168.
1896*இராமேஸ்வரம் சென்று வருபவர்கள் முன்னே இந்தச் சோகிகள், சங்குகளையும் வாங்கி வந்துள்ளார்கள். காரைக்குடிப் பக்கம் நல்லதுக்கு எல்லாம் சங்கு ஊதுவது வழக்கம். ( வேவு எடுத்தல், பொங்கல், பிள்ளையார் நோன்பு என்று ) அந்தச் சங்குகளை வெள்ளி பிடித்து வைத்திருப்பார்கள். வலம்புரிச் சங்கு என்றால் ரொம்பவே விசேஷமாக வெள்ளி பிடித்து வைத்து வணங்கி வருவார்கள்.









