப்பாங்க. குண்டு, ரோலர்,ஜாடி, ட்ரம். ஐயோ இமேஜின் பண்ணவே முடியலையே.. மொதல்ல இமேஜைக் காப்பாத்தவாச்சும் ஓடியாகணும். ஐ மீன் ஜாகிங். .. ட்ரெட்மில் காலி.

895. யாராவது பேசாம இருந்தாங்கன்னா பேசலையேன்னு உக்கி உருகி மண்டிபோட்டுப் பேச வைக்க பாக்குறோம் . தானாப் பேசவந்தா ஃபேஸ்புக் பாத்துட்டே டைப்பிட்டே ஏனோ தானோன்னு பேசுறோம். இதெல்லாம் என்ன மேனியா. எனக்கு மட்டும் பிடிச்ச வியாதியா.. :)

896. பெண்கள்ல நிறையப்பேருக்கு  எலும்பு பிரச்சனை வருது. பால் தயிர் முட்டை கீரை, தேன் டேட்ஸ் எடுத்துக்கோங்க. பொதகட்டீர்னு விழும்போதெல்லாம் யாராச்சும் ஓடி வந்து தூக்கிவிட்டா காலுல சில்லெலும்பு எல்லாம் ஒடைச்சாலும் ஹையா நம்மளால எந்திரிச்சு நிக்கமுடியுதேன்னு அல்ப சந்தோஷமா இருக்கு. :)

#அட்வைஸ்_அக்கா:)

897. பழைய நட்புகளைத் தேடித் தேடிப் போய்ப் பேசுறமே. புதிய நட்புகள் கொடுத்த பாடமா. இல்லாட்டி உள்ளபடியே பலப்பக் குச்சி காலத்துக்குப் போயிட்டமா.

898. கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு
அவரைக்குப் பூ அழகு
அவருக்கு நான் அழகு..

-- பார்த்துப் பழகிப் போச்சில்ல :)

899. அக்கா அது உங்க அக்காவான்னு பீதியக் கிளப்புறாங்களே.. சொக்கா காப்பாத்து. க்விக் ஸ்லிம் ஜிம் இருக்கா.

900. கல்கியின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து தகதகக்க வைத்திருக்கும் லெக்ஷ்மிகரமானவருடன் தங்கமான தருணங்கள்.

‪#‎கல்கி_பவள_விழா‬

-- டைம்லியா ஃபோட்டோ எடுத்த கோகுலம் எடிட்டர், எங்கள் நண்பர் Latha Ananth சாருக்கு நன்றி நன்றி நன்றி..

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 


41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...