எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.

361. வர்ணக்கோமாளி - அதி கோமாளித்தனமாகக் காரியம் செய்பவர்களைக் குறிப்பிடும் வார்த்தை. இருக்கும் வர்ணத்தை எல்லாம் கோமாளி முகத்தில் அடித்துக் கொள்வதைப் போலக் கிறுக்குத்தனமாக எல்லாப் பக்கமும் பேசித் திட்டு வாங்குபவர் இவர். சமய சந்தர்ப்பம் தெரியாமல் காமெடி செய்பவரையும் குறிக்கும்.

362. பாடாவதி. - பயனற்றவர்., சுமார். உருப்படாதவரைக் குறிப்பது.

363. சர்வ பாடாவதி - எக்ஸ்ட்ரீம் பாடாவதி. சுத்த வேஸ்ட் என்பதைப் போல. எதுக்கும் லாயக்கில்லாதவர் எனச் சொல்வது.

364. திருகுதாளம் பிடிச்சது - எந்த விஷயத்தையும் ட்விஸ்ட் செய்து விடுபவரைக் குறிப்பது

365. தீசப் பிடிச்சது. - நல்லெண்ணம் அற்றவரைக் குறிப்பது. தீசல் என்றால் தீய்ந்து போதல் ஒரு பொருள் அதி உஷ்ணத்தால் தீய்வது போல அடுத்தவரைப் பார்த்து அதீதமாகப் பொறாமைப்படுபவரைக் குறிப்பது.

366. பூதிப்படையில. - ஒரு விஷயத்தைப் பற்றிய சரியான தெளிவில்லாமல் அடித்து விடுவது. குத்து மதிப்பாகச் சொல்வது.

367. வெகண்டை - தேவையில்லாமல் கிண்டல்/நக்கல் செய்பவரைக் குறிப்பது.



368. எகனை மொகனை - எதுக்கெடுத்தாலும் பதிலுக்குப் பதில் எதிரும் புதிருமாகப் பேசுவது. எதுகை மோனையாகப் பேசுவது என்பது மதிக்காமலோ கிண்டலாகவோ பேசுபவரைக் குறிப்பிடப் பயன்படுது.

369. ஐயறவு.- வெறுப்புடன் கூடிய சந்தேகம்.

370. செக்குமாடு.- செய்த செயலையே திரும்பத் திரும்பச் செய்பவரைக் குறிப்பது.

371. அரங்கத்தனம் பிடிச்சது - ராட்சசத்தனமாகச் செயல்புரிபவர்களைக் குறிப்பது.

372. கொரக்களி - கெண்டைக்கால் சதைப் பிடித்துக் கொள்வது கொரக்களி. ஆனால் ஒரு செயலைச் செய்யத் தகராறு செய்பவனையும் கொரக்களி பிடிச்சவன் என்பார்கள்.

373. நகட்டிக்கிட்டு இருக்கது - ஒரு வேலையும் செய்யாமல் ஏமாற்றுவது அது போக அடுத்தவர் செய்யும் வேலையைக் கிண்டல் அடிப்பது.

374. பொசுபொசுத்தது - ஏதாவது வேலை சொன்னால் என்னை மட்டும் ஏன் செய்யச் சொல்றே என்று பொறுமுவது. , பொறுமிக்கொண்டே இருப்பது. பொறாமையால் கோவத்தோடு அலைபவர்களையும் குறிக்கும்.

375. அடி இது காலக் கூத்து - ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் நடந்தால் பெரியவர்கள் கூறுவது.

376. பைத்தாரன்/பைத்தாரிச்சி. - பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபடும் ஆண்/பெண்ணைக் குறிப்பிடுவது.


377. சங்காத்தம் - சகவாசம். சங்காத்தமே வேண்டாம் என்றால் உன் சகவாசமே வேண்டாம் என்று அர்த்தம்.

378.அட. ஒம் பொண்டாட்டி பொண்ணாப் பெற - சின்னப் பிள்ளைகளைப் பெரியவர்கள் கிண்டலாகச் சொல்வது. புண்ணியமாப் போகும் அப்பச்சி தண்ணீ மோந்து தா எனக் கேட்பார்கள். பிள்ளைகள் கொடுத்தவுடன். அட ஒம் பொண்டாட்டி பொண்ணாப் பெற என்பார்கள். இதைக் கேட்கும் குழந்தைகள் சிணுங்கிக் கொண்டே ஓடும்.

379. அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தரமாட்டா. - ஈவு இரக்கமற்று இருப்பவர்களைக் குறிப்பது.

380. செல்லம் கொஞ்சி வாழைக்காய் செருப்பைத் தின்னுட்டு வார் வார்னுச்சாம் - எந்த வேலையையும் பொறுப்பாகச் செய்யாமல் ஓவராகச் செல்லம் கொஞ்சும் குழந்தைகளைப் பெரியவர்கள்  இப்படிச் சொல்லிக் கிண்டலடிப்பதுண்டு.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

4 கருத்துகள்:

  1. வித்தியாசமான வார்த்தைப் பிரயோகங்கள்....

    பதிலளிநீக்கு
  2. //அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தரமாட்டா.// அடுத்த ??

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட் சகோ

    நன்றி பாஸ்கர். அப்பிடியா. அறுத்த கைக்குன்னு கேட்ட ஞாபகம். அடுத்த கைக்கு அப்பிடின்னும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...