எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 22 ஜூன், 2021

மைசூர்ச் சட்டியும் தூக்குச்சட்டியும் தெக்களூர்த் தவலையும்

 காரைக்குடியில் வீட்டில் உபயோகிக்கும் ஒவ்வொரு சில்வர் சாமானுக்கும், ( ஏன் மரம், இரும்பு, தகரம், அலுமினியம், துத்தநாகம், ஜாடி, கண்ணாடி, ப்ளாஸ்டிக், ரப்பர் வகையறா சாமான்களுக்கும் ) தனித்தனிப் பெயருண்டு. 

இதில் இருப்பது விளிம்பு உருட்டிய சாப்பிடும் தட்டு, பூப்போட்ட டிசைன் தட்டு. மாவு மூடி, ஏந்தல் மூடி.


இவை கெஸ்ட் ப்ளேட். சாப்பிடும் தட்டு சின்னம் பெரிசு மூணுக்கு ஜோடி ஒன்று என எழுதுவார்கள். 
இவை அனைத்தும் மூடித்தட்டுகள். ஏந்தல் மூடி, தாம்பாளத்தட்டு, மாவு மூடி, பால் சட்டி மூடி, டிசைன் தட்டு.விளிம்பு உருட்டிய மூடி. 
கெடியா ஃபேனுக்குக் கொடுத்த பேஸின், பூத்தட்டு, காப்பித்தட்டு  ( சில்வர் பேஸின் )

டிசைன் விளிம்புத்தட்டு, ( தாம்பூலத்தட்டு ), அடுத்து நடுவில் பூப்போட்டிருப்பது அர்ச்சனைத் தட்டு,  ஓட்டை வைத்தது சில்வர் சல்லடை.

மடக்குக் கத்தி/ மடக்கு ப்ளேடு. 

காபி கலக்குற சட்டி. 
மைசூர்க் கிண்ணம் சின்னம் பெரிசு. சட்டி உயரமாக இருந்து சட்டியின் விளிம்புக்கு அருகில் ஒரு மடிப்பு இருந்தால் அது மைசூர்ச் சட்டி/மைசூர்க் கிண்ணம். 


ஏந்தல் சட்டி, பட்டை டிசைன் வைத்த கப்/பேஸின். சட்னி, சாம்பார் வைப்பது. 

பரிமாறும் வாளி சின்னம் பெரிசு மூன்று. ஒன்பது இஞ்ச் வாளி, ஏழு இஞ்ச் வாளி, அஞ்சு இஞ்ச் வாளி. இதில் பெரிதில் சாம்பாரும், சின்னதில் கூட்டு, பொரியலும் மிகச் சின்னதில் பருப்பும் மோந்து பரிமாறுவார்கள். ஆகச் சின்னது ஒன்று உண்டு அது நெய் வாளி. ( இதில் இல்லை )


”ப” னா காது வைத்த உயரத் தூக்குச் சட்டி, சொருகு சட்டி, அடுத்து இருக்கும் இது பனா காது வைத்த சட்டி. 

உயரத் தூக்குச் சட்டிகள் சின்னம் பெரிசு நான்கு. சொருகு சட்டிகள் என்றும் சொல்வார்கள். 
இதில் எல்லாம் கொட்டி வைத்துக் கொள்ளவும், வீடு விட்டு வீடு சமைத்த பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்துவார்கள். முற்காலத்தில் பால், எண்ணெய், அசைவம் போன்றவற்றைத் தூக்குச் சட்டிகளிலேயே வாங்கி வந்தார்கள். ( அப்போது பாக்கெட் எல்லாம் கிடையாது ) 

இதைத் தெக்களூர்த்தவலை என்று சொல்வார்கள். நீண்ட தவலையான இதன் கழுத்தும் உயரமாக இருக்கும். தெக்கூர் அல்லது தெக்களூர் என்ற ஊரில் இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம். குடி தண்ணீர்  வைக்கப் பயன்படுத்தும் தவலை இது. 

இன்னும் இருக்கும் பொருட்களை எல்லாம் பதிவேற்றிப் பெயர் எழுதுகிறேன். 

3 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !

  பதிலளிநீக்கு
 2. இதில் பல பாத்திரங்களை அந்தக் காலத்தில் உபயோகப்படுத்தியது நினைவில் நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் ப்லாகிலும் இதுபோல் சில போஸ்ட் பார்த்திருக்கேன் ஸ்ரீராம் !

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...