எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஏப்ரல், 2017

ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் புத்தக நாள் சிறப்பு நிகழ்வுகள்.

காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி வியத்தகு முறையில் வளர்ந்து வந்து சீராகச் செயல்படும் நகராட்சிப் பள்ளிகளில் ஒன்று. அந்தப் பள்ளி சிறந்தோங்கக் காரணமானவர் அதன் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜா என்றால் மிகையில்லை.

கிட்டத்தட்ட 200 மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளியின் இன்றைய ஸ்ட்ரென்த் 600. அதே போல் பொலிவான தோற்றத்தில் புதுக்கட்டிடம் சிறக்கிறது. மிடுக்கான, சிறப்பான ஆசிரியர்களும் அப்பள்ளியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். நேர்த்தியான சீருடையில் அணிவகுக்கும் மாணாக்கர்கள் அமைதி காக்கிறார்கள்.

நலந்தா புத்தக நிலையத்தில் இப்பள்ளியின் ஆசிரியர் திருமதி கோமதி ஜெயம் அவர்கள் தனது வகுப்பு ( ஆறாம் வகுப்புப் ) பிள்ளைகளுக்கு கல்வி ஆண்டின் இறுதி நாளான இன்று அவர்களின் அவுட்ஸ்டாண்டிங் திறமையைப் பாராட்டிப் புத்தகப் பரிசு வழங்க விழைந்து வந்திருக்கிறார்கள். நலந்தாவில் பல்வேறு புத்தகங்கள் வாங்கியபின் நலந்தா உரிமையாளர் திரு செம்புலிங்கம் அவர்கள் இப்புத்தகங்களை ஒரு எழுத்தாளர் மூலம் வழங்கலாம் என ஆலோசனை கொடுத்து என் பெயரையும் முன்மொழிந்து இருக்கின்றார். உடனே என்னைத் தொடர்பு கொண்டார் திருமதி  கோமதி ஜெயம் அவர்கள் . புத்தகம் வழங்கி உரையாற்ற சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவர்களின் இம்முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது என்றுணர்ந்த நான் உடனே ஒப்புக் கொண்டேன். உடனே நானும் என்னிடம் இருந்த சிறுவர் நூல்களைச் சேகரித்து சிறுவர்களுக்கு வழங்க எடுத்துக் கொண்டேன். ( 27 நூல்கள் )

சில மாதங்களுக்கு முன்புதான் என் சின்னத்தம்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க என் மாமாவும் அப்பாவும் அங்கே புத்தகங்கள் வழங்கிச் சென்றிருந்தார்கள்.  

மிக சந்தோஷம் தரும் நாளாக அமைந்தது இன்று. அத்தனை குழந்தைகளும் ஆர்வத்தோடு அமர்ந்திருந்தார்கள். பரிட்சையின் கடைசி நாளான அன்று சத்தம் ஏதுமே இல்லை. பள்ளி தூய்மையாகவும் இருந்தது. மிகக் கட்டுக்கோப்பான நிர்வாகம் & ஆசிரியர்கள் & பிள்ளைகள். எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் அவர்கட்கு. !

///Ramanathan chettiar school il book day kkaga sirappu virunthinaraga pangerpu. Tx to Nalantha Jambulingam sir, HM Peter Raja sir, and Gomathi Jeyam mam who invited me to give the book prize to students. ///

Book day special

தமிழாசிரியை சித்ரா அவர்களின் வரவேற்பு உரை. கோமதி ஜெயம் அவர்களை முன்னுதாரணமாக எடுத்துத் தானும் செயல்படப் போவதாகவும் அடுத்த ஆண்டு மாணாக்கர்கள் தாங்கள் பரிசு பெற்ற புத்தகத்தைப் படித்து அதன் கருத்துக்களை வகுப்பு ஆசிரியையான தன்னிடம்  சொல்லவேண்டும் எனவும், அது பற்றி விவாதிக்கலாம் எனவும் சொன்னார்.

 சில சிறுவர் நூல்களை பள்ளி நூலகத்துக்குக் கொடுத்தேன். :) Balasubramanian Munisamy உங்க புத்தகமும் கொடுத்தேன்

இன்னும் சில நூல்களைப் பள்ளியின் நூலகத்துக்காகத் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதில் உங்க மெமரி பூஸ்டரும் இருக்கு. Latha Ananth sir. :) விஜிகே சாரின் நூல்களும் கோபி சரபோஜியின் நூல்களும் கூட இருக்கு. :)

///தன் வகுப்பு மாணவர்கள் மிகச் சிறப்பாகப் பயின்றதால் ( அவுட்ஸ்டாண்டிங் ) அவர்கள் அனைவருக்கும் இந்தக் கல்வியாண்டின் இறுதி நாளான இன்று அவர்கள் வகுப்பாசிரியை திருமதி கோமதி ஜெயம் கிட்டத்தட்ட 45 குழந்தைகளுக்கு சிறுவர்களுக்குத் தேவையான நூல்களைப் பரிசளித்தார்கள். அவற்றை வழங்க என்னை அழைத்திருந்தார்கள். அவர்களின் பெருமுயற்சிக்கும் மாணாக்கர் பால் கொண்ட பேரன்புக்கும் பாராட்டுகள் & வாழ்த்துகள். ///

அவர்களுக்கு என்னுடைய நூல்களை வழங்கி மகிழ்ந்தேன். அத்துடன் அவர்களுக்கு நலந்தா புத்தகக் கடையில் இருந்து வலைப்பதிவ சகோதரர் முத்து நிலவன் அவர்களின் “நீ முதல் மதிப்பெண் பெற வேண்டாம் மகளே “ என்னும் நூலையும் வாங்கிப் பரிசளித்தேன். :)
நன்றி Nalanthaa Jambulingam sir.


என்னுடைய நூல்களைத் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜ் அவர்களுக்குப் பரிசளித்தபோது.  

உதவித் தலைமை ஆசிரியை அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கிறார்கள். 

கோமதி ஜெயம் அவர்களின் இன்னுரை மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார் திருமதி கோமதி ஜெயம் அவர்கள்.

தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்களின் உரை.

வாசிப்பு மனிதர்களைப் பண்படுத்தும் என்றும், படித்தவற்றைக் குறிப்பெடுத்து வைப்பது, அதைப் பற்றி விவாதிப்பது, புத்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது, புத்தகத் திருவிழாவில் ஆளுக்கொரு புத்தகம் வாங்கி அதைத் தங்களுக்குள் பரிமாற்றம்செய்து கொள்வது பற்றி தலைமை ஆசிரியர் திரு ஆ பீட்டர் ராஜா அவர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

வாசிப்பு மனிதர்களை மேம்படுத்தும் என்றும் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறினேன். நூலகங்களைப் பயன்படுத்துவது குறித்தும் ஃபாரன்ஹீட் 451 படம் பற்றியும், எனது தமிழாசிரியை எம் ஏ சுசீலாம்மா எனக்கு வாசிக்கப் புத்தகங்கள் அளித்து மேம்படுத்தியது பற்றியும் அதன் காரணத்தாலேயே நான் அவர்கள்முன் உரையாற்றுவது பற்றியும் கூறினேன். 

குழந்தைகளுக்குப் புத்தகப் பரிசு வழங்கியபோது..




புத்தகப் பரிசளித்த ஆசிரியையுடனும் பரிசு பெற்ற குழந்தைகளுடனும்

நிறைவாகத் தலைமை ஆசிரியர் நன்றி கூறி குழந்தைகள் விடுமுறையில் தங்களுக்கு அளித்த புத்தகங்களைப் படித்து வருமாறு கூறினார்.

 

இதையும் பாருங்க. !  

நிறையப் படிங்க, தேர்ந்தெடுத்துப் படிங்க.. மாணவர்களுக்கு தேனம்மை லக்ஷ்மணன் அட்வைஸ்

 http://tamil.oneindia.com/news/tamilnadu/thennami-laxmanan-advises-the-students-read-books-280406.html?utm_source=article




4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...