எனது பதிமூன்று நூல்கள்

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

காரைக்குடியின் அதலைக் கண்மாயைக் காப்பாற்றுவோம் - ஈதல் அறக்கட்டளை.

முகநூலில் திரு நாகப்பன் அவர்கள் (எனது மாமா ) பகிர்ந்திருந்த இதை ப்லாகிலும் பகிர்கிறேன். காரைக்குடியின் மிக மிக முக்கியமான விஷயம் அதன் தண்ணீர்.

எந்த ஊரில் எந்த ராஜாங்கத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு வந்தாலும் எவ்வளவுதான் பாப்புலேஷன் பெருகினாலும் காரைக்குடிக்கு வராது. காரணம் சம்பை ஊத்து. இந்தத் தண்ணீரின் காரணமாகவே காரைக்குடிக்கு வேலை நிமித்தம் வந்தவர்கள் வீடு வாங்கி செட்டில் ஆகிவிடுவதும் உண்டு.

அதே போல் சம்பை ஊற்றுத்தண்ணீர் சிறுவாணியை விட மிக ருசியாக இருக்கும்.  அதன் நீராதாரம் வழங்கும் ஐந்து கண்மாய்களில் ஒன்று அதலைக் கண்மாய். இதன் அருகே அதலைக் காளி என்ற அம்மன் கோயிலும் உண்டு

இந்தக் கண்மாயைத் தூர் வார முடிந்த அளவு பொருளுதவியோ உடலுழைப்போ நல்குங்கள். நீர் இருக்கும் வரை நீரும் இருப்பீர். :)

ஈதல் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவோம்.சிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மாநில மாநாட்டு அழைப்பிதழ்.


அதிகமில்லை ஜெண்டில்மேன்  & உமன். சுமார் 31 வருடங்களுக்கு முன்னான தமிழ்நாட்டு சிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மூன்றாவது மாநில மாநாட்டுக்கான அழைப்பை ஆவணப்படுத்தி இருக்கிறேன்.

சனி, 29 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ஜெயந்திரமணியின் எல்கேஜி அட்மிஷன் !


என் அன்பிற்கினிய தோழி ஜெயந்திரமணி மிக அருமையாக எழுதுவார். சிறுகதைகள் சொல்லும் விதம் தெளிவாகவும் அதன் மையக்கருத்து நச்சென்றும் இருக்கும். பொதுவாக நான் படித்த வரையில் குழந்தைகளின் நலனை மையப்படுத்தி இவர் எழுதிய ஆழ்துளைக்குழாய் சிறுகதை ஒன்றும் இக்கதையும் இவர் தொடர்ந்து குழந்தைகள் பற்றிய ( பெற்றோர்களுக்கான ) விழிப்புணர்வுச் சிறுகதைகள் படைக்கவேண்டும் என்ற என் எண்ணத்தை அதிகமாக்குகிறது. அதையே அவரிடம் கோரிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் :)

தொடர்ந்து எழுதுங்கள் ஜெயந்தி. உங்கள் வாசகியாக நானும் தொடர்கிறேன். :)

சாட்டர்டே போஸ்டுக்காக இவரிடம் கேட்ட போது இச்சிறுகதையை அனுப்பி இருந்தார். பள்ளி அட்மிஷனில்தான் எத்தனை வகைக் கதை படைக்கலாம். இது இன்னொரு கோணம். படித்து ரசிங்க. யோசிங்க. :)/////“நான் என்றால் அது அவரும் நானும்,

அவரென்றால் அது நானும் அவரும்”

சுய விவரம்

நான் தாங்க ஜெயந்தி ரமணி. பிறந்தது முதல் இன்று வரை (62

ஆண்டுகளாக) சிங்காரச் சென்னை வாசி. உங்களுக்கு ஒரு ரகசியம்

சொல்லட்டுமா? முழுநேர அக்மார்க் சென்னைவாசியாக இருந்தும் நான்

தண்ணீருக்கு கஷ்டப்பட்டதே இல்லை. இருங்க இருங்க சென்னையில

தான் தெருவுக்கு நாலு கடை இருக்கே எப்படி கஷ்டம் வரும்ன்னு நீங்க

யோசிக்கறது புரியறது. ஆனா நான் சொன்ன தண்ணீர் H2O. இப்ப

புரிஞ்சுதா.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

வியாழன், 27 ஏப்ரல், 2017

ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

ஈரோடு பெருந்துறை ராயல் பார்க்கில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் சில கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

ஓவியங்கள் பற்றி அதிகம் தெரியாது எனினும் ரசிக்கத் தெரியும். :)

பொதுமக்களுக்கும் நன்கு தெரிந்த பிகாஸோ, வான்கா ஆகியோரின் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன்.

இன்றைய நாளில் சில ஓவியங்கள் பல லட்சங்கள் விலை போவதாகச் சொல்கிறார்கள்.

சிலர் ஓவியங்களிலும் முதலீடு செய்கிறார்கள். ஓவியம் வாங்கி மாட்டுவது பெருமைக்கும் அழகுக்கும் செல்வத்துக்கும் கூட வழி வகுக்கிறது.

இந்த ஹோட்டல் ஓவியங்கள் யார் வரைந்தது எனத் தெரியாது. ஆனால் நன்கு ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் . எங்கேயாவது ஓரத்திலாவது பேர் தெரியுதா . நம்ம கண்ணுக்குத்தான் தெரியலையான்னு பார்த்தேன். ஆனா தெரிலதான்.

இது ரிசப்ஷனில்

புதன், 26 ஏப்ரல், 2017

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி.


சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி.

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி

 

”என்னுடைய வெற்றி மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் என் சகமனிதர்களின் வெற்றி கொண்டாட்டத்திற்குரியது” என்று அனைவரின் துணைக்கோடலையும் கைக்கொண்ட ஒருவரின் முன், தோல்வி துவண்டு போகாதா என்ன ? தோல்விகளைப் படிக்கட்டுக்களாக்கி வெற்றியெனும் சிகரம் நோக்கிப் பயணிப்பவர் வெறும் 34 வயது மட்டுமே ஆன ஸ்பினோஸ் நிறுவனத்தின் டைரக்டர் அபிராம சுந்தரி. ஃபார்மா மற்றும் பயோ டெக் இண்டஸ்ட்ரியில் நகரத்தார் பெண்களில் முதல் தொழில் அதிபர், இந்தியப் பெண்களில் முதல் முதலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டவர், உலகிலேயே மிக இளைய வயதிலேயே இத்தொழிலில் ஈடுபட்டவர் என்ற முப்பெரும் பெருமைக்குச் சொந்தக்காரர் அபிராமி.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

2ஆம் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகள்.

இரண்டாம் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளும் மலருக்கான கட்டுரைகளும் படைக்க விருப்பமிருக்கிறதா. பின்வரும் தலைப்புகளில் அனுப்பிப் பங்களிப்பு செய்யுங்கள். மெயிலில் வந்ததைப் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள். 

//////அன்புடையீர், வணக்கம்.

முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு கடந்த 2011ல் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த 3 நாள் மாநாட்டில் சுமார் 300 பேராளர்கள் பங்கேற்றனர். 

இப்பொழுது 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரும் ஜூன் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. விவரங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும்  என்று விரும்புகிறோம்.

நன்றி.

அன்புடன்
நா. ஆண்டியப்பன்
தலைவர்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.

மேலும் மாநாடு பற்றிய

விபரங்களுக்கு www.wtwc2.com என்ற இணையதளத்தை அணுகவும் .

கட்டுரைகள் அனுப்ப கடைசி நாள் 30.4.2017.


முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.

காரைக்குடியில் வீடுகளுக்கு விலாசப் பெயர் உண்டு. அதே போல் மிக அழகான பெயர்களாக முத்து விலாசம், லெக்ஷ்மி விலாசம், ராம விலாசம் ( இந்தப் பெயரில் ஒரு தியேட்டரும் முத்துப் பட்டணத்தில் இருந்தது. இப்போது மூடிக்கிடக்கிறது ) இது போல் காரைக்குடியிலும் சுற்று வட்டாரங்களிலும் ( கொத்தமங்கலம், ஆத்தங்குடி ஸ்பெஷல் ) ஆயிரம் ஜன்னலார் வீடு, தகரக் கொட்டகை வீடு என்று பல்வேறு அடையாளங்களால் சுட்டப்படும்.

இது முத்து விலாஸ் வீடு.
கானாடு காத்தானில் உள்ள ஒரு வீட்டை ஹெரிடேஜ் ஹோமாக மாற்றி இருக்கிறார்கள். இதன் பெயர் நாராயணா இன்ன்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

உலகப் புத்தக நாளுக்காக பள்ளி நூலகத்துக்கு வழங்கிய நூல்கள்.

உலகப் புத்தக நாளில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியை கோமதி ஜெயம் சிறுவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கினார். விடுமுறையைப் பயன் உள்ளதாகக் கழிக்க அது உதவும் என்று நானும் என் பங்களிப்பாக வீட்டில் இருந்த நான் வலைப்பதிவிலும் நூல் பார்வை எழுதிய நூல்களைத் தொகுத்து அளித்தேன்.

மொத்தம் 27 நூல்கள். தோராயமாக 2000 ரூபாய்க்குள் இருக்கலாம். இவற்றில் சில எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. சில பரிசாகக் கிடைத்தவை. சில நான்/என் குடும்பத்தார் வாங்கியவை.  எனது ஐந்து நூல்களை ஆசிரியை கோமதி ஜெயம் அவர்களுக்கும் , மூன்று நூல்களை மட்டும் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தேன். 

1. துரோணர் கதை
2. பஞ்ச தந்திரக் கதைகள்.
3. தெனாலிராமன் நகைச்சுவைக் கதைகள்.
4. மகுடம் பறித்த மாயாவி
5. ஒரு கிராமத்து மணம்
6. மாணவர்க்கு ஏற்ற நாடகங்கள்.
7. ENGLISH GRAMMAR COMPOSITION & LETTER WRITING.
8. உலகப் பொது அறிவு.
9. SUMIT ESSAY BOOK.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உலகப் புத்தக நாளில் தினமணிக்கும் தமிழ் ஹிந்துவுக்கும் சிறப்பு நன்றி.

உலகப் புத்தகநாளை ஒட்டி காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் கடந்த வியாழன் அன்று ( 20. 4. 2017 ) குழந்தைகளுக்கு வாழ்வியல் நீதிகளைப் போதிக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

கல்வியாண்டின் இறுதி நாளான அன்று ஒரு ஆசிரியையும் பணி ஓய்வில் செல்லவிருந்தார். அந்தப் பரபரப்புக்கிடையிலும் புத்தகம் வழங்கும் பணியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜ் அவர்களும், மற்ற ஆசிரியைகள் கோமதி ஜெயம் மற்றும் சித்ரா அவர்களும்.

சிறப்புத் தகவல் என்னன்னா அங்கே படிக்கும் பிள்ளைகள் பேச்சாற்றலில் சிறந்து விளங்க வேண்டும் என்று போடியம் ஒன்று புதிதாய் அழகாய்ச் செய்திருக்கிறார்கள். அதைக் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் அடுத்த கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து மாணவர்கள் அந்த போடியத்தின் முன் நின்று சிறப்பு உரையாற்றும் அளவு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தன் எதிர்பார்ப்பைத் தெரிவித்தார். இப்படி ஊக்கம் கொடுக்கும் ஆசிரியர்கள் இருக்கும் வரையில் பிள்ளைகளுக்கு என்ன குறை.சிறந்தோங்கி வளர்வார்கள் நிச்சயம்.

கோமதி ஜெயம் தன் வகுப்புப் பிள்ளைகளின் அந்த வருட செயல்பாடுகளைப் பாராட்டி நீதி நெறி அடங்கிய சில சிறுவர் புத்தகங்களை வழங்க என்னை அழைத்திருந்தார். அந்நிகழ்வு முடிந்ததும் கூட மாலையில் கைபேசியில் என்னை அழைத்து ஆறாம் வகுப்பு மாணவர்கள் என்றாலும் என் பேச்சைக் கவனித்து உள்வாங்கித் தன்னிடம் பாராட்டியதாகச் சொன்னார்.

மேலும் நேற்று ( 20. 4. 2017 )  ஒன் இந்தியா வலைப்பக்கத்திலும் இன்று ( 21. 4. 2017 ) தமிழ் இந்து தினசரியிலும், தினமணி செய்திப் பத்திரிக்கையிலும் புத்தகம் வழங்கும் விழா பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களை அனுப்பினார். 

ஆசிரியை கோமதி ஜெயம் அவர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும், மற்ற ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், தமிழ் இந்துவுக்கும், தினமணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகள். நலந்தா ஜம்புலிங்கம் சாருக்கு நன்றிகள்.

புத்தகங்களை வாசியுங்கள் வாழ்வை நேசியுங்கள். :) 

////Thanks to Dinamani for the news update. Thanks to HM Peter Raja sir, Gomathi Jeyam mam & Ramanathan chettiar municipal school teachers for making me a part of World Book Day Celebrations held at their school, yesterday. 😀 spl tx to Nalanthaa jambulingam sir


சனி, 22 ஏப்ரல், 2017

சாட்டர்டே போஸ்ட். பாத்திர மோசடி பற்றி எச்சரிக்கும் பகுத்தறிவு அண்ணாதுரை.

என் முகநூல் நட்பில் சமீபத்தில் இணைந்தவர் பகுத்தறிவு அண்ணாதுரை. தனது நச் என்ற கருத்துக்களால் என்னைக் கவர்ந்தவர். அவர் போடும் ஒவ்வொரு போஸ்டும் சுவாரசியமாக இருக்கும்.  ஓரிரு போஸ்ட்கள் பார்த்ததுமே அவர் பக்கம் சென்று படிக்கத் துவங்கினேன். சும்மா பவுண்டரி சிக்சர் என்று எல்லாப்பக்கமும் அடித்து ஆடுவார். எனது வலைத்தளத்துக்கு இவருடைய ஒரு பதிவாவது வாங்கிப் போடவேண்டும் என ஆசைப்பட்டுக்கேட்டேன். :) உடனே ஒப்புக் கொண்டு அனுப்பிவிட்டார்.

இவர் பற்றிக்  கேட்டபோது :)

////தற்குறி(ப்பு)
பகுத்தறிவு என்பெயர் அண்ணாதுரை கணவர்..
முற்றிலும் கிராமத்துப்பெண்.. பட்டயப் படிப்பு முடித்து சென்னையில் கொஞ்சநாள் வேலை பின்னர் தந்தை மரணம், திருமணம், இல்லறம், மகன்.. பிரபல்யன், மகள்.. பிரதான்யா.. சமீப காலமாகத்தான் முகநூல் பரிச்சயம்.. எழுத்துன்னு சொல்லிக்க பெரிதாய் ஏதுமில்லை.. நினைத்தவுடன் கவிபாடும் ஆசுகவியல்ல, கிடைத்த நேரத்தில் கிறுக்கும் ஆசுவாச கவி😊

தற்குறிப்பேற்றத்தில் உயர்வு நவின்றால் வஞ்சப்புகழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. அதனால் முடிச்சுக்கறேன்..////


உங்களுக்குப் பிடித்த விஷயம் பற்றி அல்லது ஏதேனும் குறிப்பான விஷயம் பற்றி மக்களுக்குச் சொல்லனும்னா என் ப்லாகுக்கு எழுதிக் கொடுங்க பகுத்தறிவு .

வாழ்வில் பல பாத்திரங்களை ஏற்று பக்குவமாய் நடப்பதாலோ என்னவோ பெண்களுக்குப் பாத்திரங்களின் மீது தனிப்ரியம்.. அழகழகான வடிவங்களில் அளவுகளில் பாத்திரங்களை வாங்கி அடுக்கி வைத்து ரசிப்பது பெரும்பாலான பெண்களுக்குப் பிடித்தமான விஷயம்..

ஒருவரை ஏமாற்ற வேண்டுமெனில் அவர்களின் ஆசையைத்தூண்டவேண்டும் என்னும் அடிப்படை விதிப்படி பெண்களின் பாத்திர ஆசையைப் பயன்படுத்திபணம் பறிக்கும் கும்பல் ஒன்றைப் பற்றித்தான் இப்போது சொல்ல வந்தேன்..

நகரில் ஒரு கடையைப் பிடித்துக்கொண்டு அலங்காரமாகப் பாத்திரங்களை அடுக்கினார்கள் முதலில்.. பின்னர் விற்பனை ஏஜண்டுகள் என்று சில பெண்களை அமர்த்தினார்கள்.. ஒருவர் 500 ரூ பணம் செலுத்தி ஒரு டோக்கன் வாங்க வேண்டும்.. அவருக்கு மூன்று டோக்கன்கள் வழங்கப்படும் . மூன்று டோக்கன்களையும் மூவரிடம் விற்கவேண்டும்.. அம்மூவருக்கும் ஆளுக்கு மூன்று டோக்கன்கள்.. அவர்கள் ஒவ்வொருவரும் மூவருக்கு விற்கவேண்டும்..

வியாழன், 20 ஏப்ரல், 2017

ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் புத்தக நாள் சிறப்பு நிகழ்வுகள்.

காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி வியத்தகு முறையில் வளர்ந்து வந்து சீராகச் செயல்படும் நகராட்சிப் பள்ளிகளில் ஒன்று. அந்தப் பள்ளி சிறந்தோங்கக் காரணமானவர் அதன் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜா என்றால் மிகையில்லை.

கிட்டத்தட்ட 200 மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளியின் இன்றைய ஸ்ட்ரென்த் 600. அதே போல் பொலிவான தோற்றத்தில் புதுக்கட்டிடம் சிறக்கிறது. மிடுக்கான, சிறப்பான ஆசிரியர்களும் அப்பள்ளியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். நேர்த்தியான சீருடையில் அணிவகுக்கும் மாணாக்கர்கள் அமைதி காக்கிறார்கள்.

நலந்தா புத்தக நிலையத்தில் இப்பள்ளியின் ஆசிரியர் திருமதி கோமதி ஜெயம் அவர்கள் தனது வகுப்பு ( ஆறாம் வகுப்புப் ) பிள்ளைகளுக்கு கல்வி ஆண்டின் இறுதி நாளான இன்று அவர்களின் அவுட்ஸ்டாண்டிங் திறமையைப் பாராட்டிப் புத்தகப் பரிசு வழங்க விழைந்து வந்திருக்கிறார்கள். நலந்தாவில் பல்வேறு புத்தகங்கள் வாங்கியபின் நலந்தா உரிமையாளர் திரு செம்புலிங்கம் அவர்கள் இப்புத்தகங்களை ஒரு எழுத்தாளர் மூலம் வழங்கலாம் என ஆலோசனை கொடுத்து என் பெயரையும் முன்மொழிந்து இருக்கின்றார். உடனே என்னைத் தொடர்பு கொண்டார் திருமதி  கோமதி ஜெயம் அவர்கள் . புத்தகம் வழங்கி உரையாற்ற சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவர்களின் இம்முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது என்றுணர்ந்த நான் உடனே ஒப்புக் கொண்டேன். உடனே நானும் என்னிடம் இருந்த சிறுவர் நூல்களைச் சேகரித்து சிறுவர்களுக்கு வழங்க எடுத்துக் கொண்டேன். ( 27 நூல்கள் )

சில மாதங்களுக்கு முன்புதான் என் சின்னத்தம்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க என் மாமாவும் அப்பாவும் அங்கே புத்தகங்கள் வழங்கிச் சென்றிருந்தார்கள்.  

மிக சந்தோஷம் தரும் நாளாக அமைந்தது இன்று. அத்தனை குழந்தைகளும் ஆர்வத்தோடு அமர்ந்திருந்தார்கள். பரிட்சையின் கடைசி நாளான அன்று சத்தம் ஏதுமே இல்லை. பள்ளி தூய்மையாகவும் இருந்தது. மிகக் கட்டுக்கோப்பான நிர்வாகம் & ஆசிரியர்கள் & பிள்ளைகள். எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் அவர்கட்கு. !

///Ramanathan chettiar school il book day kkaga sirappu virunthinaraga pangerpu. Tx to Nalantha Jambulingam sir, HM Peter Raja sir, and Gomathi Jeyam mam who invited me to give the book prize to students. ///

Book day special

தமிழாசிரியை சித்ரா அவர்களின் வரவேற்பு உரை. கோமதி ஜெயம் அவர்களை முன்னுதாரணமாக எடுத்துத் தானும் செயல்படப் போவதாகவும் அடுத்த ஆண்டு மாணாக்கர்கள் தாங்கள் பரிசு பெற்ற புத்தகத்தைப் படித்து அதன் கருத்துக்களை வகுப்பு ஆசிரியையான தன்னிடம்  சொல்லவேண்டும் எனவும், அது பற்றி விவாதிக்கலாம் எனவும் சொன்னார்.

தேனார் மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகம் விரைவில்.

 இந்த ஆண்டு கம்பர் விழாவின் போது உலகத்தமிழ் நான்காம் கருத்தரங்கம் கோட்டையூர் வள்ளி ஆச்சி இல்லத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது.

அதில் செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்று பங்களிப்புச் செய்திருந்தேன். திரு வெ. தெ. மாணிக்கனார் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்த மருதத்திணை என்ற ஆராய்ச்சி நூலையும்  இன்னும் அவர்கள் தொகுத்திருந்த நூற்கள் சிலவற்றையும் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்திருந்தேன். கிட்டத்தட்ட 97 பேர் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தார்கள் . அவை தொகுக்கப்பட்டு கபிலன் பதிப்பகத்தின் மூலம் முன்பே புத்தமாக்கமும் செய்யப்பட்டு அன்றே எங்களிடம் வழங்கப்பட்டன. ! நன்றி காரைக்குடி கம்பன் கழகத்தாருக்கு. !

என்னைப் பங்கேற்கத் தூண்டிய முனைவர் திருமதி லெக்ஷ்மி அவர்களுக்கும் நன்றிகள். வெ. தெ. மாணிக்கம் அவர்கள் பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க ஆசி வழங்கிய கம்பனடிசூடி திரு பழனியப்பன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். :) அங்கே கட்டுரை படிக்க நேர்ந்ததை மாபெரும் கௌரவமாகக் கருதுகிறேன். நன்றி அனைவருக்கும்  & முக்கியமாக என்னை வழிநடத்திய மாணிக்க பெரியப்பாவுக்கும்  மீனா பெரியம்மாவுக்கும் :)

என்னதான் நாம் தொகுத்தாலும் அவரது வாழ்க்கைத் துணைவியார் கூட இருந்து சொல்லியது போலாகுமா. தெய்வத்திரு வெ. தெ. மாணிக்கம் அவர்களின் துணைவியார் திருமதி மீனாக்ஷி ஆச்சி அவர்கள் ( இவர்கள் இருவரும் எனக்கு எங்கள் அம்மா வீட்டுப் பங்காளி முறையில் பெரியப்பா , பெரியம்மா ஆக வேண்டும். ). எனக்கு அவர்கள் பற்றிய சகலவிபரங்களையும் கொடுத்துதவினார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

புதன், 19 ஏப்ரல், 2017

நகர மலர் ( 7). ஒரு அலசல்.1976 இல் ஆரம்பித்து பல்வேறு புதுமைகளோடு ஒரு சில ”நகரமலர்”கள் கைக்குக்கிட்டின. அவற்றைப் பற்றிப் பதிவு செய்துள்ளேன். சிற்றிதழ்கள் வரிசையில் இவை நகரத்தார் சமூகக் கலை இலக்கியத் திங்களிதழ். முன் அட்டை உட்பக்கம், பின் அட்டை தவிர வேறு எங்குமே விளம்பரங்கள் இல்லை. 

”சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன் “

என்ற குறளைத் தங்கள் முத்திரை வார்த்தைகளாகப் பதித்துள்ளார்கள். முன் அட்டையில் குத்து விளக்கு லோகோவாக உள்ளது. ஆண்டுக்கட்டணம் 10/- ரூ. வெளிநாடுகளுக்குச் சந்தாக் கட்டணம் 11/- ரூ. இதன் பதிப்பாசிரியர் நா. இளங்கோவன். நிர்வாகி. இராம. ஆண்டியப்பன், சிறப்பு ஆலோசகர்கள் வி. என். சிதம்பரம் &  டாக்டர். தமிழண்ணல்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

மகாபாரதம் வினா - விடைகள். ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தொகுப்பு நூல் .

செல்வி அரு அழகம்மை புதுவயல் வித்யாகிரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி. அவர் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான பக்தி இலக்கிய விநாடி வினா போட்டிக்குத் தயார் செய்திருந்த கேள்விபதில்களை வினாடி வினா டைப்பில் தொகுத்து புத்தகமாக்கம் செய்திருக்கிறார்கள். மிக நல்ல முயற்சி.

இந்நூலின் பின்னணியில் அவரது பள்ளியும் தமிழாசிரியரும், வள்ளுவர் பேரவையும் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவப் பருவத்தில் இம்மாதிரி முயற்சிகள் பாராட்டத்தக்கது. மாணவியின் உழைப்பைப் புத்தகமாக்கம் செய்த முன்னெடுப்பு வித்யாசம்.  காரைக்குடி வள்ளுவர் பேரவை ( கௌரவத் தலைவர் : அ. தேனப்பன் ) , புதுவயல் வித்யாகிரி பள்ளி மற்றும் அதன் தாளாளர் முனைவர் ரா. சுவாமிநாதன், ஸ்ரீ மீ.சு.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலைத் தமிழாசிரியர் சேவு முத்துக்குமார், வள்ளுவர் பேரவையின் நிறுவனத் தலைவர் மெ. செயங்கொண்டான்., அரு. அழகம்மை ஆகிய அனைவருக்கும் பாராட்டுகள்.

திங்கள், 17 ஏப்ரல், 2017

கொடையின் கதை - ஒரு பார்வை.

எல் கே ஜி , யூ கே ஜி வகுப்புகள் அந்த அழகான குடில்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குடிலின் வெளியிலும் போகன்வில்லா மரங்கள். வெள்ளை மையத்தோடு ரோஸ் நிறக் காகிதப் பூக்கள். பிரித்துப் பிரித்து வாயில் வைத்துத் தடவிக் கொண்டிருந்தார்கள் சில குழந்தைகள். நீ பிங்க். நீ பிங்க் என்ற இரைச்சல் வேறு. ஆயாம்மா வந்து வரிசையில் ஓட்டிக் கொண்டு போய் அமரவைத்து டிஃபன் தூக்குச்சட்டியைப் பிடித்துக் கொடுத்தார்கள். மேலே பொரியல் கிண்ணம், கீழே தயிர்சாதம். வாய் எல்லாம் அப்பி சாப்பிட்டு முடித்ததும் ஒவ்வொருவருக்காய் வாய் கழுவி டப்பாக்களைக் கூடையில் போட்டு அந்த ஆயாம்மா வகுப்பில் கொண்டு விடுவார்கள். ஏதேதோ ரைம்ஸ் சொன்ன ஞாபகம். படிப்பு என்பதே ஒரு விளையாட்டுப் போன்ற அனுபவமாய் இருந்தது. ரொம்ப கஷ்டமான வீட்டுப்பாடங்கள் இல்லவே இல்லை. (அதன் பின் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பள்ளிகள், கல்லூரியில் பயின்றேன்) .

சைக்கிளில் முன் சீட்டில் கால் கூட்டி உட்கார்ந்து  வெங்கிட்டு மாமாவோடு அழகப்பா கல்லூரி ஸ்டேடியத்துக்குப் போய் ஸ்போர்ட்ஸ் பார்த்ததும் வாசனையாக காண்டீனில் காஃபி குடித்ததுமான கலவை ஞாபகம்.

-- அழகப்பா மாண்டிசோரி பிரிப்பரேட்டரி பள்ளியில் எல்கேஜி யூகேஜி படித்தபோது நிகழ்ந்தவை இவை. அதன் பின் பல ஆண்டுகள் பல முறை அந்தப் பகுதியைக் கடந்துதான் காரைக்குடிக்குள் வந்திருந்தாலும் , அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர் பற்றிய தகவல்கள் கேள்வியுற்றிருந்தாலும் வள்ளல் அழகப்பர் பற்றிய முழுமையான விபரங்கள் தெரியாது.

என் பையன் அழகப்பா மெட்ரிக்குலேஷனில் ப்ளஸ்டூ படித்தான். என் மாமாக்கள் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து பெரிய மாமா பொதுப்பணித்துறையில் சிலகாலம் பணியாற்றினார். வள்ளல் அழகப்பரிடம் கல்லூரி விழா ஒன்றில் எங்கள் சுப்பையா மாமா ஏதோ விருது/ பரிசு வாங்கும் அரிய புகைப்படம் எங்கள் ஆயாவீட்டை அலங்கரிக்கிறது. காரைக்குடியைக் கல்விக் குடியாக மாற்றியதில் பெரும்பங்கு வள்ளல் அழகப்பருக்கு உண்டு.

டாகிங்கும் ஹாக்கிங்கும்.

1361. எல்லாவற்றையும் மேலோட்டமாகக் கடப்பதுபோல கடந்துவிட முடிவதில்லை. சிலரின் எழுத்துக்கள் பார்த்ததுமே மனதில் ஆணி அடித்ததுபோல் நகரவிடாமல் செய்துவிடுகின்றன. அதில் சுகாவின் சொல்வனமும் ஒன்று. ராஜ சுந்தர்ராஜனின் எல்லா எழுத்துக்களும் கூட !

1362. ஒன்றுமட்டுமென்றால் இணை.
.
இன்னொன்று துணையாமா.
.
.
.அரசியல்வாதிகளைச் சொன்னேன்பா 🤣😂😅😜

1363. ராஜா ராணி ஜாக்கீ.

1364. ஒளிதலும் ஒளிர்தலும் ஒருவரின் எண்ணப்பாடே.

1365. Prasadhama kidaicha kesarila kooda eethavathu munthiriparuppu thattupadathaannu ninaikirathu enna mathiriyana perasai

சனி, 15 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். அல்வாவும் ரசகுல்லாவும் பின்னே நானும் - ருக்கு ஜெய்.

என் முகநூல் தோழி/தங்கை ருக்கு ஜெய். ஆசிரியையாகப் பணிபுரிகிறார். அவருடைய பதிவுகளை அவ்வப்போது படித்து ரசிப்பேன். மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். மாணவர்களுடனான நிகழ்வுகளை யதார்த்தமாக விவரித்திருப்பார். மனதைத் தொடும் எழுத்துக்கள். அவருடைய தேன்மொழி எனக்கு நெருக்கமானவள். :) அவரிடம் எனது வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித்தரக் கேட்டிருந்தேன்.

என் வலைப்பதிவுக்காக உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்டில் ஏதும் எழுதித்தாருங்கள் ருக்கு.

////தங்கள் அன்பழைப்பிற்கு நன்றி மேம்.


நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்க்கிறேன்.இதுவரை blog எதுவும் படித்ததில்லை..முதலில் உங்கள் வலைப் பக்கத்தைப் படித்துத் தொடங்குகிறேன்.


என்னைப் பற்றி... என் பெயர் ருக்மணி .முகநூலில் Rukujey. உங்கள் பக்கத்துவீட்டுப் பெண் போல் மிக மிக சாதாரணப் பெண். அன்பான கணவர் ,இரு ஆண் குழந்தைகள் கொண்ட ஆனந்தம் விளையாடும் வீடு என்னுடையது. அரசுத் துவக்கப்பள்ளியில் ஆசிரியை பணி.26 ஆண்டுகள் முடிந்து 27 ஆம் ஆண்டாக கல்விப்பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது மனநிறைவோடு.

வியாழன், 13 ஏப்ரல், 2017

சம்மர் ஸ்பாட்ஸ். SUMMER SPOTS. (OOTY,COONOOR,KODAI,YERCAUD,MUNNAR).

ஊட்டி:-

ஹாலிடே ஹோம்ஸ் & ரிசார்ட்ஸ்  உள்ள இடங்களில் தங்குவது கொஞ்சம் எளிது. முன்பே ப்ளான் செய்து ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம். ஸ்டெர்லிங் ரெசார்ட்ஸ் போன்றவை பாதுகாப்பானவை. மேலும் மொத்தமாக ஒரு தரம் பணம் கட்டிவிட்டால் வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் சென்று தங்கிக் கொள்ளலாம்.

ஹோட்டல்களிலேயே அங்கே அக்கம் பக்கமுள்ள இடங்கள் பற்றிய பாம்ப்லெட் கிடைக்கும். ஹனிமூன் கப்பிள் செல்வதானால் ஒரு நாள் இரவு  பாக்கேஜ் ஃபீஸ்ட் , பிக் அப் & ட்ராப் வெஹிக்கிள் வசதி எல்லாம்கூட கிடைக்கும்.

இந்த பூக்காடான இந்தியா எத்தனை முறை சென்றாலும் ஊட்டியில் பார்க்கலாம். வேற்றுமையில் ஒற்றுமை :) !.  அதே போல் க்ளாஸ் ஹவுஸில் பாதுகாக்கப்படும் பசுமைச் செடிகள் பக்கம் பழங்காலப் பீரங்கிகள் அழகுக்கு அணிவகுக்கும்.

மரங்களை அழித்துக் கட்டிடங்கள் கட்டி வருவதால் இங்கேயும் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கு.

வழக்கம்போல போட்டிங். நம் கையில் சுக்கானும், பெடலிங் போட்டுகளும் சில இடங்களில் உண்டு. ரேஸ் கோர்ஸ் பார்க்கலாம்.  மட்டக்குதிரை சவாரி இங்கே ஸ்பெஷல். பிள்ளைகள் ஓடி ஆடி விளையாட பிரம்மாண்டமான புல்வெளி இருக்கு. தொட்டபெட்டா சிகரம் தமிழகத்திலேயே உயரமான சிகரம். அதன் முகட்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது த்ரில். அப்புறம் பணம் கட்டிச் சென்றால் மேலே இருக்கும் மெகா பைனாகுலரில் ஊரை ரசிக்கலாம்.

அரசு & வங்கி ஊழியர்களுக்கு ஹாலிடே ஹோம்ஸ் இருப்பதால் அங்கே தங்கினால் செலவும் குறைவு. உணவும் அங்கேயே சமைக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம். நாலு பேர் தங்க தாராளமான ரூம் வசதி. அப்புறம் ஊட்டி போனா அங்கே ஸ்பெஷல் ஐட்டங்களான வால் பேரிக்காய், ஹோம்மேட் சாக்லெட் & வர்க்கி வாங்க மறக்காதீங்க. இன்னிக்கும் டேஸ்டான வர்க்கின்னா அது ஊட்டி வர்க்கிதான்.

விஜிபி கோல்டன் பீச், எஸ்ஸெல் வேர்ல்ட், டால்கட்டோரா பாக், அப்பு கர்.

வருடா வருடம் கோடை விடுமுறைக்கு இப்போ போல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பாத ஒரு காலத்தில் ஊர் ஊராகச் சுற்றி இருக்கிறோம். பிள்ளைகளுடன் நாமும் பிள்ளைகளாகி என்ஜாய் செய்திருக்கிறோம். கோடை வாசஸ்தலங்களுக்கும் தீம் பார்க்குகளுக்கும் சென்ற சில மகிழ்வான தருணங்கள் புகைப்படங்களில் பார்க்கும்போது குழந்தைகளின் குழந்தைப் பருவத்துக்குச் சென்று மீண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

இப்போது நிறைய தீம் பார்க்குகள் வந்துவிட்டன. ஆனா பதினைந்து வருடங்களுக்கு முன்பு மெட்ரோ சிட்டிகளில் மட்டுமே தீம் பார்க்குகள் இருந்தன. 

விஜிபி கோல்டன் பீச் :-

விஜிபி கோல்டன் பீச்சில் நுழைவுக் கட்டணம் போக ஒவ்வொரு ரைடுக்கும் பர் ஹெட் பத்து ரூபாய் வீதம் கட்ட வேண்டும். சென்னையில் இருந்தபோது ஒரு கோடை விடுமுறை சமயம் சென்றோம். இங்கேதான் அந்தப் பாட்டு எடுத்தாங்களாம். இங்கேதான் அந்தப் பட ஷூட்டிங் நடந்துச்சாம் எனப் பேசியபடி பார்த்தோம். :)
பெரிய தம்பிக்குத் திருமணமான புதிது. சாப்பாடு கட்டிக் கொண்டு குடும்ப சகிதமாய் ஒரு நாள் பூரா விஜிபியைச் சுற்றி வந்தோம். அங்கே ஒரு காவலர் பொம்மை போல் அசையாமல் நிற்பார். துபாய் மாலில் பார்க்குமுன்னர் வெகு காலத்துக்கு முன்பே இங்கே பார்த்திருக்கிறோம்.

மாடித்தோட்டமும் மலைப்பயிர்களும்.

மாடித்தோட்டம் போடவேண்டும் என பல நாட்களாக ஆசை . ஆனால் தற்போது இருக்கும் ஃப்ளாட்ஸில் மேலே முழுக்க மூடி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்/இரும்பு ஷீட்ஸ் போட்டுப் பக்காவா இருக்கு. அது புறா பறவை எச்சங்கள் நிறைந்து வாக்கிங் போகவும் அசௌகர்யமா இருக்கு. சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால் வருடாந்திரம் கூட யாரும் அங்கே ஒரு கெட்டுகெதர் கூட கொண்டாடியதில்லை.

அதை எடுத்தால் சோலார் பவர் நிர்மாணம் செய்யலாம் என்று ரங்க்ஸின் எண்ணம். எனக்கோ என் பழைய வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டம் போல மாடி பூரா தோட்டம் அமைக்க எண்ணம். உஷாவின் தோட்டம் பார்த்து நப்பாசையும் கூட.

என் அன்புத் தோழி ஆரண்யா அல்லியை சேலத்தில் அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தேன். ஆர்கானிக் ஃபார்மிங்கில் அவர் எக்ஸ்பர்ட். உரம் பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யவும், மாடித்தோட்டம், பால்கனித் தோட்டம் அமைக்கவும் வழிகாட்டுகிறார்.

அவரது மாடித்தோட்டமே இது.

மூன்று டைப்பான வெல்க்ரோ பேக்குகள் வைத்து அவற்றில் மண், தென்னைக் கழிவான பித்,  இயற்கை உரம் நிரப்பி உயரத்துக்குத் தகுந்தவாறு புதினா, கொத்துமல்லி, வெந்தயக் கீரை, துளசி, அடுத்த லெவல் பேகில் கத்திரிக்காய் வெண்டை, தக்காளி, அதற்கு அடுத்த லெவல்பேகில் வாழை , முருங்கை எனப் பயிரிட்டு இருக்கிறார்.

பசுமஞ்சள் நல்ல பெரிய கிழங்காக அறுவடை செய்ததைக் காண்பித்தார். ( பேலியோவாசிகளின் கவனத்துக்கு ) . கொத்துக் கொத்தாய் கத்திரியும் தக்காளியும் காய்த்திருந்தது. !

அவரது மாடித் தோட்டத்தைச் சுட்டு வைத்திருக்கிறேன். ஆங்... சொல்ல மறந்துட்டேன் அந்த வெய்யிலிலும் வெள்ளை சாமந்தியும் காலிஃப்ளவரும் கூட இந்தத் தோட்டத்தில் மலர்ச்சியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தன. :)
மடல் பிரியும் வாழை.

தாமரைக் கோயிலில் தியானம்.தாமரைக் கோயிலில் தியானம்.

நியூடெல்லியில் இருந்தபோது பணிக்கர் ட்ராவல்ஸில் சிட்டி டூர் சென்றிருக்கிறோம். பிர்லா மந்திர், ந்தர் மந்தர், டால்கடோரா பாக், இண்டியா கேட், குதுப் மினார், தீன் மூர்த்தி பவன், இந்திராகாந்தி சமாதி, காந்தி சமாதி, ஓல்ட் ஃபோர்ட், லால் கிலா, சாய்பாபா டெம்பிள், மலை மந்திர் ஆகியவற்றோடு மறக்கமுடியாத ஒரு இடமும் உண்டு என்றால் அது லோட்டஸ் டெம்பிள் என்ற பஹாய் டெம்பிள்தான். ( நாங்களாகச் சென்று பார்த்தது சங்கர்ஸ் டால் மியூசியமும் மியூசிக் ஃபவுண்டனும்தான் . ) 

பட்டாக்கத்தி பைரவனும் சண்டியரும்.

எனக்குப் பிடித்த பாடல்களை அவ்வப்போது பதிவேற்றுவதுண்டு. இங்கே சில பாடல்கள் என் ரசனைத் தேர்வாய் உங்களுக்காக யூ ட்யூபிலிருந்து. :)

மெல்லினமே மெல்லினமே

என் இருபத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி மறைத்தாய்.. என்ற வரிகள் பிடிக்கும் அதோடு விஜயின் டான்ஸ் பிடிக்கும். :)ஒருவர் வாழும் ஆலயம். 

இதன் லிரிக்ஸுக்காகப் பிடிக்கும்.
Something Something Unakkum Enakkum -Something-divx 

பிரபுதேவா டைப் ஃபாஸ்ட் டான்ஸ். அதிலும் ஜெயம் ரவியும் த்ரிஷாவும் இதில்தான் இயல்பாய் நடித்திருப்பார்கள். செம ஆட்டம்.

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

பழனியில் சிவா.

பழனிபோன்ற திருத்தலங்களில் தங்குவதற்குப் பல சத்திரங்கள் உள்ளன. அடிவாரத்தை ஒட்டி நகரத்தார் சத்திரம், இராக்கால மடம் இதுபோல் ஒவ்வொரு சாதியாருக்கும் தங்குமிடங்கள்தான் வரிசையாக உள்ளன. இத்தங்குமிடங்களிலும் தனித்தனி ரூம், ஃபேன், படுக்கை வசதியுடன் இருந்தாலும் கழிவறைகள் பொதுவில்தான் உள்ளன.

சத்திரங்களில் எல்லாம் மகமை உண்டு. ஒருவர் , இருவர், குடும்பம் பொறுத்து அது அமையும். மேலும் அறைக்கு ரூ 100 வாடகை, அலமாரி வாடகைக்கு எடுத்தால் இவ்வளவு என்று பணம் செலுத்த வேண்டும். கார் பார்க்கிங் எல்லாம் கிடையாது.

தனி ஹோட்டல் அறைகள் என்றால் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அச்சமயத்துக்கு பாத்ரூமை உபயோகிக்க முடியும் , அதுவும் யூரோப்பியன் டாய்லெட் வசதியும் உண்டு., மேலும் குளிக்க வெந்நீர் வேண்டும்., அது போக கார் பார்க்கிங், ரூம் சர்வீஸ் & ப்ரைவஸி வேண்டும் என நினைப்பவர்கள் போர்டிங்குகளிலும் லாட்ஜுகளிலும் அறை எடுக்கிறார்கள்.

இந்த சிவா லாட்ஜில் தங்குபவர்கள் பெரும்பாலும் கேரளத்தவர்களே. பொதுவாகப் பார்க்கப் போனால் பழனி மலையில் தமிழர்களின் அளவுக்குச் சரிக்குச் சரி கேரள பக்தர்களையும் பார்க்கலாம். இங்கே கார் பார்க்கிங் வசதி ரூமுக்கு எதிரிலேயே நிறுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சௌகரியம்.

ரிசப்ஷனிலேயே காட்சி தரும் பழனி ஆண்டவர்.
இராஜ அலங்காரன்.
தலைவரோட ஆஃபீஸ் வொர்க்ல டிஸ்டர்ப் பண்ணாம நாம பாட்டு புக் படிப்போம், இப்ப ப்லாக் போஸ்ட் போடுவோம். :)

என்னைப் பற்றி நான்.2017 -ம் ஆண்டில் என் வலைத்தளத்தில் நட்புக்களைப் பற்றி பகிரும் விதமாக 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வாரத்தில் ஒரு நாள் (புதன் அல்லது ஞாயிறு) ஒதுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்உங்களுடன் சேர்ந்து சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.  யார் முதலில் அனுப்புகிறார்களோ அதன் அடிப்படையில் வெளியிட எண்ணம்.தாங்கள் செய்ய வேண்டியது உங்களைப் பற்றி நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம்... முக்கியமாக வலைப்பதிவுகுறித்தும் பணியில் கிடைத்த மறக்க முடியாத அனுபவம், புனைப்பெயர் வைத்து எழுதினால் அது குறித்து சொல்ல முடியும் என்றால் சொல்லலாம், தங்களின் நிறைவேறிய / நிறைவேறாத ஆசை, தங்களின் சாதனையாக நினைப்பது, எதிர்கால திட்டம் என எல்லாவற்றையும் குறித்துச் சொல்லலாம்.

மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெளிப்படுத்த உதவியமைக்கும் அன்பும் நன்றியும் குமார் சகோ :) 
ை இங்கேயும் பிக்காம். 
 
http://vayalaan.blogspot.com/2017/04/12.html


என்னைப் பற்றி நான் :-

முதலில் என்னைப் பற்றி நான் எழுத அழைத்த சகோ குமாருக்கு நன்றி. ஏன்னா சமீபகாலமாகத்தான் என்னைப் பற்றி நான் அதிகமா சிந்திச்சிக்கிட்டு இருக்கேன். என்ன செய்திருக்கேன். செய்ததெல்லாம் உருப்படியா செய்திருக்கேனா, இன்னும் என்ன என்ன செய்யணும்னு எல்லாம். தொடர்ந்து வலை உலகில் செயல்பட்டுவரும் ( கிட்டத்தட்ட 100 பேர் இருப்போம் ) வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் விதமா இந்தப் பதிவு அமைந்திருப்பதுக்கு முதலில் பாராட்டுகள் குமார் சகோ. குமார் சகோவின் சிறுகதைகள் மிக அருமையா இருக்கும் அதுக்கும் பாராட்டுகள் சகோ.

திங்கள், 10 ஏப்ரல், 2017

தர்மம் தலைமுறை காக்கும் - தஞ்சை மகாராஜா பாபாஜி ராஜா சாகேப் போன்ஸ்லே

நான்காம் உலகத் தமிழ் கருத்தரங்கம் கோட்டையூர் வள்ளல் அழகப்பரின் பேத்தி வள்ளி முத்தையாவின் இல்லத்தில் நடைபெற்றது. அதற்கு தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர் பாபாஜி ராஜாசாகேப் போன்ஸ்லே வந்திருந்து அருமையாகத் தலைமை தாங்கி சொற்பொழிவாற்றினார். அதைக் கடைசியில் கொடுத்துள்ளேன். திரு சொ சொ மீ அவர்களின் உரையையும் கொடுத்துள்ளேன்.
மதிய உணவு இடைவேளை முடிந்ததும் மதிய அமர்வு ஆரம்பமானது. அதில் சில கட்டுரைகள் முனைவர் திரு பழ முத்தப்பன் அவர்கள் தலைமையில் வாசிக்கப்பட்டன.

அதன் பின் தஞ்சை அரசர் வருகை நிகழ்ந்தது. பூரண கும்ப மரியாதையோடு அழைத்து வரப்பட்டார். பேராசிரியர் திரு மா சிதம்பரம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
புரவலர் திருமதி வள்ளி முத்தையா ராஜா அவர்களுக்கு ஒரு கவிதை எழுதிப் பரிசளித்தார்கள்.

உலகத்தமிழ் நான்காம் கருத்தரங்கம்.

காரைக்குடிக் கம்பன் கழகத்தின் சார்பாக இந்த வருடக் கம்பர் விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இன்று அத்தத் திருநாள் பாட்டரசன் கம்பன் சமாதியில் நாட்டரசங்கோட்டையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கம்பர் விழாவை ஒட்டி செட்டிநாடும் செந்தமிழும் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. வள்ளல் அழகப்பரின் பேத்தி கோட்டையூர் வள்ளி முத்தையா அவர்களின் நூற்றாண்டுப் பாரம்பரிய இல்லத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது . கம்பன் அடிப்பொடி அரங்கம், ராய சொ அரங்கம் போன்ற ஐந்து அரங்குகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இக்கட்டுரைகள் முன்பே கட்டுரையாளர்களிடமிருந்து பெறப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டிருந்தன என்பது சிறப்பு.

சிங்கையைச் சேர்ந்த முனைவர் லெக்ஷ்மி இரு கட்டுரைகள் பங்களிப்பு செய்திருந்தார். அதில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள் என்ற கட்டுரையில் ரமா இன்பா சுப்ரமணியன் படைப்புகள் பற்றியும் என் படைப்புகள் பற்றியும் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. !!!

பதினோரு மணியில் இருந்து ஒரு மணி வரை கட்டுரை வாசிப்பு நிகழ்ந்தது. மதிய உணவுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் மட்டும் வாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டன. முனைவர் திரு முத்தப்பன் முன்னிலையில் இக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

அருவியூர்ச் செட்டியார்களின் தமிழ்ப்பணி பற்றி பொன்னமராவதியைச் சேர்ந்த திரு திருநாவுக்கரசு என்பவர் கட்டுரை வாசித்தளித்தார்.
இராய சொ வின் ஆழ்வார் அமுது உரைத்திறன் பற்றி அழகப்பா பல்கலைக் கழகத்தின் முனைவர் சு இராசாராம் அருமையான திறனாய்வுக் கட்டுரை வாசித்தளித்தார்.

சனி, 8 ஏப்ரல், 2017

சாட்டர்டே போஸ்ட். தென்றலின் பங்களிப்பு ஆசிரியர் சரஸ்வதி தியாகராஜனின் எண்ணங்கள்.

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர் திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்கள்.  தென்றல் இதழின் அநேக படைப்புகள் இவரின் குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மிகப் பிரபலமாக இருந்தும் பிரபல பத்ரிக்கையில் இலக்கிய சேவை செய்து கொண்டிருந்தும் மிக மிகத் தன்னடக்கமானவர், தன்மையானவர். பழக எளிமையானவர் , இனிமையானவர். தேன் குரலில் இவர் வாசித்தளிக்கும் படைப்புகளை தென்றல் தளத்தில் காணலாம். இவரிடம் இவர் பற்றிக் கேட்டபோது

////Dear Thenammai! Vanakkam. Nalamaa? நீங்கள் கேட்டவை!!

அறிமுகம் பாஸ்டனிலிருந்து!! ////கும்பகோணத்தில் பிறப்பு!
மதுரையில் வளர்ப்பு!
இரு அக்காள் ஒரு அண்ணன் உடன்பிறப்புகள்!
மதுரை லேடி டோக், அமெரிக்கன் கல்லூரிகளில் படிப்பு!
1971ல் கணவருடன் பிணைப்பு!
பின்னர் சென்னையில் குடியிருப்பு!
அதன் பின் ஒரே ஒரு மகன் பிறப்பு!
1999ல் கணவனுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ப்பு!
மகன், மருமகள், அன்புப் பேரன் பேத்தியுடன் இன்றுவரை எங்கள் இனிய வாழ்க்கைப் பயணிப்பு!
தென்றல் துவங்கிய 2000-ம்
ஆண்டில் நானும் அதில் தன்னார்வ சமையல் கலை நிபுணராக சேர்ப்பு!
பின்னர் செய்தது மொழி பெயர்ப்பு!
தற்போது தென்றலில் பங்களிப்பு ஆசிரியராக செய்வது இறுதி மெய்ப்பு பார்ப்பு, தென்றலை
ஒலிவடிவத்தில் கொடுப்பது மற்றும் தென்றலின் மின்புத்தகங்கள் படைப்பது!l
இதுவரை 3837 ஒலிவடிவங்களுக்கு சொந்தக்காரி!
இதுதான் என் வாழ்க்கைப் பயணம் தேனம்மை!😀/////

😀 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன். அவர் எழுதி அனுப்பிய வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

நம் வாழ்வைப் பற்றி மனம் அசை போடுகிறது!பிறந்தவர் அனவருக்கும் வாழ்க்கை ஒன்று போல அமைவதில்லை. ஆனால் அதை இன்பமாக வைத்துக்கொள்வது நம்மிடமும் உள்ளது. 

வியாழன், 6 ஏப்ரல், 2017

மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.

மகர்நோன்புக்காக திருநெல்லைஅம்மன் கோயில் மண்டபத்தில் அம்மா மாவிளக்கு இட்டபோது எடுத்தது. :)
திருப்பதியில் திருக்கல்யாணத்தின் போது கிடைத்த பிரசாதம். பிரம்மாண்ட லட்டு. இங்கே ஆர்டிஃபிஷியலா கூட்டம் கூட்டப்படுதுன்னும். சிங்கிள் லைனில் விட்டால் காத்திருப்பு இல்லாமல் தரிசிக்கலாம்னும் வாட்ஸப்பில் ஃபார்வேர்டு மெசேஜ் வந்தது. ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் நாம ஏன் அந்த அரசியலுக்குள்ளே எல்லாம் போகணும். வாங்க லட்டை ருசிப்போம். ஒரே ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ், கல்கண்டு, கிராம்பு, நெய் மணக்க இத வெல்லப்பாகுல செய்றாங்களா இல்ல சீனிலயா.. ரொம்ப டேஸ்டி லட்டு.
அங்கேயே கிடைத்த மிளகு தட்டை வடை.
சாதா லட்டு ஐந்தும் கூட கிடைச்சுது. இங்கே முனிசிபாலிட்டில போய் ஆதார் கார்டு இல்ல அடையாள அட்டை ஏதும் காண்பிச்சு தர்ஷன் க்கு டோக்கன் வாங்கணும். ஒரு டிக்கெட் 500 ரூபாய். ( திருக்கல்யாணத்துக்கு ). தெரிஞ்சவங்க இருந்தா மறுநாளே தரிசிக்க முடியும். வங்கி ஊழியராச்சே. மேனேஜர் மூலமா கேட்டு போன மறு நாள் தரிசிச்சோம். ஆனா மலைக்கு நடந்து வர்றவங்களுக்கு நேரா கடவுள் தரிசனம்தான். :)

புதன், 5 ஏப்ரல், 2017

தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

பொதுவாக விநாயகர், அம்மன் போன்ற சிலைகளையே நடுநாயகமாகப் பார்த்த நமக்கு தர்மபுரி அதியமான் அரண்மனை ஹோட்டலில் புத்தரைப் பார்த்ததும் வித்யாசமாக இருந்தது. ( ஒரு வாரம் தங்கியும் தர்மபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும் அதியமானின் புராதனக் கோட்டையைப் பார்க்காமல் வந்துவிட்டோமே என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. டாக்ஸிக்காரர்கள் கோட்டத்தையே கோட்டை என்று காட்டுகிறார்கள். கொடுமை ஹ்ம்ம். )


இங்கே ஓடும் வாடகைக் கார்களிலும் கூட விநாயகர் உருவம் இல்லாதது என்னவோ போலிருந்தது. இறைவழிபாடும் கடவுள் நம்பிக்கையும் தமிழ் நாட்டிலும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது என உணர்ந்தேன்.

// கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில் தன் நாட்டுக்கு வெளியே உள்ள சத்யபுத்திரர் ஆளும் நாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் எனச் சிலர் கருதுகிறார்கள் //

இந்த நோக்கில் பார்த்தால் இங்கே புத்தரும் பௌத்தமும் அதிகம் வேரோடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜம்பை என்னுமிடத்தில் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றில் சமண முனிவருக்கு ’சதியபுதோ அதியந்  நெடுமாந்  அஞ்சி’ கற்படுகைகள் வெட்டிக் கொடுத்திருப்பதாகவும் பொறிக்கப் பட்டிருக்கிறது. எனவே அக்காலத்தில் இவ்வூர்ப் பகுதிகளில் சமணமும் பௌத்தமும் சிறந்து விளங்கி இருக்கின்றன எனத் தெரியவருகிறது.

சைவக் கோயில்களுக்குத் திருப்பணி செய்தது போல சமணப் பள்ளிகள் அமைத்தும் சமணக் குடைவரைக் கோயில்களைப் புதுக்கி அமைத்தும் கொடுத்துள்ளான் இவ்வரசன்.

இனி ஹோட்டல் அதியமான் அரண்மனை  பற்றி.
மெய்யாலுமே அரண்மனைதான்.
முன்புறம் பீரங்கிகள், மயில், மான்கள் அணிவகுக்கின்றன.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

தொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.

டாக்டர் தொ. பரமசிவன் அவர்களின் இந்த ஆய்வுநூல் ஒரு ஆவணப் பதிவு எனலாம். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில் முழுக்க முழுக்கப் புள்ளிவிபரங்கள் நிறைந்த ஆதாரக்குறிப்புகள் விரவி உள்ளன.

மதுரையைச் சுற்றி உள்ள ஊர்களில் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கு பிக்னிக் ஸ்பாட் என்றால் பள்ளியில் அழைத்துச் செல்லும் இடம் இதுவாகத்தான் இருக்கும். அழகர் கோயில், பழமுதிர் சோலை, ராக்காயி அம்மன் கோயில், பதினெட்டாம்படிக் கருப்பர் ஆகியோரை நாங்களும் தரிசித்து  வந்திருக்கிறோம் என்றாலும் மதுரை நகர் விட்டுத் தள்ளி தனிப்பட்ட மலைசார்ந்த வனாந்திரமான ஓரிடத்தில் அமைந்திருக்கிறது இக்கோயில்.

ஒரு முறை இக்கோயிலில் ஒரு முறை அரிவாள் வேண்டுதல் செலுத்தப்பட்டபோதும் கடந்து சென்றிருக்கிறோம். இந்நூலில் அனைத்தும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 76 - 79 ஆகிய மூன்று ஆண்டுகளில் நிகழ்த்திய ஆய்வின் விளைவாக எழுதப்பட்டநூல் இது. நான்கு  பாகமாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.

ஒரு வாரம் பொள்ளாச்சி நிவேதா இன்னில் தங்கும் சந்தர்ப்பம் அமைந்தது. இது காந்தி ரோட்டில் இருக்கு. இதன் கீழேயே நமக்கு மிகவும் பிடித்த கௌரி கிருஷ்ணா ஹோட்டல். இந்தக் காப்பிக்காகவே இங்கேயிருந்து கிளம்பவே பிடிக்கலை.

ரூம் வாடகை இருவருக்கு  ரூ990/- தான். அதுனால இங்கே காலையில் பஃபே எல்லாம் கிடையாது. ஆனால் கீழே தோசைரோஸ்டும். அதன் பக்கவாட்டில் இருக்கும் குட்டி ஹோட்டலில் இருந்து தயிர்வடையும் ராகி வடையும் காஃபியும் ஆஹா ஓஹோதான். இங்கே உள்ள உணவுகள் பத்தி தனி இடுகை போடுகிறேன் பின்பொருமுறை.

சில தினங்களைக் கறுப்பு தினங்கள் என்பார்கள். இங்கே நிவேதா இன்னில் எல்லாமே வண்ணமயமான தினங்கள்தான். ஒரு வாரம் இருப்பதால் அங்கே டாப் ஸ்லிப், திருமூர்த்திமலை எல்லாம் போகலாம் என்றிருந்தோம். நவம்பர் எட்டு அன்று இரவு தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி ஐநூறு ஆயிரம் செல்லாது என்கிறார். ஒரே அல்லோல கல்லோலம்தான். அன்று நிறமிழந்த தினமாக இருந்தது.

சுற்றிலும் இருக்கும் ஹோட்டல்கள் , கடைகள், மனிதர்கள் எல்லாம் ஒரே பரபரப்பு.  இருக்கும் ஐநூறு ஆயிரத்தை மாற்ற முடியாமல் சாப்பாடு அத்யாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம்.ஆனால் நாம் யாரு சிறுவாட்டில் கில்லியாச்சே.

நிவேதா இன்ன் ஹோட்டலில் ரெண்ட் எல்லாம் கார்டு பரிவர்த்தனை. அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் புவா ??. ரங்க்ஸிடம் ஓரளவு இருந்தது. ஆனால் அவர் நண்பர் ஒருவருக்கு அத்யாவசியத் தேவை . அவரிடம் ஐநூறு ஆயிரம் தவிர வேறில்லை. என்னிடம் இருப்பதை சொல்லியாச்சு. உடனே அவசரத்துக்கு  உதவணும் என்று சொல்லி இருந்ததில் கணிசமான நூறை ( நமக்கு வேணுமே என்று மொணமொணத்துக் கொண்டே , இன்னொரு பர்சிலும் சேமித்து வைத்திருந்தேன் :)  ) கொஞ்சம் எடுத்துக் கொடுத்தேன்.

சொல்லப் போனா அந்த ஒரு வாரமும் நம் வாழ்க்கையில் வாங்கிய வைத்திருக்கும் தங்கம் வெள்ளி வைரம் கூடப் பொருட்டில்லை கொடுத்திருவோம் போல ஆனா நூறு, ஐம்பது ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிய விதம் இருக்கிறதே அப்பப்பா. நம்மை நமக்கு இனம் காண்பித்த நிகழ்ச்சி.

அது போக திருடன் வந்தா வால்யுபிள் எல்லாம் திருடாம ரூபாய் நோட்டைத் திருடிக்குவானோ என்று அதை பர்ஸுக்குள் போட்டு இன்னொரு பர்ஸுக்குள் போட்டு பேகில் மடித்து சூட்கேஸில் வைத்து நம்பர் லாக் போட்டு ஹிஹி இதெல்லாம் நாம்தான் செய்தது. ரூபாய் முக்கியமில்லா மக்கா. அப்பத்தானே அடுத்த வேளை புவா வாங்க முடியும். :) கீழே உணவு ஹோட்டல்காரர்கள் கார்டுக்கும் ஒப்புக்கல.

அதன் பின் நாம சுகமா சௌக்கியமா ஊர் வந்து சேர்ந்தோம். முடிந்தவரை தேவைப்பட்டவருக்குக் கொடுக்கவும் செய்தோம். ஆனா மனதுக்குள்ள நாம் எப்பிடிப்பட்ட ஆளுன்னா நமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்பது புரிந்துவிட்டது.  :) :) :)

இப்போ நிவேதா இன்ன் பத்தி.

அங்கே ரிஸப்ஷனில் வரவேற்கும் விநாயகர். கெபி போன்ற அமைப்பு.
மிக விசாலமான அறைகள். முதலில் தங்கின ரூம் கீழே இருந்த கிச்சனுக்கு அருகில். அதனால் சத்தம் அதிகம் கேட்டது.

ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

அப்பாவும் சின்னத்தாத்தாவும்.
மஞ்சு விரட்டு பார்க்க வந்த கூட்டம். சுமார் அரை கிலோமீட்டருக்கு முன்பே இவ்வளவு வண்டிகள்.
கார்களில் கூட பார்க்க வந்திருக்கிறார்கள். !

சனி, 1 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். கலையரசியின் தட்டச்சு நினைவுகள்.

ஞா. கலையரசி.  இவர் எனக்கு வலைப்பூவின் மூலம்தான் அறிமுகம். எனது அன்னபட்சியைப் படித்து மிகச் சிறப்பாக அறிமுகம் செய்திருந்தார். அட நம் கவிதை நூலுக்கு எங்கிருந்தோ ஒரு அங்கீகாரம் அதுவும் ஒரு வலைப்பதிவரிடமிருந்து என ஆச்சர்யமாக இருந்தது. மிக அருமையான விமர்சகர்.

இவரது சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறார். இரு குழந்தைகள். இருவருக்கும் மணமாகிவிட்டது.  கலையரசி ஸ்டேட்பாங்கில் சீனியர் ஸ்பெஷல் அசிஸ்டென்ட் ஆகப் பணிபுரிகிறார். வாசிப்பும், எழுத்தும் இவருக்கு மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் இவரது தந்தையே எனக் கூறுவார். . இவரது தந்தை சொ. ஞானசம்பந்தன் அவர்கள் இலக்கியச்சாரல் எனும் வலைப்பூவை நடத்துகிறார்கள்.  நம்ம கீத்ஸ் என்னும் கீதமஞ்சரி கீதா மதிவாணன் இவரின் சொந்த தம்பி மனைவி. அவங்களும் சகலகலாவல்லி :)
 
தன்னைப் பற்றிக்கூறும்போது ஞா கலையரசி அவர்கள் “ உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ” என்கிறார். அருமையான நம்பிக்கையும் ஈடுபாடும். வாழ்த்துகள் கலை. 

என் ப்லாகுக்காக சாட்டர்டே போஸ்ட் ஏதும் எழுதித்தாங்க என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதியது இங்கே.


///தட்டச்சு நினைவலைகள்


கணிணி  புழக்கத்துக்கு வரத் துவங்கிய பிறகு, தட்டச்சு இயந்திரத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததுஅக்காலத்தில், அலுவலகப் பணிகளில், இந்த இயந்திரம் பிடித்திருந்த முக்கிய இடத்தை, இப்போது  கணிணி பிடித்து விட்டது. 

இதன் காரணமாக, மும்பையில் 1900 ஆண்டு முதல் இயங்கி வந்த  ’கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் கம்பெனி,  2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...