எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 9

 **ஒற்றைச் செடியாய்த்

தனித்திருப்பது பிடித்திருக்கிறது.
எவ்வுயிர்க்கும் வானமும்
மழையும் வெய்யிலும் ஒன்றுதானே.

 

**தேடுகிறாயா எனத்
தெரிந்துகொள்ளவே
காணாமல் அடிக்கிறேன் என்னை.




**உலகத்து இன்பங்களை
ஒரு தட்டில் வைத்தாலும்
உன் ஒரு பார்வைக்கு ஈடாகுமா


**கோபித்துக் கோபித்துப் போவாய்
கோபத்தில் தத்தளிக்கும் உள்ளம்
பித்தாகும், பித்தாக்கும்
உன் பார்வையின் சுகம் தாங்குமா

 

**காண எதுவுமில்லை
உன் கையெழுத்துத் தவிர
கண் நிறைந்து மனசு நிறைந்து
பொழுதும் நிறைந்து போகிறது
எழுத்தே நீயானதன் அதிசயம்தான் என்ன

 

**நீயாகத் தேடிவரும்வரை
உன்னைத் தேடமாட்டேனென
சூரியனிடம் கோபித்துக் கவிழ்ந்திருக்கிறது தாமரை.


**
வானத்தின் விசாலம்
நதியின் பிரவாகம்
கடலின் ஆர்ப்பரிப்பு
இவை பயமுறுத்தவில்லை
அடித்து அலசிச் செல்லும் உன் அன்பைப்போல


**தேடுகிறாயா எனத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.


**பௌதீகத்தில் இரசாயனத்தில்
ஒன்றில் ஒன்று விழுந்தால்
என்னன்னவோ விளைவுகள் வருகின்றன
உன்னில் விழுந்தேன் நான்
என்னில் விழுந்தாய் நீ
பின் பிரிந்தோம்
எந்த விளைவும் ஏற்படுத்தவில்லையா
கலப்பும் பிரிப்பும்


**காலம்தான் சிறந்த மருந்தாம்
என்னை மறக்க வைத்துவிட்டதே
நான் என்ன உன்னைப் பீடித்த வியாதியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...