எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஏப்ரல், 2017

உலகப் புத்தக நாளுக்காக பள்ளி நூலகத்துக்கு வழங்கிய நூல்கள்.

உலகப் புத்தக நாளில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியை கோமதி ஜெயம் சிறுவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கினார். விடுமுறையைப் பயன் உள்ளதாகக் கழிக்க அது உதவும் என்று நானும் என் பங்களிப்பாக வீட்டில் இருந்த நான் வலைப்பதிவிலும் நூல் பார்வை எழுதிய நூல்களைத் தொகுத்து அளித்தேன்.

மொத்தம் 27 நூல்கள். தோராயமாக 2000 ரூபாய்க்குள் இருக்கலாம். இவற்றில் சில எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. சில பரிசாகக் கிடைத்தவை. சில நான்/என் குடும்பத்தார் வாங்கியவை.  எனது ஐந்து நூல்களை ஆசிரியை கோமதி ஜெயம் அவர்களுக்கும் , மூன்று நூல்களை மட்டும் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தேன். 

1. துரோணர் கதை
2. பஞ்ச தந்திரக் கதைகள்.
3. தெனாலிராமன் நகைச்சுவைக் கதைகள்.
4. மகுடம் பறித்த மாயாவி
5. ஒரு கிராமத்து மணம்
6. மாணவர்க்கு ஏற்ற நாடகங்கள்.
7. ENGLISH GRAMMAR COMPOSITION & LETTER WRITING.
8. உலகப் பொது அறிவு.
9. SUMIT ESSAY BOOK.



10. நண்பர் பெ. கருணாகரனின் ”அமேஸான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின?”.
11. கோகுலம் எடிட்டர் நண்பர் திரு. லதானந்த் அவர்களின் ”மெமரி பூஸ்டர்”.
12. ஜான் லூயிஸின் ”நினைவாற்றலின் விந்தைகள்.”
13. நண்பர் முனுசாமி பாலசுப்ரமணியத்தின் ”அரைக்கீரை விற்கிறான் அம்பானி”
14. “ நண்பர் பாலாவின் ”சிட்டுக்குருவி”.
15. “ நண்பர் பாலாவின் “ நடைவண்டி “
16. ”நண்பர் பாலாவின் “வெள்ளைத் திமிர்”
17. “நண்பர் பாலாவின் ”வாழப் பிறந்தோம்.”
18. நண்பர் கோபி சரபோஜியின் “வின்ஸ்டன் சர்ச்சில் 100”

19. உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்.
20. நண்பர் கோபி சரபோஜியின் ”ஆன்மீக சாண்ட்விச்”
21. சௌந்தரநாயகி வைரவனின் “சிங்கப்பூரில் தமிழ் தமிழர் “
22. விஜிகே சாரின் ”வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்.”
23. “விஜிகே சாரின் “ தாயுமானவன்”
24. “விஜிகே சாரின் “எங்கெங்கும் எப்போதும் என்னோடு “
25. ஜெயமோகனின் “யானை டாக்டர் “
26. நண்பர் பாலாவின் ”கொதிக்கும் பூமி “
27. வித்யாகிரியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் மாணவி அரு. அழகம்மையின் மகாபாரதம் “ வினா - விடைகள் “

மேலும் எனது ஐந்து நூல்கள்.

1. சாதனை அரசிகள்.
2.”ங்கா”
3. அன்ன பட்சி
4. பெண் பூக்கள்.
5. சிவப்புப் பட்டுக்கயிறு.

”என்னப்பா  புக் எல்லாம் சேமிச்சு வைங்க , கிடைக்காது ஏன் கொடுக்குறீங்க ?” என்று ஒரு தோழி கேட்டார். "இதுல இருக்க எல்லா புக்கும் நான் படிச்சிட்டு ரிவியூ எழுதின புக்தான். எல்லாத்துக்கும் லிங்க் என் ப்லாகிலயும் ஃபேஸ்புக்குலயும் இருக்கு. இந்த லிங்க் ல இருக்குற ஃபோட்டோஸ் பக்கத்துல இருக்க என் ப்லாக் லிங்கை கிளிக் செய்தா அனைத்துப் புத்தகத்தின் ரிவியூவையும் படிக்கலாம், !. அப்புறம் என்ன :) “

https://www.facebook.com/thenulakshman/media_set?set=a.227798510567502.74763.100000120633183&type=3

எனக்கு புக் கொடுத்தவங்களுக்கும் அவங்க புக்கை நான் லைப்ரரிக்குக் கொடுத்தது சந்தோஷமாகத்தான் இருக்கும் :)

 ”பிள்ளைகள் பெரியவங்களாயிட்டாங்க. நமக்குப் பின் யார் படிக்கப் போறாங்க. இப்ப கொடுத்தா சிறுவர்களுக்கு உபயோகமாகும். ஒரு புத்தகத்தின் ஆயுள் 50 இல் இருந்து நூறு வருடங்கள் இருக்கலாம். குப்பையா இருந்து மக்குறத விட பல மாணவர்களைப் புதுப்பிக்கட்டுமே எனது புத்தகங்கள்”  என்று சொன்னேன் :) . அவரும் ஆமோதித்தார்.

நம்ம வீட்டுல இருந்தா நாம் மட்டும்தான் படிக்கலாம். அதுவே ஒரு அரசு லைப்ரரி அல்லது லெண்டிங்க் லைப்ரரி இல்லாட்டி பள்ளி நூலகத்துல இருந்தா பலருக்கும் பயன்படும். முடிஞ்சவங்க , பிரியப்பட்டவங்க பக்கத்தில் இருக்கும் பள்ளி லைப்ரரிக்குக் கொடுக்கலாம்.

உலகப் புத்தக நாள் வாழ்த்துகள் அனைவருக்கும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...