எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 15 ஜூன், 2021

மடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும்

காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். 

இது குழந்தையின் வாநீர்த் துண்டு. அதில் ஓவியாய் இருக்கும் பலூனில் கட்டி மிதக்கும் பூனையும், பின்னே பறக்கும் வண்டும் வெகு அழகு. 

சர்பத் ஸ்டாண்ட்.

காய்கறிக் கூடை. 
வத்த வரளி வைக்கிற டப்பா. க்ளாம்ப் போட்டது.
இதில் ஊசி நூல்கண்டுகளைப் போட்டு வைத்திருக்கிறேன். :) 
ட்ராவல் ஷேவிங் செட். லெதரில் செய்யப்பட்டது. ஜிப் வைத்து மூடலாம்.
இதில் உள்ள பொருட்கள்தான் அணிவகுக்கின்றன.
இதுதான் இருபுறமும் மடக்கக் கூடிய இரட்டைக் கத்தி. 
நகம் வெட்டும் பர்ஸில் உள்ளது. அவசரத்துக்குப் பழம்வெட்டலாம். தோல் சீவலாம். கயிறு இன்னபிற பொருட்களையும் வெட்டலாம்.  
இதுதான் அந்த ஜெர்மன் கத்திரிக்கோல்.
மேட் இன் ஜெர்மனி என்று போட்டிருக்கிறது. 
அதனுள்ளே எவ்வளவு பொருட்கள்.  பிரஷ் டப்பா, சோப்பு டப்பா, ஷேவிங் பிரஷ் வைப்பது, பேஸ்ட் வைப்பது, சீப்பு வைப்பது, நகவெட்டி, கத்திரிக்கோல், மடக்கு இரட்டைக் கத்தி, சின்ன பிரஷ், உடையை சுத்தம் செய்து கொள்ள இவை எல்லாமே சில்வரில் உள்ளன. கண்ணாடி, ஷேவிங் பொருட்களை உபயோகப்படுத்தி விட்டோம். 

இதில் ரேஸர் ( பார்ட் பார்ட்டாகக் கழட்டி மாட்டுவது ) , பிரஷ், ஷேவிங் க்ரீம், டெட்டால் போன்றவையும் இருந்தன. இவைகளில் என்ன ஸ்பெஷல் என்றால் இன்னமும் துருப்பிடிக்கவில்லை. அதேபோல் பளபளப்பாயிருக்கின்றன. தரமான பொருட்கள். 

நல்ல உபயோகமான பிரயாணச் சாமான்கள். இந்தக்காலத்தில் இவை ப்ளாஸ்டிக்கில் வருகின்றன. 

2 கருத்துகள்:

 1. இது 1963ல் மலேசியாவிலிருந்து எங்க அப்பச்சி கொண்டுவந்தது. மாப்பிள்ளைக்கு தந்தது.நாங்க
  உபயோகப்படுத்தாம பத்திரமா வச்சிருந்து தந்தது.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஆத்தா

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...