செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய். - ஒரு பார்வை.

அழகான நாவல் ஒன்று படித்தேன் சமீபத்தில். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாட்ஸப் , ஃபேஸ்புக் உலகத்தில் பெரும்பாலும் ஷேர்ஸ் செய்தே வாழும் இளையதலைமுறையினர் நடுவில் லெக்ஷ்மி கருப்பையா என்ற இளவயது எழுத்தாளர் மிக அருமையான நாவல் ஒன்றைப் படைத்துள்ளார். ஆன்லைனிலும் இந்நாவல் படிக்கக் கிடைக்கிறது.

மிக மிக அருமையாக ஒரு காதல் கதையை மென்மையாக தன்மையாகக் கொண்டு சென்றிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையின் எண்ணப் போக்கு, காதல், லட்சிய வேட்கை, திருமணம் சம்பந்தமாக இருமனத்திலும் ஏற்படும் நெருக்கடிகள் ஆகியவற்றைச் சொல்வதால் இந்நாவல் பிடித்தமானதாகிறது. இது சீக்கிரம் புத்தக வடிவிலும் வெளிவரப் போவதால் எனக்குப் பிடித்த சில வரிகளை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன்.

முதலில் கதைச் சுருக்கம். கதாநாயகி அனு ஹெச் ஆராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவள். மிகப் புத்திசாலியான அவளுக்கும் அவளது கல்லூரித் தோழன் பிடிவாதக்காரன் அர்ஜுனுக்கும் ஏற்படும் மெல்லிய காதல் , தடைகள், திருமண ஏற்பாடுகள், நடுவில் சில நெருக்கடிகள் என்று மனம் செல்லும் பயணத்தைச் சொல்லிச் செல்கிறது கதை.///ஆயா வடை சுட்ட கதையில் இருந்து முல்லா கதை வரை கேட்டு படித்து சிரித்து வளர்ந்த நான் எழுதுகிறேன். எனது சிறுவயது கிறுக்கல்களை, விளம்பரப்படுத்திய எனது முதல் தூதர் என் தாயாலும், கிறுக்கல் காயிதங்களை குப்பையாக்காமல், கையெழுத்துப் புத்தகங்களாகப் பொத்திப் பாதுகாத்த என் தந்தையாலும் இதோ, இன்று உங்கள் முன் நான் என் முதல் கதையுடன், தயக்கங்களைத் தாண்டி நிற்கிறேன்.///

என்று கலக்கலாக ஆரம்பித்திருக்கும் இதுதான் என்னை மிகவும் வசீகரித்த முதல் பாரா. அப்புறம் இவர் அடுத்த நாவலும் எழுதி அதுவும் ஆன்லைனில் பரபரப்பாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம். இரண்டின் இணைப்புகளையும் கேட்டுப் பகிர்கிறேன். :)

அடுத்து கதை நாயகன் அர்ஜுன் சொல்வதைப் படித்தவுடன் சிறிது நேரம் நெகிழ்ந்துவிட்டேன் .//// அர்ஜுன், அனுவுடன் நேருக்கு நேர் வந்து அவள் முகத்தைக் கையில் எடுத்து, அனு நீ என்னை நேசிக்கிற அளவுக்கு நான் உன்னை நேசிக்கலை, உன்னை மாதிரி என்னால மனசுல இருக்கிறத கண் வழியா உணர முடியாது. இந்த கல்யாணத்திற்கு நேர்மையாய் இருக்க இன்னும் நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். உன்னோட லவ்க்கு நான் வொர்த்துன்னு உனக்கு இன்னும் தோணுதா. ? என்றான்////


அனுவின் சகோதரன் விக்கி அர்ஜுனிடம் பேசும் இடமும் சகோதர பாசத்தின் வெளிப்பாடாக இருந்தது. /// எங்க அக்காகிட்ட நான் நிறையா சண்டை போடுவேன். ஆனா அதுக்காக அவ ஹர்ட் ஆனா என்னால சந்தோஷப்பட முடியாது மாமா. தயவுசெய்து என்னைத் தப்பா நினைக்காதீங்க மாமா “ என்றான் விக்கி கண் கலங்கியபடி. ///

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டுன்னு பாட்டு உண்டு. ஆனா சேலை கட்டினா முத்தம் அப்பிடின்னு ஒரு தனி கான்செப்ட்ல காதலர்கள் சீண்டிக் கொள்வது அழகு.

க்ளைமாக்ஸில் அர்ஜுன் அனுவிடம் பேசும் வசனம் செம ஷார்ப். உண்மையிலேயே அன்றைய ஆண்மகன்களுக்கான க்ளாசிக் உதாரணம் /// நான் ரொம்ப அடமெண்ட், ரொம்ப அரகெண்ட், நிறைய கோபம் வரும். என்னைச் சுத்தி எல்லாம் எனக்குப் பிடிச்ச மாதிரி பர்ஃபெக்டா இருக்கணும். ம்ஹூம் என்றவன் மெலிதாக சிரித்துக் கொண்டே ஆனா நான் பர்ஃபெக்டா இருக்க மாட்டேன் .. என்றவன் அவளைக் கூர்மையாகப் பார்த்து இதெல்லாம் உனக்குத் தெரியுமா அனு ? என்றான்.

பாச்சிலர்ஸ் பார்ட்டி, திருமணத்துக்கு முன்பே அர்ஜுனின் வீட்டில் அனு தங்குவது என்று மிக போல்டாக எல்லாவற்றையும் சரளமாகப் பகிர்ந்திருப்பது வித்யாசம். நிறைய ஒற்றுப் பிழைகள், சந்திப் பிழைகள் இருக்கு. ஒரு நல்ல எடிட்டிங்க் தேவை. இதை நூலாக வெளியிடும்முன் இம்மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தினால் மிக அருமையான நாவல் நமக்குக் கிடைக்கும். இன்னும் தொடர்ந்து பல்வேறு சப்ஜெக்டுகளில் லெக்ஷ்மி கருப்பையா எழுதிப் புகழ்பெற வாழ்த்துகிறேன்.

க்ளைமாக்ஸ் என்னன்னு கேக்குறீங்களா.. புக்கா வெளிவரவுட்டு படிச்சுத் தெரிஞ்சுக்குங்க. இந்த ஜனவரி 2017 இல் புக்கா வந்துடும். :) அட்வான்ஸ் வாழ்த்துகள் லெக்ஷ்மி :)

இந்த இணைப்பிலும் படிக்கலாம். !

https://www.wattpad.com/story/58708847
https://www.wattpad.com/story/67583891


7 கருத்துகள் :

Nagendra Bharathi சொன்னது…

அருமை

மீரா செல்வக்குமார் சொன்னது…

அப்படி ஒரு சஸ்பென்ஸ்...
உண்மையில் இப்போது எழுதுபவர்கள் மிக அழகாக எழுதுகிறார்கள்..ஆனால் சந்தைப்படுத்துதலில் தான் கவனமில்லை என்பேன்..
பாக்கெட் நாவல்களையும்,மதுரை பெரியார் நிலையத்தில் டைம்பாஸ் எனச்சொல்லி 10 ரூபாய்க்கு 4 நாவல்களையும் தேடிப்படித்தது போல் இப்போது இல்லை...
சில நேரம் நினைத்துக்கொள்வதுண்டு...அந்தக்கால எழுத்தாளர்கள் அதிர்ஸ்டசாலிகள் மொக்கை எழுத்தாக இருந்தாலும் வாசித்தோம்,..இன்றைய எழுத்தாளர்களுக்குத்தான் எத்தனை சிரமங்கள்...அதையும் தாண்டி எழுதும் அவர்கள் பாராட்டுக்குறியவர்கள் எனில் சிலாகிக்கும் உங்களைப்போன்றோர் வணங்கத்தக்கவர்கள்....வாழ்த்துகள்... இருவருக்கும்...

Lakshmi KR சொன்னது…

நன்றி அக்கா!!.ஆமா எழுத்து பிழை நிறைய இருக்கிறது.முதல் நாவல் அல்லவா..திருத்தி கொண்டே இருக்கிறேன்.இன்னும் சிறப்பாக எழுத நிச்சயம் முயற்சிக்கிறேன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி.

பரிவை சே.குமார் சொன்னது…

வாசிக்கிறேன் அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி சகோ

சரியா சொன்னீங்க செல்வா. கருத்துக்கு நன்றி

சிறப்பா செய்ங்க. புக்கா கொண்டு வாங்க லெக்ஷ்மி

நன்றி வெங்கட் சகோ

நன்றி குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...