உறவுகள் முக்கியம் எனக் கூறும் மணிவிழாத் தம்பதி புவனேஸ்வரி மணிகண்டன்
புவனேஸ்வரி மணிகண்டன் எனக்கு முகநூலில் அறிமுகமான தங்கை. இளமையானவர், இனிமையானவர். புத்தகப் பிரியை. எப்படி என்றால் அலுவலக வேலை, வீட்டு வேலை இவற்றுக்கு இடையிலும் இடையறாது வாசிப்பவர். வாழ்க்கையை அதன் நுட்பங்களோடு சுவாசிப்பவர். உறவுக்ளை நேசிப்பவர். அவர் கணவர் மணிகண்டன். இருவரும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாகப் புரிந்து கொண்ட ஆதர்சத் தம்பதிகள்.
புவனாவுடன் கூடப்பிறந்தவர்கள் நால்வர். மணிகண்டனுடன் கூடப்பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள். இவர்கள் அனைவருக்கும் திருமணமானபின்புதான் புவனா மணிகண்டன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இப்போது இவர்கள் அனைவரும் சூழ இத்தம்பதிக்கு சஷ்டியப்தபூர்த்தியும் சிறப்பாக நடந்தது. உறவுகளுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் இவர்கள் கொடுத்த முக்கியத்துவமும் அவர்கள் இவர்களைக் கண்ணெனக் கருதுவதும் விழாவில் வெளிப்பட்டது. இந்த நெகிழ்வில் மகிழ்ந்த நான் புவனாவிடம் அவரது குடும்பம் பற்றி விசாரித்தேன்.

















