எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

பராமரிப்பு..


கிணற்று உறைகளுக்குள்
காம்பவுண்டுச் சுவர்களில்
கோயில் கோபுரங்களில்
மேங்கோப்புகளில்

தேவையற்றதெல்லாம்
செழித்து வளர்கிறது..
தண்ணீர் பூச்சி மருந்து
உரம் எதுவும் இல்லாமல்..

சனி, 26 பிப்ரவரி, 2011

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி..?

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி அக்கா.. ? இது எனக்கு முகப் புத்தகத்தில் உள்டப்பியில் வந்த கேள்வி.. பார்த்தவுடன் அரண்டு போய் விட்டேன்..

என்ன இது ? எதற்காக எனப் புரியவில்லை.. இந்த மனநிலை வரக் காரணம் என்ன..? தனிமையா.. வியாபார போட்டியா..? தொழில் நஷ்டமா.? குடும்ப தகராறா.. ? காதல் தோல்வியா.. என்னவென்று தெரியவில்லை..எதாக இருந்தாலும் பேசி பகிர்ந்து தீர்வைத் தேட வேண்டுமே தவிர எதற்கு இந்த கோழைத்தனமான முயற்சி..

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

புதன், 23 பிப்ரவரி, 2011

நானும் ஒரு ப்லாகர்தாம்லேய்..


எப்ப பார்த்தாலும் நடுநிலைமையா எழுதி போரடிக்குது.. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுனு சொல்லிட்டு என் ப்லாக் பக்கம் கொஞ்ச நாள் வர்றவங்க கொஞ்ச நாள்ல கார சார பதிவு பக்கம் போயிடுறாங்க.. இதுக்கெல்லாம் யார் காரணம்னு பார்த்தா ஒருத்தங்க.. லேய் நானும் ஒரு ரவுடிதாம்லேன்னு தன் இடத்தை நிரூபிச்சவங்க.. சரி அவங்க கூட கூட்டணியா இன்னும் ரெண்டு பேரை சேர்த்துகிட்டா கொஞ்சம் கித்தாய்ப்பா இருக்கும்னு இன்னும் ரெண்டு பேரு.. மொத்தம் மூணு பேரு.. சரி நம்ம ரேஞ்சுக்கு இவங்கள எதிர்த்து எதிர் இடுகை போட்டு ஃபேமஸ் ஆகிடலாம்னு.. வேற யாரையாவது சொல்லி கொத்துப்பரோட்டாவாவோ., ரத்தக்களறியாவோ ஆனா ப்லாக் எல்லாம் ஷட்டர் போட வேண்டியதுதான்னு இவங்கள தேர்ந்தெடுத்தேன்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பங்குச் சந்தை முதலீடு ஆலோசனை (2) டீமேட் அக்கவுண்ட்.


நம்முடைய பணத்தை வங்கியின் ஃபிக்சட் டெப்பாசிட்., ரெக்கரிங் டெப்பாசிட்., அஞ்சலக முதலீடு., இன்ஷுயூரன்ஸ்., ரியல் எஸ்டேட்., தங்கம்., வெள்ளி., பங்குச் சந்தை., பாண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

இதில் பங்குச் சந்தையில் நாம் முதலீடு செய்யும் பணத்தில் 5 % ஆவது ஒரு மாதத்தில் லாபமடையலாம் என ஒரு பங்குச் சந்தை நிபுணர் கூறினார். இது சரியான முறையில் ட்ரேடிங் செய்யும் பங்குகளுக்கானது.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பங்குச் சந்தை முதலீடு.. ஆலோசனை.1.(பாண்டுகள்)

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பாண்டுகள் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்க்ஸ் ஓபன் ஆகுது. இது AAA ரேட்டட் SBI BONDS . இந்த ஆஃபர் 28 ஃபிப்ரவரியோட முடியுது.. இதன் வட்டி விகிதம் 9.95 பர்சண்டேஜ் ஒரு வருடத்துக்கு. இது தேசிய பங்குச் சந்தையிலும்., சென்னை பங்குச்சந்தையிலும் லிஸ்டட் ஆகப்போகுது..

புத்தகக் காட்டில் சிங்கதோடும்., சிறுத்தைகளோடும்..:))

எங்கள் அன்பிற்குரிய பாரதி மணி ஐயாவை முதன் முதலில் டிஸ்கவரி புத்தக நிலையத்தில்தான் சந்தித்தேன்.. அனுபவங்களின் பெருங்கடல்.. சரளமான கிண்டலுக்கு சொந்தக்காரர். மிகவும் மதிக்கும் எழுத்தாளர் க. நா. சு அவர்களின் மருமகன். இவரின் புத்தகம் பல நேரங்களில் பல மனிதர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.. சமீபத்திய பகிர்வு.. நீரா ராடியாவும் டெல்லியில் நான் செய்யாத திருகுதாளங்களும்.. கட்டாயம் வாசியுங்கள்.

சனி, 19 பிப்ரவரி, 2011

வாளோர் ஆடும் அமலை.. ட்ராட்ஸ்கி மருதுவின் புத்தக வெளியீடு..

முகப்புத்தகத்தில் நண்பர்கள் ஐயப்ப மாதவன் மற்றும் கா முகுந்த் தேவநேயப்பாவாணர் அரங்கில் புத்தக வெளியீட்டுக்கு அழைத்திருந்தார்கள்.. அதற்கு அமுதரசன் கீற்றுவில் போட்டிருந்த அழைப்பிதழும் காணவே அருமையாய் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்தோடு இருந்தது..

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கோழிப்பண்ணை..


கட்டமிட்ட கூண்டுக்குள்
கூட்டமாய் இரைதின்று
சதை வளர்த்திக்
காத்திருக்கின்றன.,

சனி, 12 பிப்ரவரி, 2011

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கலைமாமணி விருது விழா அழைப்பிதழ்..


சங்கமத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.. எனக்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து அழைப்பிதழ் வந்தது.

புதன், 9 பிப்ரவரி, 2011

திங்கள், 7 பிப்ரவரி, 2011

யுத்தம் செய்.. ( YUDHAM SEI REVIEW )எனது பார்வையில்..

ஒரு இளம்பெண்ணின் தாயாய் இருந்தால் அவளுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் போது என்ன செய்வீர்கள்.. ? மிரண்டு ஒதுங்குவீர்கள்.. ஒரு தாய் தன் குழந்தைக்கு கொடுமை இழைக்கப்பட்ட போது மிரண்டு எழுந்து மிரட்டியதுதான் யுத்தம் செய்.. நிச்சயம் எல்லாருமே செய்ய வேண்டிய யுத்தம்தான்.. அதை மிக அழுத்தமாக மிஷ்கினும் சேரனும் சொல்லி இருக்கிறார்கள்..

தறிகளின் பாடல்.. ( THE SONG OF THE LOOMS...)

சென்ற சனிக்கிழமை பொன் மாலைப் பொழுதில் முத்து வெங்கட சுப்பாராவ் கான்ஸார்ட் ஹாலில் சென்னையின் பெரும் பணக்காரர்களையும்., அதி அழகிய பெண்களையும் ., கலாஷேத்திராவின் கலைஞர்களையும்., காஞ்சீபுரத்தின் நெசவுக்கலைஞர்களையும் ஒரு சேர சந்திக்க நேர்ந்தது.. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்..

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

பிஃப்ரவரி மாத லேடீஸ் ஸ்பெஷலில் மணிமேகலை., ஜலீலா., ருக்கு அம்மா., டாக்டர் வசந்திபாபு மற்றும் நான்.

பிஃப்ரவரி மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழ் சுய தொழில் சிறப்பிதழா மலர்ந்திருக்கு. மகளிர் சுய தொழில் பக்கங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கு. மார்க்கெட்டிங் உதவிக்காகவும் லேடீஸ் ஸ்பெஷல் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க., வகுப்புகள் எடுப்பதை அறிவிக்க., தங்கள் தொழிலை மேம்படுத்த ., விரிவுபடுத்த என்று எல்லாவற்றுக்கும் உதவியாக http://www.ladiessecialshopping.com/ உருவாக்கியுள்ளோம்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

நொய்(த)யல்..


ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை..
சாயப்பட்டறைக்காரர்களுக்கு.,

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தொழில் தெய்வம்..

வியாபார யுத்தத்தில்
வாள் வீசும்
போர்வீரா..
வெற்றி பெறும் ஆவேசத்தில்
வீறு கொண்டு
வார்த்தை வீசி
உன்னையே துண்டாக்கி..
Related Posts Plugin for WordPress, Blogger...