எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )


வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன்.

வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன்

 

காரைக்குடியில் கம்ப்யூட்டர் கம்பெனியா. அதுவும் கால் லெச்சம் பணம் கட்டி யாராவது படிப்பார்களா. உங்க அப்பா காசை வீணடிக்காதீங்க. வேற தொழில யோசிங்க பாஸ் என்று நண்பர்கள் அட்வைஸியபோதும் முன்வைத்த காலைப் பின்வைக்காமல் முடிவெடுத்தபடி APTECH இன் ப்ரான்சைஸை 95 ஆம் ஆண்டு ஆரம்பித்தவர்கள், ஊரில் மட்டுமல்ல பேரிலும் திட சித்தம் கொண்ட இந்த கல்லுப்பட்டி ப்ரதர்ஸ்.

 

மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து மாலைக் கல்லூரியில் சராசரி மாணவராகப் படித்தும் உத்யோகத்தில் அமராமல் தொழில் செய்யும் எண்ணம் வந்தது எப்படி.?  அதுவும் தொண்ணூற்று ஐந்துகளில் அவ்வளவாகப் பொதுமக்களின் கவனத்தைக் கவராத மென்பொறியியல் துறையில் நுழைந்து சாஃப்ட்வேர் லாப் ஆரம்பித்து இருபத்திநாலு மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களும் சேவை, எண்பது ஊழியர்கள், சொந்தக்கட்டிடம், மூன்று கோடி டர்ன் ஓவர் இதெல்லாம் எப்படி சாத்யப்பட்டது.

 

விடாமுயற்சி, கூட்டு முயற்சி, குழுவாகப் பணிபுரிதல், சமூகத்தினரின் அரவணைப்பைப் பெறுதல் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் வின் வின் என்று வெற்றிக் கொடியை நாட்டியவர்கள் ”இணைய”ர்கள்  வெங்கடாசலம் & பழனியப்பன்/

 

மாலைக் கல்லூரியில் படித்தபடி APTECH யிலும் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த வெங்கடாசலம் அம்பத்தூர் AIEMA வில் பணி புரிந்துவந்தார். பிஸினஸ் ஐடியாவில் இருந்த அவர் ஒரு முறை காரைக்குடி வந்திருந்தபோது அவங்க சின்னப்பத்தா தன் பேரனுக்காக கம்ப்யூட்டர் கத்துக் கொடுக்க ஒரு செண்டர் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல இதை மதுரை திருச்சி, சென்னை அப்பிடின்னு வேற ஊர்களில் ஆரம்பிக்குறதுக்குப் பதிலா ஏன் நம்மோட சொந்த ஊரான காரைக்குடியிலேயே ஆரம்பிக்கக்கூடாதுன்னு நினைச்சார்.

 

கல்லூரியில் படிக்கும்போதே பழனியப்பனின் கனவு பிஸினஸ் செய்வதுதான். நண்பன் சரவணனின் குடும்பம் ரூபா & லாவண்யா அப்பிடீங்கிற ப்ரிண்டிங் மேனுஃபேக்சர் கம்பெனி வைச்சிருந்தாங்க. இதைப் பார்த்துக் கல்லூரி முடித்ததும் தன்னோட நண்பன் சரவணன்கூடச் சேர்ந்து பெயிண்ட் கம்பெனி ஆரம்பிச்சு கலர் எனாமல் பெயிண்ட், ஆண்டிகரோஷன் பெயிண்ட் தயாரிச்சு இண்டியா ரேடியேட்டர்ஸ். பல்லவன் ட்ரான்ஸ்போர்ட்ஸுக்கு சப்ளை செய்திருக்காங்க.

 

திரிவேணி சங்கமம் என்று கேள்விப்பட்டிருப்போம்.  கங்கை யமுனை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும் ஆனால் அதன் கீழே சரஸ்வதியாய் மறைந்திருக்கும் இவர்களின் தந்தையார் திரு ராமையா அவர்கள் பற்றியும் நம்பிக்கையை ஊட்டி வளர்த்த தாயார் திருமதி முத்தாள் அவர்கள் பற்றியும் சொல்ல வேண்டும். தந்தை MCTM குழுமத்தில் 32 வருடம் பணி செய்தவர். இவங்க அம்மாதான் இவங்க ரோல்மாடல் சின்ன வயசிலேயே சிலோன் சிங்கப்பூர் பொருட்களை வாங்கி விற்பது, சிட்ஃபண்ட், ஃபைனான்ஸ்னு செயல்பட்டிருக்காங்க.

 

கம்ப்யூட்டர் கோர்ஸ் கற்றுக்கொள்வது வரவுக்கு மீறின செலவு என்றாலும் மகன்கள் இருவரும் படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேரமா APTECH யிலும் படிக்கவைத்திருக்கின்றார்கள். தொழில் ஆரம்பிக்கத் தன்னம்பிக்கை ஊட்டினார்கள். முழுமையான ஆதரவு. பிள்ளைகளிடம் இது வேண்டாம் பார்ப்போம், யோசிப்போம்னு சொல்லல. இவர்களின் பெற்றோர் தொடர் முயற்சியாளர்கள்.

 

 

APTECH ஆரம்பிக்க யோசனை வந்தபிறகு, பழனியப்பன்  காரைக்குடிக்கு வந்து இதை வெற்றிகரமாக்கும் சாத்தியக்கூறுகளைப் பத்திப் புள்ளிவிவரம் எடுத்து ரிப்போர்ட் தயார் செய்தார். இதை வியாபாரத்தில் ஆர்வமாயிருந்த ஒரு நண்பர் மற்றும் உறவினரிடம் கூற அவர்களையும் பங்குதாரர்களாகக் கொண்டு WBC ஆரம்பிக்கப்பட்டது.

 

ஆமாம் WBC யின் விரிவு என்னன்னு சொல்லலையே.. இருங்க சொல்லிடுறேன். WIIAN BUSINESS CORPORATION. – WHAT IS IN A NAME. ஆமாங்க பேர்ல என்ன இருக்கு எல்லாம் கூட்டு முயற்சிலயும் உழைப்பிலயும்தாங்க இருக்கு இணையர்களோட வெற்றி. !!!

 

APTECH கின் கிளை ஆரம்பிக்க அனுமதி கிடைச்ச பிறகு பார்த்தா முதலீட்டுக்கான பணத்தைத் தயார்ப் பண்ணனும். தேவையோ 17 லட்சம். இதவான குடும்பம் – எந்தப் பின்புலமும் இல்லாம அப்பா அம்மாவோட ஆதரவை மட்டுமே கொண்டு 17 லட்சம் எப்பிடி சேகரிச்சு முதலீடு பண்றது.?  சென்னை APTECH மாதிரி ஆரம்பிக்கணும்னு நினைச்ச ட்ரீம் ப்ராஜெக்ட் இது.

 

அதுவும் சாத்யப்பட்டது. அப்துல் கலாம் சொன்னது போல கனவு காணுங்கள் நடக்கும் என்ற மாதிரி எல்லாம் நடந்தது. வியாபாரத்தில் வெகு ஆர்வமாக இருந்த இவர்களின் நண்பர் & உறவினர்  இருவரின் பங்களிப்போடு ஒரு குழு அமைத்து ஆளுக்கு ரூ 75,000/- முதலீடு போட்டு 4 பேருக்கு மூன்று லட்சமும் சொத்தை வங்கியில் அடகு வைத்து எட்டு லட்சமும் வட்டிக்கு  ஆறு லட்சம் கடன் வாங்கியும் 17 லட்சம் சேர்த்தாச்சு APTECH ஆரம்பித்து ஆறு மாசத்துல வட்டிக்கு வாங்கின கடனையும் வெற்றிகரமா அடைச்சாச்சு. 10 மாசத்துல பார்த்தா 2 லட்சம் லாபம் !!!.

 

சாதனைகளை மட்டும் சொன்னால் போதுமா. சோதனைகளையும் சொல்லணுமில்லையா. பிஸினஸ் பங்குதாரர்கள் லாபத்தைப் பார்த்துட்டு இவங்கள வெளிய தள்ள முயற்சி செய்ய ஆரம்பிச்சாங்க. எம்ப்ளாயீஸ் மாதிரி கூப்பிட்டு கணக்கு வழக்கு கேக்குறது, பாங்க் ஆபரேஷனை சீஸ் பண்ண முயற்சி செய்றதுன்னு. அம்மா அப்பாவின் துணையோடு சோதனைகளைக் கடந்து APTECH நிறுவனத்தின் ஆதரவோடும் WBC நிறுவனத்தைத் தனதாக்கிக் கொண்டார்கள்.

 

சரி அடுத்த கட்ட வளர்ச்சி என்ன ? 95 ஜூன் ல படிப்புக்காக ஆரம்பிச்சது APTECH ஃப்ரான்சைஸ். இப்ப ஒரு சாஃப்ட்வேர் லாப் ஆரம்பிக்கலாம்னு 99 இல்  ஆரம்பிச்சாங்க. வியாபாரத்தை அண்ணனும் வாடிக்கையாளர் தொழில் நுட்பம் &  திட்டமேலாண்மையைத் தம்பியும் பார்த்துக்கிட்டாங்க.

 

முதலில் காரைக்குடியில் உள்ளவர்களின் தேவைக்கு மென்பொருள் தயாரித்தனர். பின்பு  Tally , Peach, Tree, SAGE, TechACE, QuickBooks, MyOB போன்ற Micro ERP சாஃப்ட்வேரை IOM என்ற பெயரில் தயாரித்தனர். சேல்ஸ் & மார்க்கெட்டிங்ல எக்ஸ்பீரியன்ஸ் இல்லை.

 

தேடுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்னு பைபிள்ல சொன்னமாதிரி 2003 இல் சிங்கப்பூரில் இருந்து ஒரு கம்பெனி ஆர்டர் கிடைச்சது. அதுவும் நம்ம சமூகத்து மக்கள் இந்த ஃபீல்டில் இருப்பதால் உதவி செய்தார்கள். சிங்கப்பூர் தொடர்ந்து மஸ்கட், யூ எஸ் எல்லாம் உண்மையான நட்பின் பலத்தோடும், பலதரப்பட்ட அனுபவத்தோடும் வலம் வந்திருக்கிறார்கள்.

 

1995 முதல் 2001 வரைக்கும் பீக். 2001 லேருந்து டூம் இறங்குமுகம். 2004 வரை. வாடகை ஏறிக்கொண்டே போகிறது. எனவே சொந்தக் கட்டிடத்துக்காக இந்த இடம் தோதா இருக்கும்னு பார்க்க வந்தாங்க. கடன் இல்லாம அம்மா அப்பா ஆதரவோட கூட்டு முயற்சியால வாங்கினாங்க .

 

2006 ல சிங்கப்பூர்ல வாய்ப்பு கொடுத்தவங்க வேற ஃபீல்டுக்கு மாறுகின்றார்கள். ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்கிற மாதிரி அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது.

 

காரைக்குடியிலேயே பிறந்துவளர்ந்து படிச்ச பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இண்டர்நேஷனல் லெவல்ல சாஃப்ட்வேர் எழுத முடியும்னு நம்பிக்கை கொடுக்கவே WBC யை ஆரம்பிச்சாங்க. இது ரைட்டுன்னு ப்ரூஃப் பண்ணாங்க  இவங்க ஸ்டூடண்ட்ஸ். !  இப்ப அலபாமா, கொலராடோ வுல  எல்லாம் இவங்க டெவலப் பண்ண சாஃப்ட்வேரைப் பயன்படுத்துறாங்க.

 

பிஸினஸில் முக்கிய பிரச்சனை ப்ராஜெக்ட் கிடைப்பது எளிதல்ல அது தொடர் முயற்சி. காலூன்றியபின் 10 பேர்கிட்ட சொல்றாங்க 10 ப்ராஜெக்டுக்கும் ப்ரபோசல் போச்சுன்னா அதுல ஒன்னு ரெண்டு கிடைக்கும். லீட் ஜெனரேஷன் வந்ததும் அந்த ப்ராஜெக்டோட ஆம்பிஷன் என்ன, ப்ராஜெக்ட் டைம் என்னன்னு அவுட்லைன் பண்றது பழனியப்பன். வெங்கடாசலத்தின் பணி சம்பளப் பட்டியல்.  பொது நிர்வாகம், கணக்கு வழக்குகளை நிர்வகித்தல் ஆகியன. 

 

ஹெல்த்கேர் (EAI) ஒருங்கிணைப்பிற்கான மென்பொருள், .Net, Open, source, மென்பொருள் உற்பத்தி, ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மொபைல் மென்பொருள் மற்றும் 24x7  சேவையில் ஈடுபட்டிருக்காங்க. இப்ப புதுமையா சில அப்ளிகேஷன்ஸ் தயாரிச்சிட்டிருக்காங்க. வாய்ஸ் ஓவர் ஐபி. (VOIP) அமெரிக்காவுலேருந்து லோகல் மாதிரி பேசலாம். இண்டர்நெட் டெலிஃபோன் மாதிரி உபயோகிக்கலாம். சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.  

 

WBC ல 80 பேர்வேலை செய்றாங்க. ஸ்டாஃபுக்கு 80,000 வரை சம்பளம்.பி எஃப் க்ராஜுவிட்டி ஈ எஸ் ஐ எல்லாம் உண்டு.மெட்ராஸ் கார்ப்பொரேட் கம்பெனிகள் மாதிரி நிர்வாகம் நடக்குது. 

 

காலேஜோட டை அப் எடுத்து ஆனந்தா காலேஜ், அழகப்பா யூனிவர்சிட்டி ,உமையாள் ராமனாதன் காலேஜ் போக லோகல் டேலண்ட் டெவலப்மெண்ட் ல அக்கறை எடுத்து வொர்க்‌ஷாப் நடத்துறாங்க. பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டும் இல்ல. சமூகத்துக்கும் பங்களிக்கும் எண்ணம் இருக்கு

 

யாரையுமே இளக்காரமா பேசுறதில்லை, திறமை உள்ளோரைப் பாராட்டுறது. எந்த உதவி கேட்டாலும் தன் நேரத்தைச் செலவழித்துத் தகுந்த உதவி செய்வது, வேலைவாய்ப்புக்கு உதவி செய்வது போன்றவை ஒரு நல்ல நெட்வொர்க்கை உருவாக்குச்சு

 

இளைய தலைமுறை தொழில் முனைவோரா வெங்கடாசலத்தின் மகள் அங்கேயே ட்ரெயினிங் எடுத்து அங்கேயே கம்ப்யூட்டர் படிக்கிறாங்க. புதுசா தொழில் பண்றவங்களுக்கு இவங்க சொல்ற ஆலோசனை என்னன்னா ஒரு தீராத தாகம் வேணும். நூறு சதம் ஈடுபாடு இருக்கணும். ரொம்ப க்ரியேட்டிவா செய்தா, யூனிக்கான ஐடியாஸ் இருந்தா பணம் தேடி வரும். தொழில் தர்மத்தை சரியா பின்பற்றணும்.  சரியான முறையில் பிசினஸில் கடனைத் திருப்பிக் கொடுக்கணும். முக்கியமா தேடல்தான் தேவை..

 

.தொழில் ஆரம்பிக்கணும்னா பயப்படவே கூடாது. திட்டமிடல் முக்கியம் சாஃப்ட்வேர் ப்ராஃபிட்டபிள் பிஸினஸ். சர்வீஸ் ஓரியண்டடா நிறைய தொழில்கள் வந்துட்டே இருக்கும் சர்வீஸ் செக்டார்ல கோஆர்டினேட் பண்ணா ரொம்ப நல்லா செய்யலாம்.  எந்தத் தொழில் ஆரம்பிச்சாலும் அந்தத் தொழிலைப் பத்தி நல்ல தெளிவு இருக்கணும். தன்னம்பிக்கையோட செய்யணும். ”எங்க அப்பா அம்மாவோட ஆலோசனையோடதான் கூட்டா ஜெயிச்சோம். எனவே முன்னோரைத் துணைக் கொள்ளுங்கள் ”என்கின்றார்கள் இந்த இணையர்கள் !!!.



டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்
 

5 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    பாராடடுவோம்

    பதிலளிநீக்கு
  2. நல்ல உழைப்பாளிகளை அறிமுகம் செய்தமைக்கு உங்களுக்கு நன்றி. அவர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...