எனது பதிமூன்று நூல்கள்

திங்கள், 30 மார்ச், 2020

வட்டாரப் பழமொழிகள் - 2.

1396. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

1397. பாம்பின் கால் பாம்பறியும்

1398. ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவை.

1399. ஆனை பல்லு விளக்குதா பூனை பல்லு விளக்குதா

1400. ஆனை இங்கே அங்குசம் எங்கே

ஞாயிறு, 29 மார்ச், 2020

திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

திருமயம் கோட்டைக்குச் சென்றதைப் பல இடுகைகளாகப் பகிர்ந்துள்ளேன். இதில் விட்டுப்போன புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

வீரபாண்டிய கட்ட பொம்மன் மறைந்திருந்ததும், குடைவரை சிவன் கோவில் இருப்பதும் இங்கேதான். பள்ளி கொண்ட பெருமாள் & சிவன் கோவில்கள் உள்ளன. மலையோடு உருவான திருமயம் பள்ளிகொண்ட பெருமாள் பலருக்குக் குலதெய்வம், விசேஷம் என்றால் சத்யகிரீஸ்வரர் என்னும் சிவனும், கோட்டை காலபைரவரும் கூட  விசேஷம்தான்.

மலைமேலும் கீழும் இருக்கும் பீரங்கிகளையும் வீரபாண்டியர் மறைந்திருந்த சுரங்க மண்டபத்தையும் முன் இடுகைகளில் படம்பிடித்துப் போட்டிருக்கிறேன்.சனி, 28 மார்ச், 2020

டிடிஸி லேக்கும் ப்ளாக் ஃபாரஸ்டின் பியர் கார்டனும்.


தெற்கு ஜெர்மனியின் பாடன் வூடன்பர்க் என்னுமிடத்தில் அமைந்துள்ளது இந்த டிடிஸி ஏரி. ப்ளாக் ஃபாரஸ்ட் என நெடிதுயர்ந்த ஊசி மரங்கள் இந்த ஏரியா முழுவதும் சூழ்ந்துள்ளன.

வெள்ளி, 27 மார்ச், 2020

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின,சிறுகதை ஆசிரியர்கள் - ஒரு பார்வை.

அழகப்பா பல்கலையில் 2018 ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் தமிழக மற்றும் ஈழப் புதின எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், சுய விவரக் குறிப்புகள், படைப்புகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

அதில் ஒரு கட்டுரை என்னைப் பற்றியும் சுசீலாம்மா பற்றியும் வெளியாகி இருந்தது. கட்டுரை யாத்தவர்கள் அனைவருமே பல்வேறு கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் சார்ந்த முனைவர்கள் & பேராசிரியர்கள்.

அந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக நானும் சென்றிருந்தேன். எனது கருத்துக்களைக் கூட முன்பே எழுதி இருக்கிறேன். எனது உரையையும் சவுண்ட் க்ளவுடில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறேன்.


இந்த நூலில் 120கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சில கட்டுரைகள் படைப்புகள் பற்றியும் அநேக கட்டுரைகள் படைப்பாளி பற்றியும் பேசுகின்றன.

வியாழன், 26 மார்ச், 2020

சாய் பிறந்த நாளில் கொஞ்சம் இனிப்பு.

இன்னிக்கு பாபாவோட (ஷிர்டி சாய் பாபா ) பிறந்தநாள்னு மகன் சொன்னான். மருமகள் பக்தை என்பதால் நானும் பக்தையாயிட்டேன். ஜெய் ஸ்ரீ சாய் மகாராஜ் கீ. அவருக்கும் கொடுத்ததா நினைச்சுக்குறேன்.

இனிப்பு அதிகம் சாப்பிடுபவர்களை ஸ்வீட் டூத் கொண்டவர்கள் என்று சொல்வார்கள். இனிப்பு நீர் இருந்தாலும் ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக் கொள்ளும் மக்கள் நிரம்பிய சமுதாயம் நம்மளது :) அதுனால என்னிக்கோ ஓரிரு ஸ்வீட் எடுத்துக்கலாம் பயமில்லாம சாப்பிடுங்க.

அர்ச்சனா ஸ்வீட்ஸில் வாங்கிய ட்ரை ஜாமூன்.


வட்டாரப் பழமொழிகள் - 1.

1376. ஆத்துல போற தண்ணீதானே அப்பா குடி ஐயா குடி

1377. ஆத்துல போட்டாலும் அளந்து போடு

1378. தலைக்கு மேலே வெள்ளம் போச்சு இனி சாண் போனா என்ன மொழம் போனா என்ன

1379. அலை ஓய்ஞ்ச பின்னாடி குளிக்க நினைச்ச மாதிரி

1380. ஆறும் பெண்ணாப் பெத்தா அரசனும் ஆண்டியாவான்

புதன், 25 மார்ச், 2020

எதிரிக்குக் காலம் கணித்த சகாதேவன். தினமலர் சிறுவர்மலர் - 57.

எதிரிக்குக் காலம் கணித்த சகாதேவன்
தனக்குத் தெரிந்த கலையைப் பிறருக்கு சொல்லிக்கொடுக்கக் கூடப் பலர் தயங்குவார்கள். ஆனால் தன் எதிரிக்கும் கூட தனக்குத் தெரிந்த ஜோசியக் கலை மூலம் பலன் சொல்லி நன்மை செய்தான் ஒருவன். அதனால் தனக்குத் தோல்வியே கிட்டுமென்றாலும் தான் கற்ற கலைக்கு நேர்மையாக இருக்கவேண்டுமானால் எதிரியாயிருந்தாலும் அவர்களிடம் உண்மையை உரைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்தப் பண்பாளன் யார் என்று அறிந்துகொள்ளும் ஆவல் மேலிடுகிறதுதானே குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் திருதராஷ்டிரனும் அவனது மக்கள் கௌரவர்களும் இருக்கிறார்கள். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டுவின் மக்களான பாண்டவர்க்கு கௌரவர்கள் அரசுரிமையில் பங்குதர மறுக்கிறார்கள். நயவஞ்சகமாக சகுனியின் போதனையின் பேரில் தர்மரை சூதாட்டத்துக்கு அழைத்துத் தோற்கடித்து அவர்களின் அனைத்து உடைமைகளையும் தங்களுடையதாக்கிக் கொள்கிறான் துரியோதனன்.
குருக்ஷேத்திரப் போர் வெடிக்கிறது. அந்தச் சூழலில் கௌரவர் பக்கம் துரியோதனன் கேட்டபடி கிருஷ்ணர் தன் சேனைகள் அனைத்தையும் உதவிக்கு அனுப்பிவிட்டார். பாண்டவர் பக்கம் அர்ஜுனன் கேட்டுக்கொண்டபடி தானே உதவிக்கு நிற்கிறார்.
அச்சூழலில் போர் நெருக்கடியும் கெடுபிடியும் அதிகமாக யார் ஜெயிப்பார் என்றே தெரியாத சூழல். துரியோதனன் பக்கம் கிருபாசாரியார், துரோணாசாரியார், பீஷ்மர், கர்ணன் , கிருஷ்ணரின் சேனை ஆகியன இருந்தாலும் அநியாயமாக பாண்டவர்க்கு உரிய உரிமையை மறுப்பதால் அநீதி கோலோச்சுகிறது. பாண்டவர் பக்கம் கிருஷ்ணர் மட்டுமே இருக்கிறார் தெய்வமே பாண்டவரின் நேர்மை பார்த்துத் துணை நிற்கும்போது துரியோதனுக்குத் தாம் போரில் வெல்வோமா என்ற சந்தேகம் எழுகிறது.

செவ்வாய், 24 மார்ச், 2020

பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

1366* மரவைகள் என்பவை மரத்தால் செய்யப்படும் பௌல், பேஸின் , தாம்பாளம் போன்றவை. இவை விருந்தினர் வந்தால் குளிர்பானம் கொடுக்க, பலகாரம் எடுத்து வைக்க உபயோகப்படுகின்றன.

காரைக்குடியில் பெரும்பாலும் மாலை வேளைகளில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்குப் பலகாரத்தை இதிலேயே வழங்குவார்கள். எங்கள் ஆயா வீட்டில் அடுப்படியில் இருக்கும் மர அலமாரியின் மேல் நிறைய மரவைகள் இருக்கும். 

நாங்கள் விடுமுறைக்குச் சென்றிருக்கும்போது மாலை மூன்றரை மணிக்குப் பலகாரமும் ஓவல் அல்லது காஃபியும் கொடுப்பார்கள். பலகாரத்தை இந்த மரவைகளில்வைத்துக் கொடுப்பார்கள். பொதுவாக முறுக்குவடை, மனகோலம், டயர்முறுக்கு, அதிரசம், தேன்குழல் , மாவுருண்டை,சீப்புச்சீடை, சீடைக்காய், போன்ற உலர்ந்தவகை பலகாரங்களே கொடுக்கப்படும். அதனால் மரத்தினால் ஆன இந்த மரவையில் மேலே குறிப்பிட்டவற்றில் ஒரு இனிப்பும், ஒரு உப்பும் வைத்துக்கொடுப்பார்கள். மிகச் சுவையாக இருக்கும் :) இவற்றுள் தொப்பி போல்/ கப் போல் இருப்பது 1367*டொப்பி மரவை.

திங்கள், 23 மார்ச், 2020

அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

திராவிடக் கட்டிடக் கலையின் உயர்ந்த எடுத்துக்காட்டாய் காரைக்குடியில் அமைந்துள்ளது தமிழ்த்தாய் திருக்கோயில்.

உலகிலேயே தமிழ்த்தாய்க்குக் கோயில் கட்டப்பட்டுள்ள ஒரே இடம் காரைக்குடி மட்டும்தான். அஃகன்னா வடிவில் கேடயத்தின் எஃகைப்போல கம்பன், வள்ளுவன், இளங்கோ என்கின்ற முப்பெரும் புள்ளிகள் சூழ, தமிழ்த்தாய் வரித்தாய், ஒலித்தாய் என்னும் வாட்களுக்கு மத்தியில் வீரத்தாயாய்க் குடிகொண்டிருக்கிறாள்.

இக்கோவில் காரைக்குடி கம்பன் கற்பகம் பள்ளியின் உள்ளே கம்பன் கழகத்தாரின் ( கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் அவர்களின் )  பெருமுயற்சியால் கட்டப்பட்டது. இதற்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தவர் கலைஞர் டாக்டர் மு கருணாநிதி அவர்கள். இது முழுமையாய்க் கட்டிமுடிக்கப்பட்டபின் இதைத் திறந்து வைத்தவரும் அவரே.

தஞ்சைப் பெருவுடையார் கோவில் அமைப்பில் இருக்கிறது தமிழ்த்தாயின் கருவறைக் கோபுரம். அன்றலர்ந்த தாமரைபோல் மலர்ந்தும் இருக்கிறது.


கம்பன் மணிமண்டபத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ளது இக்கோவில்.

ஞாயிறு, 22 மார்ச், 2020

காஃபி (& டீ .)

என்ன செய்றதுன்னே தெரில. நிசப்தம் காதை அறையுது. தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. சூடா ஒரு கப் காஃபியோ டீயோ குடிப்போமா..

டிஃபன் சாப்பிட்டதும் நுரை பொங்க ஒரு சின்ன கப்பில் கசப்பும் வாசனையும் தூக்கலா ஒரு  காஃபி குடித்தால்தான் சாப்பிட்ட நிறைவு வரும். இனி என் காஃபி நினைவுகளும் புகைப்படங்களும். சில ஆண்டுகளாக அவ்வப்போது ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று தங்கிய ஹோட்டல்களில் எடுத்தது.

கோவை விஷ்ணுப்ரியா அருகில் உள்ள கடையில் பித்தளை டவரா டம்ளரில் ப்ரமாதமாக ஃபில்டர் காஃபி கிடைக்கிறது.


காலைக் காஃபி சுவாசப் புத்துணர்ச்சி :)

வெள்ளி, 20 மார்ச், 2020

சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

கும்பகோணம் சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டில் இருந்த சிற்பங்களைப் புகைப்படம் எடுத்து வகைப்படுத்தி  உள்ளேன்.

வாழைப்பழம் சுமந்து சீர் கொண்டு வரும் மனிதர் தொப்பையுடன் இருப்பதால் சித்திரக் குள்ளர் போன்ற தோற்றம் அளித்தார். !
ரெஸார்ட்டின் முகப்பில் சிம்மமும் யானையும் கலந்த யாளிகள் வரவேற்கிறார்கள். 

வியாழன், 19 மார்ச், 2020

புஸ்தகாவும் ராயல்டியும்.

2521. காரைக்குடி கம்பன் மண்டபத்தில் நடக்கும் புக்ஃபேரில் ஸ்டால் வாடகை பதினோரு நாளுக்கு 4,500 ரூபாய். (ஷெல்ஃபுகள் உட்பட). இதுபோக புத்தகங்கள் கொண்டு வரும் எடுத்துச் செல்லும் பயணச் செலவுகள், இரு ஊழியருக்கான பயணப்படி, உணவு, தங்கும் செலவுகள் தனி. பத்து பர்சண்ட் புக் வாங்குபவர்களுக்குத் தள்ளுபடி.

பத்து நாளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றால் இருபதாயிரம் லாபம். இதில்தான் மேற்கூறிய செலவுகள் அடங்கும். பத்து நாள் உழைப்பிற்கு ஐயாயிரம் கிடைத்தால் எதேஷ்டம். ( கடை போட்டவருக்கு).

ராயல்டி பற்றிய பதிவுகள் அடிக்கடி கண்ணில் படும். சொல்லப் போனா பதிப்பாளர், எழுத்தாளர், விற்பனையாளர்களில் வெகு சிலரைத் தவிர மற்றையோருக்கு வேறு தொழிலோ உத்யோகமோதான் வாழ்வை நன்முறையில் கொண்டு செல்ல உதவும்.

2522. அதீத மனப்பிறழ்வில் இருப்பவர்களும், வரட்டுத்தனமாக வறுமையில் தங்களை ஆழ்த்திக்கொண்டவர்களும் எழுதுவதுதான் சிறந்த எழுத்து என கொண்டாடப்படுகிறது. என்ன அளவுகோலோ..

பித்துப் பிடிச்சு உளறணும் அல்லது பிரக்ஞை தவறித் திட்டணும். தட்ஸால்

அதே போல் முறை தவறிய உறவுகளைப் பத்தி எழுதணும். இல்லாட்டா இரட்டை அர்த்தத்துல எழுதணும்.

கம்ப ராமாயணம் முக்கியமான பாடல்களும் விளக்கமும் – ஒரு பார்வை.


கம்ப ராமாயணம் முக்கியமான பாடல்களும் விளக்கமும் – ஒரு பார்வை.

தான் ரசித்த ராம காவியத்திலிருந்து மனதிற்கினிய சில பாடல்களை எடுத்து நயவுரையோடு நயந்திருக்கிறார் திரு கம்பன் அடிசூடி அவர்கள். கம்பன் கவித்தேனில் படிந்த மனவண்டு சுவை கண்டு மொண்ட பாடல்களுக்கு எழுந்த இவ்வுரையில் நயம் யாவும் குருநாதன் அருள் எனப் பணிவடக்கத்தோடு குறிப்பிட்டு இருக்கிறார் கம்ப காவலர்.

இனி நாமும் 116 பாடல்களையும் மாந்தி மகிழ்வோம். அவற்றுள் என்னைக் கவர்ந்த சிலவற்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பால காண்டத்தில் 36 பாடல்களும் அயோத்தியா காண்டத்தில் 22 பாடல்களும், ஆரணிய காண்டத்தில் 17 பாடல்களும், கிஷ்கிந்தா காண்டத்தில் 12 பாடல்களும், சுந்தர காண்டத்தில் 12 பாடல்களும் யுத்த காண்டத்தில் 17 பாடல்களும் சுவையுரை பெற்றுள்ளன.

புதன், 18 மார்ச், 2020

பாரதி பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி.

காரைக்குடி புத்தகத் திருவிழா கடந்த மாதம் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதை ஒட்டி மாணாக்கருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. செய்யுள் மனனப் போட்டியாக பாரதி பாரதிதாசன் பாடல்களில் இருந்து 40 வரிகளைச் சொல்லும் போட்டியில் பல்வேறு பள்ளிகளின் மாணாக்கர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஒப்பித்தனர்.

இந்நிகழ்வை நடத்தியவர் ஆசிரியரும் குழந்தைக் கவிஞர் திரு அழ. வள்ளியப்பா அவர்களின் புதல்வியுமான திருமதி தேவி நாச்சியப்பன் ஆவார்கள். இவர் இப்புத்தகத் திருவிழாவின் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி சந்திரா மற்றும் திருமதி ஸ்வேதா ( கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ) ஆகியோரோடு மூன்று நடுவர்களுள் ஒருவராகப் பங்கேற்றேன்.திங்கள், 16 மார்ச், 2020

தர்மத்திடம் சரணடைந்த விபீஷணன். தினமலர் சிறுவர்மலர் - 56.

தர்மத்திடம் சரணடைந்த விபீஷணன்
எப்போதும் தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று கடுந்தவம் இருந்து வரம் பெற்றான் ஒருவன். அவன் இயக்கர் வம்சமாயினும் பஞ்சமாபாதகங்களைக் கண்டாலே அஞ்சுபவன். அவன் எப்படி அதர்மம் புகுந்த இடத்தில் இருப்பான். அதனால்தான் அவன் தர்மத்திடம் சரணடைந்தான். அவன் யார் ? அவன் பெற்ற வரம் என்ன ? அவன் தர்மத்திடம் சரணடந்த காரணம் என்ன எனப் பாப்போம் குழந்தைகளே.
விஸ்ரவஸ் என்ற முனிவருக்கு புஷ்போத்கை, மாலினி, ராகை ஆகிய மூன்று மனைவியர் மூலம் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை, கரன் ஆகியோர் பிறந்தார்கள். இவர்களுள் மாலினிக்குப் பிறந்த விபீஷணன் அழகும் அறிவும் நிரம்பப் பெற்றவன். அத்தோடு அறச் செயல்களில் விருப்பம் கொண்டவன். சிறந்த பக்திமான்.
இவர்களில் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் வேதங்கள் கற்றுக் கல்விமானாகத் திகழ்ந்தாலும் இன்னும் பலம்பெற வேண்டி பிரம்மனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தனர். முடிவில் பிரம்மன் தோன்றி அவர்கள் தவத்தை மெச்சி வரங்கள் வழங்கினார். இராவணன் யாராலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என வரம் கேட்டவன் மனிதனாலும் இறப்பு நேரக்கூடாது என்பதைக் கேட்க மறந்தான். கும்பகர்ணனோ நித்திய ஆயுசு வேண்டும் எனக் கேட்கவந்தவன் நித்திரை வேண்டும் என வாய்தவறிக் கேட்டு தூக்கத்தை வரமாகப் பெற்றான்.
உண்ணா நோன்பு நோற்றிருந்த விபீஷணனோ இன்னும் ஞானமும் மேன்மையும் அடைந்தான். அவன் “ எந்தச் சமயத்திலும் எத்தகைய சூழலிலும் நான் தர்மத்தில் இருந்து வழுவாமல் வாழவேண்டும். மேலும் எனக்கு ஞான ஒளி பெருகவேண்டும் ” என்பதை பிரம்மாவிடம் வரமாகக் கேட்டதால் அவர் மகிழ்ந்து ’அவன் சிரஞ்சீவியாகவும் வாழ்வான்’ என்ற வரத்தையும் சேர்த்து அருளினார்   

தமிழ் சினிமாவில் பெண்கள்

தமிழ் சினிமாவில் பெண்கள்.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமாயிற்று செல்லுலாயிட் பிம்பங்களின் ஆட்சி. இருபது வருடங்கள் பேசாப்படம் அதன் பின்பேசும் படமாக வந்து ஒரு நூற்றாண்டுக்குள் இந்தியர்களின் வாழ்விலும் செல்ஃபோனிலும் புகுந்து விட்டது.
சினிமாவை முதன் முதலில் உருவாக்கியது ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் என்றபோதும் அதன் கோட்பாட்டை உருவாக்கிய பேல பெலாஸ் என்பார் ”நம்மை இனங்காணுதல் “ சினிமா என்ற கலையில்தான் நிகழ்கிறது என்கிறார். உண்மைதானே சாதாரணப் பெண்களும் சினிமா ஹீரோயின்கள் போல் உடை உடுத்துவதும் நகைகள் போடுவதும் இன்றும் உள்ளதுதானே.  
ஆதியில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். மணிமேகலை, ஔவையார், காரைக்காலம்மையார் ஆகிய கதாபாத்திரங்களாக நடித்த கேபி சுந்தராம்பாள் ஆண் வேடமுமேற்று நந்தனாராகவும் நடித்திருக்கிறார். இவர் சட்ட மேலவை உறுப்பினராகி பத்மஸ்ரீ விருதும் பெற்றார். அதே போல் சேவாசதனம், பக்த மீரா, சாவித்ரியாக நடித்த எம் எஸ் சுப்புலெட்சுமி நாரதராக ஆண் வேடமேற்றும் நடித்திருக்கிறார். பாரத ரத்னாவும் ஆகியிருக்கிறார்.
ஹேமாமாலினி, வைஜெயந்திமாலா, விஜயசாந்தி ரம்யா, போன்றோர் எம்பிக்களாகவும். பலர் தேர்தல் பிரச்சாரத்தோடும் நின்று விட கொள்கை பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஜெயலலிதா முதல்வரானார்.

சனி, 14 மார்ச், 2020

ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

ஊனையூர் முத்துவெள்ளைச் சாத்தையனார் கோவில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்.

கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின் நான் எடுத்த சில புகைப்படங்கள்.

இவர்தான் பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார். சக்தி வாய்ந்த தெய்வம். எங்கள் ரட்சகர்.

சோணையன் கோவிலிலிருந்து - வெளிப்புறமிருந்து பண்ணி வீரப்பர் சந்நிதி கோபுரத்தை எடுத்தேன்.

வியாழன், 12 மார்ச், 2020

ஓடை – ஒரு பார்வை


ஓடை – ஒரு பார்வை

ஒரு நூற்றாண்டுக்கான சமுதாய மாற்றத்தின் தொகுப்பாக அமைந்துள்ளது ஓடை என்னும் இந்நூல். கன்னடத்தில் ஹள்ள பந்து ஹள்ளா என்ற பெயரில் ஸ்ரீனிவாச வைத்யா என்பவர் எழுதிய நூலைத் தமிழில் கே நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மிகச்சரளமான மொழிபெயர்ப்பு. இதில் இருக்கும் ஊர், ஆட்கள் பெயரைப் பொதுமைப்படுத்தினால் இது இந்தியா முழுமையும் இருக்கும் மக்கள், முடியரசு, ஆங்கில ஆட்சி,  கம்பெனி அரசாங்கம், புரட்சிகள், சாமியார் மடங்கள், ஆத்திகர்களின் இல்லங்கள், கூட்டுக் குடும்பமுறை, அதில் கலந்திருக்கும் பல்வேறுபட்ட மனிதர்கள் அவர்களின் நியாய தர்மங்கள், விதவைகள் வாழ்வு, விளிம்புநிலை மக்களைப் பற்றிய பார்வை ஆகியவற்றைச் சுட்டுவதாகவே அமையும்.

புதன், 11 மார்ச், 2020

பிஸ்குட்ஸ் & அஸார்ட்டட் குக்கீஸ்.

நாம் பிஸ்கட் என்றழைப்பதை வடநாட்டார் பிஸ்குட் என்பார்கள். மேற்கொண்டு நம் உச்சரிப்பை எல்லாம் கேலி செய்வார்கள். :) அதனால் இங்கே கொஞ்சம் பிஸ்குட்ஸ், அஸார்ட்டர் குக்கீஸ், சாக்லேட்ஸ், டெஸர்ட்ஸ் உங்களுக்காக.

இந்த டார்க் ஃபேண்டஸியில் என்ன இருக்குதுன்னு தெரில. ஆனா என் பசங்களுக்கு மிகப் பிடிச்ச பிஸ்குட் இது. ஏன்னா இது டூ இன் ஒன். பிஸ்குட்டுக்குள்ள சாக்கிலேட். :)பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி. தினமலர் சிறுவர்மலர் - 55.

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி
பறவைகள் ப்ராணிகளின் மொழி அறிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். காக்கை காகாவெனக் கரைவதையும் கிளி கிக்கீ எனப் பேசுவதையும் குயில் குக்கூவெனக் கூவுவதையும் மட்டுமல்ல குரங்கின் கீச் கீச்சையும் நாயின் குரைப்பையும் கூட நாம் விலங்குகளின் பாஷை அறிந்தால் அவை என்ன சொல்ல வருகின்றன என்பதை அறியலாம். இப்படி குதிரைகளின் கனைப்பொலியையும் அவற்றின் உள்ளுணர்வையும் அறியும் திறனோடு ஒருவர் இருந்தார். அதனால் அவர் தனக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடிந்தது. அப்படிப்பட்டவர் யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திருதராஷ்டிரனின் குழந்தைகள் கௌரவர்கள். பாண்டுவின் குழந்தைகள் பாண்டவர்கள். இவர்களில் பாண்டுவின் முதல் மனைவி குந்திக்கு தர்மர், பீமன் அர்ஜுனர் ஆகியோரும் பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரிக்கு நகுலன் சகாதேவன் ஆகியோரும் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தமையால் நகுலன் சகாதேவன் ஆகியோர் மிகுந்த அழகுடன் திகழ்ந்தார்கள். கடைக்குட்டிகள் என்ற செல்லம் வேறு. எல்லாரிலும் அழகு வாய்ந்த நகுலன் ஆயுர்வேத மருத்துவம், வாள் பயிற்சி, குதிரை வளர்ப்பு ஆகியவற்றில் தேர்ந்தவன்.

செவ்வாய், 10 மார்ச், 2020

தோழர் சிவானந்தம் அவர்கள் பார்வையில் காதல் வனம்.

சகோதரி தேனம்மைலக்ஷ்மணன்  அவர்களின் காதல் வனம்   என் போன்ற சிறார்களுக்கு காதல் பொக்கிஷம் . இதனுள் இடம்பெற்ற வாடகைத் தாய் பற்றிய பதிவுகள் என்னை ஒரே நாளில் நாவலை வாசிக்க தூண்டியது.

இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண் புணர்தலால் உண்டாகும் கருதரித்தலானது  காலப்போக்கில் செயற்கை முறையில் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பலவாறாக கருத்தரித்தல் நிகழ்வு நிகழ்கிறது. இவற்றுள் வாடகைத்தாயும் உள்ளடக்கம் என்பதனை தெளிவாக பதிவு செய்துள்ளார்.


திங்கள், 9 மார்ச், 2020

குட்டி இளவரசன் – ஒரு பார்வை


குட்டி இளவரசன் – ஒரு பார்வை

ஃப்ரெஞ்சிலிருந்து மலையாளத்திலும் ( ராமகிருஷ்ணன் குமரநல்லூர் ) மலையாளத்திலிருந்து தமிழுக்கும் வந்திருக்கும் நூல் இது. குழந்தைகளின் உலகம் எவ்வளவு எளிமையானது என்பதைப் பதிய வைத்தது.

பாரதி, பாரதிதாசன் - சவுண்ட் க்ளவுல் ஒரு சிற்றுரை.

காரைக்குடி கம்பன் கற்பகம் பள்ளியில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி, பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மூன்று நடுவர்களுள் ஒருவராக இன்று பங்கேற்றேன். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பரிசுகள் வழங்கியவர் குழந்தைக் கவிஞர் திரு. அழ வள்ளியப்பா அவர்களின் புதல்வி திருமதி தேவி நாச்சியப்பன். மற்ற நடுவர்கள் சாந்தா , ஸ்வேதா ஜீவரத்தினம் ( கார்த்திகேயன் பள்ளித் தலைமை ஆசிரியை ).
( இந்நிகழ்வின் சில புகைப்படங்களைப் பின்னர் பகிர்வேன் )

வெள்ளி, 6 மார்ச், 2020

வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

வால்ரஸ் சீல்களின் அட்டகாசமான ஆட்டத்தை துபாய் டால்ஃபின் ஷோவில் பார்த்து மயங்கினோம். வளையத்தில் புகுவதென்ன, வாயில் பந்தை நிற்க வைப்பதென்ன. ட்ரெயினருடன் கொஞ்சிக் குலாவுவது என்ன.., கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஸ்டூல்களில் ஏறி வாலை ( LYMPHS)  விசிறுவதென்ன என்று ஒரே அதகளம்தான்.

வாங்க கொஞ்சம் வால்ரஸ்களோடு விளையாடுவோம்.


டால்ஃபின் லாகூனுக்குள் மெல்ல எட்டிப்பார்க்கின்றன இரு வால்ரஸ் சீல்கள்.

புதன், 4 மார்ச், 2020

பசியில் குதித்த பிரம்மகபாலம். தினமலர் சிறுவர்மலர் - 54.

பசியில் குதித்த பிரம்மகபாலம்
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்றொரு பழமொழி உண்டு. இது மனிதர்களுக்குத்தான். ஆனால் ஒரு கபாலத்துக்குப் பசித்தது. அதனால் அது போட்டது அனைத்தையும் தின்று தீர்த்தது. சிவனுக்கு இட்ட உணவை எல்லாம் பகாசுரன் மாதிரி அதுவே அனைத்தையும் தின்றதால் சிவன் பசியால் துடித்தார். அதுவோ அனைத்தையும் தின்றும் பசியில் குதித்து அழிந்தது. அது என்ன கதை என்று பார்ப்போம் குழந்தைகளே.
ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அன்னை உமையவள் பரிவு கொண்ட மனத்தோடு அனைவருக்கும் உணவு வழங்கி வந்தாள். அதனால் காசி மாநகர மக்கள் பசிப்பிணி நீங்கி வாழ்ந்து வந்தனர். அன்னை உமையவளின் கணவர் சிவன் விளையாட்டாக அவளிடம் “உணவு என்பது மாயை” என்று கூற அன்னையோ ”உணவு இல்லாமல் உலகம் இல்லை. உங்களுக்கு உணவின் அருமை ஒருநாள் தெரியும் ” என்று கூறி கோபிக்கிறார்.

மலரானவளுக்காக..

**நோய் வரும்போது
அழகு அறிவு அன்பு
எதுவுமே பயனற்றுப் போகிறது.

**என்ன செய்துகொண்டிருக்கிறோம்
எதுவரை இயங்குவோம்
எது நமக்கான விளிம்பு..

**அந்தரத்தில் பறப்பதுபோல் இருக்கிறது
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் அல்ல
வெட்டுக்கிளிகள் துடிக்கின்றன.

**என்ன செய்துவிட்டாய் ஒரு நொடியில்
என்ன செய்துகொண்டிருக்கிறேனென்பதே புரியவில்லை
உனக்குப் பிறகு.

**வந்தாய் கவர்ந்தாய்
அழகைக் கண்டு அறிவைக் கண்டு பொறாமைப்பட்டேன்
சென்றுவிட்டாய்
சாம்பல் என்னை அச்சுறுத்துகிறது

செவ்வாய், 3 மார்ச், 2020

செடிக்கன்னியும் சுயமோகமும்.

2501. Be benevolent in sharing knowledge and it comes back to you in multitudes.

--Mr. Kiruba Shankar, CEO, Business Blogging.

2502. ரெண்டு நாளா க்ரூப் க்ரூப்பா போறேன்.. அட அட அட என்ன பாசம் ரெண்டு மூணு பேர் ஒரே க்ரூப்புல நம்மள கோர்த்து விட்டிருக்காங்கப்பா..
அது சரி அப்ப நம்ம புக் போட்டுருக்கோம்கிறதையும் சொல்லணுமில்ல.. அது ரெண்டு மூணு தரம் ஒரே க்ரூப்புல வந்தா கண்டுக்காதீங்க..
இனிமே புதுசா என்ன எந்த க்ரூப்ல சேர்த்தாலும் ஒரு தரம் மட்டும் சேருங்க.:))

நன்றி நன்றி க்ரூப் மக்காஸ்.
நாமளும் கொலைவெறியோட க்ரூப் க்ரூப்பா போஸ்ட் போட வழி செய்ததுக்கு

2503. பதிவர் சந்திப்புக்கு போவாக.. ஃபேஸ்புக் மீட்டுக்கு போவாக.. என்னோட புக் ரிலீஸுக்கு மட்டும் வரமாட்டாக.. இப்படி போனில் மது என் கூட டிஷ்யூம்.

2504. பொங்கல் வந்திரிச்சு. இன்னும் கரும்பு, பனங்கிழங்கு, பலாக்காய் வரணும்.
#பொங்கல்_சந்தை

திங்கள், 2 மார்ச், 2020

நெய் ரோஸ்ட்.. GHEE ROAST.

எல்லா ஹோட்டல்களிலும் நெய் தோசை/நெய் ரோஸ்ட் என்று மட்டும் கேட்டுடாதீங்க. நெய் பேப்பர் ரோஸ்ட் என்றே அழுத்தம் திருத்தமா கேளுங்க. அப்பத்தான் மொறு மொறுன்னு மேனி மினுங்க நெய் ரோஸ்ட் கிடைக்கும்.

ஜெய்னிகாவின் நெய் ரோஸ்டுக்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை. இருந்தும் சில ஹோட்டல்களின் நெய் ரோஸ்ட்களோடு கம்பேர் செய்து ஒரு உணவு ( ஜொள்ளுப் ) பதிவு. :)


ஜெய்னிகாவிலேயே ஐந்தாறு முறை தோசை சாப்பிட்டு இருப்பதால் இந்த மினு மினுப்பை விட்டு நீங்கக் காலம் பிடிக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...