ராதையாய் நான் க்ரீடை செய்ய
ஊன்மொத்தம் நீ என் உயிர்ச்சந்தமும்
நீ
தீஞ்சுவைக் கண்ணன் நீ தேன் வசந்தமும்
நீ
வள்ளியாய் நான் ஆட அந்தத்
தேனூத்தும் நீ தினைப்புனமும் நீ
வேல் முருகன் நீ வினைப்பயனும் நீ.
சீதையாய் நான் சேர அந்த
மான் கனவும் நீ மையல் நினைவும் நீ.
திரு ராமன் நீ தீ கர்ப்பமும் நீ
ஹெராவாய் நான் மிதக்க அந்த
ஒன்பதாம் மேகம் நீ ஒளி மைந்தனும் நீ
இளவரசும் நீ இடி முழக்கமும் நீ.
ஆண்டாளாய் நான் உருக அந்தத்
திருப்பாவை நீ திருமாலும் நீ
உயிர்கொடுத்தவன் நீ உருகிச் சேர்ந்தவன்
நீ.
ஐந்தல்ல ஆயிரம் எடுத்தாலும் எந்தன்
பிறவியின் பெரும்பயன் நீ பெறற்கரும்
பேறும் நீ
மனதின் மறுஉரு நீ. மறுபடி இணைபுகு
நீ.
டிஸ்கி :- ஏர்வாடி திரு இராதாகிருஷ்ணன் கடந்த நாற்பதாண்டுகளாக நடத்திவரும் கவிதை உறவு இதழுக்காக ”என் கணவர்” ஆதிரா முல்லை அவர்கள் கேட்டதற்காக என்ற தலைப்பில் எழுதிய கவிதை இது.
ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!