எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 பிப்ரவரி, 2010

ஒரு மரம் ஒரு நதி

ஒரு நந்தவனத்தில் பெயர்த்து நட்ட மரமாய்
கரையோரம் அவள்...
என் அழுக்குகளையும் குப்பைகளையும்
சுழற்றிக்கொண்டு அவள்
வேர்க்காலைத்தழுவியபடி நான்...
சிலசமயம் அவளும் என் மேல்
குப்பை போடுவாள்., இலையாய்.,
கிளையாய்., பூவாய்., காயாய் .,

வெய்யில் நேரம் தலை காய
வைக்கும் ராட்சசியாய்...
சாயங்காலம் பறவைச்சத்தத்துடன்
சலசலப்பாய்ப் பேசுவாள்...
நானும் சலசலப்போடு
பதில் சொல்லுவேன்...


அதிக ஆசை வரும் நாட்களில்
அவள் இடுப்புத்தண்டு வரை
நனைத்து ஓடுவேன்..
அவளும் கிளைக்கரங்களால்
ஆசையோடு அணைப்பாள்..

கூழாங்கற்களை அவளுக்கு
கொலுசாய் அணிவிப்பேன்..
எனக்கு அவள்
பூக்களால் மாலையிடுவாள்...

பறவைகளுக்கு கூடாயும்
மிருகங்களுக்கு வீடாயும்.,
உணவாயும் அவள்..
மனிதர்களும்., மாடுகளும்.,
லாரிகளும் என்னில் குளிப்பது
அவளுக்கு கோபம் விளைவிக்கும் ..
கிளைக்கையை அசைத்துக்
கோபிப்பாள் ஊடலாய்...
இலைவிரல் முறிப்பாள்...

என் குளுமையை தண்ணென்ற நிலவில்
அவளும் கண்மூடி அனுபவிப்பாள்..
ஆண்மை முரசடிக்கும்
என் அலையில் மயங்கி...
அதிகாலை ஆரத்தழுவி சேர்ந்து
என் முரட்டுக்கை பிணைப்பாள்...

வெய்யில் விரிய விரிய
அவள் சுறுசுறுப்பாய் ..
நான் விறுவிறுப்பாய்..
எங்கள் வேலைகளில் மும்முரமாய்...

கடுங்கோடையில் நாவரள
நான் குறுகிவிடுகையில்
என்னைக்காணா ஏக்கத்தில் அவள்
விரலெல்லாம் சுள்ளீபோல் சருகாகி....

அவளுக்குக் காய்ப்பேறிய பசலை...
எனக்கு மண் படிந்த பசலை...

பின் மதகு திறந்த என்
ஓட்டத்தில் அவளும் புஷ்பித்து ...
மெல்லிய காற்றில் நானும் அவளும்
ஒருவரை ஒருவர்
ரசித்தபடியே அருகருகே...

இன்பம் என்பது வேறென்ன...???

68 கருத்துகள்:

  1. காதலர் தினம் சந்தோஷமாய் ஆரம்பிக்குது.மரமும் நதியும் காதலர்களாகி தேனுவின் கையில் கவியாகி எங்கள் கண்களுக்கு விருந்தாகி....!

    பதிலளிநீக்கு
  2. அட மரமும், நதியும் காதலர் தினம் கொண்டாடபோகுது போல, வாழ்த்துக்கள். இந்த
    காதல் (கவிதை) அழகு.

    பதிலளிநீக்கு
  3. //கடுங்கோடையில் நாவரள
    நான் குறுகிவிடுகையில்
    என்னைக்காணா ஏக்கத்தில் அவள்
    விரலெல்லாம் சுள்ளீபோல் சருகாகி....//

    அடா அடா அடா மரம், ஓடையின் உறவில் இருக்கும் காதலை இவ்வளவு அழகாக இது வரைப் படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  4. நீங்கதான் மக்கா க்ரேட் நேற்று மதியம் வாங்கின விகடன் இணைப்பை நேற்று இரவுதான் படித்தேன் உங்க வலைத்தளம் பார்த்தபின் ..

    என்னுடைய கவிதையே பிரச்ரமானது போல் மகிழ்ந்தேன் மக்கா

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஹேமா உங்க அன்பான காதலர் தின வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் சைவக்கொத்துப்பரோட்டா நன்றி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  7. நன்றி புலவன் புலிகேசி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  8. //அவளுக்குக் காய்ப்பேறிய பசலை...
    எனக்கு மண் படிந்த பசலை...

    பின் மதகு திறந்த என்
    ஓட்டத்தில் அவளும் புஷ்பித்து ...
    மெல்லிய காற்றில் நானும் அவளும்
    ஒருவரை ஒருவர்
    ரசித்தபடியே அருகருகே...

    இன்பம் என்பது வேறென்ன...??? //

    இன்பம் என்பது ஒரு வரையறுத்து சொல்ல முடியாத ஒரு இனிய நினைவு தான்...

    வாழ்த்துக்கள் தேனம்மை...

    பதிலளிநீக்கு
  9. நாங்களும் மரத்தையும், நதியையும் பார்த்தப்படி செல்கிறோம். ஒரு போதும் நீங்கள் யோசித்தப்படி நாங்கள் யோசிக்கவில்லை. கவிதை அர்த்தம் பொதிந்த அழகு. இயற்கையை நேசிப்போம்.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நல்லாருக்குங்க. காதலர் தின special-ஆ?

    பதிலளிநீக்கு
  11. பின் மதகு திறந்த என்
    ஓட்டத்தில் அவளும் புஷ்பித்து ...
    மெல்லிய காற்றில் நானும் அவளும்
    ஒருவரை ஒருவர்
    ரசித்தபடியே அருகருகே...

    ............. அக்கா, இந்த வரிகளை படிக்கும் போதே, சிலு சிலுனு காத்துல இருக்கிறாப் போல இருக்கு. அருமை.

    பதிலளிநீக்கு
  12. அழகு, அற்புதமான கற்பனை வளம்.

    பதிலளிநீக்கு
  13. அண்ணாமலையான் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  14. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இசைத்து இன்பம் சேர்ப்பது போன்றது கோபி அது

    பதிலளிநீக்கு
  15. நன்றி தமிழ் உதயம் உங்கள் இடுககள் அனைத்தும் சமூக நலம் நாடுபவை வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. நன்றி மதுரை சரவணன் உங்க தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  17. நல்லாருக்கா மோகன் குமார்

    ஆமாம் காதலர் தின ஸ்பெஷல்...!

    பதிலளிநீக்கு
  18. சிலுசிலுவென குளிரடிக்குதா சித்ரா உங்க ரெண்டு பேர் போட்டோவைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது இதுதான் மா

    பதிலளிநீக்கு
  19. நன்றி ஷஃபி உங்க வாழ்த்துக்கு என்ன ரொம்ப நாளா உங்களைக் காணோம்

    பதிலளிநீக்கு
  20. ச்சா எங்களுக்கு தோணாம போச்சே

    காதலர் தின சிறப்பு இதுவா

    பதிலளிநீக்கு
  21. இயற்கையின் காதல்..இயற்கையான காதல்.

    பதிலளிநீக்கு
  22. இந்த பார்வை புதுசு!
    அது குப்பை போடல.. மனசைப் போடுது..

    பதிலளிநீக்கு
  23. Wow fantastic !!!

    பின்னுறீங்களே மக்கா !

    காதலர் தின வாழ்த்துகள்!

    A perfect blend ! A river-love- tree

    பதிலளிநீக்கு
  24. வாவ்வ் காதலைப் பத்தி எவ்வளவு அழகா சொல்லிருக்கிங்க.ரொம்ப நல்லாயிருக்கு அக்கா!!

    பதிலளிநீக்கு
  25. காதலர் தினத்துக்கான ஸ்பெஷல் கவிதையா தேனக்கா?காதலர் தின வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  26. நல்லாயிருக்கு. வாழ்த்துகள்.

    நல்லாயிருங்க.

    பதிலளிநீக்கு
  27. காதலில் எத்தனை வகை!! மரமும், நதியும்கூட!! இயற்கையும் இன்பமாய் இருந்தாத்தானே மனிதர்களும் மகிழ்ச்சியாய் இருக்கமுடியும்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி ராம் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  29. நன்றி ரிஷபன் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  30. நன்றி நேசன்

    அட நீங்க வாழ்த்திட்டீங்க

    எனவே இது நிச்சயமா நல்லாத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  31. நன்றி மேனகா ஆமாம் மேனகா உங்களுக்கும் வாழ்த்துக்கள் மா

    பதிலளிநீக்கு
  32. நன்றி அகநாழிகை ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  33. ஆமாம் ஹுசைனம்மா நன்றி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  34. அச்சா! காதலர் தினக்கவிதையா?சூப்பர்.உங்க கவிதையின் வடிவம் வித்தியாசமானது.

    பதிலளிநீக்கு
  35. அருமையான காதலர் தின கவிதை.
    அழகான கற்பனை.

    பதிலளிநீக்கு
  36. ஆமாம் சாந்தி நன்றி சாந்தி உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  37. உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸிட்டிவ் அந்தோணி முத்து

    பதிலளிநீக்கு
  38. நன்றி முனியப்பன்சார் உங்க வாழ்த்துக்கு மிக நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  39. நன்றி ஸ்டார்ஜன் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  40. நன்றி அம்பிகா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  41. காதல் சங்கதி காதலோடு பேசுவது அருமைதேனக்கா...

    பதிலளிநீக்கு
  42. காதலர் தினம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது, சமகாலத்தில் இந்த காதல் படுத்தும் பாடுகளையும் பார்க்கும் போது உண்டான தாக்கத்தை விட தாங்கள் படைத்த இந்த படைப்பு தமிழ் உதயம் சொன்னது போல் இன்னும் பத்து வருடங்கள் ஆனால் என் மனதில் நிற்கும். மிக மிக மிக மிக அற்புதம்.

    பதிலளிநீக்கு
  43. இயற்கையின் வேலன்டைன் டே கொண்டாட்டம்

    அழகு, அருமை, அற்புதம்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  44. அக்கா ரொம்ம்ம்ப லேட் ஆயிடிச்சி...அருமையான காதல் அருமையான கவிதை... ரெம்ப நல்லாருக்கு அக்கா.. :)

    பதிலளிநீக்கு
  45. அருமையான கவிதை தேனம்மை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  46. அப்பப்பா... இதுபோல காதல் படித்ததே இல்லை.. அற்புதம் என்பது குறைவான வார்த்தை..

    பதிலளிநீக்கு
  47. நன்றி ஜோதிஜி உங்களோட உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  48. நன்றி விஜய் உங்க காதலர் தின கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  49. நன்றி சிவாஜி உங்க காதலர் தின கவிதையும் ஏக்கமும் வலிகளும் சுமந்து நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  50. நன்றி ராமலெஷ்மி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  51. நன்றி பட்டியன் உங்க வாழ்த்துக்கு மிக நீண்ட நாளாகி விட்டது நீங்கள் வந்து..

    பதிலளிநீக்கு
  52. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    நமக்குள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  53. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...