இந்த ஆண்டு கம்பர் விழாவின் போது உலகத்தமிழ் நான்காம் கருத்தரங்கம் கோட்டையூர் வள்ளி ஆச்சி இல்லத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது.
அதில் செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்று பங்களிப்புச் செய்திருந்தேன். திரு வெ. தெ. மாணிக்கனார் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்த மருதத்திணை என்ற ஆராய்ச்சி நூலையும் இன்னும் அவர்கள் தொகுத்திருந்த நூற்கள் சிலவற்றையும் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்திருந்தேன். கிட்டத்தட்ட 97 பேர் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தார்கள் . அவை தொகுக்கப்பட்டு கபிலன் பதிப்பகத்தின் மூலம் முன்பே புத்தமாக்கமும் செய்யப்பட்டு அன்றே எங்களிடம் வழங்கப்பட்டன. ! நன்றி காரைக்குடி கம்பன் கழகத்தாருக்கு. !
என்னைப் பங்கேற்கத் தூண்டிய முனைவர் திருமதி லெக்ஷ்மி அவர்களுக்கும் நன்றிகள். வெ. தெ. மாணிக்கம் அவர்கள் பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க ஆசி வழங்கிய கம்பனடிசூடி திரு பழனியப்பன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். :) அங்கே கட்டுரை படிக்க நேர்ந்ததை மாபெரும் கௌரவமாகக் கருதுகிறேன். நன்றி அனைவருக்கும் & முக்கியமாக என்னை வழிநடத்திய மாணிக்க பெரியப்பாவுக்கும் மீனா பெரியம்மாவுக்கும் :)
என்னதான் நாம் தொகுத்தாலும் அவரது வாழ்க்கைத் துணைவியார் கூட இருந்து சொல்லியது போலாகுமா. தெய்வத்திரு வெ. தெ. மாணிக்கம் அவர்களின் துணைவியார் திருமதி மீனாக்ஷி ஆச்சி அவர்கள் ( இவர்கள் இருவரும் எனக்கு எங்கள் அம்மா வீட்டுப் பங்காளி முறையில் பெரியப்பா , பெரியம்மா ஆக வேண்டும். ). எனக்கு அவர்கள் பற்றிய சகலவிபரங்களையும் கொடுத்துதவினார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அவர்கள் தன் கணவரது புத்தகங்களை அண்ணா நகர் நூலகத்துக்கு ( கிட்டத்தட்ட 7,000 நூல்கள் ) வழங்கி உள்ளார்கள். !!! இன்னும் பல நூல்கள் பாதி பாதியாகக் குறிப்பெடுக்கப்பட்டு அப்படியே நூலகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டன. இவை எல்லாவற்றையும் ஆர்வலர் யாரேனும் திரும்ப தொகுத்து நூலாகக் கொண்டு வருதல் பயனளிக்கும்.
எனது மகன் ஒரு முறை சில திருக்குறள்கள் சொன்னதற்காகத் தன்னுடைய சஷ்டி அப்த பூர்த்தியில் வெளியிடப்பட்ட திருக்குறளின் பிரதி ஒன்றைக் கொடுத்து ஆசி வழங்கி உள்ளார்கள்.
அவர்களின் வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றிகள்.
///Its a great honour for me to submit a thesis paper about Dr. V.T. Manickam and his literary work about Marutha thinai ,at Kambar Vizha held at Valli achi's house, at Kottaiyur. ( on 9 th April ). Sorry for the late information makkas. The articles are published and given to us as a book on the same day itself !. Will post it soon in my blog too ////
அவர் பற்றி நான் எழுதிய கட்டுரையை பின்னொரு நாளில் பகிர்கிறேன். முனைவர்களுடன் போட்டியிட முடியுமா. அதில் கட்டுரை படைத்த அநேகர் முனைவர்கள். என்னுடையது கன்னிமுயற்சி எனவே பூரணமாக இல்லாதிருப்பின் மன்னித்து விட்டு விடுங்கள். :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!