எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காதல்வனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல்வனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

காதல் வனம் வெளியீட்டில் சில கலகலப்பான புகைப்படங்கள்

 2019 ஃபிப்ரவரி பதினாலு அன்று சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் என்னுடைய காதல் வனம் நூல் வெளியிடப்பட்டது. 

அன்று ஏராளமான அன்பு உள்ளங்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள். 

ஸ்டில்ஸ் ரவி சாருக்கு நான் சரியான நேரத்தைக் கூறாததால் அவர் முன்பே வந்துவிட்டு வேறு ஃபங்க்‌ஷன் இருப்பதால் சென்று விட்டார். 

அன்று விழாவை ஸ்பெஷலாக்கியவர் கல்லூரித்தோழி அன்பு ஏர்னஸ்டினின் கணவர் பிரபல புகைப்படக்காரர் அருளானந்த குமார் அவர்கள். ஒரு கிராண்ட் ஃபங்க்‌ஷன் அளவுக்குப் புகைப்படங்களை எடுத்துத் தள்ளித் திணறடித்துவிட்டார். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் !


செவ்வாய், 10 மார்ச், 2020

தோழர் சிவானந்தம் அவர்கள் பார்வையில் காதல் வனம்.

சகோதரி தேனம்மைலக்ஷ்மணன்  அவர்களின் காதல் வனம்   என் போன்ற சிறார்களுக்கு காதல் பொக்கிஷம் . இதனுள் இடம்பெற்ற வாடகைத் தாய் பற்றிய பதிவுகள் என்னை ஒரே நாளில் நாவலை வாசிக்க தூண்டியது.

இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண் புணர்தலால் உண்டாகும் கருதரித்தலானது  காலப்போக்கில் செயற்கை முறையில் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பலவாறாக கருத்தரித்தல் நிகழ்வு நிகழ்கிறது. இவற்றுள் வாடகைத்தாயும் உள்ளடக்கம் என்பதனை தெளிவாக பதிவு செய்துள்ளார்.


Related Posts Plugin for WordPress, Blogger...