எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 ஜனவரி, 2010

இதுவும் கடந்து போகும்

அறியாத அருணாவுக்கு
முப்பத்தாறு ஆண்டுகள்
நினைவற்று..
உலகெங்கும் உழைக்கும்
நண்பருக்கு அயர்ந்து அமர
ஒரு வீடும் குடும்பமும்...
கார்கிலிலும் வாகாவிலும்
கடுங்குளிரில் நமக்காய்
துப்பாக்கிக் கனவான்கள்..
குரலும் பிம்பமும் கொண்டு
சேர்க்கும் வீடு ..
வான்வழிப் பயணமோ ..
வயர் வழிப் பயணமோ..
எத்தனை புத்தாண்டு..
பொங்கல் .,தீபாவளி .,
ரம்ஜான் .,கிறிஸ்துமஸ் .,
யாருமில்லாமல்.. ..
குரல் வழிக்குடித்தனத்தில்
கழிந்து போனது
புத்தாண்டுகளும் புன்னகையும்...

பிஞ்சுக்குழந்தையோ., புத்தகமோ .,
வெளிவரும் நேரமும்
தகப்பனோ .,தாயோ .,
காற்றில் கரையும் காலமும்
அருகிருந்து ஆற்றாமல் ...
மனைவியின் மல்லிகைப்பூவாலும் ,
மகவின் பூந்தண்டைக்காலாலும்
அடிக்கப்படாமல் ....
தினம் தினம் வாகாவில்
கொடியேற்றும் த்வாரபாலகர்கள்...
அருணாவிற்கும்.,
அன்னிய தேச நண்பருக்கும் .,
அன்னைபூமித்தோழருக்கும் .,
இதுவும் கடந்து போகும் .....
இனி நலமே பொலிக நாளும்... ..

41 கருத்துகள்:

  1. யானும் அவ்வண்னமே வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. புத்தாண்டு வாழ்த்துகள்

    அன்பு நிறைய மக்கா

    பிரியம் ததும்பும் உங்கள் வாழ்த்து நன்றாக இருக்கிறது

    வலைச்சரத்திர்க்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. எல்லா சோகங்களும் தீமைகளும் கடந்து போக நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. நெகிழ்ச்சியான விஷயம். நம்மில் எத்தனை பேர் இதை நினைக்கிறோம்?

    பதிலளிநீக்கு
  5. ஏற்றத்திலும் தாழ்விலும்
    ஏணியாய் இருந்து வழிவிடும்
    இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
    பயணிப்போம் புது வருடம் நோக்கி
    புது மனிதனாய்..


    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நலமே பொலிக நாளும்
    யானும் அவ்வண்ணமே கோரும்
    பாலா

    பதிலளிநீக்கு
  7. எல்லோரும் நலமாய் வாழ பிராத்திப்போம்

    பதிலளிநீக்கு
  8. அழகான ஆழமான வரிகள்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. வரிகள் ரொம்ப அருமை

    இனி நல்லதொரு நாளாய் அமையட்டும் ..

    நல்ல கவிதை தேனம்மை அக்கா

    பதிலளிநீக்கு
  10. நல்ல வாழ்த்து. ஒவ்வொரு வார்த்தையிலும் ஓராயிரம் கதைகள். கார்கில் வீரர்களை நினைக்கவைத்து என் கண்களை நனையவிட்ட பதிவு.

    பதிலளிநீக்கு
  11. நன்றி நேசன்
    சீசா மூக்கு டால்பினாய் இருந்துவிட்டால் ஆனந்தம்தான் மக்கா ..
    யுரேகா என்று இங்கும் உங்கள் குரலை கண்டுபிடித்துவிட்டேன் மக்கா ..

    வலைச்சரத்தில் என் கவிதைகளைப்பற்றி எழுதிய வானம்பாடிகளுக்கும் சீனா சாருக்கும் என் மனம் கனிந்த நன்றி ..

    புரை எறும் மனிதர்களில் பாராவும் ரொம்பப் புரை ஏற வைத்துவிட்டார்

    இந்த அன்பிற்கெல்லாம் என் அன்பான கவிதைதான் சமர்ப்பணம்

    பதிலளிநீக்கு
  12. நன்றி வினோத் கூட்டுப்பிரார்த்தனை நல்லது

    பதிலளிநீக்கு
  13. நன்றி சந்தான் சங்கர்

    அசத்திட்டீங்க சந்தான சங்கர்

    அட அடுத்து நானும் பாரா மேலும் நேசன் போல் எழுதத்தான் எண்ணி இருந்தேன்

    நீங்க முந்திக்கிட்டீங்களே சந்தான சங்கர்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. வழக்கமாக இல்லாமல் புதிய கரு தேடி மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ஆனாலும் எழுத்தில் அதே பாய்ச்சல்.
    பட்டைய கிளப்புங்க!

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க மீனம்மா...சாரி தேனம்மா....!

    :))))))))

    பதிலளிநீக்கு
  16. இதுவும் கடந்து போகும் ... மூன்று வார்த்தைகள் சொல்லும் சேதிகள் அதிகம் .. உங்கள் கவிதை அதில் ஒன்று .. நலமே விழைவு ..நன்றி :))

    பதிலளிநீக்கு
  17. நல்லா இருக்கு. உங்கள் அன்பின் வெளிப்பாடு மிக அருமை.

    ///இதுவும் கடந்து போகும் .....
    இனி நலமே பொலிக நாளும்... .///

    எல்லோருக்கும் எந்நாளும் நன்னாளாய் அமைந்திட வேண்டிடுவோம்.

    பதிலளிநீக்கு
  18. உங்க வேகத்துக்கு பின்னூட்டம் போடறதே சிரமம்

    வரவர உங்க உயரம் அதிகரிப்பதாக தோன்றுகிறது

    மறந்துடாதீங்க அக்கா

    அகசூல் பாருங்க

    விஜய்

    பதிலளிநீக்கு
  19. நன்றி பாலா

    அடடா யார் அந்த பாக்கியசாலி பாலா சொல்லுங்க அருமை கவிதை
    அம்மாவைப் பற்றியது போலவும் இருக்கு

    பதிலளிநீக்கு
  20. நன்றி தமிழுதயம்

    மனதை சுத்தமாக வைக்க வேண்டும் என்பது மிக அருமை மற்றும் உண்மையும் கூட

    பதிலளிநீக்கு
  21. நன்றி நிகே

    உங்க அன்பின் வெளிப்பாடு அருமை நிகே

    பதிலளிநீக்கு
  22. நன்றி ஸ்டார்ஜன்
    தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  23. நன்றி விஜய சாரதி முதல்முறையா என்னோட வலைத்தளத்துக்கு வர்றீங்க உங்க கருத்துக்கு நன்றீ

    உங்க பேட்டி விஜயசாரதி யம்மாடி மூச்சு வாங்குது எப்பூடீடீ இப்படியெல்லாம் ஐடியா வருது ஆனா நல்லாத்தான் இருக்கு அடுத்த பதிலை நீங்க சொல்றதுக்குள்ள எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  24. நன்றி செல்வா எந்த ஊருக்குப் போனாலும் பின்னூட்டமிட்டு என்னை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. நன்றி வசந்த்
    அருக்காணி எப்படி இருக்கா

    பதிலளிநீக்கு
  26. நன்றி சும்மாதான்

    அசத்துறீங்க விமர்சனத்துல இதுக்குப் பின்னாலயும் நான் வேட்டைக்காரன் பார்ப்பேனா என்ன

    பதிலளிநீக்கு
  27. நன்றி புலவரே

    உங்க டரியல் அருமை

    பதிலளிநீக்கு
  28. நன்றி பலா பட்டறை

    உங்க மூன்று கவிதைகளுமே அருமை பலா பட்டறை

    பதிலளிநீக்கு
  29. நன்றி நவாஸ்

    நீங்க கொடுத்த அரப் ந்யூஸைப் போல மகிழ்வு

    பதிலளிநீக்கு
  30. நன்றி விஜய்

    அட எங்க வீட்டில் பலாமரமிருக்கு விஜய்

    நன்றி சொன்னதுக்கு

    ஆனா ஆலமரமா அல்லது பவளமல்லியா வைக்கனும்னு தெரியல

    பதிலளிநீக்கு
  31. நன்றி தேனக்கா

    date of birth
    time of birth
    place of birth

    கொடுங்க
    நான் சொல்றேன் (நான் ஒரு ஜோதிடனும் கூட )

    விஜய்

    பதிலளிநீக்கு
  32. விடுபட்டு போனதெல்லாம் வந்து படிச்சிட்டேன் தேனு மக்கா.

    அசத்துறீங்க!

    ஒரே நேரத்தில் படிக்கிறபோதும் நல்ல வெரைட்டி..

    ஆளுமை!

    புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா!

    பதிலளிநீக்கு
  33. வரிகளின் கோர்வை அன்பின் வெளிப்பாடு என எல்லாம் கலந்த அழகிய படைப்பு. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தோழி

    பதிலளிநீக்கு
  34. நன்றி மலிக்கா

    சிக்கன் ப்ராங்க் க்ரேவி
    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்மா


    மலிக்கா சாப்பிடும் ஆசையைத் தூண்டி விட்டுட்டீங்க

    பதிலளிநீக்கு
  35. தேனு ஒரே தரமா வந்து ஒரே தரமா வாசிக்கைறதும் சந்தோஷம்தான்.ஆனா நாந்தான் எப்பவும் கடைசில.முந்தியும் சொல்லியிருக்கேன்.
    உங்க வேகத்துக்கு ஈடுகொடுக்க முடில எனக்கு.

    நல்லதையே நினைப்போம்.நல்லதே நடக்கும்.
    வாழ்த்துக்கள் தோழி.

    எப்பவும் என் சுகம் கேகிறீங்க.நான் நல்ல சுகம்.வீட்டிலும் போன் பண்ணிக் கேட்டவரைக்கும் சுகம்.நீங்களும் சுகம்தானே தேனு.வேலைகள் நேரங்களோடு ஓடிக்கொண்டிருக்கிறேன்.நேரத்தை இறுக்கி இழுத்துப் பிடித்தாலும் ஓடிவிடுகிறது.
    தனிமைக்கு அதுவும் சந்தோஷமே.மன அழுத்தம் குறைவு.அடி மனதில சங்கடங்கள் இயல்பாகவே இருந்தாலும் சந்தோஷமாயிருக்கிறேன்.
    நன்றி தேனு.

    பதிலளிநீக்கு
  36. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...