லேடீஸ் ஸ்பெஷல் விழாக்கள்
அமைச்சர் கீதா ஜீவன் மேடம், எக்ஸ்னோரா சுலோசனா சம்பத் மேடம், லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடம்.
லேடீஸ் ஸ்பெஷல் விழாக்கள்
அமைச்சர் கீதா ஜீவன் மேடம், எக்ஸ்னோரா சுலோசனா சம்பத் மேடம், லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடம்.
உறவுகள் முக்கியம் எனக் கூறும் மணிவிழாத் தம்பதி புவனேஸ்வரி மணிகண்டன்
புவனாவுடன் கூடப்பிறந்தவர்கள் நால்வர். மணிகண்டனுடன் கூடப்பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள். இவர்கள் அனைவருக்கும் திருமணமானபின்புதான் புவனா மணிகண்டன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இப்போது இவர்கள் அனைவரும் சூழ இத்தம்பதிக்கு சஷ்டியப்தபூர்த்தியும் சிறப்பாக நடந்தது. உறவுகளுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் இவர்கள் கொடுத்த முக்கியத்துவமும் அவர்கள் இவர்களைக் கண்ணெனக் கருதுவதும் விழாவில் வெளிப்பட்டது. இந்த நெகிழ்வில் மகிழ்ந்த நான் புவனாவிடம் அவரது குடும்பம் பற்றி விசாரித்தேன்.
”நான் இருக்கேன் புள்ள” – சாந்தி மாரியப்பன்
அமைதிக்குப் பெயர்தான் சாந்தி. இந்தப் பாட்டை 700 தரமாவது முணுமுணுத்திருப்பேன். என் பள்ளி நட்பிலிருந்து இன்று வரை நிறைய சாந்திகள் என்னைச் சுற்றி. இந்த சாந்தி அமைதி அதே சமயம் கொஞ்சம் கலகலப்பும் கூட. சக எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் அமைதிச்சாரல் என்ற சாந்தி மாரியப்பன். அவர் எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமல்ல. சிறுகதைகளும் சிறப்பானவை. அவர் எழுதும் சமையல் குறிப்புக்கள் ருசிகரமானவை. சிறகு விரிந்தது என்றொரு கவிதை நூலுக்குச் சொந்தக்காரர்.
எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறும் மணிமேகலை.
மணிமேகலை. இப்பெயரைக் கேட்டதும் உங்களுக்கு மணிமேகலைக் காப்பியம் நினைவுக்கு வரலாம். இவர் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.தன் பத்து வயதிலேயே 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்துப் பரிசு வாங்கியவர். ஒரு கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். அனைவருடனும் தன்மையாக இயைந்து செல்லும் குணம் கொண்டவர். அழகப்பா கல்லூரியில் பி காம் படித்த இவர் சக்தி நிறுவனத்தின் தூணாக இருபத்தி ஐந்து வருடம் பணியாற்றினார். அதிலிருந்து விலக நேரிட்டதும் அடுத்த நாளே இன்னொரு கம்பெனியில் பணியில் அமர்ந்தார். ஆனால் தன் பூர்வீகப் பணியிடத்தைப் பற்றி ஒரு நாளும் குறை கூறியதே இல்லை. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நங்கை. அவரிடம் அவரது குழந்தைப்பருவம், குடும்பம், பணி பற்றிக் கேட்டபோது அவர் கூறியதைத் தொகுத்திருக்கிறேன்.
சிங்கப் பெண் டெய்சி மாறன்
2015 களில் ஆரம்பித்து இன்று வரை 85 நாவல்கள், 300 க்கும் மேற்பட்ட சிறுகதை, கவிதைகளை எழுதிய ஒரு நாவலாசிரியயைச் சந்தித்தேன்.இந்தக் காலக் கட்டத்தில் வந்த அநேக மாத நாவல்களைப் பார்த்தால் அதில் ஆசிரியர் என்று இவர் பெயர் இருக்கும். மிகப் பிரமிப்பாயிருந்தது. இத்தனை நாவல்கள் தொடர்ந்து அச்சேறுவது, அத்தனைக்கும் கற்பனை வளம் இன்றியமையாதது எனப் பல்வேறு விஷயங்கள் என் மனத்தில் ஓடின. இதனால் இல்லத்தரசியாக இருந்து இவ்வளவு சாதித்திருக்கும் அவரிடமே அவரைப்பற்றிக் கேட்டு விடுவது என அணுகினேன். அவர் கூறியதை அப்படியே தொகுத்துள்ளேன்.
சீர்திருத்தத் திருமணம் செய்த கனகலட்சுமி ஆச்சி
என் சின்ன மகனின் திருமணத்தின் போது என் சின்னமருமகள் கனகலட்சுமி ஆச்சியை அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று என் மருமகள் ஓவியங்கள் வரையவும் கைவினைப் பொருட்கள் செய்யவும் கற்றுக் கொண்டதற்கு இவரே காரணம் என்று கூறினார். என் மருமகளின் அத்தைமகளின் மாமியார் இவர். தன் அத்தைமகளின் வீட்டுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்த போது அவர்கள் வீட்டு ஹாலில் மிகப்பெரும் தஞ்சாவூர் பெயிண்டிங் ஒன்றை இவர் வரைந்து கொண்டிருந்ததாகவும் அதைக்கண்டு பிரமித்துத்தான் இவரைத் தன்னுடைய முன்னோடியாகக் கொண்டதாகவும் மருமகள் கூறினார்.
கனகலட்சுமி ஆச்சியின் உறவினர்கள் பழமையை எதிர்க்கும் சீர்திருத்தக்காரர்கள். இவரது குடும்பத்தில் திருமணங்கள் எல்லாம் சீர்திருத்தத் திருமணங்களே. சுப வீர பாண்டியன், டைரக்டர் எஸ் பி முத்துராமன் ஆகியோர் இவரது பிரியத்துக்குரிய சகோதரர்கள். பெருங்குடும்பத்தில் பிறந்ததனால் உறவைப் பேணுவதிலும் அனைவரையும் அரவணைத்துச் செல்வதிலும் வல்லவர் இவர்.
உடலுறுப்பு தானம் செய்துள்ள கன்னிவாடி காயத்ரி
திண்டுக்கல் கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த விஜயலெக்ஷ்மி ஒரு அஷ்டாவதானி. 26 வயது ஆராய்ச்சி மாணவி. பொருளாதாரப் பிரச்சனைகள் இருந்தாலும் இன்று அவர் கண்டுள்ள வளர்ச்சி அவரின் மற்றும் அவரின் குடும்பத்தாரின் பெருமுயற்சியே ஆகும். அஷ்டாவதானியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு இச்சிறு வயதிலேயே தன் உடலையும் ( இறப்பிற்குப் பின்) தானம் அளித்துள்ளார் எனக் கேட்டு வியப்பாய் இருந்தது. எனவே அவரின் தொடர்பு எண் பெற்றுப் பேசியபோது அவர் கூறியவற்றை அப்படியே தருகிறேன்.
“திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தில் 06.06.1997 இல் பிறந்தேன். நடுத்தர வர்க்கக்குடும்பத்தை சார்ந்தவள் நான். வீட்டிற்கு மூன்றாவது பிள்ளை. உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும், ஒரு அக்காவும். அம்மா (பஞ்சவர்ணம்) எங்களை ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். ஐம்பது கிலோ மூட்டைகளைக் கூடச் சுமந்து எங்களைப் படிக்க வைத்தார்கள். நவாப்பட்டி மு.ரெ.அரசு மகளிர் பள்ளியில் படித்தேன்.அங்கு தமிழாசிரியர் கலைவாணி அம்மா நன்கு பழக்கம். அவர்களின் உதவி மிகப் பெரியதாக எங்களுக்கு இருந்தது.
கனவுகளை விதைத்துக் காத்திருக்கும் காரைக்குடித் தென்றல்
காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் தென்றல். இது அண்ணஞ்சார் என்று அனைவராலும் அன்பால் விளிக்கப்படும் இவரது தாத்தாவால் தொடங்கப்பட்டது. எப்போதும் சுறுசுறுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கும் தென்றல் கொரோனா காலத்தில் கூட வாட்ஸப்பில் தேவதைக் கூட்டம் என்றொரு குழு ஆரம்பித்துப் பயிற்றுவித்தார், கொரோனா தொடரவும் வாசல் பள்ளி என்று அவரவர் வீட்டுக்கே சென்று பயிற்றுவித்தார். அவரிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கைக்காகப் பேட்டி கேட்டபோது இதுவரை அறியாத அவரின் பன்முகத் திறமைகளையும் தடை தாண்டி வரும் அவரது வெற்றி ஓட்டங்களையும் கண்டு பிரமித்தேன். அவர் மொழிகளிலேயே அதைத் தருகிறேன்.
”நான் 12ஆம் வகுப்புப் படித்து முடித்த போது, அயல் நாட்டுத் தூதுவராகவரவேண்டும்என்பதே என் மிகப்பெரிய கனவாக, இலட்சியமாக இருந்தது. ஆனால் ஐந்து பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றதொரு நிலையான கொள்கையுடன் என் அப்பா வாழ்க்கையை நகர்த்தியதால், அவரின் விருப்பப்படி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்.ஆனால், சில நாட்களிலேயே, "கிட்டாதாயின் வெட்டென மற" என்பதை மனதில் கொண்டு என்னைத் தேற்றிக்கொண்டு, ஈராண்டுகள் நன்றாகப் படித்து மாவட்ட அளவில் ரேங்க் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன்.
திருமணம் ஆகும்வரை பெரிதாக எந்தக் கஷ்டமும் தெரியவில்லை. பிறகுதான் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் கரடுமுரடான பாதையாகத் தெரிந்தது. அந்த முகம் அச்சுறுத்தலாகவே இருந்தது. அடுத்தடுத்து மூன்றாண்டு கால இடைவெளியில் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட போதும், கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
நோபல் பரிசு பெற உழைக்கும் டாக்டர். தி. தெய்வசாந்தி (நானோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்)
நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார்.
தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனைவர் பட்டம் பெற்ற தெய்வசாந்தி முதலில் பாலிடெக்னிக்கிலும் பின்னர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். ஒரே நேரத்தில் நான்கு ப்ராஜெக்ட் கொடுத்துத் தனது மாணவர்களையும் நானோ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வருகிறார். நிறையப் பொறியியல் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சிக்ரி போன்ற விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்துக்கும் கூட கெஸ்ட் லெக்சரராகச் சென்றுள்ளார். 200 க்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பல்வேறு சர்வதேச நாடுகளில் உரையாற்றிய பெருமையும் இவருக்குண்டு.
ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி.
சாதாரணமா தனக்குக் கிடைச்ச மேடையைப் பாடகர், பாடகியர் யாரும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க ஆனா. இவங்க வித்யாசமானவங்க அவங்க தன்கிட்ட பாட்டுக் கத்துக்க வந்த ஆட்டிசம் குழந்தைகளையும் தான் பாடும் மேடையில் ஏற்றி ஒளிரச் செய்கிறார். இம்மாதிரியான தொண்டைச் செய்து வருபவர் பிரபலபாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி டாக்டர். பிரபா குருமூர்த்தி,
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர். பிரபா குருமூர்த்தி. வங்கியல்லாத நிதி நிறுவனம், வங்கி, கல்வித் துறையில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பல்வேறு பணியாற்றி பல அனுபவங்கள் உள்ளன. அவர் கடந்த பத்து வருடங்களாக ஐஜிடிசியில் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக, வாய்ஸ்-ஓவர் உலகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புகழ்பெற்ற பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி இவர். சிறந்த பாடகர். இப்படி பன்முகத்திறமை வாய்ந்தவர். லேடீஸ் ஸ்பெஷலுக்குப் பேட்டி கேட்டதும் அவர் நம்முடன் பகிர்ந்தது...
பளிச் பெண்கள் – 1
நூறு புராணங்களின் வாசலைப் படைத்த முபின் சாதிகா
சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பமாகப் போகிறது என்பதால் மிகச் சிறந்த ஒரு இலக்கிய ஆளுமையினை நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் கிரிஜா மேம் பளிச் பெண்கள் தொடர் எழுதக் கூப்பிட்டதில் மகிழ்ச்சி. ஏனெனில் என் முதல் படைப்புகளும் முதல் நூலும் லேடீஸ் ஸ்பெஷலாலேயே வந்தவை. மற்றும் ஸ்பெஷல் லேடி அவார்டும், ஸ்ரீ சக்தி அவார்டும் கொடுத்து சிறப்புச் செய்தவர்கள் கிரிஜாமேம். வீட்டில் இருந்தபடியே என் எழுத்துப்பணியை ஆற்ற (செகண்ட் இன்னிங்ஸ்) மறுபடியும் ஊக்கம் கொடுத்த அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.
லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்ரீசக்தி விருது - 2022.
இந்த வருடம் மகளிர் தினத்தை லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை திருமதி . கிரிஜா ராகவன் மேடம் லேடீஸ் ஸ்பெஷல் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
25 ஆம் ஆண்டை எட்டும் லேடீஸ் ஸ்பெஷல் இதழுடன் ரோட்டரியும் ( இன்னர்வீல் டிஸ்ட்ரிக்ட் 323 இணைந்து பெண் சக்தியின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக தினமும் ஸ்ரீசக்தி & யுவசக்தி என இரு விருதுகளை அளித்தார்கள்.