எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 ஆகஸ்ட், 2016

மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.

861. மெல்லத் தூறிக் கொண்டிருக்கிறது மழை. இதழ்கள் உதிர்வதுபோல் என்னைத் தொட்டுத்தொட்டுப் புல்லரிக்கவைக்கிறது. எந்தத் தாழ்வாரமும் வாகாய் இல்லை ஓடி ஒளிய.

ஒரு வைக்கோல்போரின் மேல் அமர்ந்தும் விடுதிக் கட்டிடங்களைச் சுற்றியும் கைகள் விரித்து அலைந்து கெபியில் ஒண்டிக் கொண்டதும் அதில் சிற்றருவிகளாய்த் தெறித்த சாரலும் மரங்களின் மேலிருந்து மணிகளாய் உதிர்ந்த மழையும் தாவணியில் நீரலையைச் சரியவிட நானே காடாய் மரமாய் மலையாய் உன்மத்தம் பிடித்து ஊறிக் கிடந்ததும் ஏனோ நினைவில் வர கூச்சம் விட்டு நடக்கத் துவங்குகிறேன்.

செல்லுமிடமெல்லாம் சிரசில் முத்தமிட்டுத் தோள்பற்றிக் கைவழி வழிந்து பிடித்து என்னைத் தொடர்ந்து வருகிறான் அவன். வீடுகளுக்குள் உறைந்து கிடக்கிறது ஊர்.

எங்கள் ராஜபாட்டையில் மழைப்புரவியும் நானும். அங்கங்கே அகலக் கால் விரித்து அவன் அடர்கோபம் கொள்ள கடிவாளமிழந்த கோமகளாய்க் கைவசம் சேணம் மிச்சம். பூந்தூறலாகக் கோதையாய் நான் அவனை மார்பில் சூட மெல்லத் தன்வசம் இழந்து முணுமுணுக்கிறான் காதோரம். மெல்ல நட மெல்ல நட என்று.

கிசுகிசுக்கும் அவன் குரலைக் கன்னத்தில் திப்பி திப்பியாய் வாங்கி உரத்துக் கூவுகிறேன் எதிரொலிக்கிறது எங்களுக்கான பாதையில் நான் விரித்த வார்த்தைகள். மீண்டும் மீண்டும் வா... ஐ லவ் யூ மழை ராட்சசா... :)


862. dekh bhai dekh( Sushma Seth) , zaban sambalke ( Pankaj Mohan/Kapoor), nukkad ( Shah Rukh Khan), Junoon ( Kitu Kidwani), Shanthi ( Manthra Bedi).. ithu 5 m 1995 la iruntha top 5 hindi serials.. whom do u like the most.. ( yaraith theriyuthoo ilaiyoo.. ellarukkum Manthravai therinchurukalam..lol )

863. ATTRACTION ..> DISTR(U)ACTION.

864. 5000 பேரையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறதா..

865. பஜ்ரங்பலியின் வாலை விட அதிகமா நீளுதே ப்ளாக் லிஸ்ட்



866.சாட்பாக்ஸ்களின் வெளிர்நீல அடர்நீல கலர்களுக்கு ஏதும் அர்த்தம் இருக்கா. சிம்பாலிக்கா ??

867.எல்லாப் பறவைகளையும் ஒரே கூண்டில் அடைக்க முடியாது.

868. இரு துருவங்களுடன் நட்பானால் ஈர்ப்பு மையமும் கைவிட்டுப் போகும்.

869. உண்மைக்கு முகமூடி தேவையில்லை.

870. எதுக்கோ கோவம்
எதுக்கோ சந்தோசம்
ஒன்றை மறந்து இன்னொன்றில்
பராக்குப் பார்க்கும் பிள்ளை..
முகநூலின் ஆட்டத்தில்.

871. முகநூல் தூக்கத்தைத் திருடுகிறதா..
.

.சில சமயம் விழிப்பு வரும்போது முகநூல் பார்ப்பதுண்டு.. இதுவும் சில சமயம் போரடிக்கிறதென்று தோன்றுகிறது.. அதே நண்பர்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள், புகைப்படப் பகிர்தல்கள், ஸ்டேடஸ் மெசேஜுகள். அரசியல், கவிதை, சினிமா, ஒரண்டை, வம்பு வழக்கு இத்யாதி இத்யாதி இருந்தும்..
.
.
ஆனால் மற்ற புத்தகங்கள் எப்போதும் அலுப்பதேயில்லை..
.
.
. :) தப்பான முடிவுக்கு வந்திராதீங்க.. நான் நாளைக்கும் முகநூல் வருவேன்.. திடீரென ஒரு கவிதையோ ஸ்டேடசோ பகிர தோன்றினால்.. அல்லது உங்களில் யாரையேனும் பார்க்கத் தோன்றினால்.

872. SARVESHU KALESHU MAMANUSMAR.. ( சதா சர்வ காலமும் நாமஜெபம்..)

873. எனது ”சூலம்” சிறுகதைக்கு 2016 திருக்குறள் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு வழங்கிய பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்துக்கு நன்றிகள். இது தற்போது வெளியான எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இடம்பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி !. :)

874. ஓ என்பதும் ஓஹோ என்பதும் திடீரென்று அந்நியமாக்கிவிடுகிறது :) 

875. நான் தினம் படிக்கும் புத்தகம்..
,
,
, முகப்புத்தகம்.

எவ்ளோ தரம் கண்ணாடில பார்த்தாலும் நம்ம முகம் நமக்கு ஞாபகம் இருக்காது.. அது போல எவ்ளோ வருஷம் படிச்சாலும் முடியவே மாட்டேங்குது முகப்புத்தகம்.. :)
நோ நோ கொலை வெறி மக்காஸ்.. HAPPY WEEKEND.

876.  இறந்த காலத்தை எழுதினால் இருந்தவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். நிகழ்காலத்தை எழுதினால் இருப்பவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். இதென்னடா.. கவிஞர்களுக்கு வந்த சோதனை.. :) கனவுக் காலத்திலேயே உலவி வருபவர்களுக்கு எதிர்காலம் உண்டா..:)

877. மனைவிகள் தோழிகளாகும்போது...
.
.
தோழிகள் காதலிகளாகிறார்கள்.


878. அவளா சொன்னாள்...

பளேர்னு அறைஞ்சாக் கூட சில விஷயங்கள் புத்திக்கு உறைப்பதில்லையே ஏன். ?

879. Fb :- whats on your mind ?
me :- ore blank aa irukku. lol. daily ithe question ee kekuriyee bore adikala onakku ... hehe.

880. HAPPY FRIDAY, WEEKEND, அப்பிடின்னெல்லாம் சந்தோஷமா ஸ்டேடஸ் போடுறாங்களே..

.
.நமக்கு வாழ்க்கையைக் கொண்டாடத் தெரிலயோ.. :P

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 
 
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும். 


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...