மலையின் முலை மேகம் முட்டி
மார் சுரந்து பாலாய்ப்பெருகி...
வேர் அடைந்த மரத்தின்கீழ்
வனப்பின் மிருகம் சடைபிடித்து...
முண்டுமுடிச்சுத்தண்டுகளூடே...
குளிர்சுனை சத்தமெழாது
கழுத்துப்பாசியாய் சிறுநெளிப்போடு...
வெய்யில் கீறி உள்நுழையும்
கறுப்பு ரகசியம் தெளிந்தும் தெளியாமலும்...
காற்றடைத்த மூலிகை வாசத்தை
கொஞ்சங்கொஞ்சமாய்ப் பரப்பி...
மழமழப்போ., கொரகொரப்போ .,
இயற்கை விளைத்த ராட்ச்சசனாய்
மலைகள் பலவும்.....
திடீர் பூகம்பம்., சுனாமியில்
வெடித்து உள்வாங்கி ...
சடையிழந்த வனப்பின் மிருகம் ...
மலையை., மரத்தை அறுத்துப்போட்டால்
இன்னொரு லெமூரியா...
இயற்கை அரணான
கறுங்கிழங்கு மலையறுத்து
கிரானைட் குவாரியாய் ...
தென்மேற்கும் வடகிழக்கும்
பொய்த்துப்போக ...
அலுமினியமும்., இரும்பும்.,
கிரானைட்டும் ., சல்லியும் சுரண்டி
மலையெல்லாம் பால்வற்றிய முலையாகி...
முள்வேலியோ., எதியோப்பாவோ வேண்டாம் ..
வரிப்பணத்தையும் வாழ்வாதாரத்தையும்
சுரண்டும் எலிகள் எங்கெங்கும் .....
மலையின் முலையறுத்து ....
டிஸ்கி:- காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும்
வழியில் உள்ள மலைகள் எல்லாம் இந்த முறை
சென்றபோது அறுக்கப்பட்ட ஆடுபோல் ஒரே
பால்கவிச்சியுடன் கிடந்தது .ஆற்றாமையும்.,
அவதார் படமும் வெற்றிவேல் அவர்களின்
நறும்புனலில் மலைகள் பற்றிய பதிவும்
இந்த இடுகைக்குக் காரணம்
மார் சுரந்து பாலாய்ப்பெருகி...
வேர் அடைந்த மரத்தின்கீழ்
வனப்பின் மிருகம் சடைபிடித்து...
முண்டுமுடிச்சுத்தண்டுகளூடே...
குளிர்சுனை சத்தமெழாது
கழுத்துப்பாசியாய் சிறுநெளிப்போடு...
வெய்யில் கீறி உள்நுழையும்
கறுப்பு ரகசியம் தெளிந்தும் தெளியாமலும்...
காற்றடைத்த மூலிகை வாசத்தை
கொஞ்சங்கொஞ்சமாய்ப் பரப்பி...
மழமழப்போ., கொரகொரப்போ .,
இயற்கை விளைத்த ராட்ச்சசனாய்
மலைகள் பலவும்.....
திடீர் பூகம்பம்., சுனாமியில்
வெடித்து உள்வாங்கி ...
சடையிழந்த வனப்பின் மிருகம் ...
மலையை., மரத்தை அறுத்துப்போட்டால்
இன்னொரு லெமூரியா...
இயற்கை அரணான
கறுங்கிழங்கு மலையறுத்து
கிரானைட் குவாரியாய் ...
தென்மேற்கும் வடகிழக்கும்
பொய்த்துப்போக ...
அலுமினியமும்., இரும்பும்.,
கிரானைட்டும் ., சல்லியும் சுரண்டி
மலையெல்லாம் பால்வற்றிய முலையாகி...
முள்வேலியோ., எதியோப்பாவோ வேண்டாம் ..
வரிப்பணத்தையும் வாழ்வாதாரத்தையும்
சுரண்டும் எலிகள் எங்கெங்கும் .....
மலையின் முலையறுத்து ....
டிஸ்கி:- காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும்
வழியில் உள்ள மலைகள் எல்லாம் இந்த முறை
சென்றபோது அறுக்கப்பட்ட ஆடுபோல் ஒரே
பால்கவிச்சியுடன் கிடந்தது .ஆற்றாமையும்.,
அவதார் படமும் வெற்றிவேல் அவர்களின்
நறும்புனலில் மலைகள் பற்றிய பதிவும்
இந்த இடுகைக்குக் காரணம்
கவிதை அழகாய் ஆரம்பித்து வலியோடு முடிந்திருக்கிறது...உங்களின் சமுதாய உணர்வுகளை அழகாக கவிதையாக்கி இருக்றீர்கள்...வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குகவிதை அழகாய் ஆரம்பித்து வலியோடு முடிந்திருக்கிறது...உங்களின் சமுதாய உணர்வுகளை அழகாக கவிதையாக்கி இருக்றீர்கள்...வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஇதையே நானும் சொல்லிக்கிறேன்.
நல்லாயிருக்குங்க
பதிலளிநீக்குமலையறுப்பு.. வித்தியாசமாய் சமூகப் பார்வை..
பதிலளிநீக்குஇயற்கையின் மீதான உங்கள் அக்கறைக்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஆச்சர்யமாக இருக்கிறது.எனது இடுகையினால் கூட ஒரு நல்ல கவிதை கிட்டுமா?மலைகள் சூறையாடப்படுவதைப் பற்றி எனது மனவலியை மிக வறட்டுத் தனமாக எழுதியதை,ஒரு அற்புதமான கவிதையாக மாற்றிய தேனம்மை அவர்களே..நன்றியும் வாழ்த்துக்களும்.சிகரம் தங்களுக்கு மிக அருகில் உள்ளது.
பதிலளிநீக்கு//மலையெல்லாம் பால்வற்றிய முலையாகி...
பதிலளிநீக்குமுள்வேலியோ., எதியோப்பாவோ வேண்டாம் ..
வரிப்பணத்தையும் வாழ்வாதாரத்தையும்
சுரண்டும் எலிகள் எங்கெங்கும் .....
மலையின் முலையறுத்து //
வித்தியாசமாய் சமூகப் பார்வை.
நல்லாயிருக்கு.
கவிதை பிடிச்சிருக்கு தேனு.
பதிலளிநீக்குவெற்றி சாரோடு இன்று பேசினேன்..அநேகமாய் நாளை சந்திக்கலாம் அவரை.அறிமுகத்திற்கு நன்றி!
நானும் அந்த வழியில் செல்லும் போதெல்லாம் வருந்தி இருக்கிறேன்!!
பதிலளிநீக்கு//இன்னொரு லெமூரியா...//
உண்மை...நல்ல கவிதை அக்கா!!
உங்கள் கரிசனத்தை - ஆதங்கத்தை - கவிதையில் உணர முடிந்தது.
பதிலளிநீக்கு.
பதிலளிநீக்குஇயற்கையின் அருமையை இன்னும் நாம் உணரவில்லை, அழகிய ஆதங்கம்.
பதிலளிநீக்குnice poem.
பதிலளிநீக்குvidhya
மலைகள் குறித்து கவலைதான்.. கவிதை பயமுறுத்துகிறது.. எதிகாலத்தை எண்ணும்போது..
பதிலளிநீக்குதேனம்மை அம்மா அவர்களே! உங்கள் மலை குறித்த கவிதை அருமை.நீங்கள் நகரத்தார் சமூகம் வாழும் காரைக்குடி பக்கமா? உங்கள் வலைப்பூவை கவிஞர் கவிமதி அவர்களின் வலைப்பூவில் இருந்து தொடர்ந்து,இப்போது தொடர்ந்து படிக்க்றேன்.உங்கள் சமூகச்சிந்தனை,அதை வடிக்கும் வித்தியாசமான எழுத்து சுவையும்,அதில் இழையோடும் உணர்வில் சோகமும்,மனம் வலிக்கிறது. நன்றி!
பதிலளிநீக்குஅன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
அக்கா நீங்க சொல்ற அந்த பகுதிய ஒரு பெரிய இடம் தான் ரொம்ப தோண்டி எடுத்துச்சு.... ஆனா பாவம், இப்ப அந்த ஆளு கூட உயிரோட இல்ல.
பதிலளிநீக்குபரவாயில்ல நம்ம ஊரை நினச்சு வருத்தமா ஒரு கவிதை. ம்ம்ம்... பெருமூச்சு தான் வருது.
இயற்கையின் மீதான காதல் சாமானியனுக்கு தான். இருக்க வேண்டியவர்களுக்கு இல்லையே
பதிலளிநீக்குவீட்டைத் தாண்டிச் சமூகச் சிந்தனை.மலையும் வலித்து அழும் தேனு உங்கள் கவிதை கண்டு.
பதிலளிநீக்குNice concern abt Nature Thenammai,we have got only greedy people who'll extract money from anything they come across.
பதிலளிநீக்குமலையறுத்தல் பெற்ற தாயின் முலையறுப்புக்கு சமம்
பதிலளிநீக்குஇன்னும் மூன்றே டிகிரி தேவை, புவி அழிய
வாழ்த்துக்கள்
விஜய்
கமலேஷ் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசாதாரண பார்வைக்கும்.... கவித்துவமான பார்வைக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான்..
பதிலளிநீக்குகவியின் நோக்குதல் இப்படித்தான் இருக்க வேண்டும்...நல்லா இருக்குங்க...
பதிலளிநீக்குஇயற்கை நமக்கு தந்த கொடை, அவைகளை அழித்து, நமது கைகளால் நம்மையே அழித்துக் கொள்கிறோம். உணர்வுப்பூர்வமா எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்குவலியுண்டுபண்ணும் கவிதை.
பதிலளிநீக்குவர்ணனைகள் அற்புதம்!
மொத்தத்தில் கவிதை அருமை.
அன்பின் தேனம்மை,
பதிலளிநீக்கு’70 களில் நான் காரைக்குடியை விட்டு மதுரை வந்தவள்.அப்பொழுது முதல் ஆயிரக்கணக்கான முறை மதுரை-காரைக்குடி பாதையில் பயணம் செய்திருக்கிறேன்.
ஜன்னலோரம் உட்கார்ந்து நான் ரசிக்கும் மலைகளெல்லாம் -அவை விளைச்சலற்ற மொட்டை மலைகளானாலும் கூட - ஒவ்வொன்றாய்க் கை நழுவிக் கொண்டே போகும் சோகத்தை (ஒரு சிறிய குன்றில் பேக்கரி டிசோட்டா விளம்பர வர்ணம் இருந்தது கூட என் மனக் காட்சியில் படிந்திருக்கிறது)
நீ மிக அற்புதமாக...தார்மீகச் சீற்றத்துடன் பதிவு செய்திருக்கிறாய்.
‘’உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி’’
நீ என் பிள்ளையல்லவா.
நன்றி கமலேஷ்
பதிலளிநீக்குநன்றி நவாஸ்
நன்றி ரிஷபன்
பதிலளிநீக்குநன்றி அஷோக்
நன்றி அண்ணாமலையான்
பதிலளிநீக்குநன்றி குமார்
நன்றி வெற்றிவேல் சார்
பதிலளிநீக்குஉங்க மலைகள் பற்றிய பதிவு படிச்சவுடனேதான் எனக்கு அந்த மலைகள் பற்றி ஏற்பட்ட வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது நன்றி சார்
நன்றி மக்கா
பதிலளிநீக்குநன்றி செந்தில்
நன்றி சித்ரா
பதிலளிநீக்குநன்றி டாக்டர் ருத்ரன் இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என பின்னூட்டமிட்டதற்கு
பதிலளிநீக்குநன்றி சைவக்கொத்துப்பரோட்டா
பதிலளிநீக்குநன்றி பட்டியன்
நன்றி வித்யா உங்க தட்டிலேயே மிஞ்சிய சோற்றுப் பருக்கைகள் அருமை
பதிலளிநீக்குநன்றி சாந்தி லெட்சுமணன் உங்க முதல் வருகைக்கு உங்க கருத்துரைகளுக்கும் நன்றி
பதிலளிநீக்குநன்றி ரோஸ்விக்
பதிலளிநீக்குநன்றி ரமேஷ்
நன்றி ஹேமா
பதிலளிநீக்குநன்றி முனியப்பன் ஸார்
பதிலளிநீக்குநன்றி அன்பு சகோதரர் விஜய்
நன்றி ராஜா
பதிலளிநீக்குநன்றி அக்பர்
நன்றி பாத்திமா ஜொஹ்ரா
பதிலளிநீக்குநன்றி சதீஷ் உங்க முதல் வருகைக்கு
பதிலளிநீக்குமழை கவிதைகள் அற்புதம் சதீஷ்
நன்றி புலவன் புலிகேசி
பதிலளிநீக்குநன்றி ஷஃபி
நன்றி உங்க முதல் வருகைக்கு சுந்தரா
பதிலளிநீக்குநல்ல பகிர்வு சகோதரி சுந்தரா
என் அன்பின் அம்மா இத்தனை நாளாய் நான் உங்களை எதிர்பார்த்து இருந்தேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி அம்மா
மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா
எல்லாப் பக்கமும் ஆழ்ந்து யோசித்து எழுதும் உங்கள் தன்மை என்னை இன்னும் ஈர்க்கிறது அம்மா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!